12/14/2008

வாசித்தல் அனுபவம் - 2

வாசித்தல் அனுபவம்-1

பத்தாம் வகுப்பு விடுமுறை எல்லாம் முடிஞ்சி, கிராம சூழ்நிலைய விட்டு நகரச் சூழ்நிலைக்கு மாறியிருந்த நேரமது. கூடவே பதின்ம வயசுல நாம. கையில சாண்டில்யன் எழுதிய கடல் புறான்னு நினைக்குறேன். அவரோட நூல்கள் நிறையப் படிச்சதுல, அந்த நேரத்துல இருந்தது எதுங்றது மறந்து போச்சு. அந்த வர்ணனையும் காதல் உணர்வுகளும் படுத்திய கிளர்ச்சி சொல்லி மாளாது போங்க. ஆனாக் கடல் புறாவும், கன்னி மாடமும் நெஞ்சில் இன்னமும் இருக்கும் பெயர்கள்.

அந்த நேரத்துலதான் நண்பர் வேலுச்சாமி அறிமுகம் ஆனாரு. அவர் கருமத்தம்பட்டி நூலகத்தில இருந்து, புத்தகங்களை வாரம் ரெண்டு வாட்டி எடுத்துட்டு வந்து தருவாரு. குடுத்தா, ரெண்டே நாள், அதுகளைப் படிச்சு முடிச்சுட்டுத்தான் மறுவேலை. இப்ப்டியே ஒரு ரெண்டு வருசம் போச்சுங்க. அந்த சமயத்துல பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிச்சு, பாதியிலயே அந்த முயற்சி நின்னும் போச்சு. ஆனா, அதுக்கு பதிலா ஜானகிராமன் எழுதிய நாவல்கள் மரப்பசு, நளபாகம், மோகமுள், அப்புறம் அம்மா வந்தாள் படிச்சேன். ஒன்னு முடிய அடுத்ததுன்னு ஒரு மூணு மாசம் ஓடுச்சு. மரப்பசு, ஒரு நாலஞ்சு தடவை படிச்சு இருப்பேன். கோபாலி, அம்மணி, பட்டாபி, புரூசு இவிங்களைப் புரிஞ்சுக்க, அந்த நாவலை மறுபடியும் ம‌றுபடியும் படிச்சேன். காரணம், என்னோட வயசுக்கு அந்த நாவல் கொஞ்சம் அதிகம்ன்னு இப்ப நான் நினைக்குறேன்.

அந்த சமயத்துலதாங்க, நடிகர் ரகுவரனைப் பத்தி எதோ பேச்சு வர, அவர் நடிச்சு வெளி வந்த தொலைக்காட்சி நாடகம் பத்தி பேசிட்டு இருக்கவே, அதன் மூலமான அவன். சிவசங்கரி அவிங்க எழுதின நாவல், அடுத்த நாளே நம்ம கையில. ரொம்ப உதவியா இருந்தது. போதைக்கு அடிமையான வாழ்க்கை எப்பிடி ஆகும்ங்றதப் பத்தி தெளிவா எழுதி இருப்பாங்க. இதைப் படிச்சு முடிச்சுட்டு, ல.ச.ரா, இலட்சுமி, சுஜாதா, பாலகுமாரன் இப்பிடிப் பல பேரோட புத்தகங்களை எல்லாம் படிச்சுட்டு, ஊரை விட்டு வெளில வர்றதுக்கு முன்னாடி கடைசியாப் படிச்சது, கவியரசரோட அர்த்தமுள்ள இந்துமதம், எல்லா பாகங்களும்.

அதுக்கப்புறம் படிக்கிற பழக்கம் கிட்டத்தட்ட எட்டு வருசங்கள் சுத்தமாக் கிடையாதுங்க. கடுமையா வாசிச்சுட்டு இருந்த நான், அறவே படிக்கிற பழக்கத்தை விட வேண்டியதாப் போச்சு. சூழ்நிலைதான் காரணம். இப்ப, ஒரு வருசமா தமிழ்ப் பண்பாட்டுக் குழுவுல ஈடுபட ஆரம்பிக்கவே, மறுபடியும் புத்தகங்களப் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன். சமீபத்துல படிச்சது பெரும்பாலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவிங்க எழுதின நூல்கள். பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி அவிங்க எழுதின நூல். உதயமூர்த்தி ஐயா எழுதின, தம்பி உன்னால் முடியும் நம்பு. இப்ப படிச்சுட்டு இருக்குறது, தமிழ் முதுகலைப் பட்ட பாட நூல்கள். இஃகி!ஃகி!! ஆமுங்க, தமிழ்ல ஒரு பட்டம் வாங்குற யோசனையும் இருக்கு!

