7/28/2009

அந்தக் காலமும் இந்தக் காலமும்!!

கல்லிருக்க குழவியாடினது
அது அந்தக் காலம்!
குழவியிருக்கக் கல்லாடுறது
இந்தக் காலம்!!

கால் கடுகடுக்கப் படியேறினது
அது அந்தக் காலம்!
நிலையில் நாம நிக்க, படி ஏறுறது
இந்தக் காலம்!!

அவசரத்துக்கு வெளிய
ஓடினது
அது அந்தக் காலம்!
அவசரம்ன்ன உடனே
உள்ள ஓடியாறது
இந்தக் காலம்!!

சுட்டுப் பிடிச்சது
அது அந்தக் காலம்!
பிடிச்சதை சுடுறது
இந்தக் காலம்!!

கிடைச்சதை ஒப்படைக்க
வெள்ளிடை மன்றம்,
அது அந்தக் காலம்!
தொலைஞ்சதைக் கண்டுபிடிக்க
காவல் நிலையம்,
இந்தக் காலம்!!

பாட்டுக்கு தாளம்
அது அந்தக் காலம்!
தாளத்துக்கு பாட்டு
இந்தக் காலம்!!

அலம்பிட்டு உள்ள போனது
அது அந்தக் காலம்!
உள்ள போயிட்டு அலம்புறது
இந்தக் காலம்!!

மொடாவுல காசு
அது அந்தக் காலம்!
காசுக்கு மொடாத்தண்ணி
இந்தக் காலம்!!

மானம் போனா தொங்கறது
அது அந்தக் காலம்!
தொங்கறதுக்கு மானம் போறது
இந்தக் காலம்!!

அடி வாங்கினவன் கத்தறது
அது அந்தக் காலம்.
அடி கொடுக்கறவன் (கராத்தேயில்) கத்தறது
இந்தக் காலம்.

யானைப் படை இருந்தது
அது அந்தக் காலம்
பூனைப் படை இருப்பது
இந்தக் காலம்

கந்தல் அணிந்தால் ஏழை என்பது
அது அந்தக் காலம்
அதையே அணிந்து மினிக்கிட்டு
ஃபேஷன் என்பது இந்தக் காலம்.

ஏழ்மையினால் கூழ் அருந்தியது
அது அந்தக் காலம்
நோயினால் கூழ் குடிப்பது
இந்தக் காலம்.

வீட்டை வெச்சிக் கடன்
அது அந்தக் காலம்!
கடன் வாங்கி வீடு
இந்தக் காலம்!!


--பழமைபேசி

27 comments:

priyamudanprabu said...

நான் தான் பர்ஸ்டு

priyamudanprabu said...

நல்லாத்தானே இருக்கு?

அப்பாவி முரு said...

என்னண்ணே என்.எஸ்.கே யின் தாக்கம் அதிகமா இருக்கு?

குறும்பன் said...

\\தொங்கறதுக்கு மானம் போறது
இந்தக் காலம்!!\\
இது சரியா புரியலைங்க.


எந்த இடுகையும் மொக்கை இல்லை என்பது பழமையாரின் கருத்து இஃகிஃகி.

கனவுல கவி காளமேகத்துக்கு பதிலா என்.எசு.கிருட்டிணன் வந்துட்டாரா? இஃகிஃகி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அது ஒரு அழகிய கனாக்காலம் அந்தக்காலம்.............,

கல்கி said...

நல்லாயிருக்கே... :-)

நாகா said...

//அவசரத்துக்கு வெளிய
ஓடினது
அது அந்தக் காலம்!
அவசரம்ன்ன உடனே
உள்ள ஓடியாறது
இந்தக் காலம்!!//

நெசந்தாங்ணா..

ஈரோடு கதிர் said...

//வீட்டை வெச்சிக் கடன்
அது அந்தக் காலம்!
கடன் வாங்கி வீடு
இந்தக் காலம்!!//

ம்ம்ம்ம்... என்ன பண்றதுங்கோ

Mahesh said...

//மானம் போனா தொங்கறது
அது அந்தக் காலம்!
தொங்கறதுக்கு மானம் போறது
இந்தக் காலம்!!//

ரொம்பச் சரி.... இப்ப "சச் கா சாம்னா" ன்னு ஒரு நிகழ்ச்சி வருது... கஷ்டகாலம்...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அவசரத்துக்கு வெளிய
ஓடினது
அது அந்தக் காலம்!
அவசரம்ன்ன உடனே
உள்ள ஓடியாறது
இந்தக் காலம்!!
அலம்பிட்டு உள்ள போனது
அது அந்தக் காலம்!
உள்ள போயிட்டு அலம்புறது
இந்தக் காலம்!!//

:-))))

பதி said...

