7/04/2009

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): July 04, காலை ஆறுமணி

வணக்கம்! நேற்று, முதல் நாள் நிகழ்வில் இருந்து சற்று முன்னமே அரங்கத்தினின்று வெளியேற சூழ்நிலை. என்றாலும் பின்னேரத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றதை அறிய வருகிறேன். மிக்க மகிழ்ச்சி!!

இரண்டாம் நாளான இன்று, முதல் நாள் நிகழ்ச்சியின் சிறப்புகளைக் கேள்விபட்டு கூடுதலான நோக்கர்கள் வருவார்கள் என நினைக்கிறேன். ஆனால் நேற்றே அரங்கம் நிறைந்து காணப்பட்டது. விழாக் குழுவினர் எப்படி ஒழுங்கு செய்யப் போகிறார்கள் எனக் காண்பதற்கு மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.

நான் இன்றைக்கும் ஓரிரு மேடை நிகழ்ச்சியில் இடம் பெற வேண்டி இருப்பதால், வேறு யாராவது பதிவரொருவர் பிற்பகலில் பதிவர் கூடலுக்கு ஏற்பாடு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். பதிவர்கள், தமிழுக்கான செய்தியாளர்களாய் மாறுவதற்கு இது மிகவும் உதவிகரமாய் இருக்கக் கூடும். எனது அலைபேசி எண்: 980 322 7370.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அரங்கத்திலிருந்து இடுகைகள் தொடரும். ஆதரவும் ஊக்கமும் அளித்துவரும் அனைவருக்கும் நன்றி பாராட்டி, விழா வளாகத்தை நோக்கி!!

பழமைபேசி.

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): முதலநாள் பற்றிய கண்ணோட்டம்!

4 comments:

குடந்தை அன்புமணி said...

//வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அரங்கத்திலிருந்து இடுகைகள் தொடரும். //

எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்...!

யசோதா.பத்மநாதன் said...

வாழ்த்துக்கள் தமிழ் தோழரே!

சிறப்பான ஆரம்பம்.

அமெரிக்காவில் தமிழின் அழகைக் காண ஆவலுடையேன்.

படங்களுடனும் நேர்முக வர்ணணை வரக் கூடுமோ?

தீபக் வாசுதேவன் said...

இணையத்தில் நேரடி ஒலிபரப்பு (Live WebCast) ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா?

பழமைபேசி said...

நண்பரே, அப்படி ஒரு வசதி இருப்பதாகத் தெரியவில்லை!