பள்ளையமாம் பள்ளையம்,
பலர் பார்க்கும் பள்ளையம்!
பணிவோடு பழமைபேசி,
பதிவாக்கும் பள்ளையம்!!
பழந்தமிழ்ப் பெருமைபேசும்,
பாரெல்லாம் போய்ச் சேரும்!
பண்பாடு பலவும் பேசும்,
பண்ணாய்ப் பாடியும் வரும்!!
பள்ளையமாம் பள்ளையம்,
பலர் பார்க்கும் பள்ளையம்!
பணிவோடு பழமைபேசி,
பதிவாக்கும் பள்ளையம்!! ============================================
நன்றி: சித்தகிரி கண்காட்சி
அட மணி என்னாச்சு? எங்க ஊட்டுல கெடியாரம் கோளாறாயி நின்னு போச்சு. அவன் மண்டையில எதோ கோளாறாட்ட இருக்கூ. இப்படிக் கோளாறு பல இடங்கள்ல புழக்கத்துல வருது. இதுக்கு நடுவுல, ஒருத்தர் வந்து உங்க தோள்ல கையப் போட்டு, உங்களை அந்தப் பக்கமா, "வா, நான் உனக்கு ஒரு கோளாறு சொல்றேன்!"ன்னும் கூட்டிட்டுப் போறதையும் பாத்து இருப்பீங்க. அதோட நின்னுதா இந்தக் கோளாறு? நம்ம குடுகுடுப்பையார் அப்பப்ப மண்டையில கோளாறாயி, "பழமைபேசி வலைஞர்களுக்குள்ள ஒன்னுக்கு ஒன்னு கோள் மூட்டுறான்"ன்னும் சொல்லிட்டுத் திரிவாரு பாருங்க. இஃகிஃகி! அது என்ன இந்த கோளு, கோளாறு எல்லாம்?
கோள் அப்பிடின்னாங்க, ஒரு நிலையில இருந்து விலகிப் போறது. புதன் ஒரு கோள். அந்த மாதிரி, எது ஒன்னும் தன்னோட நிலையில இருந்து விலகி, முறைபிறழ்ந்து போச்சுன்னா, அது கோளாறு ஆகிப் போச்சுன்னு அர்த்தம். வண்டியில கோளாறுன்னா, வண்டியோட அக்கு ஒன்னு செய்ய வேண்டிய வேலைல இருந்து விலகிடுச்சுன்னு அர்த்தம்.
"நான் அந்தப் பதிவர் குழுவுக்குள்ள கலகமூட்டுறதுக்கு ஒரு கோளாறு சொல்லுறேன் வா!"ன்னு சொன்னா, முறையா இருக்குற குழுமத்துக்குள்ள பிறழ்வு செய்ய யோசனை சொல்லுறேன்னு அர்த்தம். கோளாறு சொல்றேன்னா, எதோ அவரு தெரியாத சூத்திரஞ் சொல்ல வர்றாருங்ற அர்த்தத்துல, அது புழக்கத்துல இருக்கு. இஃகிஃகி! ஆனா பழமொழி சொல்லுது, "கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே!" அந்தமாதிரி கோளாறு செய்ற குணம், கோளாறுத்தனம்.
ஆனாப் பாருங்க, கருணைக் கொலைங்ற மாதிரி, இந்தக் கோளாறு சில நேரங்கள்ல நல்ல கோளாறாவும் இருக்கும். நிலையில இருக்குற கெட்டவிங்களைப் பிரிச்சி விடுற கோளாறு நல்லதுதானுங்களே?! மேல இருக்குற படத்துல பாருங்க, குறிப்புச் சொல்லுற பெரியவரு, அந்தம்மாவிகளுக்கு நல்ல பலன்களோட, கெட்டது நடக்காம இருக்க, கிரகங்களோட தாக்கத்தை எப்படிப் பிறழ வைக்கிலாம்ன்னும் கோளாறு சொல்லிட்டு இருக்காரு. இஃகிஃகி!!
============================================
ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:
அஞ்சேழ் கழஞ்சினெடை யாழாக்குக் கற்பூரம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் விஞ்சாது
நன்றான தண்ணீர்க்கு நாழிபலம் பன்னிரண்டாம்
இந்த சூத்திரத்தை வெச்சே, அவன் வாழ்நாள் பூராவும் கற்பூர யாவாரம் செய்துட்டு இருந்தானாம். இதுதாங்க அதனோட அர்த்தம். தமிழ் எண்களை நீங்களே கத்துகிடுங்க. இஃகிஃகி!!
கொஞ்சுகின்ற கிளிக்கொப்பாகிய சொல்லையுடைவனே, ௩௫ கழஞ்சு கற்பூரம் ஒரு ஆழாக்கென்றும், அதுவே ஒரு குதிர(நாழி)மென்றும் சொல்லப்படும். நாழி ஒன்றுக்கு உத்தமத் தண்ணீர் நிறை(எடை) ௰௨ என்றும், நாழியொன்றுக்கு மத்திமத் தண்ணீர் நிறை ௰௬ என்றும், அதமத் தண்ணீர் எடை ௰௪ என்றுஞ் சொல்லப்படும்.
