3/04/2009

அமெரிக்கப் பதிவரும், ஐதர் அலி காலத்து வலைப்பூவும்!

எல்லாரும், எப்பவும் நவீனமாவே இருந்துட்டு இருக்க முடியுமா என்ன? கொஞ்சம் அப்படி, இப்படி பழைய பொருட்களை வெச்சிருக்க வேண்டி வரும். இது வாழ்க்கையில ஏற்படுற வழமைதானே? உடனே, “நீர் என்ன ஐதர் அலி காலத்து வலைப்பூ வெச்சிருக்கீர்?ன்னு கேட்டுடுவீங்களா? உமக்கு முதல், அந்த ஐதர் அலி காலத்து...ன்னு புழங்குற வழக்குத் தொடருக்கு உண்டான பின்னணி தெரியுமா ஓய்? ஐதர் அலி என்ன, வலைப்பூவுல உம்மை மாதிரி எள்ளலா, பதிவு வாரத்துக்கு நாலு ஏத்திகிட்டா இருந்தாரு? அவரு காலத்துல ஏது ஓய் இந்த வலையகம், வலைப்பூ எல்லாம்?”.

இப்படிக் கேட்டதுதான் தாமதம், உடனே அந்த பிரபலம், “தங்கமணி எதோ அவசர அழைப்பாணை அனுப்பி இருக்காங்க!”ன்னு சொல்லிப் போனவருதான். இன்னைக்கி வரைக்கும் காணோம். வந்து, ”அமெரிக்காவில் பேருந்துப் பயணம் செல்லாதீர், அமெரிக்க மாமரத்தில் வெளவால்”ன்னு பதிவு போடுவாரு பாருங்க. ச்சும்மா சொல்லக் கூடாது, சுவராசியமா கலந்து கட்டிப் பின்னிப் படல் எடுக்குறாரு. இல்லைன்னா, வலைஞர் தளபதிங்ற அந்த கெளரவத்துக்கே இழுக்குதானே? இஃகிஃகி!! புளியங்குடிப் புளியோதரைன்னு ஒரு பதிவு போடுறேன்னு சொன்னாரு, அதையும் இன்னும் போடலை மனுசன்?!

சரி, கேள்வியக் கேட்டுட்டு நாம சும்மா இருந்தா, அவர் நம்மளை சும்மா விடுவாரா? புளியங்குடி ஆட்களை விட்டுத் தூக்கிடமாட்டாரு? ஆகவே, நாம அதை அலசித் துவச்சிக் காயப் போடலாம் வாங்க. அது பாருங்க, ஐதர் அலி காலத்துல எப்பவும் போர்க்கோலந்தானாமுங்க. போர் நடக்காத நாட்கள்தான் குறைவாமுங்க. அதான் சாக்குன்னு போர் வீரர்கள் எல்லாம், மக்களோட வீடுகளுக்குள்ள புகுந்து கொள்ளையடிக்கிறதும் வெகு காலத்துக்கு நடந்துட்டே இருந்ததாம்.

இதுல இருந்து தப்பிக்கிறதுக்காக, கிராம நகரங்கள்ன்னு எந்த வித்தியாசமும் பார்க்காம, வீடுகளை மறு சீரமைச்சாங்களாம் அந்தக் காலத்துப் பெரியவிங்க. அதாவது, வீடுகளோட பிரதான வாயில் எப்பவும் வீதிகளை நோக்கி இருக்கும். அப்படி இருந்தா, இந்த கொள்ளையர்கள் சுலுவுல உள்ள புகுந்திடறாங்கன்னு, வீதியில இருந்து பக்கச் சந்துல புகுந்து, இடமாத் திரும்பி, வலமாப் போயி, மறுபடியும் இடமா உள்ள போயி, வலமா வெளில வந்துன்னு அப்புறம் உள்ள போற மாதிரியெல்லாம் சிக்கலான அமைப்புல வீடுகளைக் கட்டினாங்களாம்.

