2/13/2011

காதல் என்பது இதுதானா??

கொறையில மாடு மேய்க்க நாம் போவேன்!
பள்ளத்துல முள் பொறுக்க நீ வருவே!!

ஓடையில துணி தொவைக்க நீ போவே!
ஓடக்கல் பொறுக்க நான் வருவேன்!!

சங்கத்துல பால் ஊத்த நான் போவேன்!
கோயல்ல விளக்கு வெக்க நீ வருவே!!

தையக்காரன்கிட்ட துணி தெக்க நீ போவே!
தச்சங்கிட்ட கீல் வாங்க நான் வருவேன்!!

கண்ணடக்கம் வாங்க நான் போவேன்!
பொன்னரளி பொறிக்க நீ வருவே!!

கொடுமுடித் தீர்த்தம் பாக்க நீ போவே!
நீநிக்க இடஞ் செய்ய நான் வருவேன்!!

பூளைப்பூவு வாங்க நான் போவேன்!
கோலமாவு வாங்க நீ வருவே!!

கோதும்பி அரைக்க நீ போவே!
தவுடு வெலை கேக்க நான் வருவேன்!!

அறுவடையின்னு மக்கிரி வாங்க நான் போவேன்!
பொடைக்க மொறம் வேணுமின்னு நீ வருவே!

சுண்டப்பானை வாங்கியாற நான் போவேன்!
தீபம் வெக்க விளக்கு வாங்க நீ வருவே!!

தூரிகட்ட கயிறு வாங்க நீ போவே!
பட்டம்வுட கைநூலு வேணுமின்னு நான் வருவேன்!!

காய்ச்சலுன்னு செறகடிக்க நான் போவேன்!
கணுக்கால்ச் சுளுக்குன்னு நீவியுடச்சொல்லி நீ வருவே!!

உன்ற வயசு பதிமூணு
என்ற வயசு பதினாலு
பார்க்காத நாளில்லை
நெனைக்காத பொழுதில்லை
கடைசி வரைக்கும்
ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!

உள்ளத்தில் நீங்காச் சுடர்கள், எங்கிருந்தாலும் வாழ்க!

14 comments:

ஓலை said...

சினிமாகாரங்க ஆட்டயப் போட நல்ல பாட்டா இருக்கும் போல இருக்கே!

பழமைபேசி said...

கொறையில - குறையுள்ள நிலம் (தரிசு)
ஓடக்கல் -- ஓடையில் இருக்கும் கல் (சுக்கால் கல் அல்லது வெண் களிமண் என்றும் சொல்வார்கள்)
வக்கீல் - வண்டியின் அச்சாணியில் இடும் விளக்கெண்ணயில் ஊறவைத்த துணி மற்றும் கரி கலந்த கலவை (கீல்)
கண்ணடக்கம் - அம்மன் சிலையில் கண்ணுக்கு இடும் மெலிந்த பளபளப்புத் தகட்டால் ஆன கண்
மக்கிரி - பெரிய கூடை
சுண்டப்பானை - மிகவும் சிறிய மண்பாண்டம்
தூரிகட்ட -- ஊஞ்சல் கட்ட
செறகடிக்க - காய்ச்சல் கண்டவர்களுக்கு, துண்டினால் வீசி மந்திரம் சொல்லிப் பாடம் படிப்பது

நன்றிங்க!

பணிவுடன்,
பழமைபேசி.

வருண் said...

***உன்ற வயசு பதிமூணு
என்ற வயசு பதினாலு
பார்க்காத நாளில்லை
நெனைக்காத பொழுதில்லை
கடைசி வரைக்கும்
ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!***

சொல்லாத சொல்லுக்குத்தான் விலையில்லை மணியண்ணா! :)))

வல்லிசிம்ஹன் said...

உத்தமமான காதல்.வளர்ந்திருந்தால் நல்ல காதல் கணவன் மனைவியர்,அன்புக் குழந்தைகள் என்று தொடர்ந்திருக்கும்.

இப்போழ்தும் கற்பனையில் அவர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்....பழசையெல்லாம் கெளறியூட்டுப் போட்டீங்க......

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இதுக்குப் பேரு பப்பி லவ்.. தமிழ்ல, நாக்குட்டி காதல் :))

priyamudanprabu said...

very nice ....

oddum podachu

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அடடா.. அட்டகாசம் போங்க.

Saminathan said...

அருமை! வெகு அருமை...

vasu balaji said...

குச்சி முட்டாய் வாங்க நான் போவேன்!
குருவி ரொட்டி வாங்க நீ வருவே!

/ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!/

ம்கும் சொல்லீட்டாலும்! அரசமரத்தடில கதிர் நாட்டாமை கிட்ட கை கட்டி பதில் சொல்லியிருக்கோணும். ஏன் மணியா! கைய புடிச்சி இழுத்தியான்னு கேட்டே கொன்றுப்பாரு:))

சிநேகிதன் அக்பர் said...

"காதல் என்பது இதுதானா??"

ஆமாங்கோ.

ஈரோடு கதிர் said...

காதல் என்பது இதுவும்

பட்டாசு கிளப்பிட்டீங்க போங்க!

naanjil said...

"கண்ணடக்கம்" - அம்மன் சிலையில் கண்ணுக்கு இடும் மெலிந்த பளபளப்புத் தகட்டால் ஆன கண்

புதிய தமிழ்ச் சொல். மகிழ்ச்சி

அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்

Unknown said...

மணியண்ணா அந்த்க்கா எஙக இருக்காங்க?