3/01/2009

மலங்க மலங்க முழிக்காமல் நம்ம கோவி.கண்ணன் அவர்களுக்கு...

தமிழுக்காக தடி எடுக்குறதை விட்டுப் போட்டு, தமிழ்ல தட்டு! எடுக்க இருந்த தடிக்கான செடி மரமாகி, அது விண்ணை முட்டு மட்டும் வளரும்!!ன்னு எங்க வலைஞர் தளபதி சொல்லி இருக்காரு. அதான் நாங்களும் ஓயாமத் தட்டுற முயற்சியில இறங்கி இருக்கோம். அப்பப்ப, அறுந்த வால் மாதிரி குசும்பும் செய்வோம், அதைப் பொறுத்துகுங்க என்ன?!

நம்ம கடைக்குத் தவறாம வந்து போற தம்பி Sriram, நம்மளைக் கெளரவப் படுத்துறேன் பேர்வழின்னு வழக்கொழிந்த சொற்கள்ன்னு ஒரு வலை(net)ப் பதிவு ஒன்னை ஆரம்பிச்சாரு. மக்கா, இனி அதைத் தொடர் பதிவுன்னு விளிக்காதீங்க, என்ன? தொடர் பதிவுன்னா, அது உங்க பூவுல தொடர்ந்து வர்றது மக்கா! சங்கிலிப் பதிவுன்னா, ஒருத்தர்ட்ட இருந்து இனியொருத்தருக்கு கொக்கி போடணும். இதுல ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு கொக்கி போடுறதால, இது வலைப் பதிவு. வலையோட ஒரு கண்ணுல இருந்து சுத்தியும் பல கண் வரும் இல்ல, அதனால இது வலைப் பதிவு.

இப்ப அன்பர் கோவி.கண்ணன் அவர்களும் நமக்கு ஒரு சிறப்புச்..., அடச் சே, எதுக்கு இந்த சுயம் இங்க? அடங்குடா பழமைபேசி!! ஆமுங்க, கோவியார் தமிழுக்கு ஒரு சிறப்புச் செய்திருக்காரு. அப்ப, நாம அதுக்குப் போட்டியா செய்தாகணும் இல்ல?! இல்லைன்னா, T.V. Radhakrishnan ஐயா கோவிச்சுக்குவாக. அய்ய, எதுக்கு இப்ப நீங்க மலங்க மலங்க முழிக்கிறீங்க? சித்த வேணா அவரோட இந்தப் பதிவுக்கு ஒருவாட்டிப் போய்ட்டு வாங்க, சரியா?!

அதென்ன அந்த மலங்க மலங்க முழிக்கிறது? முழிப்புங்ற விழிப்பு, எப்பிடி எல்லாம் இருக்கு பாருங்க... பேந்தப் பேந்த முழிப்பு, மலங்க மலங்க முழிப்பு, திருதிருன்னு முழிப்பு, துறுதுறுன்னு முழிப்பு... இஃகிஃகி! வாங்க சித்த வெவராமா அல்சித் துவச்சிக் காயப் போடலாம்...

பேந்தப் பேந்த முழிக்கிறது: கோவி ஐயா வெவரமாச் சொல்லிட்டாக. இராவுல, தங்கமணிக்குத் தெரியாமத் தண்ணியடிச்சிட்டு, குளியலறையில பொங்க வெச்சி இருப்போம்...என்னதான் கழுவி சுத்தம் செய்திருந்தாலும், அது அரை குறையாத்தான் செய்திருப்போம். காலையில, அவிங்க எந்திரிச்சதும் என்ன அறையில ஒரு மாதிரியா இருக்கேன்னு கேக்குறப்ப முழிக்கிறம் பாருங்க, பயந்து பயந்து ஒரு முழிப்பு, அதாங்க பேந்த பேந்த முழிப்பு.

