சரி அதெல்லாம் ஒரு வழியா ஓர்சலுக்கு வந்தாச்சுன்னு சிறு மூச்சு பெரு மூச்சு வுடுறதுக்குள்ள, அந்தப் பொறத்துல மறு வேலை ஆரமிச்சிரும். ஆமாங்க, மானாவாரி மேட்டாங் காட்டுல அறுவடை வந்துரும். அதாங்க மானம் பார்த்த பூமி, அதைத்தான் மானாவாரின்னுஞ் சொல்றது. கொத்தமல்லி புடுங்கோணும், கடலைக் காய் புடுங்கோணும், கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு....
இப்பிடி ரெண்டு பொறத்தாலயும் எல்லா வேலையும் முடிஞ்சதுக்கப்புறம் அப்பாடன்னு ஆசுவாசப்படுத்துறதுக்குள்ள சித்திரை மாசமே வந்துரும். உப்புசம் வேற பாடாப்படுத்தும். சித்திரைக் கழுவுக்கு பழனிமலை போயிட்டு, சண்முக நதியில குளிச்சிட்டு வருவோம். இந்த வேலையெல்லாம் முடிஞ்சவுட்டுத்தான், ஆற அமர ஒக்காந்து நடந்து முடிஞ்சதையெல்லாம் நெனைச்சுப் பாக்குறது உண்டு.
அந்த மாதர, வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழாதான் முடிஞ்சு போச்சே? வாங்க, நெனைச்சுப் பாத்து முதல்பத்து(top ten) போடுலாம்... அட, சும்மா வந்து உங்க கருத்துகளையுஞ் சொல்ட்டுப் போங்க மக்கா... இஃகிஃகி!
நிறைகள்
(என் பார்வையில் விழா வெற்றி பெற்றதின் காரணிகள்)
10. -------------------------
09. ------------
08. சிறிய அரங்கம் (more audience?)
07. நேரடி ஒளிபரப்பு (live telecast)
06. தகவல் தொடர்பு (media)
05. குழந்தைகளை ஆற்றுப்படுத்த ஒரு அறை (room for kids)
04. செய்தி (setting expectation)
03. இலக்கியம், பண்பாட்டுக்கான முன்னுரிமை (promote culture)
02. மரபு போற்றுதலில் மேன்மை (improvement in maintaining protocol)
01. சமச்சீர் முக்கியத்துவம்(balanced trait)
இதெல்லாம் நெம்ப அதிகமா இல்லை? எழுபத்தி அஞ்சு வெள்ளி குடுத்து மூனு நாளும் நல்லா ஒக்காந்து எல்லாம் குதூகலமாக் கொண்டாடிட்டு, அது நல்லா இருக்கு, அது நொல்லை, இது நொல்லைன்னு மேதாவித்தனமா செய்யுறேன்னும், படுவா ராசுகோலுன்னும் நீங்க வையலாம்... ஆனாலும், இதழியல் அறம்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க?! அஃகஃகா...
மக்கா, விழா வளாகத்துல நீங்களும் இருந்திருந்தீங்கன்னா, உங்க கருத்தையும் சொல்ட்டு போங்க சித்த... கனெக்டிக்கெட்காரவுங்க இப்பவே கதி கலங்கிப் போயிருப்பாங்க... நாம சொல்லுற பழமையிக அவுங்களுக்கு ஒதவியா இருக்கும் பாருங்க.... இஃகிஃகி!
(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)
23 comments:
உங்க எழுத்து நடை படிக்க நல்லாருக்குங்க :).
நாளக்கி இன்னொரு பதிவு ஃபெட்னா தொடர்பா என்னிடமிருந்து வரும், ரொம்ப எதிர்மறையா இருக்கிற மாதிரி இருக்காதுன்னு நம்புறேன்.
பார்க்கலாம். பதிவுகள் பதியப் படணும்தான், எதிர்கால விழாக்களுக்கு உதவலாம் நீங்க சொன்ன மாதிரியே...
உப்புசம்?
உப்புசம்?
