3/24/2009

பள்ளயம் 03/27/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய பதிவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

அமெரிக்காவில்:

பள்ளயத்துல ஒரு படைப்பு அமெரிக்காவைப் பத்தினதா எழுதுறது வழக்கம்! அதான், இன்னைக்கும்!! விசயம் என்னன்னா, ஊரே கதி, நாடே கதின்னு, இருக்குற சனங்களையெல்லாம் தேடித் தேடி, இந்தா புடிச்சுக்கோ, இந்தா புடிச்சுக்கோன்னு கடனட்டை(credit card)ய வலுவுல போயிக் குடுத்தது அந்தக் காலம்.

சொரிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சாக? வாங்குனதுல நெம்பப் பேரு திவால்க் கணக்குல போறாங்களாம். அதனால, நலிஞ்சவங்களா இருந்து, வாங்குன அட்டைய நிலுவை எதுவும் இல்லாமத் திருப்பித் தர்றவங்களுக்கு, இலவசமா $300 திருப்பித் தர்றாங்களாம் இப்ப!

நாட்டுப்புறத்தில்:

இன்னைக்கு கெரமாத்துப் படம் எதுவும் போடலை பாருங்க, அதான் கெரமத்துப் பாட்டு ரெண்டு உங்களுக்கோசரம்! இஃகி!

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

ரெட்டைச் சிலாக்கு
கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

மூக்குச் சிலாந்தி
மூக்குச் சிலாந்தி

நாக்குல வரணும்
நாக்குல வரணும்

ஐயப்பஞ் சோலை
ஐயப்பஞ் சோலை

ஆறுமுக தாளம்
ஆறுமுக தாளம்

ஏழுக்குக் கூழு
ஏழுக்குக் கூழு

எட்டுக்கு முட்டி
எட்டுக்கு முட்டி

ஒம்ப‌து க‌ம்ப‌ள‌ம்
ஒம்ப‌து க‌ம்ப‌ள‌ம்

ப‌த்துக்கு ப‌ழுப்பேன்
ப‌த்துக்கு ப‌ழ‌ம‌டி

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு
============================

ஈரிரிண்டைப் போட‌டா
இறுக்க‌ மாட்டைக் காட்ட‌டா

ப‌ருத்திக் கொட்டை வைய‌டா
முக்க‌ட்டு வாணிய‌ன் செக்க‌டா

செக்கும் செக்கும் சேந்தாட‌
வாணிய‌ன் வ‌ந்து வ‌ழ‌க்காட‌
வாணிச்சி வ‌ந்து கூத்தாட‌

நாலை வ‌ச்சி நாலு எடு
நார‌ய‌ணன் பேரெடு
பேரெடுத்தபின்ன‌ பிச்சையெடு

அஞ்சுவ‌ர‌ளி ப‌சு ம‌ஞ்ச‌ள்
அரைக்க‌ அரைக்க‌ப் ப‌த்தாது
ப‌த்தாத‌ம‌ஞ்ச‌ள் ப‌சு ம‌ஞ்ச‌ள்

ஆக்குருத்த‌லம் குருத்த‌ல‌ம்
அடுப்புத்த‌ண்ட‌ல‌ம் த‌ண்ட‌ல‌ம்
வேம்பு சுட்டா வெங்க‌ல‌ம்

ஏழுபுத்திர‌ச் ச‌காய‌ம்
எங்க‌புத்திர‌ச் ச‌காய‌ம்
மாட்டுப்புத்திர‌ச் ச‌காய‌ம்

எட்டும் பொட்டும்
எட‌க்க‌ண்ணு பொட்டை
வ‌லக்க‌ண்ணு ச‌ப்ப‌ட்டை

ஒம்போதுந‌ரி சித்திர‌த்தை
பேர‌ன் பொற‌ந்த‌து பெரிய‌க‌தை
பெத‌ப்ப‌ம்ப‌ட்டிப் பெரிய‌த்தை

ப‌த்துரா சித்திரா கோலாட்ட‌ம்
ப‌ங்குனி மாச‌ங் கொண்டாட்ட‌ம்
ஆடி வெள்ளி வ‌ந்துச்சுன்னா
அம்ம‌னுக்க‌ல்ல‌ கொண்டாட்ட‌ம்.

