3/06/2009

பிறழ்ந்தது: இந்திய நர்சுகளுக்கு வாய்ப்பு தடுக்கிறார் ஒபாமா

மக்கா, ”இந்திய நர்சுகளுக்கு வாய்ப்பு தடுக்கிறார் ஒபாமா!”ங்ற தலைப்பை எதாவது ஊடகத்துல பார்த்துட்டு, அவர் வாய்ப்புகளைத் தடுக்கிறார்ன்னு நினைச்சிடாதீங்க. உண்மைச் செய்தி நேர் எதிரானது! நான் இன்னைக்கு ஒரு பக்கம், இந்தத் தலைப்பைப் பார்த்தேன், அதான் இந்தப் பதிவு!

சரி, உண்மையில என்ன நடந்தது? இங்க அமெரிக்காவுல, செவிலி(nurse)யர்களுக்கு அளவு கடந்த தேவை. அதனால குடியுரிமை வாரியம், வெளிநாட்டுல இருந்து அவர்களை வேலை வாய்ப்புக் கொடுத்து, எளிதா உள்ள வர்றதுக்கு பிரத்தியேக வழிமுறைகள், சிறப்பு உள்புகல் குறித்த சட்டத்திற்கான மசோதாவுக்கு அறிமுகம் கொடுத்து இருக்காங்க.

The W Visa for Nurses - Nursing Relief Act of 2009

The purpose of this Act is to create a new nonimmigrant, temporary visa category for registered nurses - the W Visa, that will work in a very similar way as the H-1B visa. The bill is a good one for nurses, healthcare providers and, of course, for patients.

இந்த நேரத்துல ஒரு பாராளுமன்ற உறுப்பினர், தேவை இன்னும் அதிகமாகி, அது ஐந்து இலட்சத்தையும் தாண்டும்ன்னு சொல்லவே, அதுக்கு அதிபர் ஒபாமா ஒரு கூட்டத்துல பேசும் போது, நாம எத்தனை நாட்களுக்குத்தான் வெளிநாட்டு செவிலியர்களையே நம்பிட்டு இருக்குறது. அதே நேரத்துல உள்ளூர்ல நிறைய வேலை இல்லாம இருக்காங்க. ஆகவே, இங்க இருக்குறவிங்களை இது தொடர்பான படிப்புகளைப் படிக்க வைக்கணும்ன்னு பேசி இருக்கார். இது தடுக்குறதுன்னு ஆயிடுமா?

நானும் பதிவுகளைப் போட்டுகிட்டே இருக்கேன். யாரும், என்கிட்ட விவாதத்துக்கு வர மாட்டேனுங்கிறாங்க! நிச்சயம், அரசு அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் யாராவது என்னோட பதிவைப் பார்ப்பாங்கங்ற நம்பிக்கை இருக்கு. தயவு செய்து, உங்க கருத்தைச் சொல்லுங்க. ஏன் பிறழ்ந்த செய்திய, வெகுசன மக்களுக்குத் தர்றீங்க?

மக்கா, தகுதி வாய்ந்த செவிலியர்கள் யாராவது இருந்தா, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கச் சொல்லுங்க. ஊடகங்களின் தலைப்பைப் பார்த்து ஏமாற வேண்டாம்!

தீர விசாரிப்பதே மெய்!

20 comments:

Mahesh said...

பாருங்க... இந்த மாதிரி பிறழ்வெல்லாம் எடுத்துச் சொன்னாத்தான் தெரியுது... ஏந்தான் இந்த பத்திரிக்கைக இப்பிடி ஏறுக்கு மாறா சொல்லுதுகளோ?

பழமைபேசி said...

//Mahesh said...
பாருங்க... இந்த மாதிரி பிறழ்வெல்லாம் எடுத்துச் சொன்னாத்தான் தெரியுது... ஏந்தான் இந்த பத்திரிக்கைக இப்பிடி ஏறுக்கு மாறா சொல்லுதுகளோ?
//

ஆமாங்க அண்ணே, எனக்கு யார் கூடயாவது இது குறிச்சிப் பேசணும். நிறைய வாசகர்கள் சென்னையில இருந்து என்னோட பதிவைப் படிக்கிறாங்க. தயவு செய்து யாராவது சம்பந்தமான ஊடகப் பிரதிநிதிகள், என்னைத் தொடர்பு கொண்டா நல்லா இருக்கும்!

RAMYA said...

அண்ணா ஒரு சிறப்பான பதிவு இது
விவரம் தெரியாமல் பத்திரிகைகளில்
வரும் செய்தியை வைத்து ஏமாந்துதான்
போவார்கள்.

உங்க பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்திக்
கொடுக்கும்.

யாரு அண்ணா உண்மைக்கு பதில் சொல்லுவாங்க.

ஆனா உங்க பதிவை படிச்சுட்டு உண்மை நிலையை உணர்ந்தால் போதும் என்று இருக்கின்றது.

உங்களிடம் நிரியாய இருக்கின்றது தெரிந்து கொள்ள

யாத்ரீகன் said...

your doing a good job..

பழமைபேசி said...

//RAMYA said...
உங்க பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்திக்
கொடுக்கும்
//

ஆமாங்க சகோதரி, அந்த நம்பிக்கையிலதான் போடுறேன்! நன்றிங்க!!

பழமைபேசி said...

//யாத்ரீகன் said...
your doing a good job..
//

Thank you buddy!

புருனோ Bruno said...

