12/07/2008

பட்டு(த்) தெரிஞ்சுகிட்டேன்!

வணக்கம்! தீபாவளி சமயத்துல பட்டு சேலைகளைப் ப்ற்றி தங்கமணி ஏதோ கேட்க, நான் மேலும் கீழுமாக‌ப் பார்க்க, அவர்கள் அவர்களுக்கு தெரிந்த பட்டு வரலாறு பற்றிக் கூறினார்கள். மிகவும் சுவ்ராசியமாக இருந்தது. நானும் மேலதிகத் தகவலுக்காக வலையில் மேய்ந்த போது, மேலும் பல தகவல் கிடைக்கப் பெற்றேன். அதன் சாராம்சமே இந்தப் பதிவு.

சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி(Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அத‌னைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப் பட்டதாம்.

இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய, முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி, அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.

இந்த‌ச் சூழ‌லில், ஜ‌ப்பானிய‌ர்க‌ள் வெகு சாம‌ர்த்திய‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்க்க‌த் தெரிந்த‌ நான்கு சீன‌ப் பெண்ம‌ணிக‌ளைக் க‌ட‌த்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திரும‌ண‌ம் செய்து கொண்டார்க‌ள். அத‌ன் பின் ஜ‌ப்பானிய‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்ப்பைத் துவ‌க்கி, அத‌ன் உற்ப‌த்தியில் மேம்பாடு க‌ண்டு சீனாவின் உற்ப‌த்தியை விட‌ ப‌ன்ம‌ட‌ங்கு உற்ப‌த்தி செய்ய‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ளாம். ஆனால், சீன‌ர்க‌ளுக்கு அபிவிரித்தி செய்ய‌த் தெரிந்து இருக்க‌வில்லையாம்.

அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது. இப்படித்தான், இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டுச் சேலை வாங்கித்தர இயலாததின் காரணமாக, பட்டுத் தெரிந்து கொண்டேன் பட்டு பிறந்த கதையினை!

பட்டே நீஎன்றன் பட்டினைப்
படாமல் பட்டேன் பெரும்பாடு!

17 comments:

Mahesh said...

இதுதான் "பட்டறிவா"? இஃகி!! இஃகி!!

Anonymous said...

தீபாவளிக்கு பட்டு புடவை வாங்குவது எதனால் தெரியுமா..

வீட்டு காரர், கஷ்டப்பட்டு. கடன் பட்டு, வேதனை பட்டு, படாததெல்லாம் பட்டு வாங்க வேண்டும் என்பதால்தான் தீபாவளிக்கு பட்டு புடவை வாங்குகின்றார்கள்.

கபீஷ் said...

:-):-):-)

அப்பாவி முரு said...

///இதுதான் "பட்டறிவா"? இஃகி!! இஃகி!!///
இல்லை அண்ணியிடம் பட்ட-தால் வந்த அறிவா..
ஹா...ஹா..

அது சரி said...

//
இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டுச் சேலை வாங்கித்தர இயலாததின் காரணமாக, பட்டுத் தெரிந்து கொண்டேன் பட்டு பிறந்த கதையினை!
//

உங்க வீட்ல ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல...கதை சொல்லிட்டு விட்டுட்டாங்க...நெறைய எடத்தில "பட்டு"ன்னு குடுத்திருப்பாங்க!

ஆறாம்பூதம் said...

பட்டும் படாம பட்டு பொடவ வாங்கித் தராம தப்பிச்சுட்டிங்க

பழமைபேசி said...

//Mahesh said...
இதுதான் "பட்டறிவா"? இஃகி!! இஃகி!!
//

வாங்க மகேசு, வணக்கம்! இதெல்லாம் சொல்லணுமா?

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
தீபாவளிக்கு பட்டு புடவை வாங்குவது எதனால் தெரியுமா..

வீட்டு காரர், கஷ்டப்பட்டு. கடன் பட்டு, வேதனை பட்டு, படாததெல்லாம் பட்டு வாங்க வேண்டும் என்பதால்தான் தீபாவளிக்கு பட்டு புடவை வாங்குகின்றார்கள்.
//

பட்டு பட்டுன்னு புட்டு புட்டு வெக்கிறீங்க... :-o)

பழமைபேசி said...

//கபீஷ் said...
:-):-):-)
//

எதிர் அணிக்காரங்களுக்கு ஒரே சிரிப்பு....

பழமைபேசி said...

//அது சரி said...
உங்க வீட்ல ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல...கதை சொல்லிட்டு விட்டுட்டாங்க...நெறைய எடத்தில "பட்டு"ன்னு குடுத்திருப்பாங்க!
//

இஃகி!! இஃகி!!

பழமைபேசி said...

//வசந்த் கதிரவன் said...
பட்டும் படாம பட்டு பொடவ வாங்கித் தராம தப்பிச்சுட்டிங்க
//

வாங்க வசந்த், வணக்கம்! இனி அடுத்த வருச தீபாவளி வரைக்கும் வாங்கிக் கட்டணுமே? எனக்காக அனுதாபப்படுங்க!

Anonymous said...

வீட்டம்மாவுக்கு பட்டுப்புடவை ஒழுங்கா வாங்கிக்குடுக்கறீங்களா!!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
வீட்டம்மாவுக்கு பட்டுப்புடவை ஒழுங்கா வாங்கிக்குடுக்கறீங்களா!!
//

ஒரு ஏமாந்துடுச்சுங்க.... அடுத்த தடவை வாங்கிக் குடுத்துடறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தங்கமணிக்கு பட்டு புடவை வாங்கித்தராமல் நமக்கு பட்டுப்புடவை கதை சொல்லும் இந்த ரங்கமணியை நான் வன்மையாக வாழ்த்துகிறேன்.

ஏனெனில் ஒரு பட்டுப்புடவைக்காக ஆயிரக்கணக்கில் பட்டுப்பூச்சியை அழிக்கிறார்களாம்.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
தங்கமணிக்கு பட்டு புடவை வாங்கித்தராமல் நமக்கு பட்டுப்புடவை கதை சொல்லும் இந்த ரங்கமணியை நான் வன்மையாக வாழ்த்துகிறேன்.

ஏனெனில் ஒரு பட்டுப்புடவைக்காக ஆயிரக்கணக்கில் பட்டுப்பூச்சியை அழிக்கிறார்களாம்.
//

நீங்க சொல்லுறதுதான் வாசுதவமான பேச்சுங்க! நன்றிங்க!!

நசரேயன் said...

தீபாவளி செலவு ரெம்ப அதிகமோ?

பழமைபேசி said...

//நசரேயன் said...
தீபாவளி செலவு ரெம்ப அதிகமோ?
//

அதான் பட்டுகிட்டமே?! அப்புறம் எதுக்கு செலவு??