3/12/2009

அமெரிக்கா வாழ் நம்மவர் கவனத்திற்கு!!!

நாம ஊர்கண்ட பக்கம் பொழப்பு, நாடுகண்ட பக்கம் குடித்தனம்ன்னு ஓடித் திரிஞ்சு, பொட்டி அடிச்சுப் பொழப்பு நடத்துற சங்கதி தெரிஞ்ச நம்மாள் ஒருத்தன், "ஏண்டா பழமைபேசி, எத்தனை மைல் வெச்சி இருக்கடா?"ன்னு கேட்டான். நான், அதென்னடா ஒரு, 1.1 மில்லியன், பதினொரு இலட்சம் மைலுககிட்ட இருக்குன்னேன். அதைக் கேட்ட அவன், ஒன்னு அதை செலவுல உடு, இல்லை மறந்துருன்னு இந்தச் சுட்டியக் கொடுத்தான். இஃகிஃகி! நான் அதை என்ன செய்யுறதுன்னு இப்ப ஒரே குழப்பம்?! சொக்கா?!

The industries most represented on the list are media, automotive, retail and manufacturing. Companies in the most acute danger are those with reduced cash flow and a high debt load. A lot of big, well-known companies are in danger. On the list: Advanced Micro Devices; AirTran; AMR (parent of American Airlines); Chrysler; Duane Reade; Eastman-Kodak; Ford; General Motors; JetBlue; Krispy Kreme; Palm; R.H. Donnelly; Reader's Digest Association; Rite-Aid; UAL (parent of United Airlines); Unisys; and US Airways.

http://biz.yahoo.com/usnews/090310/10_more_companies_at_risk_of_failing.html?.&.pf=family-home

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!

17 comments:

நசரேயன் said...

நம்மவர் கமலஹசனா?

இராகவன் நைஜிரியா said...

ஒன்னுமே புரியல உலகத்தில, என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது..

இப்படி பாட வச்சுரும் போலிருக்கே நீங்க குடுத்த சுட்டி..

நீங்களும் உங்க பங்குக்கு குழப்ப ஆரம்பிச்சுட்டீங்களா?

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
நீங்களும் உங்க பங்குக்கு குழப்ப ஆரம்பிச்சுட்டீங்களா?
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... எனக்கேவா? நான் என்னோட நெலமையச் சொன்னா, நீங்க குழப்பத்துல இருக்குறவனுக்கு ஒரு தெளிவு சொல்லணும்.... இப்படிச் சொன்னா, எப்படீங்க ஐயா?? ஆறு வருசத்த மைலுக....சும்மா இல்ல...

பழமைபேசி said...

// இராகவன் நைஜிரியா said...
ஒன்னுமே புரியல உலகத்தில, என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது.. இப்படி பாட வச்சுரும் போலிருக்கே நீங்க குடுத்த சுட்டி..//

நான் எங்க ஐயா கொடுத்தேன்? எனக்கு ஒருத்தங் குடுத்து குழப்பிவிட்டதைச் சொன்னது தப்பா? எதோ, இருக்குற மைல்களைப் பொழங்கிவாங்க சனங்க.... அதான்! இஃகிஃகி!!

கணினி தேசம் said...

நீங்க எந்த மைல சொல்றீங்க?

கீழை ராஸா said...

என்ன கொடுமை சார் இது...

Mahesh said...

ஒண்ணும் பிரியல.........

Sanjai Gandhi said...

நேக்கும் ஒன்னியும் பிரில சாமியோவ்.. :(

பழமைபேசி said...

//Mahesh said...
ஒண்ணும் பிரியல.........//

//SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
நேக்கும் ஒன்னியும் பிரில சாமியோவ்.. :(
//

விமானத்துல இவ்வளவு மைல் பயணம் செய்தா, இவ்வளவு மைல் இலவசம்ன்னு விமான நிறுவனம் தரும். அதை, airmile rewardsன்னு சொல்லுறதுங்க. அதை வெச்சி, நீங்க இலவசமா பயணச் சீட்டு வாங்கிகிடலாம்.

அந்த நிறுவனமே இல்லைங்றப்ப, அந்த மைலுகள வெச்சி நான் என்ன செய்வேன்?

Mahesh said...

