இருக்குறவனும் புலம்புறான், இல்லாதவனும் புலம்புறான், அடச் சே! எங்கயோ காட்டுல மேட்டுல வேலயச் செய்துகிட்டு இருந்தப்ப கூட இவ்வளவு ஆழமான வேதனைகள் வந்ததில்லை. இனியும் இது பத்தி விபரமாப் பேசி, உங்களையும் அந்த மனநிலைக்குக் கொண்டு போக விரும்பலை!
ஆனா ஒரு செய்திய மட்டும் சொல்லிக்கிறேன். வெளிநாட்டு வாழ்க்கைல எல்லாமுங் கிடைச்சிடாது. முதல் ஆறேழு ஆண்டுகள் பல ஏற்றங்கள் இருக்கும். அதன் பின்னும், ஒருவரது வெளிநாட்டு வாழ்க்கை தொடரும் பட்சத்தில் நிறையவற்றைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கும். இது என்னோட அனுபவம். நான் ஒரு சாமான்யங்ற பட்சத்துல, அதுக்கும் சபைல ஒரு இடம் இருக்கும்ன்னும் நம்புறேன்.
எட்டப் பறி பூவை
விட்டு விடு அரும்பை
தாவிப் பறி பூவை
தள்ளி விடு அரும்பை
ஓடிப் பறி பூவை
ஒதுக்கி விடு அரும்பை
தள்ளிவிட்ட அரும்பு
தானாய் மலராதோ?
ஒதுக்கி விட்ட அரும்பு
உடனே மலராதோ?? ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்!
விட்டு விடு அரும்பை
தாவிப் பறி பூவை
தள்ளி விடு அரும்பை
ஓடிப் பறி பூவை
ஒதுக்கி விடு அரும்பை
தள்ளிவிட்ட அரும்பு
தானாய் மலராதோ?
ஒதுக்கி விட்ட அரும்பு
உடனே மலராதோ?? ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்!
18 comments:
நான் தான் முதல்ல
/*இருக்குறவனும் புலம்புறான், இல்லாதவனும் புலம்புறான்*/
ஆமா டாஸ்மாக்ல
என்னாச்சுங்க? ஊரை தேடுதா? நீங்களும் கொஞ்சம் சோகமாத்தான் எழுதியிருக்கற மாதிரி இருக்கு
/*ஒருவரது வெளிநாட்டு வாழ்க்கை தொடரும் பட்சத்தில் நிறையவற்றைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கும்*/
ஆமா
//ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்//
நிதர்சனமான உண்மை :-( :-(
அந்த செவன் இயர்ஸ் இட்ச் கல்யாணத்துலே மட்டுமில்லை, எல்லாத்துலேயும்தான் இருக்குன்னு புரியுது.
என்ன இருந்தாலும் அரை ஆயுள் தானே?
//நசரேயன் said...
/*இருக்குறவனும் புலம்புறான், இல்லாதவனும் புலம்புறான்*/
ஆமா டாஸ்மாக்ல
//
ஓ! இந்த அனுபவமும் வேற இருக்கா??
//கபீஷ் said...
என்னாச்சுங்க? ஊரை தேடுதா? நீங்களும் கொஞ்சம் சோகமாத்தான் எழுதியிருக்கற மாதிரி இருக்கு
//
கிட்டத்தட்ட அந்த மாதிரிதாங்க...
//துளசி கோபால் said...
அந்த செவன் இயர்ஸ் இட்ச் கல்யாணத்துலே மட்டுமில்லை, எல்லாத்துலேயும்தான் இருக்குன்னு புரியுது.
//
அஃகஃகா!! அனுபவத்துல சொல்றீங்க, கேட்டுக்குறோம்.... :-o)
//
என்ன இருந்தாலும் அரை ஆயுள் தானே?
//
நல்லதாப் போச்சு போங்க...
இக்கரைக்கு அக்கரை பச்சை. அம்புட்டுதேன்
//இருக்குறவனும் புலம்புறான், இல்லாதவனும் புலம்புறான்,//
உண்மையச் சொல்றமாதிரிதான் தெரியுது.
என்ன ஆச்சுங்க? நாட்ல தான் ரிசசன்னா உங்க மன்சுக்குள்ளயுமா?
இருக்குறவனும் புலம்புறான், இல்லாதவனும் புலம்புறான், அடச் சே!
புலம்புவது பொதுவா போச்சுது இப்போ.
ஆனா ஒரு செய்திய மட்டும் சொல்லிக்கிறேன். வெளிநாட்டு வாழ்க்கைல எல்லாமுங் கிடைச்சிடாது.
:)))))))
அர்த்தமிகு அரும்பு பாடல்
//ஆனா ஒரு செய்திய மட்டும் சொல்லிக்கிறேன். வெளிநாட்டு வாழ்க்கைல எல்லாமுங் கிடைச்சிடாது. //
சத்தியமான வார்த்தைகள். வெளியே பார்பதற்குதான் பலபலப்பான வாழ்க்கை...
உற்றார், உறவினர் எல்லோரையும் பிரிந்து இருப்பது ஒரு பக்கம் என்றால், ஒரு பண்டிகையை கூட நம்ம ஊரில் கொண்டாடடுவது போல் கொண்டாட முடியாது...
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமா... என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.
என்னங்க இது சபையில உங்களுக்கு இல்லாத இடமா ?
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்!
//
தமிழர்களை சொல்கிறீர்களா
இராகவன், நைஜிரியா said...
//ஆனா ஒரு செய்திய மட்டும் சொல்லிக்கிறேன். வெளிநாட்டு வாழ்க்கைல எல்லாமுங் கிடைச்சிடாது. //
சத்தியமான வார்த்தைகள். வெளியே பார்பதற்குதான் பலபலப்பான வாழ்க்கை...
உற்றார், உறவினர் எல்லோரையும் பிரிந்து இருப்பது ஒரு பக்கம் என்றால், ஒரு பண்டிகையை கூட நம்ம ஊரில் கொண்டாடடுவது போல் கொண்டாட முடியாது...
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமா... என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.
//
என் நினைவும் இதுவே.
வ.மு பக்கம் போங்க புது பதிவு வந்துருக்கு, படிச்சு உற்சாகப்படுதுங்க
Post a Comment