இதுதான் கதவுன்னு நினைச்சி உள்ள போனீங்கன்னா, அது மூத்திரச் சந்துக்கு இட்டுட்டுப் போகுமாம். இல்லைன்னா, பன்றிகள், நாய்கள்ன்னு இருக்குற கொத்தளத்துக்கு இட்டுட்டுப் போகுமாம். அப்படி ஒரு அமைப்புக் கொண்டதாமுங்க, ஐதர் அலி காலத்துல கட்டின வீடுகள். அதுக்கப்புறம் வெள்ளைக்காரன் வந்ததுக்கப்புறம், மறுபடியும் வெள்ளைக்காரனோட வழிகாட்டுதலின் பேருல வந்ததுதான் நவீன வீடுகள், சீமை ஓடுகளையும், காரை வாசலையும் உள்ளடக்கின வீடுகள்.

இப்படியாக பின்னாள்ல வந்தவங்க, விவசாயம் செய்யுறவங்க கிட்ட கம்பு, சோளம் இதெல்லாம் மூட்டை இருபது ரூபாய்ன்னு விலை நிர்ணயம் செய்து வாங்கினா, ஒரு சிலருக்கு மட்டும் ஒரு ரெண்டு ரூபாய் குறைவா வெச்சி பதினெட்டு ரூபாய்ன்னு விலை வெப்பாங்களாம். அது ஏன் அப்படின்னு கேட்டாக்க, வணிகஞ் சொல்லுறது, மூட்டைகளை அந்த ஐதர் அலி காலத்து வீட்டுல இருந்து வீதிக்குக் கடத்திட்டு வர்றதுக்கு நாங்க அதிகக்கூலி தரணுமல்ல?ன்னு சொல்வாங்களாம். இதுவே, வழக்கத்துல எந்த பழமையான ஒன்னைப் பாக்குறப்பவும் சொல்லுற ஒரு வழக்காச்சுதாம். இஃகிஃகி!!

கோமளவல்லிக்கு ஒரு மொழி!
கோளாறுகாரிக்குப் பல மொழி!!

33 comments:

அப்பாவி முரு said...

கோமளவல்லிக்கு ஒரு மொழி!
கோளாறுகாரிக்குப் பல மொழி!!

பழமொழி சூப்பர்...

சொந்த தயாரிப்புதானே.,

நான் தான் பஸ்டு.

பழமைபேசி said...

வாங்க முருகேசன்... சொந்த தயாரிப்பு இல்ல... ஊர் வழில சொல்லுறதுதான்! இஃகிஃகி!!

குடுகுடுப்பை said...

புளியங்குடியாருக்கு நிறைய ஆணீயாம்.நல்லது இந்த நேரத்துல

குடந்தை அன்புமணி said...

அட அட! என்ன ஒரு விளக்கம்? அந்த பழமொழி சூப்பருங்க!

குடந்தை அன்புமணி said...

அட அட! என்ன ஒரு விளக்கம்? அந்த பழமொழி சூப்பருங்க!

Anonymous said...

எப்படிண்ணே உங்களால மட்டும் எந்த ஒரு விஷயத்தையும் இப்படி அலசி ஆராய்ந்து துவைச்சு காயப் போட முடியுது?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
புளியங்குடியாருக்கு நிறைய ஆணீயாம்.நல்லது இந்த நேரத்துல
//

வணக்கம், தகவலுக்கு நன்றி அண்ணே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ அப்படியா விசயம்.. :)

பழமைபேசி said...

//அன்புமணி said...
அட அட! என்ன ஒரு விளக்கம்? அந்த பழமொழி சூப்பருங்க!
//

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்புமணி ஐயா! அய்யனவிக அப்பிடி இப்பிடி இருப்பாக, நீங்க கண்டுகிடாதீங்க... ஆமா, இன்னும் மக்கள் பொது இடத்துல புகை பிடிச்சிட்டுத்தான் இருக்காங்களாமே?!