மலங்க மலங்க முழிப்பு: மலங்கல்ன்னா, சாய்வா இருக்குறதுங்க. கோணிப்பை சாஞ்சுட்டாச் சொல்லுறது, சாக்கு மலங்கிடுச்சுன்னு. அந்த மாதிரி, தேர்வுல அல்லையில இருக்குறவன் எழுதுற விடைய, சாஞ்சாப்புல பாத்து முழிக்கிறது இருக்கு பாருங்க, அதாங்க மலங்க மலங்க முழிக்கிறது. ஆமாமா, அம்மணி நம்மளைக் கடந்து போகும் போது முழிக்கிறதும் மலங்க மலங்க முழிக்கிறதுதான்...நேர்ல பாக்குறதுக்கு தைரியம் இல்லைங்றது சொல்லித் தெரியணுமா என்ன?! அந்த முழிப்புக்குத்தான அம்மணி தண்ணியெடுக்க கொடத்தை இக்கத்துல வெச்சிட்டு வெளில வர்றதே?!இஃகிஃகி!!

திருதிரு முழிப்பு: திருக்கைன்னாங்க, திருகறது. திருகாணி...அந்தத் திருகலுங்க. சொன்னாக் கோவிச்சுக்க கூடாது நீங்க... பையில உறவுக்காரங்க எதானா வெச்சி இருப்பாங்க... அந்த பையோட மேல்த் துணியையும் தாண்டி ஊடுருவற மாதிரி, கண்ணு திருகல் போட்டு அதுல என்ன இருக்குன்னு பாக்கும். அதாங்க, திருதிரு முழிப்பு. இந்த இடத்துல கொஞ்சம் பொறுத்துகோங்க...

துறுதுறு முழிப்பு: துறுன்னாங்க, நெருக்கமானங்றது பொருள். தலைவனும் தலைவனும் நெருங்கிப் பாக்குறாங்க பாருங்க, அதாங்க துறுதுறு முழிப்பு. அதே நேரத்துல, ஒன்னை வெச்ச கண் வாங்காமப் பாக்குறதும் துறுதுறு முழிப்புங்க.

இப்படி இன்னும் பல வகையான முழிப்புக இருக்குங்க...இனியொரு நாளைக்கு எஞ்சினதை வெச்சிக்கலாம். காலையில எழுந்ததும், இன்னும் இப்படிப் பொட்டி தட்டிட்டு இருந்தா, நான் பேந்தப் பேந்த முழிக்க வேண்டி வரும்...

கள்வனைக் கண்கள் காண்பித்து விடும்!

46 comments:

RAMYA said...

Me the first??

பழமைபேசி said...

//RAMYA said...
Me the first??
//

ஆமாங்க சகோதரி, வணக்கம்!

RAMYA said...

முழிக்கரதுலே இவ்வளவு விதம்,
அதற்கு விளக்கம்,

அடா அடா ஒண்ணும் சொல்லிக்கிறமாதிரி இல்லை.

RAMYA said...

//
மலங்க மலங்க முழிப்பு: மலங்கல்ன்னா, சாய்வா இருக்குறதுங்க. கோணிப்பை சாஞ்சுட்டாச் சொல்லுறது, சாக்கு மலங்கிடுச்சுன்னு. அந்த மாதிரி, தேர்வுல அல்லையில இருக்குறவன் எழுதுற விடைய, சாஞ்சாப்புல பாத்து முழிக்கிறது இருக்கு பாருங்க, அதாங்க மலங்க மலங்க முழிக்கிறது. ஆமாமா, அம்மணி நம்மளைக் கடந்து போகும் போது முழிக்கிறதும் மலங்க மலங்க முழிக்கிறதுதான்...நேர்ல பாக்குறதுக்கு தைரியம் இல்லைங்றது சொல்லித் தெரியணுமா என்ன?! அந்த முழிப்புக்குத்தான அம்மணி தண்ணியெடுக்க கொடத்தை இக்கத்துல வெச்சிட்டு வெளில வர்றதே?!இஃகிஃகி!!
//

வணக்கம் அண்ணா, ஊரிலே இல்லை
அதான் பதிவு பாக்கலை.

அண்ணா சூப்பர், இருங்க அண்ணிகிட்டே மாட்டிக்க போறீங்க, இப்படி அளப்பற பண்ணறீங்க.

இருங்க இருங்க நான் phone போட்டு சொல்லறேன்.

அப்புறம் தண்ணி கொடத்தை இறக்கி
கீழே வைக்க மாட்டங்க!!

இஃகிஃகி!! --> இது வேறேயா???

RAMYA said...

