3/23/2009

முதல்தாரம், ரெண்டாந்தாரம் ஆன கதை!

’Hello'க்குத் தமிழ்ல என்னன்னு பார்த்தோம் இல்லீங்களா?! அதையொட்டி யோசிக்கையில எங்கூடவே ஏழாம் வகுப்புல இருந்து, பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, இப்ப Montreal நகரத்துல இருக்குற என்னோட நண்பனோட ஞாவகம் வந்திச்சி.

அவனும், நானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்துலதான் Toronto வந்து, படிக்கிறோம் பேர்வழின்னு அங்க குப்பை கொட்டிட்டு இருந்தோம். அப்பவே, அவனோட பேச்சு வழக்கு மாறினா மாதிரி இருந்துச்சி. படிப்பு முடிஞ்சதும் அவனுக்கு கல்யாணம் ஆச்சுது. அந்த அம்மணியும் அவனும் மருந்துக்கு கூட தமிழ்ல பேசுறது கிடையாது. அவரு, எங்கூடப் பேசும்போதும் அப்படியே அள்ளி விடுவாரு. அப்பப்ப வாங்கிக் கட்டிக்கவும் செய்வாரு.

அப்படித்தானுங்க, ஒரு நாள் Hello'க்குத் தமிழ்ல என்னன்னு கேட்டு ஒரே கிண்டல்! நாம தகவலைச் சொன்னவுடனே, ’Ta-Ta க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். ’Good-Bye க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். நான் திருப்பிக் கேட்டேன், ‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!

இந்த மாதிரி ஆட்களுக்குங்க தமிழைக் கண்டா ஒரு இளக்காரம். மஞ்சள்க் காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு ஊர்வழில சொல்வாங்க. அந்த மாதிரி, தமிழ்ல எதையும் கேலியாத்தான் பாப்பாங்க இவங்க. தாய்மொழி முதல்தாரம். அடுத்தடுத்து கால நேர சூழ்நிலைக்களுக்கு ஏத்தமாதிரி மத்ததுகளும் அமைஞ்சு போகுது. ஒன்னு, முதல் தாரத்துக்கு ஏத்த மரியாதை குடு. இல்லையா, எல்லார்த்துக்கும் தனி இடத்தைக் குடுத்துட்டுப் போ. அதெப்படி, அவங்களுக்கு முதல்குடி மனசளவுல ரெண்டாந்தாரமாவும், ரெண்டாந்தாரம் ஒசத்தியாவும் ஆகுதுன்னுதான் புரியலை?!

உண்மை நிலவரம் என்னன்னா, ஆங்கிலமொழி பேசுற, 90% வெள்ளைச் சாமிகளுக்கே Tah-Tah, Good-Bye இதுகளுக்கான வெவரந் தெரியாது. இந்தப் பொழப்புல இவனுங்க அலம்பல் வேற? உண்மையாலுமே, தமிழ்ல அர்த்தம் கேக்குறத நாம பாராட்டுறோம். இப்படி வெறுப்பேத்தறதுக்குன்னே கேட்டா, நாமளும் கேப்பமில்ல?

அவங்கதைய விடுங்க, இப்ப நாம வெவரத்துக்கு வருவோம். 'God be with you'ங்றதுதான், 16ஆம் நூற்றாண்டுல இருந்து, படிப்படியா படிப்படியாத் திரிபடைஞ்சு, கடைசில Good Bye ன்னு ஆச்சுதுங்களாம். இது இப்படி இருக்க, ஆங்கிலம் பேசுற வேறொரு வட்டாரத்துல, கடவுள் உன்னோடு இருப்பார் அன்பேங்ற அர்த்தத்துல, tara chuckன்னு சொல்ல ஆரம்பிச்சு, சுருக்கமா taraன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்களாம். நாளடைவில அதுவும் திரிபடைஞ்சு ta-ta ஆயிடுச்சுங்களாம்.

