8/19/2010

வம்சம்


இன்றைய பொழுது திரைப்படத்துடன் நல்லவிதமாக, இனிமையான பால்ய காலத்து நினைவுகளுடன் கழிந்தது. மகளின் விருப்பத்திற்கிணங்க, ’வம்சம்’ எனும் திரைப்படத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

கதை, திரைக்கதை, நடிப்பு இவற்றைப் பற்றி எல்லாம் சொல்லும் அளவிற்கு நாமொன்றும் திரைப்பட விமர்சகரோ அல்லது பண்டிதரோ அல்ல. நமக்கும் திரைப்பட இரசிப்புக்கும் வெகு தூரம்.

கொடுத்த என்பத்து ஐந்து ரூபாய்க் கட்டணத்துக்கு அதிகமாகவே, படத்தை இரசித்து மகிழ்ந்தோம். கிராமியத்தைத் தழுவின கதை என்பதால், படம் பிடிப்பதற்குத் தெரிவு செய்த இடங்கள் மிகவும் அம்சமாக இருந்தது. இன்றைய யுகத்தில், இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றனவா? இன்னும் எனக்கு வியப்பாகவே உள்ளது.





தோட்டத்து வீடு, வயல் வெளி, ஊருக்குள் இருக்கும் வீடுகள் என்பன ஒவ்வொன்றும் கிராமியத்தை வெகு துல்லியமாக எடுத்துக் காட்டின என்றால் மிகையாகாது. கதையோட்டம் மற்றும் உரையாடல்களை அவதானிக்காது, பின்னணிக் காட்சிகளை மட்டுமே கண்டு களித்தோம் நாம்.

தமிழுக்கேற்ற உச்சரிப்பு அறவே இல்லாமல், சுரத்துக் குறைந்து வெளிப்பட்ட உரையாடல் அவ்வப்போது அயர்ச்சியைக் கொடுத்தது. பாடல்கள் மற்றும் சிரிப்புக்காக வைக்கப்பட்ட காட்சிகள் எதுவுமே எடுபடவே இல்லை.

புதுமுக நடிகர் என்பது எளிதில் புரிகிறது. என்றாலும், கதாபாத்திரத்திற்கேற்ற தோற்றமும் நடையும் சிறப்பாக இருந்தது. கதாநாயகியின் உச்சரிப்பும், குறிப்பு மொழியும் படத்திற்கு பெரும்பலவீனம்.

வயல்வெளி, புங்கை, வேம்பு, ஆல், இலவம், அரசன் உள்ளிட்ட பல்வேறு மரங்கள், குறிப்பாக இறகுகளுடன் பறந்து வரும் வெடத்தலாங்காய் போன்றவை நம் பால்ய காலத்து நினைவுகளை மீட்டெடுத்தன. வெளியே வரும் போது மனம் நிறைவாக இருந்தது. பின்புலக் காட்சிகளைக் கண்டு களிப்பதற்காகவாவது இப்படத்தைப் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 3000 பேர் அமர்ந்து படம் பார்க்கக் கூடிய வளாகத்தில், சில நூறு பேர் மட்டும் குழுமியிருந்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். ஆனால், வெட்டுக்குத்து இல்லாத தமிழ்ப் படத்தை பார்க்கும் பாக்கியம் அடுத்த முறையாவது கிட்டும் என நம்புவோமாக!!

INFOSYS in Kuwait soon which will be called as " COBRA TOWERS ".






17 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//இன்றைய யுகத்தில், இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றனவா? இன்னும் எனக்கு வியப்பாகவே உள்ளது.

//

அண்ணே அந்த படம் முழுவதும் எங்கள் ஊரில் இருந்து 15 கி.மீ சுற்றளவில் எடுக்கப்பட்டது. அதில் கதாநாயன் வீடு இருக்கும் இடம் என் சொந்த கிராமமான செம்பூதி. எங்கள் தோட்டத்திற்கு பின்புறம் உள்ள திரு.விஜயகுமார் என்பவரின் தோட்டமும் வீடும் அது. விடுமுறையில் ஒருக்கா எங்க ஊருக்கு வாங்க. நல்லா சுத்துவோம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆகா... எங்க நம்ம அண்ணன் விமர்சனம் எழுதறாரோன்னு நினைச்சேன்... ;)

தானத்துல டிக்கட் விலை 85 ஆஆஆ?

"கோப்ரா டவர்ஸ்" பார்க்கும் பொழுது கட்டடக் கலையில் சாத்தியமின்மை என்பதே கிடையாது என்றே தோன்றுகிறது.

அபுதாபியில் ஒரு கட்டடம் பத்தைப் போல வடிவமைத்துள்ளார்கள்.

பழமைபேசி said...

@@எம்.எம்.அப்துல்லா

ஆகா, அண்ணே... அப்படியா கதை?? எனக்கு அந்த காட்சிகளுக்காகவே இனியுமொருமுறை படம் பார்க்கணும் போல இருக்கு....