//
திருதிரு முழிப்பு: திருக்கைன்னாங்க, திருகறது. திருகாணி...அந்தத் திருகலுங்க. சொன்னாக் கோவிச்சுக்க கூடாது நீங்க... பையில உறவுக்காரங்க எதானா வெச்சி இருப்பாங்க... அந்த பையோட மேல்த் துணியையும் தாண்டி ஊடுருவற மாதிரி, கண்ணு திருகல் போட்டு அதுல என்ன இருக்குன்னு பாக்கும். அதாங்க, திருதிரு முழிப்பு. இந்த இடத்துல கொஞ்சம் பொறுத்துகோங்க...
//

இல்லே தப்பு பண்ணிட்டு,
அந்த தப்பை கண்டுபிசுட்டாலும்
இந்த மாதிரிதான் முழிப்பாங்க

================================

நீங்க சொல்லி இருக்கிறதும்
சரியாகத்தான் இருக்கின்றது

ஆனா அண்ணா ரொம்ப அனுபவிச்சி
சொல்லி இருக்கிறீங்க.

நான் உங்க வீட்டுக்கு வரும்போது
பையே கொண்டு வரமாட்டேன்!!!

RAMYA said...

//
துறுதுறு முழிப்பு: துறுன்னாங்க, நெருக்கமானங்றது பொருள். தலைவனும் தலைவனும் நெருங்கிப் பாக்குறாங்க பாருங்க, அதாங்க துறுதுறு முழிப்பு. அதே நேரத்துல, ஒன்னை வெச்ச கண் வாங்காமப் பாக்குறதும் துறுதுறு முழிப்புங்க.
//

முழியை பத்தி சொல்லியே "அஸ்கார் அவார்ட்" வாங்கி விடுவீங்க போல இருக்கே!!

உங்களுக்குள்ளே இவ்வளவு திறமையா ???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

//
இப்படி இன்னும் பல வகையான முழிப்புக இருக்குங்க...இனியொரு நாளைக்கு எஞ்சினதை வெச்சிக்கலாம். காலையில எழுந்ததும், இன்னும் இப்படிப் பொட்டி தட்டிட்டு இருந்தா, நான் பேந்தப் பேந்த முழிக்க வேண்டி வரும்...
//

ஆமா அண்ணிக்கு போய் காய் நறுக்கி கொடுக்கணும், மாவு ஆட்டனும், துணி துவக்கணும் எவ்வளவு வேலை இருக்கு ??

இல்லைன்னா அப்புறம் என்னா???
அப்பளகட்டைதான் பேசும்.

அப்போ என்னா முழி முழிக்கப் போறாங்களோ ??

சொக்கா நீதான் எனக்கு ஒரு பதில் சொல்லணும்..

RAMYA said...

//
கள்வனைக் கண்கள் காண்பித்து விடும்! //

நூத்துக்கு நூறு உண்மை!!!

RAMYA said...

அப்பா ரொம்ப நாள் கழிச்சி கும்மி
அடிச்சாச்சு.

ரொம்ப நன்றி அண்ணா !!!

எம்.எம்.அப்துல்லா said...

ஙேன்னு முழிக்கிறத சொல்லுங்கண்ணா
:)

ஸ்ரீதர்கண்ணன் said...

அந்த முழிப்புக்குத்தான அம்மணி தண்ணியெடுக்க கொடத்தை இக்கத்துல வெச்சிட்டு வெளில வர்றதே?!இஃகிஃகி!!

இஃகிஃகி

பழமைபேசி said...

//RAMYA said...
அப்பா ரொம்ப நாள் கழிச்சி கும்மி
அடிச்சாச்சு.

ரொம்ப நன்றி அண்ணா !!
//

நான் இப்பத்தான் விடுதலை ஆகி வந்தேன்...அதான், கும்மியில கலந்துக்க முடியலை!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
ஙேன்னு முழிக்கிறத சொல்லுங்கண்ணா
:)

March 1, 2009 1:30 PM
//

வாங்ண்ணே.... 'ஞே'ன்னு முழிப்பு, 'தேமே'ன்னு முழிப்பு, 'குறுகுறு'ன்னு முழிப்பு, 'கண்ணாடி'முழிப்பு, 'சுருக்'ன முழிப்புன்னு இனியொரு பதிவு போடுறேன் சரியா?

பழமைபேசி said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
அந்த முழிப்புக்குத்தான அம்மணி தண்ணியெடுக்க கொடத்தை இக்கத்துல வெச்சிட்டு வெளில வர்றதே?!இஃகிஃகி!!

