மின்னும் மின்னும் நீ யாரோ
துன்னும் உலகில் வெகு மேலாய்
மின்னி விண்ணில் வைரமதாய்!
கொதிக்கும் கதிரோன் சென்றவுடன்
எதற்கும் அவனொளி இலையாகில்
உதிக்கும் சிற்றொளி நீ காட்டி
மதிக்கும் இரவில் மின்னிடுவாய்!!
அப்போதிருட்டில் வழி நடப்போன்
ஒப்பி உன்னொளி போற்றிடுவான்
அப்படி மின்னா திருந்தனையோ
எப்படி அவன் வழி அறிந்திடுவான்?
கருநீல வானம் தாங்கிடுவாய்
அருமென் திரைக்குள் நுழைந்திடுவாய்
இருவான் கதிரோன் வருமட்டும்
திருநின் கண்கள் மூடிடலாய்!
முன்னம் இருட்டில் வழி நடப்போற்
குன்நல் சிற்றொளி காட்டிடல்போல்
மின்னும் எனக்கே, நினை அறியேன்,
சின்னஞ்சிறிய தாரகையாய்!
சின்ன சின்னத் தாரகையாய்
மின்னும் மின்னும் நீ யாரோ
துன்னும் உலகில் வெகு மேலாய்
மின்னி விண்ணில் வைரமதாய்!
இது எந்த ஆங்கிலப் பாடலின் தமிழ்ப்படுத்தல்?
இப்பால் ஒரு ஊரிலே தலையாரிக்கு மூன்று மனைவியர் உண்டு. (ஐயோ, பாவம்!) அந்தத் தலையாரி சிறிது வெள்ளரிக்காய் களவிலே கொண்டு வந்தான். மூத்தாள் வந்து தன் பிள்ளை கையில் ஒரு காயைக் கொடுத்து மற்றதை மூன்றாய்ப் பகுந்து ஒரு பங்கை எடுத்துக் கொண்டு போனாள். நடுவானவள் வந்து தன் பிள்ளை கையில் ஒரு காயைக் கொடுத்து மற்றதை மூன்றாகப் பகுந்து ஒரு பங்கு எடுத்துக் கொண்டு போனாள். இளையவள் வந்து, தன் பிள்ளை கையில் ஒரு காயைக் கொடுத்து மற்றதை மூன்றாய்ப் பகுந்து ஒரு பங்கு எடுத்துக் கொண்டு போனாள். இப்படி, ஒருத்தியை அறியாமல் ஒருத்தி பங்கிட்டு எடுத்துக் கொண்டு போனார்கள். இவர்கள் கொண்டு போனது போக மற்றதைப் பொழுது விடிந்த பிறகு தலையாரி வந்து மூன்று பேருக்குஞ் சரியாய்ப் பகுந்து கொடுத்தான். அப்படியானால், களவாடிக் கொண்டு வந்த காய்கள் எத்தனை?
பொறுப்பி: படைப்பின் மூலம் தெரியாது!
24 comments:
எப்பவுமே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிடுவிங்க , இப்போ திடீர்னு கேள்வி கேட்டு [பதில் சொல்ல சொன்னா எப்படி???
யோசுச்சு சொல்லுறேன்............................
வணக்கம் பழமை பேசி,
Twinkle Twinkle Little Star....
சரியா??
//பிரேம்ஜி said...
வணக்கம் பழமை பேசி,
Twinkle Twinkle Little Star....
சரியா??
//
சரியாச் சொல்லிட்டீங்க... பிடியுங்கள் வாழ்த்துகளை!!
//பிரியமுடன் பிரபு said...
யோசுச்சு சொல்லுறேன்............................
//
வாங்க பிரபு, யோசிச்சு சொல்லுங்க!
////பிரேம்ஜி said...
வணக்கம் பழமை பேசி,//
பதில் வணக்கம்! அப்புறம் அந்த கணக்கு?? இஃகிஃகி!
ஆஹா மாட்டிக்கிட்டேனே! ஒரு பதில் சொல்லிட்டு சாய்ஸ்ல விட்டுரலாம்னு நினைச்சேன்.சரி முயற்சி செய்யிறேன்.
//பிரேம்ஜி said...
ஆஹா மாட்டிக்கிட்டேனே! ஒரு பதில் சொல்லிட்டு சாய்ஸ்ல விட்டுரலாம்னு நினைச்சேன்.சரி முயற்சி செய்யிறேன்.
//
யாரங்கே, எங்கே அந்த பிரேம்ஜி? விடாதீர்கள், பிடித்து இழுத்து வாருங்கள்!!
106
//Naren said...
106
//
சரிதான்.... 25?
இஃகிஃகி!!
