ஒரு நிமிடத்தில் கவிதை எழுதக்கூடியவர்கள் மேடைக்கு வந்து, நிகழ்ச்சியில் இடம்பெறலாம் எனத் தூய தமிழ்ப்பேசி அனைவரையும் ஈர்த்த கனிகா அவர்கள் அறிவிப்பு வெளியிட, இரு தமிழன்பர்கள் மேடைக்கு விரைந்து கவிதைகளைச் வடித்து வாசித்தார்கள். அந்த இருவரில் அடியேனும் ஒருவன்! அரங்கம் அதிர பெரும் கரவொலி எழுப்பி பாராட்டுத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!!
நான் வடித்த கவிதை பின்னர் தனி இடுகையாக இடப்படும். அதற்குப் பின்னர், தமிழ்வழிக்கல்வியில் பயின்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ‘சந்திரயான்’ மயில்சாமி அவர்கள் தூய தமிழில், எளிய நடையில் தாய்மொழியின் அவசியத்தை வெகு அழகாக விவரித்துப் பேசினார். அரங்கமே எழுந்து நின்று மரியாதை செய்ததைப் பார்த்து மெய்சிலிர்க்க நெக்குருகிப் போனேன். அவர்களது அனுபவப் பேச்சு அருமை, அருமை!!
அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழ்ப்பண்ணும், நாட்டியமும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. அரங்கம் நிறைந்து காணப்படுகிறது. ஆர்ப்பரிக்கும் தமிழர் கூட்டமனைத்துக்கும் பிற்பகல் உணவு ஏற்பாடுகள் வெகு சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தது. Hats off to Fetna!!
த்ற்போதூ நடிகர் சீவா மேடைக்கு வந்து கொண்டு இருக்கிறார்.... அருமை, தமிழில், தூய தமிழில் மனதைக் கவர்ந்த நடையில் தொடர்கிறார்... முழு விபரங்கள், பின்னர் விரிவாக.......
5 comments:
பல அலுவல்களுக்கிடையில் செய்தி வழங்கும் பழமை வாழ்க.
”சந்திராயன்” அல்ல, சந்திரயான்.
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html
நா. கணேசன்
Hats off to Fetna!!
அப்படீனா என்னாங்கோ?
//நா. கணேசன் said...
”சந்திராயன்” அல்ல, சந்திரயான்.
//
நன்றிங்க அண்ணா!
அண்ணன் வாழ்க
Post a Comment