அடுத்த ஆண்டு 2046ல் நடக்க இருந்த தமிழ்நாட் அசெம்பளித் தேர்தலை அட்வான்சாக நடத்தியதற்கு, ஆளும்கட்சியான ந்யூ காங்கிரஸ்மேளாவுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. காவிரி ரிவர் ஓடிக் கொண்டிருந்த இடங்களைச் சீரமைத்துத் தமிழர்களை அங்கு குடியமர்த்தியதனால், கூடுதலாக 16 இடங்கள் பெற்று ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறது.
பீகார் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் திக்காக வாழும் சூலூர்த் தொகுதியில் போட்டியிட்ட ஆளுங்கட்சியின் இந்நாள்த் தலைவர் பிக்ரம் ஓஜா, தனக்கு அடுத்தபடியாக வந்த மனோஜ் பணிக்கரைக் காட்டிலும் 17000 வோட்ஸ் அதிகம் பெற்று ஜெயித்துள்ளார்.
ந்யூ காங்கிரஸ்மேளாப் பார்ட்டியின் செக்ரட்டரி மொகித் கார்கே, சென்னா டவுனில் இருக்கும் டிநகரில் தன்னையடுத்து வந்த ஜன்ரோஜ் கட்சியின் தலைவர் விக்ரம் சிங்கைப் பனிரெண்டாயிரம் ஓட்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழர்கள் திக்பாப்புலேசனாக வாழும் மதுரா, திருநல்வாலி ஆகிய ட்ஸ்ட்ரிக்டுகளில், தமிழர்களையே கேன்டிடேட்ஸாக நிறுத்திய ஜன்ரோஜ் கட்சிக்கு நல்ல க்ரிடிட் கிடைத்திருக்கிறது. இந்த டிஸ்ட்ரிக்ட்களில் இருக்குற எல்லா சீட்கள்லயும், 12 இடங்கள்லயும் ஜன்ரோஜ் கட்சியே வின் செய்திருக்கிறது.
சிவகங்காத் தொகுதியில் போட்டியிட்ட சினிமா ஏக்ட்ரஸ் ஆதர்ஸ்னா தாக்கர், தனக்கு அடுத்து வந்த ஓல்டு காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்மா சிதம்பரத்தை விட 46000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்து இருக்கார். சோசியல் வெல்ஃபேர் மினிஸ்டர் ஆவேன்னு சொல்லியே ஓட்டுக் கேட்டு ஜெயித்துள்ளார் இவர். முன்னாள் மினிஸ்டராக இருந்த தனது தாத்தா வழியில் பப்ளிக் சர்வீசில் ஈடுபடுவேன் என்றும் ப்ராமிஸ் செய்திருக்கிறார்.
லேபர் யூனியன் எலக்சன் ஆபிஸர்களாக, பீகார் மற்றும் ஒரியா மொழி பேசுபவரோடு தமிழ் பேசும் அதிகாரியையும் நியமித்துப் ப்ராப்ளத்துக்கு ஆளான மினிஸ்டர் பரதேஸ் மக்னாலியா, மதுரா சென்ட்ரல் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். ஜன்ரோஜ் கட்சியின் அனுபவ் த்ரதோஷ் 36000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.
ஃபர்தர் ந்யூசுக்கு 12வது பேஜுக்குச் சென்று பாருங்கள்!
-ஈரோட்டில் கிடைக்கும் ஒரே தமிழ் ந்யூஸ் பேப்பர் ”தமிழ்ச்சேதி” ஜர்னலிஸ்ட் மனோஜ்.
8 comments:
**பீகார் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் திக்காக வாழும் சூலூர்த் தொகுதியில் போட்டியிட்ட ஆளுங்கட்சியின் இந்நாள்த் தலைவர் பிக்ரம் ஓஜா,**
ஹரே பிஹாரி வாள்க!
பிகாரி தமிளன்ஜி பாய் பாய்!
போகிற போக்கைப் பார்த்தால் இதுவும் சாத்தியமே. எவன் நம்மை ஆண்டால் நமக்கென்ன நாம் தமிழர்கள் எப்போதும் அடிமைகளே
2046ள சிச்சுவேஸன் இப்டி தான் இருக்கும்...
ஜர்னலிஸ்ட் மனோஜ்ற்கு வாழ்த்துகல்.
தமிழ் நாட்டவரே முதல்வராக இருக்கும் போது, இன்னும் சில வருடங்களிலேயே டமில், டுமீல் ஆகி விடும் போல...... :-(
சன் டிவி தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா எந்த தொகுதியிலையும் நிக்கலியா?
அதை விடுங்க. நமக்கு நம்ம கட்சி முக்கியம். அண்ணன் அழகிரி பையன் நடத்துற க்ளவுட் நைன் மூவிஸ் அடுத்த படம் எப்போ? உதயநிதி ஸ்டாலின் அய்யாவோட ரெட் ஜெயண்ட் மூவிஸ்ல அடுத்த பட ஹீரோயின் திரிஷாவாமே? நெசமாங்களா?
என்னை திமுக உறுப்பினர் ஆக்காம வுட மாட்டீங்க போலிருக்கு?!
பிஹாரி ஆண்டால் என்ன காஷ்மிரி ஆண்டால் என்ன?திராவிட தமிழ் வெறி நாய்கள்/சொறி நாய்கள் விரட்டி அடிக்கப்பட்டால் தமிழனுக்கும் தமிழுக்கும் நல்லது தானே?
Post a Comment