8/10/2010

கொங்கு நாட்டில் இந்த கிராமத்தான்!!!


எமஞ்சுள்ளிச் செடி

வெள்ளக்கிணறு வீடு பழைமை மாறாமல்

வெள்ளக்கிணறு திரு.VCV அவர்களது இல்லத்தின்
எளிமையான வாயில்

உயர்திரு.VCV இல்லத் தேர் வண்டி, தாய்வீடு உள்ளிட்ட பல
படங்களில் இடம்பெற்றதும்கூட

வடவள்ளியிலிருந்து ஒரு காட்சிப் படம்

எந்த வண்டி ஏறுனாலும் கூட்டமே இல்ல?
சாய்பாபா குடியிருப்பில இருந்து கணபதிக்கு மூனே உருவா!
சிற்றுந்து, சொகுசுந்துக எதுக்கப்பா??

அளவுக்கதிகமா ஏத்துறது?!
மூடுனாப்புல இருக்குற குழி தாங்குமா??
கரட்டுல கூட ஊடுக... அப்படியாவது மலைய, ஆட்டையப் போடாம இருக்கட்டு?!


அட, என்ன இப்புடிப் பாக்குறீங்க?
நானும் உங்கள்ல ஒருத்தந்தேன்....

கறி அரிஞ்சு இனியுமு உள்ள போடவே இல்ல?!

எல்லாம் தயாரா இருக்குது!

நடக்குது முழுவீச்சுல....

நல்லா ஒரு கட்டுக் கட்டியாச்சு..
அப்புறம் வெத்தலை பாக்குத்தேன்!!!

ஈன்றதாயே துணை!
நெம்ப நல்லா இருக்குது!!

எங்கு தோட்டத்துக் கட்டுத்தாறை

இஃகி, கொடாப்பு!!!

கொய்யா... அடுத்த வாரம் பழுத்துரும்...

வெளியூர்ல இருந்து கொண்டாந்து விக்கிறாங்களாமா...
மொதல்ல அல்லாம், நம்பூர்லயே செய்வாங்க...

ஒவ்வாமைக்கு வாங்குன பணம் மூவாயிரம்...
வெச்சிருக்குற ப்ளசரு வண்டி மட்டும், அதே வண்டி நுப்பது வருசமா!!!

எனையுமு பேரூர் மடத்துல வாத்தியார் ஆக்கிட்டாங்க பாருங்க...

பேரூர்க் கல்லூரியில...

இதுவுமு பேரூர்க் கல்லூரியிலதேன்...

ஊர் முச்சூடும் எழுத்துப் பிழைதேன்...300க்கு வினை!

16 comments:

Anonymous said...

நல்லா ஊரு சுத்துரீங்கன்னு நினைக்கிறேன்.....நடக்கட்டும்.. நடக்கட்டும்.....

ஆரூரன் விசுவநாதன் said...

கெடா விருந்துக்கு கூப்பிடாம போயிட்டு படம் வேறையா????

அவ்வ்வ்வ்வ்.....

படங்கள் அருமை......

Mahi_Granny said...

மெய்க்குணகம்,தொடர்பதிவுகள் வியப்பு தான். கொடாப்பு, கட்டுத்தாறை படங்களுடன் இருந்ததால் புரிந்தது. நல்ல பகிர்வு.

ஜோதிஜி said...

கலைக்களஞ்சியம்.

கொல்லான் said...

கடா வெட்டுக்குக் கூப்புடவே இல்லீங்களே?

ஈரோடு கதிர் said...

அட.. தமிழ்கல்லூரியில வெள்ளக்கார தொர வகுப்பெடுக்குற மாதர இருக்கு

vanjimagal said...

மணி
என்ன எங்க காட்டில் கறி விருந்து மாதிரி இருக்குது!!! அப்படியே புத்தூர் போல உள்ளது. ஊர் ஞாபகம் வந்துவிட்டது.அட எனக்கு சில சொப்பு வங்கி வாங்க??
எங்க அப்பா
சவால் கட்டுக்கு ஒரு காலத்தில் போவாங்க,அனா எனக்கு நிறைய சவால் பேர்
தெரியாது நன்றி.படங்கள் மிக அருமை

Radhakrishnan said...

அருமை

Ravichandran Somu said...

படங்கள் அருமை நண்பரே!

அரசூரான் said...

ஒவ்வாமைக்கு மூவாயிரம் வாங்குனாலும், பழமை பழமைதானுங்கோ... நான் மருத்துவரோட பால் பிரிமியர் மகிழ்வுந்த சொன்னேனுங்கோ.

Unknown said...

ஒருவேளை அட்வான்ஸ்க்கு பதிலா சரக்க குடுத்துருப்பான்களோ? அதுதான் எழுத்து பிழை!!!!!!! நல்லா ஊர்சுத்துறீங்க!!!!

பெருசு said...

VCV வூட்டைத்தாண்டிதானுங் நம்ம அப்புச்சி வீட்டுக்கு போகணுங். S6 பஸ்ஸு இன்னும் வருதான்னு தெரியில்லீங். அங்க போயி நெம்ம வருசம் ஆயிப்போட்டுதுங்.

கயல் said...

ரொம்ப நல்லாயிருக்கு..!

Mahesh said...

படங்க அருமை... பாடங்க எப்பிடி இருந்துச்சுன்னு பசங்களைத்தேன் கேக்கோணும் :))))

கொய்யாவை ஒரு வாரத்துக்கெல்லாம் விட்டு வெக்க மாட்டோம்... உப்பு மொளகாபொடி பொடி போட்டு... எச்சி ஊறுது :)

குறும்பன் said...

//எனையுமு பேரூர் மடத்துல வாத்தியார் ஆக்கிட்டாங்க பாருங்க...//

தொப்பி இல்லாம வாத்தியார் இருக்குறாரு... எல்லோரும் படத்த நல்லா பாத்துக்குங்க சீக்கிரம் இதை தூக்குனாலும் தூக்கிடுவாறு.

கறூக்கருவா said...

மணீ வெள்ளகிணர் பள்ளீகூட படமும்,வி.சி.வி குடும்ப வீடும்,சாரட்டு வண்டியும் பாக்குறப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா,ஆனா இப்போ அதே வீடு பங்காளீகள் பாகம் பங்கி வூடு உருத்தெரியாம போச்சு,ம் வூடு மட்டுமா ஊரே மாறி போச்சு எனத்த சொல்றது ஆன ஒன்னு ஏதோ உங்க பதிவ பாக்கறப்ப தான் நம்ம ஊருனு ஒரு பாசம் வருது.S6 மட்டுமல்லாம நிறைய பஸ்சுக வருது.எப்ப வந்தாலும் ஊட்டு பக்கம் ஒரு எட்டு வந்திட்டு போங்க.