திண்ணையில்:

ஒரு பட்டணத்திலே வியாபாரஞ் செய்யும் ஓர் வாணியன் வீட்டில், சில கன்னக்கோல்காரர்கள் கன்னம் போட்டு வீடு சோதிக்கையில் ஒரு திருடன் கையில் ஒரு முடிப்பு அகப்பட, அந்த நேரத்திலே ஆள்வரவு சப்தங்கண்டு எல்லோரும் முகமிட்டவாக்கிலே ஓடிப் போனார்கள்.

முடிப்பகட்டப்பட்ட திருடன் அவ்வூருக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கோயிலில் மறைவிடமாக இருந்து அந்த முடிப்பை அவிழ்த்துப் பார்த்தான். அதில் முத்துகளாயிருந்தன. இது எத்தனை முத்தோவென்று எண்ணிப் பார்க்கையில், ஒரு திருடன் வந்து இதில் எனக்குப் பங்குண்டு என்றான்.

நல்லதென்று இரண்டாய்ப் பகருகையில் ஒரு முத்து மீந்தது. அதை எனக்குனக்கு என்று இருவரும் வாதித்துக் கொண்டிருக்கையில், மற்றொருவன் வந்து எனக்கும் பங்குண்டு என்றான். நல்லதென்று மூன்றாய்ப் பகருகையில் ஒரு முத்து மீந்தது.

இப்படியாக ஆறு திருடர்கள் வாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு முத்து மீந்தது. ஏழாவது திருடனுக்கும் சேர்த்து ஏழு பங்கிடச் சரியாயிருந்தன அந்த முடிப்பிலிருந்த முத்துகள். அப்படியானால், இருந்த முத்துகள் எத்தனை?

38 comments:

RAMYA said...

Me the first???

RAMYA said...

மீதி படிச்சிட்டு வாரேன்!!

நிலாவும் அம்மாவும் said...

naan thaan seccconduu

நிலாவும் அம்மாவும் said...

சொறிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சாக?///

புதுசா இருக்கே..

எதுக்கு சொறியனும் ?
பரிஞ்சும்னா?

நிலாவும் அம்மாவும் said...

ஒன்னு ரெண்டு சொல்லித் தர்ற ரெண்டு பாட்டுமே நல்லா இருக்கு

---------------

49 ?
49?
49?

ஆ.முத்துராமலிங்கம் said...

//சொறிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்ன்னு //
நச்சுன்னு ஒரு பழமொழி

கெக்கே பிக்குணி said...

//நல்லதென்று மூன்றாய்ப் பகருகையில் ஒரு முத்து மீந்தது.

இப்படியாக ஆறு திருடர்கள் வாதித்துக் கொண்டிருக்கையில், //நடுவால நாலாவது, அஞ்சாவதுன்னு திருடங்க வந்தாங்களா, வந்தப்புறம் அவங்களுக்கும் 1 முத்து மீந்ததா இல்லியா?

RAMYA said...

பாட்டு நல்லா இருக்கு
கேட்ட மாதிரியே இருக்கு
எங்கே இருந்து இதெல்லாம் படிச்சீங்க??

நீங்க ரொம்ப பெரிய அறிவாளிதான்!!

நிலாவும் அம்மாவும் said...

http://nilakaduthasi.blogspot.com/

URL மாறிடுச்சு ....
நீங்கள் பின்பற்றும் முகவரியை மாத்திக்கோங்க

பழமைபேசி said...

//நிலாவும் அம்மாவும் said...
எதுக்கு சொறியனும் ?
பரிஞ்சும்னா?
//

வணக்கம். சொறிஞ்சு- எண்ணெய் தலையில சுலுவுல ஒட்ட

பரிஞ்சு - பரிந்து

பழமைபேசி said...