இதுபோக நிறைய கிராமியக் கதைகள், பாடல்கள், சொல்வடைகள்ன்னு நிறைய, நம்ம ஊர்க் காடு, மேடு, தோட்டங்கள்ல, நம்ம ஊர் சனங்க சொல்லிக் கேள்விப்பட்டது உண்டு. அதுகளைத்தான் பதிவுல பாத்துட்டு வர்றீங்களே?! சரிங்க, நாளைக்கு இனியொரு பதிவுல சந்திக்கலாமா?! வேண்டாமா??! உங்களை அப்பிடியெல்லாம் விட்டுடுவேனா? இஃகி!ஃகி!!

அண்ணன் குடுகுடுப்பை செய்தது சரியா? இந்தப் பதிவைப் படிச்ச நீங்க சொல்லுங்க. ஏன்னா, வாசித்தல் அனுபவம் அப்படீங்ற பேர்ல எழுதறதுக்கு கொக்கி போட்டது அவர்தான். பதிவு ரொம்பவும் சுமாரா இருக்குன்ன்னா, அவர் செய்ததும் சுமார்தான். பதிவு நல்லா இருக்குன்னு நீங்க நினைச்சா, அவர் செய்தது சரிதான். இஃகி!இஃகி!!.

செருப்புக்காகக் காலைத் தறிக்கலாமா?

26 comments:

கபீஷ் said...

Its good to read, so KUKU didnt do something wrong. :-):-):-)

பழமைபேசி said...

//கபீஷ் said...
Its good to read, so KUKU didnt do something wrong. :-):-):-)
//

யேஏஏஏ! அண்ணன் நல்ல அண்ணன்னு பேரு வாங்கிட்டாரு!!

குடுகுடுப்பை said...

என் பேருல கூட ஒரு பதிவா? நல்லா இருக்கே.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
என் பேருல கூட ஒரு பதிவா? நல்லா இருக்கே.
//

அஃக!ஃகா!!

இராகவன், நைஜிரியா said...

தி. ஜானகிராமன் அவர்களின்.. செம்பருத்தி நாவல் கிடைத்தால் வாங்கி படித்து பாருங்கள்...

எனக்கு மோகமுள்ளை விட செம்பருத்தி மிகவும் பிடித்திருந்தது..

படிப்பது என்பது சுகமான அனுபவம். எப்போது சென்னையை விட்டு வந்தேனோ, அப்போதே புத்தகம் படிப்பது விட்டு விட்டது. படிப்பது எல்லாம் கணிணியில் தான். இதுவும் நிறைய நேரம் படிக்க இயலாது.. கண்ணில் ஒரு எரிச்சல் தோன்றிவிடுகின்றது.

உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடித்துள்ளது. வாழ்க உங்கள் தொண்டு, வளர்க உங்கள் வலைப்பூ.

இராகவன், நைஜிரியா said...

வாசித்தல் அனுபவம் -1 மற்றும் 2 - இரண்டையும் தமிலீழில் இணைக்கவில்லையே...

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
தி. ஜானகிராமன் அவர்களின்.. செம்பருத்தி நாவல் கிடைத்தால் வாங்கி படித்து பாருங்கள்...

எனக்கு மோகமுள்ளை விட செம்பருத்தி மிகவும் பிடித்திருந்தது..
//

சரிங்க, மேலதிகத் தகவலுக்கு நன்றி!

அது சரி said...

ம்ம்ம்...தி.ஜா. படிக்கணும்னு நினைச்சேன்..குறிப்பா மரப்பசு..அப்ப புக் கிடைக்கல..

அப்புறம் இரும்பு குதிரைகள் படிச்சிருப்பீங்க...பாலகுமாரனோட "இனி இரவு, எழுந்திரு" படிச்சிருக்கீங்களா? கதை ரொம்ப நல்லாருக்கும்!