இஃகிஃகி
//

சிரிக்கிறதப் பார்த்தா, உங்களுக்கும் அந்த கொடுப்பினை இருக்கு போல இருக்கு....இஃகிஃகி!!

cheena (சீனா) said...

முழிக்கறதுலே இவ்ளோ முழிப்பு இருக்கா - திருட்டு முழி முழிப்பும்பாங்களே - இன்னும் ஒரு பதுவு போட்டு எல்லாத்தெயும் விலாவாரியாச் சொல்றது .....

கோவி.கண்ணன் said...

//அதென்ன அந்த மலங்க மலங்க முழிக்கிறது? முழிப்புங்ற விழிப்பு, எப்பிடி எல்லாம் இருக்கு பாருங்க... பேந்தப் பேந்த முழிப்பு, மலங்க மலங்க முழிப்பு, திருதிருன்னு முழிப்பு, துறுதுறுன்னு முழிப்பு... இஃகிஃகி! வாங்க சித்த வெவராமா அல்சித் துவச்சிக் காயப் போடலாம்...//

இதைப் படிச்சதும் அடக்கமுடியாத சிரிப்பு, எனக்கு தெரிஞ்ச சிங்கைப் பதிவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய வார இறுதி நாள்கள் இப்படித்தான் கழியுது.

கோவி.கண்ணன் said...

//அதென்ன அந்த மலங்க மலங்க முழிக்கிறது? முழிப்புங்ற விழிப்பு, எப்பிடி எல்லாம் இருக்கு பாருங்க... பேந்தப் பேந்த முழிப்பு, மலங்க மலங்க முழிப்பு, திருதிருன்னு முழிப்பு, துறுதுறுன்னு முழிப்பு... இஃகிஃகி! வாங்க சித்த வெவராமா அல்சித் துவச்சிக் காயப் போடலாம்...//

நான் கோடுபோட்டதற்கு நெடும்சாலையே போட்டு இருக்கிறீர்கள். கலக்கல் !

T.V.Radhakrishnan said...

ஆஹா...விழிப்பில் இவ்வளவு வகையா..என..ஆச்சர்யத்தில் விழித்தேன்

பழமைபேசி said...

// cheena (சீனா) said...
முழிக்கறதுலே இவ்ளோ முழிப்பு இருக்கா - திருட்டு முழி முழிப்பும்பாங்களே - இன்னும் ஒரு பதுவு போட்டு எல்லாத்தெயும் விலாவாரியாச் சொல்றது .....
//

வணக்கமுங்க ஐயா! ஐயா, நீங்க சொன்னதுக்கப்புறம் மறுபரிசீலனையே கிடையாதுங்க.... ரெண்டு ஒரு நாள்ல போட்டுடுறேன்....

பழமைபேசி said...

//March 1, 2009 7:43 PM
கோவி.கண்ணன் said...

நான் கோடுபோட்டதற்கு நெடும்சாலையே போட்டு இருக்கிறீர்கள். கலக்கல்
//

வாங்க ஐயா, வாங்க, வாங்க! எல்லாம் உங்களாலத்தான்.... நன்றிங்க!!!

பழமைபேசி said...

மலங்க மலங்க:

மலங்கு என்றால் மனக் கலக்கம் என்று ஒரு பொருள்; தண்ணீர் (அல்லது வேறெந்த திரவாமாயினும்) கலங்கிப்போய்த் தெளிவின்றி இருக்கும் நிலை என்று ஒரு பொருள்; அசைதல்; நடுங்குதல் என்று ஒரு பொருள்; கண்களில் நீர் ததும்புதல் என்று ஒரு பொருள்...

மலங்குதல் என்ற வினைச் சொல், மலங்கு என்ற பெயர்ச்சொல்லில் இருந்து வருகிறது. மலங்கு என்றால் குளம் என்று ஒரு பொருள். (மலங்குதல் என்ற சொல் பயன்படும் விதங்களுக்கான விளக்கம் இங்கே இருக்கிறது.) விலாங்கு மீன் என்று இன்னொரு பொருள்.

மலங்கு-தல் malaṅku- : (page s385)

Gunny; கோணிப்பை. Loc.

மலங்கு-தல் malaṅku-
, 5 v. intr. To incline and fall to the ground; சாய்ந்துவிழுதல்

வேத்தியன் said...