//கெக்கே பிக்குணி said...
//நடுவால நாலாவது, அஞ்சாவதுன்னு திருடங்க வந்தாங்களா, வந்தப்புறம் அவங்களுக்கும் 1 முத்து மீந்ததா இல்லியா?
//

வந்தாங்க, அவங்களுக்கும் ஒன்னு மிகுதியாச்சு!!

பழமைபேசி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
//சொறிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்ன்னு //
நச்சுன்னு ஒரு பழமொழி
//

நன்றிங்க!

// RAMYA said... //

சகோதரி, வணக்கம்!!

கணினி தேசம் said...

//சொறிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சாக? //

நல்லா சொன்னேள் போங்கோ

//நிலுவை எதுவும் இல்லாமத் திருப்பித் தர்றவங்களுக்கு, இலவசமா $300 திருப்பித் தர்றாங்களாம் இப்ப! //

நெசமாலுமா சொல்றீங்க ?

RAMYA said...

அந்த முடிப்பில் இருந்தது மொத்தம் 49 முத்துக்கள் இருந்தது.

சரியா அண்ணா?

சரியாதான் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன் ஏதாவது பார்த்து செய்யுங்க :))

கணினி தேசம் said...

ஒன்னு ரெண்டு மூணு... சொல்லித்தர்ற பாட்டுக்கள் இரண்டும் கலக்கல் தல!!

சின்ன வயசுல எங்க ஊர்லயும் இதுமாதிரி பாட்டு ஒன்னு இருந்திச்சி. சரியா கெவனம் இல்லை.

இப்படி போகும்

".
.
.
ஐஞ்சு அவரகக பிஞ்சு
.
.
எட்டு தலையில ஒரு கொட்டு
.
பத்து நீ வாயப் பொத்து"

உங்களுக்கு தெரிஞ்ச முழுசா போடுங்க

கணினி தேசம் said...

//
RAMYA said...
அந்த முடிப்பில் இருந்தது மொத்தம் 49 முத்துக்கள் இருந்தது.

சரியா அண்ணா?

சரியாதான் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன் ஏதாவது பார்த்து செய்யுங்க :))
//

நானும் அதேன் சொல்றேன். 49 முத்துக்கள்

அப்பாவி முரு said...

அண்ணே வணக்கம்.,

ரெண்டுபேர் பிரிக்கிறப்பையும், மூணுபேர் பிரிக்கிறப்பையும், நாலுபேர் பிரிக்கிறப்பையும், அஞ்சு பேர் பிரிக்கிறப்பையும், ஆறுபேர் பிரிக்கிறப்பையும் ஒரு முத்து மிச்சம் வந்து, ஏழு பேர் பிரிச்சா சமமா வந்தால்.,

அந்த பையில் இருந்த மொத்த முத்துக்கள் - 301 .,


விடை சரியா?

மணியண்ணனுக்குத்தான் வெளிச்சம்!!

இஃகி இஃகி

குடந்தைஅன்புமணி said...

அகோ! முத்தில் எனக்கும் பங்குண்டுன்னு சொன்னா கணக்கு சொல்றேன். (கிரேட் எஸ்கேப்!)

வெண்பூ said...

301

Anonymous said...

49

பழமைபேசி said...

வந்தவங்க, விடை சொன்னவங்க, சொல்லாமப் போனவங்க, எல்லார்த்துக்கும் நன்றி!

301ன்னு சரியான விடை சொன்னவங்களுக்கு வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//கணினி தேசம் said...
ஒன்னு ரெண்டு மூணு... சொல்லித்தர்ற பாட்டுக்கள் இரண்டும் கலக்கல் தல!!

சின்ன வயசுல எங்க ஊர்லயும் இதுமாதிரி பாட்டு ஒன்னு இருந்திச்சி. சரியா கெவனம் இல்லை.