// ஆகவே, இங்க இருக்குறவிங்களை இது தொடர்பான படிப்புகளைப் படிக்க வைக்கணும்ன்னு பேசி இருக்கார்//

நாம மட்டும் ”வெளிநாட்டு ஆட்களை நம்ம கூடாது நம மக்கள் அந்த திறனை பெற வேண்டும்” என்று செய்தால் அது தேசபக்தி

அதையே ஓபாமா செய்தால் அது தவறா

பழமைபேசி said...

//புருனோ Bruno said...
நாம மட்டும் ”வெளிநாட்டு ஆட்களை நம்ம கூடாது நம மக்கள் அந்த திறனை பெற வேண்டும்” என்று செய்தால் அது தேசபக்தி

அதையே ஓபாமா செய்தால் அது தவறா
//

நல்ல கேள்விங்க மருத்துவர் ஐயா!

இவர் அதையுங்கூடச் சொல்லி இருக்க மாட்டார், உள்நாட்டுல வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி இருக்காத பட்சத்தில்.

இந்திய அரசும், ஊடகங்களும் இந்தியாவுக்குள்ள வேலை வாய்ப்பு பெருக்க வழி வகை செய்யணும்... இப்படிப் பிறந்த செய்திகள் தருவதும், அதை அடிப்படையா வெச்சிட்டு அமைச்சர்கள் ஆதங்கப்படுவதும் ஆக்கப் பூர்வமா இல்லை.

நன்றிங்க ஐயா, உங்கள் சரியான கருத்துக்கும், வருகைக்கும்!!

நசரேயன் said...

வீட்டுல விவாதம் பண்ணலையா ?
நீங்க விவகாரம் பண்ணுற ஆள் இல்லை, விபரம் சொல்லுற ஆளு

பழமைபேசி said...

//நசரேயன் said...
வீட்டுல விவாதம் பண்ணலையா ?
//

பதிவு போடலாமா, வேணாமான்னுதான?! இஃகிஃகி!!

குடுகுடுப்பை said...

இந்திய நர்சுகளுக்கு தடுப்பூசி போடும் ஒபாமான்னு படிச்சிட்டேன்.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
இந்திய நர்சுகளுக்கு தடுப்பூசி போடும் ஒபாமான்னு படிச்சிட்டேன்.
//

இஃகிஃகி!!

எட்வின் said...

பயனுள்ள தகவல்... நன்றி நண்பரே.

வல்லிசிம்ஹன் said...

பழமைபேசி,
இவ்வளவு சீரமம் எடுத்தூட்டு நீங்க சொல்கிற ஒவ்வொரு செய்தியும் ஆறூதல அளிக்கிறது.

உண்மையா தினமலர்ல்ல இந்த
தலைப்புச் சேய்தியை பார்த்துட்டுஎன்னடாகஷ்ட காலம்னு நினைச்சேன்.
ரொம்ப நன்றிம்மா.

இராகவன் நைஜிரியா said...

நீங்களும் மாறி, மாறி கரடியாத்தான் கத்திகிட்டு இருக்கீங்க..

பத்திரிக்கைகளில் அவங்களும் வியாபரத்துக்காக எதாவது போட்டுகிட்டுதான் இருக்காங்க.

அரசியல்வாதிகளும் வியாபரத்துக்காக எதையாவது சொல்லிகிட்டு இருக்காங்க..

ம் என்னத்த சொல்லி, என்னத்த செஞ்சி..

பழமைபேசி said...

//எட்வின் said...
பயனுள்ள தகவல்... நன்றி நண்பரே
//

நாலுபேர்கிட்ட சொல்லுங்க...

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
உண்மையா தினமலர்ல்ல இந்த
தலைப்புச் சேய்தியை பார்த்துட்டுஎன்னடாகஷ்ட காலம்னு நினைச்சேன்.
ரொம்ப நன்றிம்மா.
//

நீங்களும் பார்த்தீங்களா? அதான்!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
நீங்களும் மாறி, மாறி கரடியாத்தான் கத்திகிட்டு இருக்கீங்க..

பத்திரிக்கைகளில் அவங்களும் வியாபரத்துக்காக எதாவது போட்டுகிட்டுதான் இருக்காங்க.
//

நாம சொல்றதைச் சொல்வோமுங்க ஐயா!

vasu balaji said...

கொடுமை என்னன்னா இந்த தினமலர்ல கருத்துப் பதிய வழி இருக்கு. ஆனா மாறான கருத்து காணாம போய்டும். கொஞ்சமும் பொறுப்பில்லாம இப்படி வதந்தி கிளப்பி என்ன சாதிக்கப் போறாங்கன்னே தெரியலை. நம்பகத்தன்மைக்கு விலையே இல்லை. நன்றி தம்பி. பொறுப்பான பதிவுகள்.

பழமைபேசி said...

//Bala said...
கொடுமை என்னன்னா இந்த தினமலர்ல கருத்துப் பதிய வழி இருக்கு. ஆனா மாறான கருத்து காணாம போய்டும். கொஞ்சமும் பொறுப்பில்லாம இப்படி வதந்தி கிளப்பி என்ன சாதிக்கப் போறாங்கன்னே தெரியலை. நம்பகத்தன்மைக்கு விலையே இல்லை. நன்றி தம்பி. பொறுப்பான பதிவுகள்.
//

வணக்கங்க பாலா அண்ணே! நானும் பலமுறை அவர்களைத் தொடர்பு கொண்டாச்சு... ஒரு பதிலும் இல்லை. :-O(