கலக்கிப்புட்டீக நண்பரே...
:-)
அது சரி எங்க நாம சொன்ன வேலையைக் காணோம்???
:-)

Mahesh said...

எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி சொல்ற "பப்பரப்பே"ன்னு முழிக்கறதுன்னா என்ன?

கோவி.கண்ணன் said...

//Mahesh said...
எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி சொல்ற "பப்பரப்பே"ன்னு முழிக்கறதுன்னா என்ன?
//

அதுல பாருங்க மகேஷ், பப்ப்பரப்பே என்பதில் பரப்பு இருக்கிறது, பரப்பு என்றால் கண்களை பரவி, விரிய வைத்து முழிப்பது பப்பரப்பேவாக இருக்கும், பழமை பேசி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
:)

மதிபாலா said...

பதிவ எல்லாம் படிக்கலே ,

நான் வந்ததுக்கு காரணம் நீங்க விருது கொடுத்தது எனக்கு தெரியாம பூடுச்சி அதுக்கு நெம்ப டேங்க்ஸுன்னு சொல்லத்தேன்..........

அப்பறம் அமரிக்கா, கிமரிக்கா வெல்லாம் எப்பிடியிருக்குதுங்க? ஏதோ அத்தன வேருக்கு வேல போச்சி ,இத்தின பேரு வூருக்கு வந்திட்டாங்கன்னு கிலிய கெளப்புறாங்க?

பாத்து பதனமா இருந்துங்க்குங்க .

அப்பறமா நெதானமா பதிவ படிச்சி பின்னூட்டம் போடறேன் , வேல நேரமாச்சா....அதானுங்க.

அ.மு.செய்யது said...

காத்தால கண்ணு முலிச்சி பாக்க சொல்லோ ஒரே ஜிலோனு கீது பா...

ஒன்னிமே பிரியலபா..யார்னா தமில்ல டிராண்லேசன் பண்ணுங்கோ...

-காசிமேட்டு கபாலி.

பிரியமுடன் பிரபு said...

/////
பேந்தப் பேந்த முழிக்கிறது: கோவி ஐயா வெவரமாச் சொல்லிட்டாக. இராவுல, தங்கமணிக்குத் தெரியாமத் தண்ணியடிச்சிட்டு, குளியலறையில பொங்க வெச்சி இருப்போம்...என்னதான் கழுவி சுத்தம் செய்திருந்தாலும், அது அரை குறையாத்தான் செய்திருப்போம். காலையில, அவிங்க எந்திரிச்சதும் என்ன அறையில ஒரு மாதிரியா இருக்கேன்னு கேக்குறப்ப முழிக்கிறம் பாருங்க, பயந்து பயந்து ஒரு முழிப்பு, அதாங்க பேந்த பேந்த முழிப்பு.
////

ஹி ஹி ஹி

நங்களெல்லாம் பேச்சுலர்
ஹிஹிஹிஹி

நசரேயன் said...

நான் எப்படி முழிகிறதுன்னே தெரியலை

பட்டாம்பூச்சி said...

:)))

தாரணி பிரியா said...

இப்படியெல்லாம் முழிப்பாங்களான்னு இப்ப நான் முழிச்சுகிட்டு இருக்கேன் :).

பழமைபேசி said...

// T.V.Radhakrishnan said...
ஆஹா...விழிப்பில் இவ்வளவு வகையா..என..ஆச்சர்யத்தில் விழித்தேன்
//

ஆமா, உங்க விருப்பத்தை நிறைவு செய்யுறதானுங்களே நம்ம வேலை?! நன்றிங்க ஐயா!

பழமைபேசி said...

//வேத்தியன் said...
கலக்கிப்புட்டீக நண்பரே...
:-)
அது சரி எங்க நாம சொன்ன வேலையைக் காணோம்???
:-)

//

பழமைபேசி said...

//Mahesh said...
எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி சொல்ற "பப்பரப்பே"ன்னு முழிக்கறதுன்னா என்ன?

March 1, 2009 9:04 PM
//

அண்ணா, வாங்...அடுத்த பதிவுல வெவரமா, அலசித் துவச்சிக் காயப்போட்றலாமுங்க...

பழமைபேசி said...

// மதிபாலா said...

