12/08/2008

கனவில் கவி காளமேகம் - 10

வணக்கம் அன்பர்களே! ஒரு நாளைக்கு ரெண்டு பதிவுன்னு போன வாரம் ரொம்ப முசுவா(busy)ப் போச்சு. நேத்தைக்கு சார்லட்ல (Charlotte, NC) பதிவர் சந்திப்பு! அதுவும் நல்லா, பம்பலா(fun)ப் போச்சு. எல்லாம் முடிச்சுட்டு வந்து சிவனேன்னு படுத்தேன். நல்ல நித்திரை! திடீல்னு வழக்கம் போல கவி காளமேகம் அப்பிச்சி கனவுல வந்துட்டாரு. மேல படீங்க, என்னாதான் சொன்னாருங்றதைத் தெரிஞ்சுக்குவீங்க.

"என்னடா பேராண்டி, பரவாயில்லையே, கெரமாத்தை உட்டு வந்து நொம்ப நாளானுலும், ஊர்ப் பழமயப் போட்டு, உன்னோட நட்சத்திர வாரத்தை ஓட்டிட்டயே?"

"ஆமுங்க, எழுதறதுக்கு வேற ஒன்னுங் கிடைக்கலை, அதான்!"

"சரிச் சரி, போனதைப் பத்திப் பேசறத உட்டுட்டு இப்ப விசியத்துக்கு வா. நீ அடிக்கடி பெனாத்தறயாமே, உண்மையா?"

"ஆமா பின்ன, இப்பிடி வந்து தூக்கத்துல அக்கப்போர்(trouble) பண்ணினாப் பினாத்தாம வேற என்ன செய்யுறதுங்க அப்பிச்சி?"

"சாமார்த்யமாப் பேசுறடா! ஆமா, பினாத்துறதுன்னா என்ன?"

"க‌ண்ட‌ப‌டி உள‌ற‌துதான் பினாத்துற‌து. என‌க்கு புரிஞ்சு போச்சு, நீங்க‌ அங்க‌ தொட்டு இங்க‌ தொட்டு, க‌ண்ட‌துக்கும் விள‌க்க‌ஞ் சொல்ல‌ச் சொல்லுவீங்க‌. இன்னைக்கு நான் த‌யாரில்லை. சொல்ல‌ வ‌ந்த‌தைச் சொல்லிட்டு ந‌டைய‌க் க‌ட்டுங்க‌ அப்பிச்சி!"

"என்ன‌டா இது? ச‌ரி சொல்லுற‌ன், அதையாவ‌து கேட்டுக்கோ!"

"சொல்லுங்க‌!"

"அல‌ட்டுத‌ல்ன்னா அல‌ட்சிய‌ப் ப‌டுத்த‌ற‌து. பீத்துத‌ல்ன்னா வீண் பெருமை பேசுற‌து. பினாத்துத‌ல்ன்னா நீ சொன்ன‌ மாதிரி, உள‌ற‌ல் அல்ல‌து பித‌ற்ற‌ல். அனாம‌த்துன்னா பொதுவா இருக்குற‌து. உன்னோட‌ வீட்டை ஊருக்கார‌ங்க‌ எடுத்துகிட்டாச் சொல்லுற‌து, வீடு அனாம‌த்தாப் போச்சு. இதுவே, அனாவ‌சிய‌ம்ன்னா, அவ‌சிய‌மில்லாத‌ ஒன்னு. அதாவ‌து, 'அ'னாவை மங்கலத்துக்கு முன்னாடி போட்டா அமங்கலம் ஆயிடும். அது மாதர, 'அ'னாவை அவசியத்துக்கு முன்னாடி போட்டா வர்றது அனாவசியம்.

"ஏன் அப்பிச்சி, இதெல்லாம் தமிழ் வார்த்தைகதானா?"

"ஆமா, இல்லாட்டி நான் எதுக்கு உங்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்?"

"சரிங்க அப்பிச்சி, இந்நேரம் நாம பேசினதப் பதிவாப் போட்டா, வாசகர்கள் தேடிப் பிடிச்சு உதைப்பாங்க. எதாவது விசியஞ் சொல்லிட்டுப் போங்க!"

"ம்ம், நம்ம காட்டுல அவரை போடுவமே, என்னன்ன அவரை போடுவோஞ் சொல்லு!"

"அவரை, துவரை ஞாபகத்துல இருக்குறதே பெரிய விசியம், நீங்க வேற! சரி சொல்லுங்க நீங்களே!!"

"முறுக்கவரை, காட்டவரை, கொத்தவரை, சிவப்பவரை, பேயவரை, நகரவரை, பேரவரை, பாலவரை, கணுவவரை, தீவாந்தரவவரை, கோழியவரை ,வாளவரை அப்புறமா சிற்றவரை!"