பழமைபேசி said...

//அன்புமணி said...
அட அட! என்ன ஒரு விளக்கம்? அந்த பழமொழி சூப்பருங்க!
//

நன்றிங்க, நன்றிங்க!!

மடல்காரன்_MadalKaran said...

கலக்கல் தகவல்.. நீங்க பழமைபேசி இல்ல புதுமையான பழமைபேசி.. நல்ல விஷயம் எத்தனை சொல்றீங்க.. தகவல் மட்டும் அல்ல .. பழமொழியும் சூப்பருங்கோ..!
அன்புடன், கி.பாலு

பழமைபேசி said...

//Sriram said...
எப்படிண்ணே உங்களால மட்டும் எந்த ஒரு விஷயத்தையும் இப்படி அலசி ஆராய்ந்து துவைச்சு காயப் போட முடியுது?
//

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க...உங்களாலயும் முடியும்... அதான் வலைப் பதிவு துவக்கி அசத்திட்டீங்களே?!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// மூட்டைகளை அந்த ஐதர் அலி காலத்து வீட்டுல இருந்து வீதிக்குக் கடத்திட்டு வர்றதுக்கு நாங்க அதிகக்கூலி தரணுமல்ல?ன்னு சொல்வாங்களாம். //

???????

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஓ அப்படியா விசயம்.. :)
//

ஆமாங்கோ...

பழமைபேசி said...

//மடல்காரன்_MadalKaran said...
கலக்கல் தகவல்.. நீங்க பழமைபேசி இல்ல புதுமையான பழமைபேசி.. நல்ல விஷயம் எத்தனை சொல்றீங்க.. தகவல் மட்டும் அல்ல .. பழமொழியும் சூப்பருங்கோ..!
அன்புடன், கி.பாலு
//

வாங்க பாலு, எல்லாம் உங்களுக்காகத்தான்...இஃகிஃகி!!

பழமைபேசி said...

//SUREஷ் said...
// மூட்டைகளை அந்த ஐதர் அலி காலத்து வீட்டுல இருந்து வீதிக்குக் கடத்திட்டு வர்றதுக்கு நாங்க அதிகக்கூலி தரணுமல்ல?ன்னு சொல்வாங்களாம். //

???????
//

வாங்க சுரேசு, படம் நல்லா இருக்கு. வீட்டில இருந்து, வீதியில நிக்கிற வண்டிக்கு எடுத்திட்டு வர்றதுதான்!

நசரேயன் said...

பதிவு வருகிறது விரைவில்..
இப்பத்தான் ஆணி அடிச்சு முடிச்சேன்

பழமைபேசி said...

//நசரேயன் said...
பதிவு வருகிறது விரைவில்..
இப்பத்தான் ஆணி அடிச்சு முடிச்சேன்
//

மக்கா, அண்ணஞ் சொல்லிட்டாரு, பதிவு வருது, பதிவு வருது!!

அது சரி(18185106603874041862) said...

//
இதுதான் கதவுன்னு நினைச்சி உள்ள போனீங்கன்னா, அது மூத்திரச் சந்துக்கு இட்டுட்டுப் போகுமாம். இல்லைன்னா, பன்றிகள், நாய்கள்ன்னு இருக்குற கொத்தளத்துக்கு இட்டுட்டுப் போகுமாம்.
//

ஹி..ஹி...ஒரு படத்துல வடிவேலு சொல்லுவாரு..."ஏழு பேரு...ஒரு மூத்திர சந்துல வச்சி அடி அடின்னு அடிச்சானுங்க"

பழமைபேசி said...

//அது சரி said...
ஹி..ஹி...ஒரு படத்துல வடிவேலு சொல்லுவாரு..."ஏழு பேரு...ஒரு மூத்திர சந்துல வச்சி அடி அடின்னு அடிச்சானுங்க"
//

ஆமுங்க அண்ணாச்சி, எனக்கு அந்த ஞாவகந்தேன்...இஃகிஃகி!