//ஐந்தினை said...
உப்புசம்?
//
இஃக்ஃஇகி... இது கோயமுத்தூர்ப் பழமையிங்கண்ணா....
உப்புசம் = வெக்கை, வெம்மை, ஆற்றாமை, உப்புக் கரித்தல்
//Thekkikattan|தெகா said...
உங்க எழுத்து நடை படிக்க நல்லாருக்குங்க :).
நாளக்கி இன்னொரு பதிவு ஃபெட்னா தொடர்பா என்னிடமிருந்து வரும், ரொம்ப எதிர்மறையா இருக்கிற மாதிரி இருக்காதுன்னு நம்புறேன்.
//
நன்றிங்க... நீங்களும் விழாவைச் சிறப்பிக்கக் கடமைப்பட்டவங்க... அதை மொதல்ல மனசுல வையுங்க இராசா...
இந்த முதல் பத்தெல்லாம் ஒரு ஆக்கப்பூர்வமான மேன்மைக்கானதா இருக்கட்டுமேன்னுதான்... மத்தபடி எதிர்மறைன்னு சொல்லி எல்லாம்..... அவ்வ்வ்..... அழுதுருவேன்....
//கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு...//
அண்ணே., தமிழ்நாட்டுல கோதுமை விளையுதா????
//அப்பாவி முரு said...
//கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு...//
அண்ணே., தமிழ்நாட்டுல கோதுமை விளையுதா????
//
அய்ய, என்ன இப்பிடிக் கேட்டுப் போட்டீங்க... இன்னமும் எங்க காட்டுல சம்பா கோதுமை வெளையுது... இங்க அமெரிக்காவுல கூட, எங்க காட்டுக் கோதும்பி இரவை எங்கூட்ல இருக்குது கண்ணூ...
///
அப்பாவி முரு said...
//கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு...//
அண்ணே., தமிழ்நாட்டுல கோதுமை விளையுதா????
///
அப்பாவியா கேட்கிறார் பாருங்கோ...
மொத ரெண்டு கோடிட்ட இடத்தை என்னோட பதிவிலே கிசுகிசு வா போடவா?
பொதுச்செயலாலர்
கு.ஜ.மு.க
தேனுங்ணா.... அதுக்குள்ளே மேட்டங்காட்ட ஒலவோட்டி வெச்சுபோட்டீங்களா.....??
கல்லகொடி புடுங்கி என்ன பண்ணுனீங்க.....?? அத அப்புடியே மடக்கிபோட்டு ஒலவோட்டி வெச்சு , மறுக்காலும் எள்ளு காயி இல்லீனா கடல .. இப்புடி போட்டா நெம்ப நல்லா வருமுங்ண்ணோவ் .....!!
அருமை
//04. செய்தி (setting expectation)//
புரியலையே?
// ஆனாலும், இதழியல் அறம்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க?! //
அப்படி ஒன்று இருக்கா? இன்றுமா...
Lows:
1. We love Tamil. But most of the people in FeTNA ignored Friday night's Carnatic music in which all the songs were sung in Tamil.
2. What is the use of discussing Sri Lankan problem without discussing a solution for the refugees who are in camps? Nothing was discussed on how to help the refugees. Not even a single dollar was raised to help these people.
3. Lack of Youth participation - FeTNA continues to ignore the youth/next generation. FeTNA need to actively involve the youth.
PS: How to type in Tamil?
//Tamil said...

Really appreciate your constructive feedback... I totally agree with you on this... Indeed I did mention all these in one or the other way....
//1. We love Tamil. But most of the people in FeTNA ignored Friday night's Carnatic music in which all the songs were sung in Tamil.//
இலக்கியம், பண்பாட்டுக்கான முன்னுரிமை (promote culture)
//2. What is the use of discussing Sri Lankan problem without discussing a solution for the refugees who are in camps? Nothing was discussed on how to help the refugees. Not even a single dollar was raised to help these people. //
exactly, this is my first point and also refer my post about handbook....
