7/27/2009

என்னோட நேரம்?!

மாலை ஏழு மணி
சார்லத் விமான நிலையம்
போக வேண்டிய இடம்
குடாப் பிரதேசமான
Norfolk, Virginia!

மணித்துளிக்கு ஒன்றாய்
அசைந்து ஆடி ஆடி,
ஊர்ந்து, பின் வேகமெடுத்து
சீரானதொரு இடைவெளியில்
சிட்டாய்ப் பறந்து சென்றன!!

அடேயப்பா கொள்ளையழகு,
ஒன்றன் பின் ஒன்றாய்
நேர்த்தியாய் துல்லியமாய்
மிகச்சரியாய் உச்சிநோக்கிப்
போய்க் கொண்டே இருந்தன
சமிக்கைக்கான காத்திருப்பில்
நின்று கொண்டு இருக்கும்
இவ்விமானம் தவிர்த்து
மற்றன யாவும்!

14 comments:

Anonymous said...

எப்பியுமே அப்பிடித்தான், பஸ்ஸுன்னாலுமுங்கூட நாம ஏறுனா , மத்த பஸ்ஸெல்லாம் போன பொறவுதேன், நம்ம உக்காந்திருக்குற பஸ் போகும்.

எம்.எம்.அப்துல்லா said...

// சின்ன அம்மிணி said...
எப்பியுமே அப்பிடித்தான், பஸ்ஸுன்னாலுமுங்கூட நாம ஏறுனா , மத்த பஸ்ஸெல்லாம் போன பொறவுதேன், நம்ம உக்காந்திருக்குற பஸ் போகும்.

//

ஆவுத்திரேலியாவிலும் அப்படித்தானா??

(பழமை அண்ணன் பதிவுக்கு வந்தா ஆஸ்திரேலியாகூட அழகு தமிழில் ஆவுத்திரேலியாவாயிருது :))

Mahesh said...

விடுங்கண்ணே... இவிங்க எப்பயுமே இப்பிடித்தேன்...

பாருங்க.... நானும் இங்க ஸுரிக் ஏர்போர்ட் ஸ்டேஷன்ல உக்காந்து ரயிலுக்குக் காத்திருக்கேன்....

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
எப்பியுமே அப்பிடித்தான், பஸ்ஸுன்னாலுமுங்கூட நாம ஏறுனா , மத்த பஸ்ஸெல்லாம் போன பொறவுதேன், நம்ம உக்காந்திருக்குற பஸ் போகும்.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... உங்களுக்குமா?

vasu balaji said...

அட. உலகமெல்லாம் அப்படித்தானா. எவ்வளவு சந்தோசமா இருக்கு. (கரன்ட் போனதும் நம்ம ஊட்டு ஃப்யூஸ் போச்சான்னு பாக்குறதுக்கு முன்னாடி பக்கத்து ஊட்டுல கரண்ட் போச்சான்னு பாக்குறவங்க இல்ல நாம. சந்தோசமா இருக்காதா இப்படி படிக்க.) :))

ஈரோடு கதிர் said...

க்..கும்..

ஏனுங் பழம..

உங்கு வண்டி மொதல்ல கெளம்பிருஞ்சினா இந்த கவுத கெடச்சிருக்காதுல்ல..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரிதான்.நம்ம ராசிதான் போலிருக்கு உங்களுக்கும்.விடுங்க தமிழ்மணத்துலயும் சேத்து ஓட்டு போட்டுடறேன்.

பழமைபேசி said...

//Mahesh said...
விடுங்கண்ணே... இவிங்க எப்பயுமே இப்பிடித்தேன்...

பாருங்க.... நானும் இங்க ஸுரிக் ஏர்போர்ட் ஸ்டேஷன்ல உக்காந்து ரயிலுக்குக் காத்திருக்கேன்....
//

அண்ணா, அல்லாருக்கும் அப்படித்தானுங்ளா? அப்பச் செரீங்...

பழமைபேசி said...

//பாலா... said...
அட. உலகமெல்லாம் அப்படித்தானா. எவ்வளவு சந்தோசமா இருக்கு. (கரன்ட் போனதும் நம்ம ஊட்டு ஃப்யூஸ் போச்சான்னு பாக்குறதுக்கு முன்னாடி பக்கத்து ஊட்டுல கரண்ட் போச்சான்னு பாக்குறவங்க இல்ல நாம. சந்தோசமா இருக்காதா இப்படி படிக்க.) :))
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

//கதிர் said...
க்..கும்..

ஏனுங் பழம..

உங்கு வண்டி மொதல்ல கெளம்பிருஞ்சினா இந்த கவுத கெடச்சிருக்காதுல்ல..
//

மாப்பு, நீங்க சொன்னாச் செரிதானுங்...

பழமைபேசி said...

// ஸ்ரீ said...
சரிதான்.நம்ம ராசிதான் போலிருக்கு உங்களுக்கும்.விடுங்க தமிழ்மணத்துலயும் சேத்து ஓட்டு போட்டுடறேன்.
//

இஃகி! நன்றீங்...

அப்பாவி முரு said...

அடப்பாவி அண்ணா.,

மக்களெல்லாம் பஸ்க்கு காத்திருந்து புலம்பிக்கிட்டு இருக்கிறாங்க.,

அதையே பிளைட்டுக்கு மாத்தி படுறீங்களா?

ஊருக்குள்ள கேட்டாங்க, சிலிப்பிருவாங்க ஆமா!!!

அன்புடன் அருணா said...

ஓ! எல்லோரும் ஒரே ராசிதானா?

குறும்பன் said...

\\மக்களெல்லாம் பஸ்க்கு காத்திருந்து புலம்பிக்கிட்டு இருக்கிறாங்க.,\\

இருக்கறவ அள்ளி முடியறா... பழமை இருந்தாலும் ஏரோபிளேனுக்கு காத்திருக்கறத பத்தி எழுதறது கொஞ்சம் அதிகமா தெரியலை? ;-)