இந்த பின்னணியில ta-taக்கு தமிழாக்கம், ’ஆண்டவன் ஆசியுறுக’ங்ற பொருள்ல ’ஆஆ’ன்னு வெச்சிக்கலாம்ன்னு நான் சொன்னா, நீங்க ஏத்துகிடவா போறீங்க?! ’Ta Ta’தான் சொல்லியாகணுமா? எதோ ஒன்னு நீங்க சொல்லிகிங்க. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இனிப் போய் பொழப்பு கிழப்பைப் பாக்கலாம்! இஃகிஃகி!!

மொழி தவறினவன், வழி தவறுவான்!

45 comments:

Mahesh said...

பஷ்ட்டு.. பஷ்ட்டு...

காரை பூசியாச்சா பூசலயா? கடைக்குள்ள போகலாமா வெய்ட் பண்ணணுமா?

பழமைபேசி said...

//Mahesh said...
பஷ்ட்டு.. பஷ்ட்டு...

காரை பூசியாச்சா பூசலயா? கடைக்குள்ள போகலாமா வெய்ட் பண்ணணுமா?
//

வாங்க, வாங்க! எல்லாம் ஆச்சுதுங்க!!

அப்பாவி முரு said...

போங்கண்ணே, தலைப்பை பாத்துட்டு ஏதோ விவகாரமான விசயம். நண்பர் மண்டை எப்பிடி உடைசதுன்னு பாக்க வந்தா?

நண்பர் மூக்குடைத்ததை எழுதியிருக்கீங்க.

ஆனா நல்லாதான் இருக்கு.

உங்களுக்கு ஆ.ஆ

Mahesh said...

GBY தான் goodbye ஆச்சுது. நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க. Tara Chuck - இது புது செய்தியா இருக்கே...

ttpian said...

எல்லோருக்கும் பம்பரம்,தொப்புள்,சுகன்யா,வோட்டு போடுவீங்கலா மாட்டேன்னு....

Arasi Raj said...

‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்///

சூப்பரு

Arasi Raj said...

இப்படி வெறுப்பேத்தறதுக்குன்னே கேட்டா, நாமளும் கேப்பமில்ல?
////

அப்புறம் கேக்காமயா பின்ன?

கணினி தேசம் said...

//‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!//

அங்கதான்யா நம்ம ஆள் நிக்கறான்!

//மஞ்சள்க் காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு ஊர்வழில சொல்வாங்க. //

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்'னும் சொல்வாங்க.

கணினி தேசம் said...

//90% வெள்ளைச் சாமிகளுக்கே Tah-Tah, Good-Bye இதுகளுக்கான வெவரந் தெரியாது. //
இந்த விவரம் நல்ல இருக்கே.

கணினி தேசம் said...

//இந்த பின்னணியில ta-taக்கு தமிழாக்கம், ’ஆண்டவன் ஆசியுறுக’ங்ற பொருள்ல ’ஆஆ’ன்னு வெச்சிக்கலாம்ன்னு நான் சொன்னா, நீங்க ஏத்துகிடவா போறீங்க?! //

’ஆஆ’ சொல்லும்போது அவ்வளவு திருப்தியா இல்லை.

"கடவுள் கண்பார்வை உங்களோடு இருக்கட்டும்" என்பதைச் சுருக்கி "க.க." னு சொல்வோமா?

Mahesh said...

அண்ணே சொல்ல மறந்து போச்சு... திண்ணைக்கு "foyer"னு சொல்லலாம்.

மாதேவி said...

'God be with you'ங்றதுதான், 16ஆம் நூற்றாண்டுல இருந்து, படிப்படியா படிப்படியாத் திரிபடைஞ்சு, கடைசில Good Bye ன்னு ஆச்சுதுங்களாம்.

tara chuckன்னு சொல்ல ஆரம்பிச்சு, சுருக்கமா taraன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்களாம். நாளடைவில அதுவும் திரிபடைஞ்சு ta-ta ஆயிடுச்சுங்களாம்.நல்ல தகவல்.

வேத்தியன் said...