அப்படியே 25 ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த எங்க ஊரைக் கொண்டாந்து காண்பிச்சது போல இருந்துச்சு.... ஒரு ஒரு வாரத்துக்கு முன்னாடி இதைச் சொல்லப்படாதா??

வந்திருப்பனே?? பரவாயில்லை.... ஊரைச் சுத்தியும் படம் எடுத்துப் போடுங்கணே..... ஏன், எல்லாரும் எழுதுறதுலயே குறியா இருக்கீங்க....

நாம பதிவர்கள்.... எதையும் பதிவு செய்து வெக்கலாம்.... எழுத்தாளர்களோ, இலக்கியவாதிகளோ அல்ல.... வாரம் ஒரு முறை படங்க கொஞ்சம் போடுங்க.... செம்பூதி... அழகா இருக்கு.......

அப்புறம், அந்த two winged seed, இறகு விதை.... உங்க ஊர்ல என்னன்னு சொல்வாங்க?? எனக்கு அதனோட படம் வேணும்!!!

பழமைபேசி said...

@@ ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...


ஆமாங்க தம்பி!!!

a said...

அண்ணே : வீடு(நாடு) திரும்பல் என்னக்கி ???

பழமைபேசி said...

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
அண்ணே : வீடு(நாடு) திரும்பல் என்னக்கி ???
//

Aug 28; மவனே வரவேற்பு ஏற்பாடுகெல்லாம் சிறப்பா இருக்கணும் சொல்ட்டேன்....

குடுகுடுப்பை said...

அதென்ன செம்பூதி எங்க ஊருன்னு பெருமை அபுதுல்லா, செம்புதூக்கி தெரியும்,செம்பூதிகாரங்க செம்புதூக்க சொல்லி ஊதி விடுறவங்கன்னு எங்கூர் கொம்பூதில பேசிக்கிறாங்க.

ஈரோடு கதிர் said...

எனக்கென்னமோ மாப்பு,

கலைஞர் பேரனுடைய படம் என்பதற்காக இம்புட்டு எழுதியிருக்காரோ!!!

நோட் பண்ண வேண்டியவங்க நோட் பண்ணுங்கப்பா!!!!

ஈரோடு கதிர் said...

||எம்.எம்.அப்துல்லா said...

நல்லா சுத்துவோம்.||

அண்ணே, மாப்புவ ஒரு இடத்துல நிக்க வச்சு, கரகரன்னு சுத்தவிடுங்க

priyamudanprabu said...

வெட்டுக்குத்து இல்லாத தமிழ்ப் படத்தை பார்க்கும் பாக்கியம் அடுத்த முறையாவது கிட்டும் என நம்புவோமாக!!
/////

சற்று கடினம்தான்

க.பாலாசி said...

படமெல்லாம் காசுகொடுத்து பார்க்கிற பழக்கமே இல்லாமப்போச்சு..

//இறகுகளுடன் பறந்து வரும் வெடத்தலாங்காய்//

இதை நான் இதுவரையில் பார்த்ததில்லை... நன்றி..

Unknown said...

உண்மைதாங்க வெட்டு குத்து இல்லாம படம் பார்க்கிறது கஷ்டம தான்

vasu balaji said...

சின்ன வயசுல சிவகிரிக்கு போகும்போது இந்தக் காய் பறந்து வர பின்னாடியே ஓடி ஓடி புடிக்கிறது:))

sakthi said...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ஆகா... எங்க நம்ம அண்ணன் விமர்சனம் எழுதறாரோன்னு நினைச்சேன்... ;)

ரீப்பிட்டிங்

எம்.எம்.அப்துல்லா said...

//செம்பூதிகாரங்க செம்புதூக்க சொல்லி ஊதி விடுறவங்கன்னு எங்கூர் கொம்பூதில பேசிக்கிறாங்க.

//

ஆஹா..அண்ணனுக்கு வரலாறு தெரிஞ்சுருக்கே!!

கொம்பூதி பயலுக மதம்மாறி குடியேறிய இடம்தான் செம்பூதி.

Vijiskitchencreations said...

ஊரை விட்டு வர மனமே இருக்காதே. எங்களுக்கெல்லாம் அப்படிதான் இருக்கும். எஞ்ஞாய் விடுமுறை. எனக்கு ஒரு சின்ன ஆசை நானும் ஒன்ஸ் அப்பான் டைம் கோவயில் நல்லாவே ஊரை சுற்ரி கலாட்ட செய்தோம் இப்ப நினைத்தால் அதெல்லாம் கனவு போல் இருக்கு.
லஷ்மி காம்ப்ளெக்ஸ், மலையாளம் மூவி பார்க்க வந்துவிட்டு அன்னபூர்னாவில் காலை சிற்றுண்டி, கௌரி சங்கரில் மதியம் உனவருந்தி பெரியார் மாவாட்டதிற்கு ஒரே பாய்ச்சலா போவோம்.
எப்ப நாடு திரும்பறிங்க.அட இந்த ஊருக்கு தாங்க.

மாதேவி said...

"கிராமியத்தை வெகு துல்லியமாக எடுத்துக் காட்டின"

பார்த்திடுவோம்.நன்றி.