அதாவது தண்ணியோட எடைக்கு ஒப்பிட்டு யாவாரஞ் செய்யுறதுங்க. ச்சும்மா, உங்களுக்கு பழங்காலத்துல இப்பிடியெல்லாம் பாட்டுக மூலம் வியாபார யுக்திகளை கையாண்டு இருக்காங்கன்னு சொல்லத்தான் இது. அது சரீ, இனி மெழுகுவர்த்தி யாவாரத்தைப் பத்திக் கீழ பாருங்க!!
============================================
தமிழ்ப் படங்கள்ல நடிக்கிற அழகம்மா ஒருத்தங்க, அமெரிக்கத் தொழிலதிபர் ஒருத்தரை எதேச்சையாப் பாக்கவும், பேசவும், அது கல்யாணத்துல போயி நின்னுச்சாம். அவிங்களும் அமெரிக்கா வந்து, சரி என்ன தொழில் செய்யுறாரு நம்ம வீட்டுக்காரருன்னு ஒரு நாள் போயிப் பாப்பமின்னு, போயிப் பாத்தா, அவரு தேவாலயத்துக்கு முன்னாடி மெழுகுவர்த்தி வித்துகிட்டு இருந்தாராம். ஐயோ, பாவம்! அவங்களும் அதுக்கப்புறம் மெழுகுவர்த்தி வாங்கலையோ, மெழுகுவர்த்தின்னு கூவினாங்களோ, என்னவோ??
============================================
அமெரிக்காவுல வந்துங்க, 37 பேர்த்துல ஒருத்தர் சிறைச்சாலையில இருக்காங்களாமுங்க. அதாவது, மொத்தம் 7.3மில்லியன், 73 இலட்சம் பேருங்க உள்ள இருக்குறது. உலக அளவுல உள்ள இருக்குறவங்கள்ல இது 25%. ஆனா, அமெரிக்காவோட மக்கள் தொகையோ, உலக மக்கள் தொகையில வெறும் 5% மட்டுமே. குற்றங்கள்னு பார்த்தாக்க, கண்டிப்பா வெளிநாடுகள்ல அமெரிக்காவை விட அதிகமாத்தான் இருக்கும். சரி ஒரு பேச்சுக்கு, ஒரே அளவுன்னே வெச்சிகிட்டாலும், அமெரிக்கா வெறும் 5% தானே இருக்கணும். ஆக, வெளிநாடுகள்ல உள்ள இருக்க வேண்டியவங்க எல்லாம் வெளியில இருக்காங்கன்னு தெரிய வருது!! இஃகிஃகி!! அரண்மனை வாசப்படி அதிகமாக வழுக்கும்!
27 comments:
மீ த ஃபர்ஷ்ட்டூ :)
அந்த அம்மா யாருங்கோ??? சொன்னா நா ஒங்களுக்கு 2 மெழுகுவத்தி தர்றேன் :)
//எம்.எம்.அப்துல்லா said...
மீ த ஃபர்ஷ்ட்டூ :)
//
Yessu Anne, Yessu!!
அவ்வ்வ். எனக்கு அந்த சூத்திரம் புரியவேயில்ல. சரி விடுங்க.. இவ்ளோ நாளா வாசனை தெரியல... இப்போ 'அதோட' சூத்திரமும் தெரியல... அவ்ளோதான்.
//எம்.எம்.அப்துல்லா said...
அந்த அம்மா யாருங்கோ??? சொன்னா நா ஒங்களுக்கு 2 மெழுகுவத்தி தர்றேன் :)
//
ரஞ்சித்தா...போங்க அண்ணே, அது ஆம்பளைப் பேரு...
//ச்சின்னப் பையன் said...
அவ்வ்வ். எனக்கு அந்த சூத்திரம் புரியவேயில்ல. சரி விடுங்க.. இவ்ளோ நாளா வாசனை தெரியல... இப்போ 'அதோட' சூத்திரமும் தெரியல... அவ்ளோதான்.//
அண்ணே, அதைவிடுங்க... கோளாறா இருந்துகுங்க, இப்ப என்ன?
கோளாறுக்காரங்க யாரையுமே இன்னைக்கி காணமே?!
+
இந்த வாட்டி கொஞ்சம் கோளாறாயிப் போச்சே :(
அந்த சூத்திரமும் புரியல... இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லலாமே
ரெண்டாவது கிசுகிசு தினமல்ர்ல வர "இதப்படிங்க முதல்ல" மாதிரி இருக்கு... ஆனா ஆளு யாருன்னு தெரியலயேப்பா :(
//Mahesh said...
இந்த வாட்டி கொஞ்சம் கோளாறாயிப் போச்சே :(
அந்த சூத்திரமும் புரியல... இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லலாமே//
வாங்க மகேசு அண்ணே, யார் சொன்னாலும் ஏத்துக்குவேன்...ஆனா, நீங்க சொன்னா எப்படி? முதல்ல இருந்து தொடர்ந்து பழைய கணக்கு வழக்குகளக் கவனிச்சிட்டு அல்ல வர்றீங்க...நீங்கதான பிழை திருத்துனதே? இஃகிஃகி!! ஆனாலும் கொஞ்சம் அது சிக்கலான விசயந்தான்... கொஞ்ச நேரம் எடுக்கும்...அதான் மேலோட்டமா விட்டுட்டேன்.