படிப்பு முடிஞ்சதும் அவனுக்கு கல்யாணம் ஆச்சுது.//

குடுத்து வச்சவரு அவரு...
:-)

வேத்தியன் said...

நான் திருப்பிக் கேட்டேன், ‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!//

இது கேள்வி...
சூப்பர்...

வேத்தியன் said...

ஓ மொழியத்தான் தாரம்ன்னு சொன்னீங்களோ...
ஓகே ஓகே...
இப்போ தான் புரிஞ்சுது இந்த புத்திக்கு...

வேத்தியன் said...

சூப்பர் பதிவு...
சரி தமிழ்ல சொல்லிடுறேன்..
கலக்கல் பதிவுங்க...
ஹிஹி...
நான் வரட்டுமா...
ஆஆ...
(அதாங்க டாட்டா...)
:-)

வெண்பூ said...

சரியான தலைப்பு பழமைபேசி...

vasu balaji said...

நீங்க வேற. நம்மாளுக இங்கயே அப்படியாக்கு அச்சாதானே. மணிக் கணக்கில தமிழ்ல பேசிட்டு டீக்கை சொன்னாதான் மதிப்பு. கூடூர் தாண்டினா தோ கானா சொன்னாதான் சாப்பாடு. மவனே பட்டினி கிடந்தாலும் பரவால்ல. தமிழ்ல பேசியே சாவடிப்போம்னு எவனாவது சாத்வீகமா போராடிட முடியும்? அவ்ளோ துட்டு கட்டி கான்மென்ட் ஸ்கோல்ல சேத்துகினா யப்பா யம்மானு சொல்றான். மம்மி டாடின்னு அட்சா கூட சொல்ல மாட்றான். காப்புரசன் ஸ்கோல்ல சேத்துவிடு நாயன்னு கத்துற ஆளுங்க நாம. டா டா கு நன்றி. வர்ட்டா. ஆ.ஆ

குடந்தை அன்புமணி said...

தகவல்கள் அருமை.தமிழர்கள் மட்டுமே தமிழோடு மற்ற மொழிகளை கலந்து பேசுகிறார்களாம். மனசிருந்தால் மாற்றம் உண்டு.

மோனி said...

___//மொழி தவறினவன், வழி தவறுவான்! //___

அருமை ...

தமிழ் said...

/அப்படித்தானுங்க, ஒரு நாள் Hello'க்குத் தமிழ்ல என்னன்னு கேட்டு ஒரே கிண்டல்! நாம தகவலைச் சொன்னவுடனே, ’Ta-Ta க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். ’Good-Bye க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். நான் திருப்பிக் கேட்டேன், ‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!

இந்த மாதிரி ஆட்களுக்குங்க தமிழைக் கண்டா ஒரு இளக்காரம். மஞ்சள்க் காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு ஊர்வழில சொல்வாங்க. அந்த மாதிரி, தமிழ்ல எதையும் கேலியாத்தான் பாப்பாங்க இவங்க. தாய்மொழி முதல்தாரம். அடுத்தடுத்து கால நேர சூழ்நிலைக்களுக்கு ஏத்தமாதிரி மத்ததுகளும் அமைஞ்சு போகுது. ஒன்னு, முதல் தாரத்துக்கு ஏத்த மரியாதை குடு. இல்லையா, எல்லார்த்துக்கும் தனி இடத்தைக் குடுத்துட்டுப் போ. அதெப்படி, அவங்களுக்கு முதல்குடி மனசளவுல ரெண்டாந்தாரமாவும், ரெண்டாந்தாரம் ஒசத்தியாவும் ஆகுதுன்னுதான் புரியலை?!
/

அருமை

பழமைபேசி said...

