3/05/2009

தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணலாம் வாங்க!

என்னதான் தேவிக்கு அன்பாக் கொடுத்தாலும், நினைச்சுருகுற தாசிக்கும் கொடுத்துதான ஆவணும். இல்லாட்டி மனசாட்சி கொல்லும் இல்லீங்ளா? சரி, அந்த கணக்கு வழக்கப் பார்க்கலாம் வாங்க! இஃகிஃகி!!

கற்பூரப்பழஞ் சிறிது கொண்டுவந்தே
கற்புடைய மங்கையற்குப் பாதீயீந்தேன்
தப்பாமல் தம்பியர்க்கு நாலிலொன்றுஞ்
சரியாகத் தாயார்க்கு எட்டிலொன்றும்
ஒப்பான வேசியர்க்கு வொன்பதொன்றும்
உகந்துடனேயீந்து விட்டேனுனண்மையாக
கற்பூரப்பழமஞ்சு மீதி கண்டாய்
கணக்கறிந்தோர் கணக்கிற்புலியாமே!

ஒருவன் சிறிது கற்பூரப் பழங்கொண்டு வந்தான். கொண்டு வந்ததிற்பாதி தன் தேவிக்குக் கொடுத்தான். நான்கிலொரு பங்கைத் தன் தம்பிக்குக் கொடுத்தான். கொண்டு வந்ததில் எட்டிலொரு பங்கைத் தன் தாயாருக்கு ஈந்தான். ஒன்பதில் ஒரு பங்கைத் தன் தாசிக்குக் கொடுத்தான். குறை மீந்தப் பழம் . ஆகையால் முதற்கொண்டு வந்த பழம் எத்தனையென்று சொல்வது? #௪௰

கிட்டத்தட்ட விடையும் மேல இருக்கு... இருந்தாலும் நீங்க ரோமானிய எண்ல சொல்லிட்டுப் போங்களேன்! இஃகிஃகி!!


1 : ௧
2 : ௨
3 : ௩
4: ௪
5 :௫
6: ௬
7 : ௭
8 : ௮
9 : ௯
10: ௰
100: ௱
1000: ௲



31 comments:

பரிசல்காரன் said...

***

சரியா? ஆருகிட்டயும் சொல்லிப்புடாதீகப்பு!

பழமைபேசி said...

//பரிசல்காரன் said...
***

சரியா? ஆருகிட்டயும் சொல்லிப்புடாதீகப்பு!
//

வாங்க ஐயா, வணக்கம்! இஃகிஃகி!!

அப்பாவி முரு said...

வணக்கம் அண்ணே,

ஐந்து பழங்கள் தானே?

பழமைபேசி said...

//muru said...
வணக்கம் அண்ணே,

ஐந்து பழங்கள் தானே?
//

பதில் வணக்கம் தம்பீ! மிஞ்சியது அஞ்சு, அப்ப கொண்டு வந்தது எவ்வளவு?

அப்பாவி முரு said...

அண்ணே,

பழத்தை முழுசாக் கொடுக்கணுமா? இல்லை வெட்டியும் கொடுக்கலாமா?

பழமைபேசி said...

//muru said...
அண்ணே,

பழத்தை முழுசாக் கொடுக்கணுமா? இல்லை வெட்டியும் கொடுக்கலாமா?
//

முழுப் பழந்தான அவன் கொண்டு வந்திருப்பான்...?!

.5X + .25X + .125X + .111X +5 = X

நசரேயன் said...

எனக்கு கணக்கு பண்ணத்தெரியாது

அப்பாவி முரு said...

360 பழங்கள் தானே...

அப்பாவி முரு said...

அண்ணே சரியா?

பழமைபேசி said...

முருகேசன், கிட்டத்தட்ட சரி...ஆனா சரியில்லை.... நான் குடுத்த தீர்வுல உங்க விடையப் பொருத்திப் பாருங்க!

அப்பாவி முரு said...

அண்ணே சரி பாருங்க.,

கொண்டு வந்த பழங்கள் - 360

மனைவிக்கு பாதி - 360/2 = 180

தம்பிக்கு கால் - 360/4 = 90

தாய்க்கு எட்டுல - 360/8 = 45
ஒரு பங்கு

தாசிக்கு ஒப்பதுல - 360/9 = 40
ஒரு பங்கு

மொத்தம் கொடுத்தது = 355

ஆக கையில் மீதம் 5 பழங்கள்.