//ரெண்டாவது கிசுகிசு தினமல்ர்ல வர "இதப்படிங்க முதல்ல" மாதிரி இருக்கு... ஆனா ஆளு யாருன்னு தெரியலயேப்பா :(
//
நம்ம புதுகை அண்ணனுக்கு சொன்ன மறுமொழில சின்ன துப்பு இருக்கு பாருங்க....
சுவாரசியமான பதிவு... மீண்டும் படித்துவிட்டு பின்னோட்டம் இடுகிறேன்... இப்போது மனிதாபிமானிகள் மத்தியில் பரபரப்பாக உள்ள விஷயம் பற்றி எனது பதிவில்.. நேரம் இருந்தால் வரலாம்..
http://kottumurase.blogspot.com/2009/03/blog-post_03.html
1. அரைகுறை தமிழ் என்னோடது.
2. புத்தியும் கொஞ்சம் கம்மி.
3. மூளையும் ரொம்ப கம்மி.
4. உங்க பதிவ படிச்சுத்தான் கொஞ்சம், கொஞ்சமா முன்னேறிகிடுட்டு இருக்கேன்.
5. கற்பூரம் சத்தியமா எனக்கு புரியல.. (அது சரி மகேஷுக்கே குழப்பம் அப்ப்டின்னா, நான் எல்லாம் எந்த மூலை)
6. அப்பு என்ன மாதிரி கோளாறு புடிச்சதக்கெல்லாம் கொஞ்சம் புரியற மாதிரி எழுதப்பு.
7. ச்சின்னப்பையன் சரியாத்தான் சொல்லியிருக்காரு...நான் ச்சின்னப் பையன் கட்சியாக்கும்.
//நம்ம குடுகுடுப்பையார் அப்பப்ப மண்டையில கோளாறாயி, "///
இப்போ என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க....
படிச்சி மண்டை கோளாறாயிடுச்சி...
அப்போ அந்த புள்ள பேரு ரஞ்சிதாவா??
( நாடோடி பூக்கள் ??)
என்னை பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லியா??
என்னிக்கு தான் எனக்கு பிரியிற மாதிரி எழுதுவீங்க??
அவ்வ்வ்வ்வ்....
// pukalini said...
+
//
:-o)
//உருப்புடாதது_அணிமா said...
அப்போ அந்த புள்ள பேரு ரஞ்சிதாவா??
( நாடோடி பூக்கள் ??)
//
மலைக்கோட்டையாருக்கு வணக்கம்! ஊர்ல இருந்து ஒரு பின்னூட்டம் கூடப் போடலை? அவ்வ்....
//அப்போ அந்த புள்ள பேரு ரஞ்சிதாவா??//
மூனாவது எழுத்துல கொஞ்ச்ம், அப்புறம் நாலாவது எழுத்தும் மாத்தணும்! இஃகிஃகி!!
//இராகவன் நைஜிரியா said... //
நன்றிங்க ஐயா!
//உள்ள இருக்க வேண்டியவங்க எல்லாம் வெளியில இருக்காங்கன்னு தெரிய வருது
//
உள்குத்து!!!!!!!
//கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே!//
விலக்குங்கப்பா பழமைபேசிய:))))
///Poornima Saravana kumar said...
//உள்ள இருக்க வேண்டியவங்க எல்லாம் வெளியில இருக்காங்கன்னு தெரிய வருது
//
உள்குத்து!!!!!!!///
அப்படியா??
எனக்கு ஒன்னும் அப்படி தெரியிலையே??
விளக்கம் தேவை..
///Poornima Saravana kumar said...
//உள்ள இருக்க வேண்டியவங்க எல்லாம் வெளியில இருக்காங்கன்னு தெரிய வருது
//
உள்குத்து!!!!!!!///
அப்படியா??
எனக்கு ஒன்னும் அப்படி தெரியிலையே??
விளக்கம் தேவை..
//Poornima Saravana kumar said...
//கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே!//
விலக்குங்கப்பா பழமைபேசிய:))))
//
அவ்வ்வ்வ்வ்வ்.........
//Poornima Saravana kumar said...
//உள்ள இருக்க வேண்டியவங்க எல்லாம் வெளியில இருக்காங்கன்னு தெரிய வருது
//
உள்குத்து!!!!!!!
//
இதுல என்னங்க அம்மணி உள்குத்து? ஊரை நினைச்சேன்....எழுதினேன்... இஃகிஃகி!!
எனக்கு மண்டை இப்ப ரொம்ப கோளாராயி போயி கெடக்கு. நான் அப்புரமா வறேன்.
//குடுகுடுப்பை said...
எனக்கு மண்டை இப்ப ரொம்ப கோளாராயி போயி கெடக்கு. நான் அப்புரமா வறேன்.//
அண்ணே, இப்ப மட்டுந்தானா அண்ணே?
பல தகவல் இருக்குண்ணே
Post a Comment