நல்லா இருக்கு !!!!!!!

ஆ.ஞானசேகரன் said...

//அவசரத்துக்கு வெளிய
ஓடினது
அது அந்தக் காலம்!
அவசரம்ன்ன உடனே
உள்ள ஓடியாறது
இந்தக் காலம்!!///

நல்லா இருக்குகோ

பழமைபேசி said...

//குறும்பன் said...
\\தொங்கறதுக்கு மானம் போறது
இந்தக் காலம்!!\\
இது சரியா புரியலைங்க.
//

தூங்கில தொங்கிறதச் சொன்னேன்.... முதல்ல எல்லாம், மானஸ்தன் தூக்கில தொங்கிட்டான்னு சொல்வாங்க, அதான்!

//எந்த இடுகையும் மொக்கை இல்லை என்பது பழமையாரின் கருத்து இஃகிஃகி.//

அவ்வ்வ்வ்வ்...... நானே புண்ணுக்கு சுண்ணாம்பு தடவிகிட்டேன்....

பழமைபேசி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அது ஒரு அழகிய கனாக்காலம் அந்தக்காலம்.............,
//

நல்லா சொன்னீங்கோ....

//கல்கி said...
நல்லாயிருக்கே... :-)
//

நன்றிங்க சகோதரி!

//நாகா said...
//அவசரத்துக்கு வெளிய
ஓடினது
அது அந்தக் காலம்!
அவசரம்ன்ன உடனே
உள்ள ஓடியாறது
இந்தக் காலம்!!//

நெசந்தாங்ணா..
//
இஃகி!

//கதிர், ஈரோடு said...
//வீட்டை வெச்சிக் கடன்
அது அந்தக் காலம்!
கடன் வாங்கி வீடு
இந்தக் காலம்!!//

ம்ம்ம்ம்... என்ன பண்றதுங்கோ
//

சனங்க நிம்மிதியா இருந்தாச் செரி...

//Mahesh said...

ரொம்பச் சரி.... இப்ப "சச் கா சாம்னா" ன்னு ஒரு நிகழ்ச்சி வருது... கஷ்டகாலம்...
//

அண்ணா வாங்க...

@@ஸ்ரீ
@@பதி
@@ஆ.ஞானசேகரன்

நன்றிங்கோ...

Radhakrishnan said...

ஆஹா மிகவும் அருமையாக இருக்கிறதே. இந்தக்காலம் எந்தக்காலமாக மாறுமோத் தெரியவில்லையே!

'பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை -கிளியே பாமரர் ஏதறிவார்'

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆகா உண்மைய புட்டுப் புட்டு வைக்கறீங்க..

அது எல்லாம் ஒரு காலமுங்க..

சிநேகிதன் அக்பர் said...

ம்ம்ம். அந்த காலம் மாதிரி வராது.

Anonymous said...

போன பதிவு நேரத்தப்பத்தி, இந்தப்பதிவு காலத்தைப்பத்தியா, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. :)

பழமைபேசி said...

மக்கள் அனைவருக்கும் நன்றிங்கோ...

ரெட்மகி said...

காலம் ரொம்பதான் மாறி போச்சு

கஷ்டகாலம் .....

அரங்கப்பெருமாள் said...

காலம் கலிகாலம் ஆயிப்போச்சுடா.. கம்யூட்டர் கடவுளாகிப் போச்சுடா..

naanjil said...

thampi Mani
puthukavithai is good. Keep it up.

தமிழ் said...

அற்புதம்

பழமைபேசி said...

@@வெ.இராதாகிருஷ்ணன்
@@ச.செந்தில்வேலன்
@@அக்பர்
@@சின்ன அம்மிணி
@@ரெட்மகி
@@Arangaperumal
@@naanjil
@@திகழ்மிளிர்

அனைவருக்கும் நன்றிங்க!

naanjil said...

அந்தக் காலமும் இந்தக் காலமும்!!
Thampi Pazhamai Pesi
Nalla kaviathi. Elimaiyil siRappu.

பழமைபேசி said...

//naanjil said...
அந்தக் காலமும் இந்தக் காலமும்!!
Thampi Pazhamai Pesi
Nalla kaviathi. Elimaiyil siRappu.
//

தங்கள் ஆசியும் அன்பும் அடைவதில் நான் பெரு மகிழ்வு கொள்கிறேன்!