7/27/2009

FeTNA .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 6





ஏய் செங்கல்லே
மனிதன் மரித்ததும்
சுடப்படுகிறான்!
ஆனால் நீயோ
சுடப்பட்டதும்
உயிர்த்தெழுகிறாயே?!

--சிலம்பொலியார்

-------------------------

காற்றுப்பை (balloon)
விற்பவனுக்கும்
காற்றுப்பை (balloon)
வாங்குகிற
வயதுதான்!

-----------------

அய்யா
திருக்குவளையாய்
இருந்தென்ன?
இரு குவளைகளாய்
இருக்கிறதே??

--கவிஞர் செயபாசுகரன் பகிர்ந்தது


தீதும் நன்றும் பிறர்தர வாரா!
(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

5 comments:

vasu balaji said...

கவிதைகள் அருமை. தமிழருவியும். நன்றி பழமை.

priyamudanprabu said...

அய்யா
திருக்குவளையாய்
இருந்தென்ன?
இரு குவளைகளாய்
இருக்கிறதே??
///

இது ரொம்ப நல்லாயிருக்கு

பழமைபேசி said...

@@பாலா...
@@பிரியமுடன் பிரபு

நன்றிங்க!

குறும்பன் said...

\\ பாலா... said... கவிதைகள் அருமை. தமிழருவியும். நன்றி பழமை.\\

வழிமொழிகிறேன்.

Shanthamoorthi Velusamy said...

தமிழருவி அவர்களின் முழுஉரையையும் வேண்டும்...