"இதுல ரெண்டு மூணு எனக்குத் தெரியும். மத்ததெல்லாம் மறந்து போச்சுங்க!"


"ச‌ரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.
(......கனவுல இன்னும் வருவார்......)

23 comments:

Anonymous said...

//அதாவ‌து, 'அ'னாவை மங்கலத்துக்கு முன்னாடி போட்டா அமங்கலம் ஆயிடும். அது மாதர, 'அ'னாவை அவசியத்துக்கு முன்னாடி போட்டா வர்றது அனாவசியம்.//

It's Nice...

Anonymous said...

அட நான் தான் முதல்ல...

Anonymous said...

நான் தூங்குனா என் கனவுல நமீதாவும், சதா சதாவும் தான் வராங்க...

Mahesh said...

இந்த மாதர உங்களைத் தொந்தரவு பண்ற அவரை... அவரை...என்ன் பண்ணலாம்? ஒண்ணும் பண்ன முடியாது. மறுக்கா வரச் சொல்லுங்க.

கபீஷ் said...

அப்பச்சி வந்துட்டாரா மறுபடியும். தூக்கம் போச்சுதா உங்களுக்கு, நொம்ப சந்தோஷமா இருக்கு :-)

ராஜ நடராஜன் said...

இஃகி!இஃகி!(எல்லாம் அரசல் புரசலா கத்துக்கிடறதுதான்:))நட்சத்திர நாற்காலியப் பிடிங்கிட்டாங்களா?இந்தக் கெரகத்துக்குத்தான் நான் அங்கே இங்கேன்னு பழம பேசடறதோட சரி.

இது சரி(அது சரின்னு ஒரு அண்ணன் அந்த வார்த்தைக்குப் பட்டா போட்டுகிட்டாருல்ல).அவரக்காய் கூட்டத்தில துவரக்காயும் சேருமா?அல்லது ரெண்டும் வேறா?ஏன்னா ஒன்னு கொடியில படர்வது இன்னொன்று செடியில் காய்ப்பது? காளமேகத் தாத்தாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.

பழமைபேசி said...

//Sriram said...
நான் தூங்குனா என் கனவுல நமீதாவும், சதா சதாவும் தான் வராங்க...
//

இஃகி!ஃகி!

பழமைபேசி said...

//Mahesh said...
இந்த மாதர உங்களைத் தொந்தரவு பண்ற அவரை... அவரை...என்ன் பண்ணலாம்? ஒண்ணும் பண்ன முடியாது. மறுக்கா வரச் சொல்லுங்க.
//

ஆமாங்க, வேற என்ன பண்ண முடியும்? அஃக!ஃகா!!

பழமைபேசி said...

//கபீஷ் said...
அப்பச்சி வந்துட்டாரா மறுபடியும். தூக்கம் போச்சுதா உங்களுக்கு, நொம்ப சந்தோஷமா இருக்கு :-)
//

பாருங்கப்பா....அடுத்தவன் துன்பத்துல ஒரு கொண்டாட்டத்தை!! க்கும்!!!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
இது சரி(அது சரின்னு ஒரு அண்ணன் அந்த வார்த்தைக்குப் பட்டா போட்டுகிட்டாருல்ல).அவரக்காய் கூட்டத்தில துவரக்காயும் சேருமா?அல்லது ரெண்டும் வேறா?ஏன்னா ஒன்னு கொடியில படர்வது இன்னொன்று செடியில் காய்ப்பது? காளமேகத் தாத்தாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.
//

வாங்க நடராசு அண்ணே! ஆமாங்க, இந்த அவரை ஒரு இடை வெட்டு. கொடியா இருக்குறதுல காயப் பறிச்சு பொறியல்.... செடியாவும் இருக்கு....அதுல இருந்து அவரை விதை எடுத்து பருப்பு கடையலாம். துவரை செடி மட்டுந்தான்.... துவரைமார்ல அடிச்சா, சுள்ளுன்னு பத்தும். துவரைப் பூ மஞ்சள் நெறத்துல அம்புட்டு அழகா இருக்கும்.... அதுல குட்டியூன்டு குருவி வந்து தேனெடுக்குறது இன்னும் அழகா இருக்கும்.... அதெல்லாம் இப்ப வெறும் நெனப்புலைன்னே ஆயிப்போச்சு போங்க....

தேவன் மாயம் said...

நாங்கள்ளாம் பதிவு என்னத்தடா
போட்றதுன்னு மண்டையைப்
போட்டு குழப்பிக்கொண்டு
இருக்கும்போது எளிமையா
பதிவு போட்றீங்க!!!
அருமை!!!
தேவா.

பழமைபேசி said...