இப்படி போகும்

".
.
.
ஐஞ்சு அவரகக பிஞ்சு
.
.
எட்டு தலையில ஒரு கொட்டு
.
பத்து நீ வாயப் பொத்து"

உங்களுக்கு தெரிஞ்ச முழுசா போடுங்க
//

ஏற்கனவே பதிஞ்சாச்சுங்கோ....

குடுகுடுப்பை said...

300$ எனக்கெல்லாம் கிடையாதா?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
300$ எனக்கெல்லாம் கிடையாதா
//

ச்சும்மா கட்டாம ஒரு மூணு மாசத்துக்கு விட்டுப் பாருங்க....

பாலா... said...

//சொறிஞ்சு- எண்ணெய் தலையில சுலுவுல ஒட்ட//

இல்ல. இது சொரிதல். தாரைமாதிரி கிண்ணத்துல எண்ணை எடுத்து உச்சில ஒழுக்கறது. அப்புறம் தேய்க்கிறது. ஆயுர்வேதத்துல தாரானு சொல்லுவாங்க இத. அப்படி ஊத்தறதே மஸாஜ் மாதிரி. அந்த மாதிரியெல்லாம் குளிச்சி நாளாச்சி. எண்ணெய்க்கெங்க போக. வென்னிக்கெங்க போக. வெறுப்பேத்துறாய்ங்கப்பா.

பழமைபேசி said...

// பாலா... said... //

மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க அண்ணே!

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் போடறதுக்கு 300 டாலர் காசு கொடுக்கிறீங்களோன்னு வந்தேன்.வந்தா உங்க பாட்டை ஆரம்பிச்சிட்டீங்க!இஃகி..கி

ஸ்ரீதர் said...

ஓட்டு போட்டுட்டனுங்க.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
பின்னூட்டம் போடறதுக்கு 300 டாலர் காசு கொடுக்கிறீங்களோன்னு வந்தேன்.வந்தா உங்க பாட்டை ஆரம்பிச்சிட்டீங்க!இஃகி..கி
//

:-o)

Mahesh said...

அது என்னது சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு ரயில் பாட்டு?

எத்தனை பேரு 301 சொல்றாங்கன்னு பாத்தேன்... கரெக்டாத்தான் சொல்லியிருக்காங்க. ம்ம் அடுத்த கணக்கு?

நசரேயன் said...

அண்ணே 301 ன்னு நேத்தே தெரியும், ஆனா சொல்ல நேரமில்லை, அந்த 300(0) டாலர் எனக்கு கிடைக்குமா?

செந்தழல் ரவி said...

301+1 முத்து. ஒரு முத்து இந்த கதை எழுதினவருக்குப்பா.

தமிழர் நேசன் said...

நண்பர்களே! வணக்கம், "தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?" என்ற தலைப்பில் எனது கருத்துக்களை பிரசுரித்து உள்ளேன். தங்கள் ஆதரவு வாகுகளாய் தேவை. தங்கள் கருத்துக்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

http://tamilarnesan.blogspot.com/

நன்றி.

தமிழர் நேசன் said...

பாடல்கள் இரண்டும் அருமை நண்பரே! கணக்கை இபோதுதான் கணித்தேன், சரியான விடை முன்னமே கண்டுபிடித்து விட்டனர்! கணக்கும் நன்றாகே இருந்தது...

Poornima Saravana kumar said...

நான் தான் லேட்டா!!

Poornima Saravana kumar said...

சொரிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்//

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்???

Poornima Saravana kumar said...

கெரமத்துப் பாட்டு ரெண்டு உங்களுக்கோசரம்//

அப்படியே பாடியும் காட்டியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்ல!!!

வில்லன் said...

301 முத்து சரியா?????????
300/1 = 300
300/2 = 150
300/3 = 100
300/4 = 75
300/5 = 60
300/6 = 50
301/7 = 43


வில்லன் விமர்சன குழு