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
வாசித்தல் அனுபவம் -1 மற்றும் 2 - இரண்டையும் தமிலீழில் இணைக்கவில்லையே...
//

சரி, உங்க விருப்பம், வேற என்ன சொல்ல?!

பழமைபேசி said...

//அது சரி said...

அப்புறம் இரும்பு குதிரைகள் படிச்சிருப்பீங்க...பாலகுமாரனோட "இனி இரவு, எழுந்திரு" படிச்சிருக்கீங்களா? கதை ரொம்ப நல்லாருக்கும்!
//

ஆமுங்க அது சரி அண்ணாச்சி....

சின்ன அம்மிணி said...

குடுகுடுப்பை இன்னும் பொன்னியின் செல்வன் வாசிக்கலையாம். முதல்ல அவரை வாசிக்கச்சொல்லுங்க. :)

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
குடுகுடுப்பை இன்னும் பொன்னியின் செல்வன் வாசிக்கலையாம். முதல்ல அவரை வாசிக்கச்சொல்லுங்க. :)
//

Halo Mr.Kudukuduppai, you got to keep up. Do you see what I am saying?

அது சரி said...

//
சின்ன அம்மிணி said...
குடுகுடுப்பை இன்னும் பொன்னியின் செல்வன் வாசிக்கலையாம். முதல்ல அவரை வாசிக்கச்சொல்லுங்க. :)

//

ஆமுங்க...இன்னிக்கி ஆரம்பிச்சா இன்னும் ஒரு வருஷத்தில முடிச்சிரலாம்...செய்ய மாட்டேங்கிறாரே!

பழமைபேசி said...

//இன்னிக்கி ஆரம்பிச்சா இன்னும் ஒரு வருஷத்தில முடிச்சிரலாம்//

பயமுறுத்தாதிங்க.... இஃகி!

பழமைபேசி said...

//உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடித்துள்ளது. வாழ்க உங்கள் தொண்டு, வளர்க உங்கள் வலைப்பூ.//

:-o))

நசரேயன் said...

நான் என்னமோ எதோன்னு நினைச்சேன்

பழமைபேசி said...

//
நசரேயன் said...
நான் என்னமோ எதோன்னு நினைச்சேன்!//

வாங்க தளபதி! இஃகி!ஃகி!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருந்தது உங்க வாசிப்பனுவம்.

இரண்டு வருட இடைவெளி விட்ட என் வாசிப்புக்கு இப்போதுதான் புத்துயிர் கொடுத்திருக்கிறேன். எனக்குப் பிடித்த ஒவ்வொரு எழுத்தாளரின் நாவலாக லைப்ரரியில் எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
சமீபத்திய வாசிப்பு:
இரும்பு குதிரைகள், பயணிகள் கவனிக்கவும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களோட வாசிப்பனுவத்து புள்ளையார் சுழி போட்டு புத்தகம் வாங்கி கொடுத்த அக்கா வாழ்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

குடுகுடுப்பை நல்லதே செய்திருக்காரு.

இஃகி இஃகி இஃகி

உங்க பக்கத்துலர்ந்து வரும் சிரிப்பு இப்படிதானெ இருக்கும்.

ஆட்காட்டி said...

சொதப்பீட்டிங்க..

பழமைபேசி said...

//
ஆட்காட்டி said...
சொதப்பீட்டிங்க..
//
அப்ப, குடுகுடுப்பை செய்தது சரி இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

muru said...

பழமைபேசி அண்ணே நீங்க என் பதிவுக்கு வந்ததே எனக்கு பெருமை.

குடுகுடுப்பை said...

நமக்கும் வெளம்பரம் கொடுத்ததுக்கு நன்றி, நானும் எதாவது புத்தகம் படிக்கலாம்னு இருக்கேன்

பழமைபேசி said...

//muru said...
பழமைபேசி அண்ணே நீங்க என் பதிவுக்கு வந்ததே எனக்கு பெருமை.
//

நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நமக்கும் வெளம்பரம் கொடுத்ததுக்கு நன்றி, நானும் எதாவது புத்தகம் படிக்கலாம்னு இருக்கேன்.
//

Mr.Kudukuduppai, you mean, you are planning to do MBA?