ரொம்பச் சரி
//Naren said...
ரொம்பச் சரி
//
இந்தக் கணக்கு போதுமா? இன்னுங் கொஞம் வேணுமா??
வர வர நீங்க ரெம்ப கணக்கு கேட்குறீங்க, எதையாவது கணக்கு பண்ணுறீங்களா?
//நசரேயன் said...
வர வர நீங்க ரெம்ப கணக்கு கேட்குறீங்க, எதையாவது கணக்கு பண்ணுறீங்களா?
//
தளபதி, கணக்குங்றதை விட, அவிங்க கணக்கைச் சொன்ன விதம் பிடிச்சிருக்கு. அதான், மத்தவங்க கூட பகிர்ந்துகிடலாம்ன்னு.... இஃகிஃகி! மொக்கையா இருந்தா சொல்லிடுங்க, நிறுத்திடுறேன்!
வர வர நீங்க கே.பி. சுந்தரம்ப அம்மா ரேஞ்சுக்கு ஒரே கேள்வி கேக்கறீங்க.
உங்க பதிவை படிக்க வரதுக்கு முன்னே எந்த புக் refer பன்றதுன்னே தெரியலை.
இப்போ எந்த பாட்டை refer பன்றதுன்னே புரியலை.
எப்படி கணக்கு போடறது எல்லாம் மறந்து போச்சே
சொக்கா நீ எங்கே இருக்கே???
கேள்வியின் நாயகனான என் அன்பு அண்ணாவே நீங்களே பதிலும் சொல்லிடுங்க.
கேள்வியும் நீங்களே!! பதிலும் நீங்களே !!!
அட! ஆங்கில ரைம்ஸை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்களே! நன்றாக உள்ளது. கணக்கு நமக்கு ஆமணக்கு! நீங்களே சொல்லிடுங்க பாஸ்!
(அப்புறம் நேரம் இருந்ா நம்ம பக்கம் வாங்க!)
எனக்குத் தெரியும்..ஆனா சொல்ல மாட்டேன்;)))))))) நீங்க சொல்லுங்க முதல்ல உங்களுக்கு தெரியுதான்னு பாக்கறேன்:))))))))))))))))))))
//RAMYA said...
வர வர நீங்க கே.பி. சுந்தரம்ப அம்மா ரேஞ்சுக்கு ஒரே கேள்வி கேக்கறீங்க.
//
இஃகிஃகி! வணக்கம், பதில் மத்தவங்களே சொல்லிட்டாங்களே!
தலையாரியே களவாண்டு வந்தாரா? நல்ல ஊருடா சாமி. அய்யா. நம்மளுக்கு கணக்கு வருதோ இல்லையோ அழகா தமிழ் படிக்க முடியுது. தொடருங்கோ. சின்னத்தாரகை மின்னுது. பாராட்டுக்கள்.
//அன்புமணி said...
அட! ஆங்கில ரைம்ஸை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்களே! நன்றாக உள்ளது. கணக்கு நமக்கு ஆமணக்கு! நீங்களே சொல்லிடுங்க பாஸ்!
(அப்புறம் நேரம் இருந்ா நம்ம பக்கம் வாங்க!)
//
ஏற்கனவே மக்கள் விடையெல்லாம் சொல்லிட்டாங்களே!
எனக்கே தெரிஞ்சு போச்சு விடை.
ஒரு வாரமா கொஞ்சம் ஆப்பு அதிகமாயிடுச்சு.இப்போதைக்கு உள்ளேன் ஐயா!
எனக்குத் தெரியும் ஆனா முன்னாடியே எல்லாரும் பதில் சொல்லிட்டாங்களே. :-( :-(
இதே மாதிரி கேள்வி கேளுங்க முன்னாடி மாதிரி புத்திசாலிங்க மட்டும் பதில் சொல்ற மாதிரி ........ (.......நீங்களே புரிஞ்சுப்பீங்க :-):-)
ஹ்ம்ம்.. 25 , 106, 187 ஆ.. இதெல்லாம் அந்த தலையாரிய கேட்டாதான் தெரியும்.. நரேன் சொன்ன 106 எதிர் பாராம 25 நு தெனாவெட்டா நினைச்சிண்டு .. அப்புறம் 106 பார்த்துட்டு பத்து மணி நேரம் தலைய பிச்சி கணக்கு பார்த்து.. ஹிஹி அதும் செரிதான் 25? நு பழசு வழியறது தெரியுது. 25 நு அடிச்சி சொன்னா இவங்கதான் அந்த தலையாரி நு சொல்லிடுவாங்கன்னு பயம்.. பார்த்து கணக்கு போடுங்க பழசு..
Post a Comment