12/26/2008

அப்பிச்சி

முதுகு மேலஏறி பிஞ்சுக் காலால
மிதிச்சுவிட்டா பத்து பைசாகுடுப்பீங்க!
காலுரெண்டும் புடிச்சிவிட்டு வெத்தலை
பாக்கு கொட்டிக்குடுத்தா நாலனாவும்
திறகணிச்சொம்பு நிறைய காப்பித்தண்ணி
தோட்டம் கொண்டுவந்தா எட்டனாவும்
கெழக்காலூரு காளியாத்தா நோம்பிக்கு
கையில பம்பாய்முட்டாய்க்
கடியாரம் பூனைக்கண்ணாடியோட‌
ரெண்டு சீக்கியும் வாங்கித் தருவீங்க!

வேலூர் சந்தையில பொரிஉருண்டை
கெழங்கு வத்தலும் வாங்கிவருவீங்க!!
மணியாமணியான்னு மாருல போட்டுத்தான‌
கொஞ்சுவீங்க; தோள்ள ஒக்காரவெச்சு
காததூரம் காத்துவாங்கப் போவீங்க! இப்ப
எனக்கு சந்தையுமில்ல, நோம்பியுமில்ல,
வாகாக் கதைசொல்ல நீங்களுமில்ல!!

எழுதி வழங்கான் வாழ்க்கை, கழுதை புரண்ட களம்!

24 comments:

Anonymous said...

Nice nostalgia

வனம் said...

Its very good

sorry பழமைபேசி here in office i can't type in tamil

but its very good kavuja

let me get you later

Rajarajan

பழமைபேசி said...

//Anonymous said...
Nice nostalgia
//
நினைவுகள அசைப் போட்டுட்டே காலத்த ஓட்ட வேண்டியதுதான்.... நன்றி!

பழமைபேசி said...

//இராஜராஜன் said...
Its very good

sorry பழமைபேசி here in office i can't type in tamil

but its very good kavuja

let me get you later

Rajarajan
//ரொம்ப நன்றீங்க அய்யா! இன்னும் நெறய படைக்கணும்!!

நசரேயன் said...

படிக்கவே கஷ்டமா இருக்கு, எனக்கு எங்க பாட்டி ஞாபகம் வந்து விட்டது

குடுகுடுப்பை said...

சரி விடுங்க அப்பச்சி, அதான் காளமேகம் கனவுல வராருல்ல

இராகவன் நைஜிரியா said...

எனக்கு என் தாயையும் தந்தையும் நினைப்பூட்டிவிட்டீர்கள்.

தாயும், தந்தை மறைந்து வருடங்கள் 3 ஆனாலும் அவர்கள் கற்றுக்கொடுத்தது மறக்கவில்லை.

கபீஷ் said...

நல்லாருக்கு + கொஞ்சம் பாவமாயிருக்கு

cheena (சீனா) said...

கிராமப்புற பெற்றோர் பிள்ளைகளை பாசமாக வளர்த்த விதம் நன்று. இவ்வசதிகள்நகர்ப்புற மழலைகளுக்குக் கிடைப்பதில்லை.

பழமைபேசி said...

//நசரேயன் said...
படிக்கவே கஷ்டமா இருக்கு, எனக்கு எங்க பாட்டி ஞாபகம் வந்து விட்டது
//

ஆமாங்க.... சின்னஞ் சிறுசுகளோட நாம நேரத்தை செலவு செய்யணும்...அதான் படிப்பினை!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
சரி விடுங்க அப்பச்சி, அதான் காளமேகம் கனவுல வராருல்ல
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
ஆனாலும் அவர்கள் கற்றுக்கொடுத்தது மறக்கவில்லை.
//

வாங்க இராகவன் ஐயா, அதுதான நம்ம சொத்து...

பழமைபேசி said...

//கபீஷ் said...
நல்லாருக்கு + கொஞ்சம் பாவமாயிருக்கு
//

ஆமுங்க... நன்றிங்க...

பழமைபேசி said...

//cheena (சீனா) said...
கிராமப்புற பெற்றோர் பிள்ளைகளை பாசமாக வளர்த்த விதம் நன்று. இவ்வசதிகள்நகர்ப்புற மழலைகளுக்குக் கிடைப்பதில்லை.
//

வாங்க ஐயா, வணக்கம்! ஆமாங்க ஐயா, இப்ப கிராமத்துலயுந்தான அதுகெல்லாம் மாறிட்டு வருது.

Mahesh said...

:(
:(
:(
:(
:(

Poornima Saravana kumar said...

எனக்கு என் அப்பாரு நியாபகம் வந்திருச்சு.. ஹ்ம்ம் எனக்கு அவரை பார்த்து பேசணும் போல இருக்கு.. என்னோட இந்த நிலைமைக்கு காரணம் பழமைபேசி மட்டுமே :(((

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க.
ம், நான் கூட நல்ல மெதிப்பேனுங்க.
ம், எங்க மாமா முதுகை மெறிச்சுவிட்டேன்னாக்கா 50 பைசா தருவாரு.
அப்பிச்சியெல்லாம் நான் பொறக்கற்துக்கு முன்னாடியே டாட்டா காட்டிட்டாங்க.
தாத்தா பாக்கியம் வாய்க்கவேயில்லை.

பாட்டி மட்டும் நாகரத்தினம் நாகரத்தினம்னு கூப்பிட்டு கொஞ்சநாள் இருந்து பின் உசிரை விட்டாங்க.

ம்ம், நீங்க சொன்னா மாதிரி //

நினைவுகள அசைப் போட்டுட்டே காலத்த ஓட்ட வேண்டியதுதான்....

பழமைபேசி said...

//Mahesh said...
:(
:(
:(
:(
:(
//

ஞேஏஏஏஏஏஏஏஏ....ஃம்

பழமைபேசி said...

//PoornimaSaran said...
எனக்கு என் அப்பாரு நியாபகம் வந்திருச்சு.. ஹ்ம்ம் எனக்கு அவரை பார்த்து பேசணும் போல இருக்கு.. என்னோட இந்த நிலைமைக்கு காரணம் பழமைபேசி மட்டுமே :(((
//

ஐயோ, பாவம்.... தேத்திகுங்க கண்ணு!

பழமைபேசி said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்லா கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க.
//

இஃக்ஃகி! எதோ நம்மாள ஆனது!!

தேவன் மாயம் said...

///மணியாமணியான்னு மாருல போட்டுத்தான‌
கொஞ்சுவீங்க;///

இதையெல்லாம் நீங்களும் ஞாபகம் வச்சு இருக்கிறதும் இல்லாம எங்களையும் கொல்லுறீக அப்பு.
உங்க ஊரிலும் அப்பிச்சிதானா?
தேவா>>>

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குங்க பழமைபேசி..

பழமைபேசி said...

//thevanmayam said...
இதையெல்லாம் நீங்களும் ஞாபகம் வச்சு இருக்கிறதும் இல்லாம, எங்களையும் கொல்லுறீக அப்பு.
உங்க ஊரிலும் அப்பிச்சிதானா?
தேவா>>>
//

இஃகிஃகி! ஆமாங்க, எங்க ஊர்லயும் அப்பிச்சி, அப்பாருன்னுதான் சொல்லுறது.

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நல்லா இருக்குங்க பழமைபேசி..
//

நன்றிங்கோ!