பாமுலாவில் 1/9=0.111111111... போயிக்கிட்டே இருக்கும், நீங்க மொத மூணு இலக்கத்தை மட்டும் எடுத்துட்டீங்க போலிருக்கு...

பழமைபேசி said...

நீங்க சொல்லுறது சரிதான்....ஆனா, இலக்கத்தை தோராயப்படுத்தும் போது .11 அல்லது .111 தானுங்களே வரும்? ஆனா, நீங்க சரியாத்தான் போட்டு இருக்கீக.

பெரியவிங்க சொன்ன விடை ௩௪௰!

3410 = 34x10 = 340 ஏன்னா, தமிழ் எண்ல பூச்சியம் கிடையாது! நன்றிங்க முருகேசன்! நீங்க தமிழ் எண்ணைக் கொஞ்சம் கவனத்தில கொண்டு இருந்திருக்கலாம். இன்னும் வருங்காலங்கள்ல சுவராசியமான கணக்கெல்லாம் இருக்கு.... உங்களால நம்பவே முடியாது. உதாரணம், பூசணிக்காயை அரியாமலே, உள்ள எத்துனை விதை இருக்குன்னு கண்டு பிடிக்கிறது இப்படி....

அப்பாவி முரு said...

//இன்னும் வருங்காலங்கள்ல சுவராசியமான கணக்கெல்லாம் இருக்கு.... உங்களால நம்பவே முடியாது. உதாரணம், பூசணிக்காயை அரியாமலே, உள்ள எத்துனை விதை இருக்குன்னு கண்டு பிடிக்கிறது இப்படி....//

போதும்ண்ணே.,

இதுக்கே நாக்கு தள்ளீருச்சு...

பழமைபேசி said...

//muru said...
போதும்ண்ணே.,

இதுக்கே நாக்கு தள்ளீருச்சு...
//

அப்படியெல்லாம் சொல்லாதீங்க... அதெல்லாம் தெரிஞ்சிக்கணும்.... நான் ரொம்ப முயற்சி செய்யுறேன்...கணக்கு வருது...ஆனா, அதனோட சூத்திரத்தை எப்படிக் கண்டு பிடிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசை...

Kumky said...

இது எதோ கணக்கு சம்மந்தப்பட்டதாமா...உடம்புக்கு ஆகாதுடா கும்க்கி ..எஸ்க்கேப்.

S.R.Rajasekaran said...

\\\தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணலாம் வாங்க!\\\


கணக்கு பன்னலாம்முன்னு வந்தா இது வேற கணக்கு மாதிரி தெரயுது

தமிழர் நேசன் said...

ஆஃகா கணக்கு சூப்பரப்போய்...
இது மாதரி நிறையா கணக்கு பண்ணுங்க..
வாழ்த்துக்கள்!!
அப்படியே நம்ம காந்தி கணக்கையும் கொஞ்சம் வந்து பாக்கரதுதானெ(!)??

Mahesh said...

ஏற்கெனவே ஒரு தேவி, அப்பறம் ஒரு தாசி வேற... இன்னும் கணக்குப் பண்ணணுமா? பல்லு மீதி இருக்கா? :))

நீங்க சொன்ன பதில் சரிதான்... அதான் நானும் சொல்ல வந்தேன் :))

அப்பறம் கொஞ்சம் எழுத்துப்பிழையெல்லாம் இருக்கு போல... ரொம்ப நாளைக்கப்பறம்..
//மங்கயற்கு//
//விட்டேணுன்மையாக//
சரியா?

வேத்தியன் said...

பதிவு அருமை நண்பரே...
அவசரப்பட்டு பின்னூட்டங்களை பாத்துட்டேன்...
அதால விடை கண்டுபிடிக்கிறதுல உள்ள ஆர்வமே இல்ல...
ச்சே அநியாயமா பின்னூட்டங்களை பாத்துட்டேனே...
:-(
இனிவரும் காலங்களில் இது மாதிரி பதிவு போடுங்க...
அருமை...
அப்பிடியே நம்ம கடைக்கு வந்துட்டு போறது...
http://jsprasu.blogspot.com/2009/03/vs.html

பழமைபேசி said...

//கும்க்கி said...
இது எதோ கணக்கு சம்மந்தப்பட்டதாமா...உடம்புக்கு ஆகாதுடா கும்க்கி ..எஸ்க்கேப்.
//

வந்து போனதுக்கு நன்றிங்கோ!