//thevanmayam said...
நாங்கள்ளாம் பதிவு என்னத்தடா
போட்றதுன்னு மண்டையைப்
போட்டு குழப்பிக்கொண்டு
இருக்கும்போது எளிமையா
பதிவு போட்றீங்க!!!
அருமை!!!
தேவா.
//

வாங்க தேவா! வணக்கம்!! ச்சும்மா, கற்பனைக் குதிரையத் தட்டி வுடுங்க, உங்களுக்குள்ள ஆயிரம் விசயம் இருக்கும்...அது உங்க்ளுக்கே தெரியாது.
நன்றிங்க!

ராஜ நடராஜன் said...

//அதுல குட்டியூன்டு குருவி வந்து தேனெடுக்குறது இன்னும் அழகா இருக்கும்.... அதெல்லாம் இப்ப வெறும் நெனப்புலைன்னே ஆயிப்போச்சு போங்க....//

ஒண்ணு சொன்னா இன்னொன்னு உங்களுக்குத் தொடுப்பா வருது!!நமக்கு இந்த சிட்டுக்குருவி தேன்குடிக்கிறதையெல்லாம் கவனிக்கறதுக்கு நேரமிருக்குறதில்ல.ஏன்னா நாமளே ஒரு தேன் திருடி.எந்த வாழப்பூவுல தேனிருக்குதுன்னு பார்த்து உறுஞ்சறதும் தோட்டங்காரங்க கிட்ட வாங்கிக் கட்டிக்கிறதும் அப்புறமும் அந்த தேன் திருட்டுப் புத்தி போனாத்தானே:)

நசரேயன் said...

/*உன்னோட‌ வீட்டை ஊருக்கார‌ங்க‌ எடுத்துகிட்டாச் சொல்லுற‌து, வீடு அனாம‌த்தாப் போச்சு*/

எனக்கு தகவல் சொல்லாமா போயட்டாங்களே

நசரேயன் said...

நீங்க ஒன்னும் பினாத்தல

பழமைபேசி said...

//நசரேயன் said...
நீங்க ஒன்னும் பினாத்தல
//

நம்பிட்டோம்!

குடுகுடுப்பை said...

என்ன ஒரே பீத்தலா இருக்கு இங்க.அப்படியே உங்க தாத்தாவ அனுப்பிச்சு எனக்கு 'ர',ற சொல்லிக்கொடுங்க சொல்லுங்க.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
ஏன்னா நாமளே ஒரு தேன் திருடி.எந்த வாழப்பூவுல தேனிருக்குதுன்னு பார்த்து உறுஞ்சறதும் தோட்டங்காரங்க கிட்ட வாங்கிக் கட்டிக்கிறதும் அப்புறமும் அந்த தேன் திருட்டுப் புத்தி போனாத்தானே:)
//

வாழைப்பூல தேன் நிறைய இருக்கும். ஆமுங்க! கூடவே வாழைத் தோப்புல கொம்பேறிகளும் இருக்கும். நாங்க எல்லாம் குறி வெச்சா, கல்கட்டுத் தேனுக்குதான்.... துளசியும், திருநீறுப்பத்திரித் தளையும் பூச்சிட்டு சுலுவா எடுத்துருவம்ல?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
என்ன ஒரே பீத்தலா இருக்கு இங்க.அப்படியே உங்க தாத்தாவ அனுப்பிச்சு எனக்கு 'ர',ற சொல்லிக்கொடுங்க சொல்லுங்க.
//

நீங்க ஏன் பெருசா அலட்டிக்கிறீங்க? பாத்து செஞ்சீங்கன்னா, அது உங்களுக்கு வந்திட்டுப் போகுது.

சரண் said...

என்கிருந்து இத்தன சேதிகள புடிக்கிறிங்களோ...?

அடுத்த தலமுறக் கெல்லாம் இதெல்லாம் புரியப் போறதில்லைங்கறத நெனச்சாத்தன் கொஞ்சம் வெசனமா இருக்கு போங்க..

பழமைபேசி said...

//சூர்யா said...
அடுத்த தலமுறக் கெல்லாம் இதெல்லாம் புரியப் போறதில்லைங்கறத நெனச்சாத்தன் கொஞ்சம் வெசனமா இருக்கு போங்க..
//

ஆமுங்க...அதான், வலையேத்தி வெப்போம்...படிக்கிறவ்ங்க படிச்சுத் தெரிஞ்சுகிடட்டும்.

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே ஒட்டு போட்டுட்டேன்.. அப்பாலிக்கா வரேன்..
மன்னிச்சுக்கோங்க

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
அண்ணே ஒட்டு போட்டுட்டேன்.. அப்பாலிக்கா வரேன்..
மன்னிச்சுக்கோங்க
//

நன்றிங்க ஐயா!