// Mahesh said...
அண்ணே சொல்ல மறந்து போச்சு... திண்ணைக்கு "foyer"னு சொல்லலாம்.
//

அண்ணே, ஐரோப்பால எப்படின்னு தெரியாது. அமெரிக்கால foyerன்னா நுழைவுவெளி. நுழைவை ஒட்டின தளப்பரப்பு, இந்த வெளில பிரத்தியேகமா இருக்கும். வீடு ஏகமும் வழுமரத்(wooden floor)தாலோ, திண்மப்பரப்பினா(carpet)லும் இருக்குற பட்சத்துல, இந்த வெளி சற்று மாறுபட்டு இருக்கும். அதுக்கு பல கட்டமைப்புக் காரணங்கள் இருக்கு.

Poornima Saravana kumar said...

தலைப்ப பார்த்திட்டு என்னவோ ஏதோனு அடிச்சுப் புடிச்சு ஓடியாந்தேன்:)))

Poornima Saravana kumar said...

Good bye
ta-ta

//

அருமையான விளக்கம் பழமை...

நன்றி:)

Anonymous said...

நல்ல பதிவு அண்ணே...
இஃகி இஃகி ...
வோட்டு போட்டாச்சு அண்ணே..

Anonymous said...

Me the 25th...

vasu balaji said...

பின்னூட்டத்துக்கு ஊட்டம். டாபிக்கு ஸ்ட்ராங்கு. டைட்டிலு வீக்கு. அதெப்பிடி தாய் மொழிய தாரமொழி ஆக்கலாம்?

ராஜ நடராஜன் said...

முதல்தாரத்த வச்சுகிட்டே சமாளிக்க முடியலை.ரெண்டாந்தாரத்துக்கு கதை சொல்றீங்க!

எனக்கொரு கெட்ட பழக்கம் ஹலோ சொல்றது.இருங்க ஹலோவப் பார்த்துட்டு வந்துடறேன்.

gayathri said...

நான் திருப்பிக் கேட்டேன், ‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!//

இது கேள்வி...

நசரேயன் said...

// தாய்மொழி முதல்தாரம். //
ஆமா..ஆமா

நசரேயன் said...

உங்களுக்கு ஆண்டவன் ஆசியுறுக

பட்டாம்பூச்சி said...

நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க. தகவலுக்கு நன்றி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

திண்ணைக்கு என்னாங்க,,,

குடுகுடுப்பை said...

அண்ணே உங்களுக்கு ரெண்டு தாரமா சொல்லவே இல்லை

RAMYA said...

//
அப்படித்தானுங்க, ஒரு நாள் Hello'க்குத் தமிழ்ல என்னன்னு கேட்டு ஒரே கிண்டல்! நாம தகவலைச் சொன்னவுடனே, ’Ta-Ta க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். ’Good-Bye க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். நான் திருப்பிக் கேட்டேன், ‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!
//

நீங்க யாரு எப்படி கேள்வி எல்லாம் கேப்பீங்கன்னு அவியளுக்கு தெரியாது போல.

நாங்களே உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல தெயர்யாமல் பீதியாகிப் போனோம்.

சரி சரி நடத்துங்க :))

RAMYA said...

//
அவங்கதைய விடுங்க, இப்ப நாம வெவரத்துக்கு வருவோம். 'God be with you'ங்றதுதான், 16ஆம் நூற்றாண்டுல இருந்து, படிப்படியா படிப்படியாத் திரிபடைஞ்சு, கடைசில Good Bye ன்னு ஆச்சுதுங்களாம். இது இப்படி இருக்க, ஆங்கிலம் பேசுற வேறொரு வட்டாரத்துல, கடவுள் உன்னோடு இருப்பார் அன்பேங்ற அர்த்தத்துல, tara chuckன்னு சொல்ல ஆரம்பிச்சு, சுருக்கமா taraன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்களாம். நாளடைவில அதுவும் திரிபடைஞ்சு ta-ta ஆயிடுச்சுங்களாம்.
//

ஐயோ அண்ணா நீங்க இதெல்லாம் எங்கே கத்துக்கறீங்க??

ரொம்ப விஷயம் உங்க கிட்டே overflow ஆகுது போல இருக்கே :))

நடக்கட்டும் நடக்கட்டும் !!