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
\\\தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணலாம் வாங்க!\\\


கணக்கு பன்னலாம்முன்னு வந்தா இது வேற கணக்கு மாதிரி தெரயுது
//

புளியங்குடியாரு, இஃகிஃகி!

பழமைபேசி said...

//Mahesh said...

அப்பறம் கொஞ்சம் எழுத்துப்பிழையெல்லாம் இருக்கு போல... ரொம்ப நாளைக்கப்பறம்..
//மங்கயற்கு//
//விட்டேணுன்மையாக//
சரியா?
//

ஆமாண்ணே! நெம்ப நன்றிங்கண்ணே!!

பழமைபேசி said...

//வேத்தியன் said...
கடைக்கு வந்துட்டு போறது...
http://jsprasu.blogspot.com/2009/03/vs.html
//

நீங்க சொல்லலைன்னாலும், நாங்க வருவமே?! இஃகிஃகி!!

vasu balaji said...

இந்த பூவுன்னும் சொல்லலாம். புய்ப்பம்னு சொல்லலாம் வேல வேணாம். இஃகிஃகி. முரு கணக்கு போட்டு 360ன்னா பெரியவங்க 340னு சொன்னாங்கன்னா எதுதான் சரி. என்னன்னாலும் குடுத்தத சொல்லி காட்றது தப்பில்லையா? கணக்குல கணக்கு போட்டாலே கண்ணு சொக்கும். இதில தமிழ்ல கணக்கு போட்றது எப்படி? நல்லா இருக்கு. தொடர்ந்து போடுங்க தம்பி

பழமைபேசி said...

//Bala said...
முரு கணக்கு போட்டு 360ன்னா பெரியவங்க 340னு சொன்னாங்கன்னா எதுதான் சரி.//

பாலாண்ணே வாங்க, 340தான் சரி! இருங்க விடையத் தெளிவாப் பின்னூட்டம் போடுறேன்!

பழமைபேசி said...



தோராயப் படுத்துறதைக் கணக்குல வெச்சி, பெரியவிங்க சொன்ன விடை:

170
85
42
38
மீதி இருக்குற 5 = 340

குடுகுடுப்பை said...

ஒப்பான வேசியர்க்கு வொன்பதொன்றும்

9 கொடுத்து இருக்கீங்க இங்கே.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
ஒப்பான வேசியர்க்கு வொன்பதொன்றும்

9 கொடுத்து இருக்கீங்க இங்கே.
//

இப்பிடியெல்லாம் சொன்னா, தமிழ்ப் பெரியவிங்க வந்து நாக்கை அறுத்திடுவாங்க அண்ணே!

ஒரொன்பதுன்னா 9.
ஒன்பதொன்றுன்னா ஒன்பதில் ஒன்று, அதாவது 1/9.

dondu(#11168674346665545885) said...

//ஒருவன் சிறிது கற்பூரப் பழங்கொண்டு வந்தான். கொண்டு வந்ததிற்பாதி தன் தேவிக்குக் கொடுத்தான். நான்கிலொரு பங்கைத் தன் தம்பிக்குக் கொடுத்தான். கொண்டு வந்ததில் எட்டிலொரு பங்கைத் தன் தாயாருக்கு ஈந்தான். ஒன்பதில் ஒரு பங்கைத் தன் தாசிக்குக் கொடுத்தான். குறை மீந்தப் பழம் 5.//

கொண்டு வந்தது x என வைத்து கொள்ளலாம்.
x - x[1/2 + 1/4 + 1/8 + 1/9] = 5
That is to say, [1/72]x = 5

Therefore x = 5x72 = 360.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழமைபேசி said...

//dondu(#11168674346665545885) said...

கொண்டு வந்தது x என வைத்து கொள்ளலாம்.
x - x[1/2 + 1/4 + 1/8 + 1/9] = 5
That is to say, [1/72]x = 5

Therefore x = 5x72 = 360.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

நன்றிங்க, உங்க கணக்கு சரிதான்.
முருகேசு ஏற்கனவே சொன்னாருதான்...பெருசுக ஏன் 340ன்னு சொன்னாங்கன்னு ஆராய்ஞ்சிகிட்டு இருக்கேன்...

vinayagamuthu said...

48