01. சமச்சீர் முக்கியத்துவம்(balanced trait)
//3. Lack of Youth participation - FeTNA continues to ignore the youth/next generation. FeTNA need to actively involve the youth. //
good point... there is no message to the parents at all... we got to set the expectation some thing like.... next year we need to draw attention from youth, and should raise membership etc, etc..
04. செய்தி (setting expectation)
நன்றிங்க! இங்கதான் நானும் நீங்களும் இன்னும் முன்னாடி வந்து செய்யணும்.... நாம நம்ம பங்களிப்பைச் செய்துட்டு, விமர்சனம் செய்யலாம்... நிறைய விழிப்புணர்வு தேவைப்படுது பாருங்க... அதனால நான் என்னால முடிஞ்ச அளவு செய்திகளை வெகு சன மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கறதுல பங்களிப்பு செய்ய முயற்சி செய்யுறேன்...அப்படி நாம எல்லாரும் செய்தா இன்னும் சிறப்பா அமைய வாய்ப்பு இருக்கு....
தமிழ்ல தட்டச்சு செய்ய, NHM Writer, http://tamileditor.org/ இதுகளை நீங்க பாவிக்கலாம்.
Another LOW is Fetna continuing to deliberately ignore Sprituality in Tamil. After Sanskrit, Tamil has so much spiritual Iyal/Isai/Natakam. Fetna leadership is steeped in kazhagam politics that they are trained to ignore spirituality.
A high is the fiesty spirit of the organizers in Atlanta.
Sorry, did not know how to type in Tamil font here.
//Harianna said...

வணக்கம்! தங்கள் கருத்து கவனிக்கப்படும் என மிகவும் நம்புகிறேன். கடந்த காலத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
இளைஞர்கள் முன்வரும்போது இக்குறை களையப்படுவது சுலபம் என் நினைக்கிறேன். அடுத்தது அதில் நாட்டம் உடையவர்கள் பங்களிப்புச் செய்ய முன்வரும்பட்சத்தில் வேலை எளிதாகிவிடும்.
எது எப்படி ஆயினும், உங்களைப் போனறவர்கள் கருத்துரைத்தல் மிக அவசியம். நன்றி!
பழம,
சும்மா அடிச்சுத் தூள் கிளப்பிக்கிட்டு இருக்கீங்க! பேசாம நீங்களே FeTNA-ன் அடுத்த தலைவராயிடுங்க!
உங்களைச் சந்திச்சு உங்ககூட ஒரே அணியில கலந்துக்கிட்டு தோத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி -:)
//John Peter Benedict said...
பழம,
சும்மா அடிச்சுத் தூள் கிளப்பிக்கிட்டு இருக்கீங்க!//
வாங்க அண்ணே, வணக்கம்!
// பேசாம நீங்களே FeTNA-ன் அடுத்த தலைவராயிடுங்க!
//
ஏன் இந்தக் கொலைவெறி?!
//உங்களைச் சந்திச்சு உங்ககூட ஒரே அணியில கலந்துக்கிட்டு தோத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி -:)//
மிக்க மகிழ்ச்சியண்ணே! ஆனா, தோத்துப் போனதை எல்லாம் இப்பிடியா நாலு பேர்த்துக்கு முன்னாடி போட்டு உடைக்கிறது?! அவ்வ்....
சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!
http://imsai.blogspot.com/2009/07/blog-post_9368.html
இந்தாங்க சுட்டி...
//Tamil said...
Lows:
...
3. Lack of Youth participation - FeTNA continues to ignore the youth/next generation. FeTNA need to actively involve the youth.
//
இளைஞர்கள் வரவேண்டும் என்றால் பழம் பெருச்சாளிகள் எல்லாவற்றயும் போட்டோமக் ஆற்றில் போடவேண்டும்.
//thamizh said...

ஆகா... அண்ணே, நெம்பக் கோவத்துல இருக்கீங்க போல.... உடம்புக்கு ஆகாதுண்ணே, கொஞ்சம் குறைச்சிக்கலாம்ண்ணே....
Post a Comment