//விமானத்துல இவ்வளவு மைல் பயணம் செய்தா, இவ்வளவு மைல் இலவசம்ன்னு விமான நிறுவனம் தரும். அதை, airmile rewardsன்னு சொல்லுறதுங்க. அதை வெச்சி, நீங்க இலவசமா பயணச் சீட்டு வாங்கிகிடலாம்.//

அது புரிஞ்சுதுங்ணா... நம்ம வண்டி அதுலதானே ஓடிக்கிட்டுருக்கு :)))

உங்க லிஸ்ட்ல இருக்கற ஏர்லைன்ஸெல்லாம் அமெரிக்காகாரவிகளுக்கு தெரியும். நாங்க கெணத்து தவளைங்க... தெரியாதல்லோ? அதேன் கொளம்பிட்டோம்...

Mahesh said...

ஒரு ஓசனைங்ணா..

airmiles.com ல எல்லா ஏர்லைன்ஸ் மைலுகளையும் கன்வெர்ட் பண்ணிக்கிடலாம். பெறகு எதுனாச்சி பொருள் வாங்கிக்கலாம். முயற்சி பண்ணிப் பாருங்களேன்...

பழமைபேசி said...

//Mahesh said...
ஒரு ஓசனைங்ணா..

airmiles.com ல எல்லா ஏர்லைன்ஸ் மைலுகளையும் கன்வெர்ட் பண்ணிக்கிடலாம். பெறகு எதுனாச்சி பொருள் வாங்கிக்கலாம். முயற்சி பண்ணிப் பாருங்களேன்...
//

இது நல்லா இருக்கு... பொட்டியத் தட்டிப் பாக்குறேன்....நன்றிங்க...

vasu balaji said...

இஞ்ஜார்ரா கூத்த. ஒன்னா ரென்டா. கணக்கு கணக்குன்னு அதுலயும் தமிழ்ல எண்ணப் போட்டு குழப்பி அது அது பாதி ராவில குருவி எத்தன, பழம் எத்தன தேவுடானு குழம்ப வெச்சிட்டு பொட்டி தட்டப் போய்ட்டா? வல்லவனுக்கு வல்லவன் வந்தேன் பாருன்னு யாரோ இவர குழப்பிட்டாங்க. மத்த கம்பெனி காரங்க ஆளுக்கு ஒரு ரூட்டு, ப்ளேன்னு வாங்கி ஓட்டதான செய்வாங்க. அதுல செல்லாதுங்களா?

பழமைபேசி said...

//ப்ளேன்னு வாங்கி ஓட்டதான செய்வாங்க. அதுல செல்லாதுங்களா?//

வாங்க பாலாண்ணே, செல்லாதுங்ளாம். நான் எதுக்கும் அதுகளை செலவு செய்யுறதுன்னு முடிவு செய்துட்டேன்...இஃகிஃகி!

Arasi Raj said...

ஒன்னுமே புரியல

பழமைபேசி said...

//நிலாவும் அம்மாவும் said...
ஒன்னுமே புரியல
//

உங்களுக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்...

விமானத்துல இவ்வளவு மைல் பயணம் செய்தா, இவ்வளவு மைல் இலவசம்ன்னு விமான நிறுவனம் தரும். அதை, airmile rewardsன்னு சொல்லுறதுங்க. அதை வெச்சி, நீங்க இலவசமா பயணச் சீட்டு வாங்கிகிடலாம்.

அந்த நிறுவனமே இல்லைங்றப்ப, அந்த மைலுகள வெச்சி நான் என்ன செய்வேன்?

Arasi Raj said...

ஒ ..அந்த மைல்...சரி சரி......விமான நிறுவனம் எல்லாம் இல்லாம போகும்னு சொல்லாதேங்க....நான் வேலை பாக்குறது அதுல தான்....வேணும்னா எங்க விமானத்துல பிரயாணம் செஞ்சு மைல் சேருங்க....ஹி ஹி
------------------
இருந்தாலும் கொஞ்சம் பயமா தான் இருக்கு...இன்னிக்கு டெஸ்க்ல உக்காந்து இருக்கோம்னு நினச்ச கொஞ்சம் நிம்மதியாவும், ஆச்சர்யமாவும் இருக்கு
-------------------