RAMYA said...

//
இந்த பின்னணியில ta-taக்கு தமிழாக்கம், ’ஆண்டவன் ஆசியுறுக’ங்ற பொருள்ல ’ஆஆ’ன்னு வெச்சிக்கலாம்ன்னு நான் சொன்னா, நீங்க ஏத்துகிடவா போறீங்க?! ’Ta Ta’தான் சொல்லியாகணுமா? எதோ ஒன்னு நீங்க சொல்லிகிங்க. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இனிப் போய் பொழப்பு கிழப்பைப் பாக்கலாம்! இஃகிஃகி!!
//

எனக்கு எப்போ TA TA எப்படி சொல்லறதுன்னு ஒரே குழப்பமா போச்சு போங்க.

யாரவது நான் ஏன் குழம்பி இருக்கேன்னு கேட்டா உங்க அட்ரஸ் தான் கொடுப்பேன்.

உங்க சிரிப்புதான் அழகோ கொள்ளை அழகு .

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
அண்ணே உங்களுக்கு ரெண்டு தாரமா சொல்லவே இல்லை
//

இது வேறேயா, ஏன் எப்படி எல்லாரும் தப்பு தப்பா பேசறாங்க அண்ணா??

அது சரி(18185106603874041862) said...

//
அவங்கதைய விடுங்க, இப்ப நாம வெவரத்துக்கு வருவோம். 'God be with you'ங்றதுதான், 16ஆம் நூற்றாண்டுல இருந்து, படிப்படியா படிப்படியாத் திரிபடைஞ்சு, கடைசில Good Bye ன்னு ஆச்சுதுங்களாம். இது இப்படி இருக்க, ஆங்கிலம் பேசுற வேறொரு வட்டாரத்துல, கடவுள் உன்னோடு இருப்பார் அன்பேங்ற அர்த்தத்துல, tara chuckன்னு சொல்ல ஆரம்பிச்சு, சுருக்கமா taraன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்களாம். நாளடைவில அதுவும் திரிபடைஞ்சு ta-ta ஆயிடுச்சுங்களாம்.
//

நல்ல தகவல்...நன்றி

அது சரி(18185106603874041862) said...

வோட்டு?? குத்திட்டேங்கோ :0))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பின்னீட்டிங்க போங்க... எங்க ஊரு பாஷைல சொல்லணுமின்னா பிரிச்சு மேஞ்சிட்டிங்க.

வில்லன் said...

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

பத்திகிச்சு பத்திகிச்சு.....

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

//அவங்கதைய விடுங்க, இப்ப நாம வெவரத்துக்கு வருவோம். 'God be with you'ங்றதுதான், 16ஆம் நூற்றாண்டுல இருந்து, படிப்படியா படிப்படியாத் திரிபடைஞ்சு, கடைசில Good Bye ன்னு ஆச்சுதுங்களாம். இது இப்படி இருக்க, ஆங்கிலம் பேசுற வேறொரு வட்டாரத்துல, கடவுள் உன்னோடு இருப்பார் அன்பேங்ற அர்த்தத்துல, tara chuckன்னு சொல்ல ஆரம்பிச்சு, சுருக்கமா taraன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்களாம். நாளடைவில அதுவும் திரிபடைஞ்சு ta-ta ஆயிடுச்சுங்களாம்.//

ரொம்ப பிரயோஜனம். எதவச்சு ரெண்டு மூணு வெள்ளகாரி இல்ல வெள்ளகாரண கவுதிடுறேன்

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

எப்பவுமே மொத தாரம் இளக்காரம் தான. அதான ரெண்டாவது தாரத்துக்கு போயிருக்கோம்.

சும்மா ஒரு வாதத்துக்கு /பேச்சுக்கு சொன்னேன். கோவா படாதிக!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

//திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்///

உண்மைல எனக்கு தெரியாது. கொஞ்சம் சொல்லிருங்களேன்.

வில்லன் விமர்சன குழு