பழமைபேசி said...

//நசரேயன் said...
பதிவு வருகிறது விரைவில்.. //

ஒன்னும் வரலையே இன்னும்?! அவ்வ்வ்...

நசரேயன் said...

//நசரேயன் said...
பதிவு வருகிறது விரைவில்.. //

ஒன்னும் வரலையே இன்னும்?! அவ்வ்வ்...//

நாளை கலையிலே கண்டிப்பா பாருங்க

பழமைபேசி said...

//நசரேயன் said...
//நசரேயன் said...
நாளை கலையிலே கண்டிப்பா பாருங்க
//

கண்டிப்பா !!!

S.R.Rajasekaran said...

\\\ ”அமெரிக்காவில் பேருந்துப் பயணம் செல்லாதீர், அமெரிக்க மாமரத்தில் வெளவால்”ன்னு பதிவு போடுவாரு பாருங்க.\\\


ஒரு மனுசன இந்த கும்மு கும்முறீங்களே இது நியாயந்தானா ???

சந்தனமுல்லை said...

//கோமளவல்லிக்கு ஒரு மொழி!
கோளாறுகாரிக்குப் பல மொழி!//

:-)

S.R.Rajasekaran said...

!!!ஐதர் அலி காலத்துல!!!

வரலாறு நல்லா இருக்கு

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
ஒரு மனுசன இந்த கும்மு கும்முறீங்களே இது நியாயந்தானா ???
//

புளியோதரைக்கு புளியோதரை வக்காலத்தா? வந்திட்டாங்க பாருங்க மக்கா!

பழமைபேசி said...

// சந்தனமுல்லை said...
//கோமளவல்லிக்கு ஒரு மொழி!
கோளாறுகாரிக்குப் பல மொழி!//

:-)
//

இஃகிகி!!

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
!!!ஐதர் அலி காலத்துல!!!

வரலாறு நல்லா இருக்கு
//

நன்றிங்க புளியங்குடியார், நன்றிங்க!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

//ஸ்ரீதர் said...
உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
//

நன்றீங்கோ...

யசோதா.பத்மநாதன் said...

மிக அருமையாக இருக்கிறது குட்டித் தமிழா!ஏனென்று தெரியாத பெருமையாகவும் இருக்கிறது.

ஆனால் இந்தக் கணக்கெல்லாம் எனக்குத் தெரியாது மகனே.

ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்.இந்த வீட்டுக் குட்டிப் பையனின் தமிழின் அழகைக் காண அடிக்கடி வருவேன்.

தமிழ் வரலாற்றுப் பரப்பெங்கும் கொட்டிக் கிடக்கின்ற முத்துக்கள், வைரங்கள்,பவளங்கள்,பொன்மணிகள்,இரத்தினக்கற்கள்,மாணிக்கங்கள்,என்றுஇலக்கியச்செல்வங்கள் தான் எத்தனை

இவற்றை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து தரும் இந்த வண்ணக் குஞ்சரம் கட்டிய தமிழ் பேனாவுக்கு தலைப் பாகைத் தமிழின் முழங்கால் மடித்த வணக்கங்கள்.

பாரட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களுக்கு உரியதாகுக!

பழமைபேசி said...

//மணிமேகலா said...
ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்.இந்த வீட்டுக் குட்டிப் பையனின் தமிழின் அழகைக் காண அடிக்கடி வருவேன்.//

வணக்கங்க அம்மா! மணிமேகலை, மகனான மணிவாசகம் வீட்டுக்கு வருவது இயற்கைதானே?! நீங்கெல்லாம் அடிக்கடி வந்து போகணும்! உங்கள் ஆசிகள் என்றென்றும் எங்களுக்குத் தேவை தாயே!!