அப்பறம் அமரிக்கா, கிமரிக்கா வெல்லாம் எப்பிடியிருக்குதுங்க? ஏதோ அத்தன வேருக்கு வேல போச்சி ,இத்தின பேரு வூருக்கு வந்திட்டாங்கன்னு கிலிய கெளப்புறாங்க?//

வாங்க மதிபாலா...நல்லா இருக்கீங்ளா? போனவாரத்துப் பதிவுகளைப் பாருங்க...வெவரமா அலசித் துவச்சிக் காயப்போட்டிருக்கேன்...

பழமைபேசி said...

//அ.மு.செய்யது said...
காத்தால கண்ணு முலிச்சி பாக்க சொல்லோ ஒரே ஜிலோனு கீது பா...

ஒன்னிமே பிரியலபா..யார்னா தமில்ல டிராண்லேசன் பண்ணுங்கோ...

-காசிமேட்டு கபாலி.
//

வாங்க தம்பீ! மொழி பெயர்ப்பாளர் வெச்சி வெச்சி, தமிழையே பெயர்த்துட்டாங்களே தம்பீ?! அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

பழமைபேசி said...

//பிரியமுடன் பிரபு said...
/////
//

குதூகலத்தை அனுபவிங்க இராசா, அனுபவியுங்க!!

பழமைபேசி said...

// நசரேயன் said...
நான் எப்படி முழிகிறதுன்னே தெரியலை

March 1, 2009 11:33 PM

பட்டாம்பூச்சி said...
:)))

March 2, 2009 1:31 AM

தாரணி பிரியா said...
இப்படியெல்லாம் முழிப்பாங்களான்னு இப்ப நான் முழிச்சுகிட்டு இருக்கேன் :).
//

உங்க எல்லாருக்கும் நன்றீங்கோ...

Anonymous said...

"பேந்த பேந்த" இது அடுக்குத் தொடரா இல்லை இரட்டைக் கிளவியா?
பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடர் என்றும் பொருள் தராவிட்டால் இரட்டைக் கிளவி என்றும் படித்ததாக ஞாபகம்.
யாராவது சற்று விளக்குங்களேன்.

பழமைபேசி said...

//"பேந்த பேந்த" இது அடுக்குத் தொடரா இல்லை இரட்டைக் கிளவியா?
பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடர் என்றும் பொருள் தராவிட்டால் இரட்டைக் கிளவி என்றும் படித்ததாக ஞாபகம்.
யாராவது சற்று விளக்குங்களேன்.

//

பேந்த(பயந்த) அடுக்குத் தொடர்... அது இருக்கட்டும்.... நல்ல வேலை செய்தீங்க...அந்த வழக்கொழிந்த சொற்கள்...அமோகமாப் போய்ட்டு இருக்கு... மிக்க நன்றி!

Anonymous said...

ரஹ்மான் ஸ்டைல்ல இதுக்கு பதில் சொல்லணுமுன்னா "எல்லாப் புகழும் உங்களுக்கே "

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க,. வாழ்க்கையில எத்தனை தடவை இந்த முழியை எத்தனை பேர்களிடம் பார்த்திருக்கிறேன்னு(பெண்களிடம் இல்லை).

:)

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

சரியான ஆளுகிட்ட மாட்டிருக்கு பதிவு...!

குடுகுடுப்பை said...

நம்ம எப்படி முழிக்கறோம்.

Bala said...

என்னதான் பழமைபேசின்னு பெயரிருந்தாலும் இதெல்லாம் ஓவரு ஆமாம். பேச்சுக்கு வழியில்லாதப்ப தான இப்படி ஏதோ ஒரு விழிவிழிச்சி தப்பறது. அதுக்கே இவ்வளவு விளக்கம் குடுத்தா இனிமே நாம சரியாத்தான் விழிக்கறமான்னு ஒரு சந்தேகம் வரப்போ விழிக்கிற விழிக்கும் விஞ்ஞானம் நீங்க தான் சொல்லணுமப்பு. நல்ல விளக்கங்கள்.

பழமைபேசி said...

//Sriram said... //

//வல்லிசிம்ஹன் said... //

//குடுகுடுப்பை said... //

//தமிழன்-கறுப்பி... said... //

// Bala said... //

உங்க எல்லோருக்கும் நன்றிங்க!