7/30/2009

மோர்க்காரியின் முதுகு!

Virginia Beach Marriott


சிவப்பு வண்ண விளக்குகள்
பறை சாற்றியது இது
Marriott என!
உயரே நின்று பார்க்கின்
கண்ணுக்கெட்டிய தொலைவு
வரை கடலின் நீலவெளி!
கீழே நின்று பார்க்கின்
இருமருங்கிலும் பச்சைப்பட்டு
படர்ந்த புல்வெளி!
உள்ளே நின்று பார்த்துவிட்டு
அலறினான் இருந்த
பெரிய அறை கண்டு,
முந்தானையில் சும்மாடு
கட்டிய மோர்க்காரியின்
திறந்த வெளி முதுகைப்
போல் இருக்கிறதென!

-பழமைபேசி

மாலைப் பொழுது அந்தி சாயும் நேரம். இவன் மூன்று கல் தொலைவில் இருக்கும் கோயிலடிக்குச் செல்லலாம் என வீதியில் இறங்கிச் செல்ல முற்படுகையில் ஆடவர் கூட்டம் சென்று கொண்டிருக்கிறது.

அவர்களுடன் இணைந்த இவன், ‘என்ன விசயம்?’ என்பது போல குறிப்பு மொழியால் (body language) வினவுகிறான். அதற்கு அவர் சைகையாலேயே பதில் சொல்கிறார், எனக்குத் தெரியவில்லை, எல்லோரும் போகிறார்கள் நானும் அவர்களோடு சேர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன் எனும் பொருளில்.

இப்படியே இவன் ஒருவர் மாறி ஒருவராகக் கேட்க, அத்துனை பேரும் முன்னே இருக்கும் ஆட்களைக் கை காண்பிக்க, கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் தாண்டித் தாண்டி இறுதியில் முன் வரிசையில் இருக்கும் அந்த ஒற்றை ஆடவனை நெருங்கி விடுகிறான் இவன்.

அவனிடமும் என்ன விசயம் என வினவ, அவன் சொன்னான் முன்னே செனறு கொண்டிருக்கும் பெண்ணின் இரவிக்கையில், முதுகுப் புறத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சிறு சாளரம்(ஜன்னல்) போன்ற வடிவினைப் பார்த்துக் கொண்டே செல்கிறேன் என்றான்.

அதாவது, எதுவும் இருக்க வேண்டிய அளவாக, கிடைப்பதற்கரியனவாக இருந்தால்தான் அதில் குதூகலம் பிறக்கும். ’ஜன்னல் வெச்ச ஜாக்கெட்’ எனும் வடிவமைப்பு பிறந்ததும் அதனடிப்படையில்தான். தலையில் தனது கொங்குத் தலைப்பால் கட்டிய சும்மாட்டின் மீது பானையை வைத்துச் செல்லும் போர்க்காரியின் முதுகு திறந்த வெளியாகப் பரந்திருக்கும். அதைப் பார்ப்பதில் எந்த குதூகலமும் இல்லை என்பதுதான் நுண்ணுணர்வு!

மாதத்திற்கு ஒரு முறை, இரண்டாவது சனிக்கிழமை மாலையில், மாதமெல்லாம் காத்திருந்து கோவை இராம்நகர் Udhayam Restaurent மொட்டை மாடியில் அடித்த கல்யாணியில் இருந்த மப்பு, இன்று எளிதாக அளவுக்கதிகமாகவே கிடைக்கும் பன்னாட்டு மதுவில் கூடக் கிடைப்பதில்லை என்பதும் அதுவே!

17 comments:

அப்பாவி முரு said...

உள் அர்த்தம் முழுசாப் புரியாததால மென்மையாக கண்டிக்கிறேன்

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
உள் அர்த்தம் முழுசாப் புரியாததால மென்மையாக கண்டிக்கிறேன்

//

அடப்பாவி, உள் அர்த்தம்ன்னு நீங்களே இப்படியெல்லாம் கதை கட்டி வுடுவீங்களா? அவ்வ்வ்......

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்ம்ம்,,,,,

RRSLM said...

அப்போ OCEAN FRONT அறையா? கலக்குங்க! அட்லாண்டிக்க சலிப்பே தட்டாது, பார்த்து கொண்டே இருக்கலாம்! ..........

மோர்காரி முதுகுன்னா ஒருவர் தங்குவதற்கு நல்லா ஆடம்பரமா தான் இருக்கும்.

வாழ்த்துகள்!

நான் said...

நிஜமா புரியல....சாரி

vasu balaji said...

புரியல.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மன்னிக்கவும்,புரியவில்லை.Marriott ன்னா என்ன?

அப்பாவி முரு said...

யாருக்குமே விளங்கவில்லை,

விளக்க உரை எழுதிவிடவும்.

(அப்புச்சி இடைச்சியின் கைப்பட்டதால் நீர் மோரானதாக சொன்னார்!

ஆனால் பேரன், இடைச்சியின் முதுகை காரணமில்லாமல் பார்த்ததை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது)

தேவன் மாயம் said...

மாரியாட் ஓட்டலில் மோர்க்காரி!! புரியுது!!!!

தேவன் மாயம் said...

அறை மோர்க்காரியின் முதுகு...............சரி ... அப்புறம்....? இஃகி!! இஃகி!!!

பழமைபேசி said...

கால ஓட்டத்தில் நிகழும் இரசிப்புத் தன்மையின் மாறுபாடு பற்றி ஏற்கனவே, ‘வெறுமை ஒழிக!’ன்ங்ற பேர்ல ஒரு இடுகை எழுதி இருக்கேன். அதான் நினைவுக்கு வருது இப்ப. சரி விடுங்க, நான் ஒரு சின்ன குட்டிக் கதையை இடுகையில சேர்த்துடறேன்!

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
யாருக்குமே விளங்கவில்லை,

விளக்க உரை எழுதிவிடவும்.

//

எழுதியாச்சுங்க...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இப்போ புரியுது.

பழமைபேசி said...

//ஸ்ரீ said...
இப்போ புரியுது
//

இஃகி!

அப்பாவி முரு said...

இப்போ புரியுது...


:)))))

குடந்தை அன்புமணி said...

இஃகி... இஃகி...

vasu balaji said...

அது சரி:))