10/21/2012

ஆவியழகி


மெலிதாக எழுந்து
ஒய்யாரமாய்த்
தன் இடையை 
ஆட்டி ஆட்டி
வளைந்து
நெளிந்து 
நெகிழ்ந்து
ஆடுகையில்
திடீரென
இரண்டு சுற்று
மெதுவாய்த்
தன்னைத் தானே
சுற்றி வந்து
கண் சிமிட்டி
மென்மையாய்க் கிசுகிசுத்துச்
சிரித்துக் கொண்டிருந்தாளவள்!

என்ன தேமேன்னு
எதையோ பார்த்து
உக்காந்துட்டு?
வெரசாக் குடிச்சிட்டு
டம்ளரைக் குடுங்க
அரட்டி விரட்டிய
மனைவியின் குரலில்
காணமற் போனது
என் சரசம் மட்டுமல்ல
அந்த ஆவியழகியும்தான்!!

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நான் வேறு ஏதோ ஆவி என்று நினைத்து விட்டேன்...ஹா... ஹா...

அருமை... நன்றி...

சசிகலா said...

நானும் உண்மையிலேயே ஆவி அனுபவம் போலனு வந்தேன்.

Mr.E said...

Very nice! beautiful observation and well written!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை....

காபி கப் படம் போடாதிருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்!