2/23/2011

தவிப்பு

வலைஞனெனது நித்திரை கலைய
கணித்துயிலும் கலைந்து
அண்டவலை விரிந்தது!

என் பதிவினது ஊட்டுகள் பார்த்தேன்;
காணவில்லை!

விரைவாய் மின்னஞ்சலுக்குத் தாவினேன்;
காணவில்லை!

அவனது பதிவுக்குள் கண்களை ஓட்டினேன்;
காணவில்லை!

அங்கிருந்து பேசுபுக்குக்கு ஓடினேன்;
காணவில்லை!

நேராய் டிவிட்டர் தளத்தில் குதித்தேன்;
காணவில்லை!

கூகுள் பஃசுக்கு விரைந்தேன்;
காணவில்லை!

கூடிக் கும்மியடிக்கும் குழுமத்துக்குப் பாய்ந்தேன்;
காணவில்லை!

வழமைப்பதிவர்களது இடுகைகளுக்குச் சென்றேன்;
காணவில்லை!

தட்சுடமிலின் இன்றைய பலான கட்டுரைக்குச் சென்றேன்;
காணவில்லை!

தினமலரின் புதிய கள்ளக்காதல்ச் செய்திக்கு விரைந்தேன்;
காணவில்லை!

வருத்தமுடன் பிறிதொரு வலைஞனை அழைத்தேன்;
இந்தக் கவலை ஏனடா உனக்கென்றான்!

அவனை எங்கியுமே காணம்;
நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் உருப்பட ஆரம்பிச்சிட்டானோ?!
இல்லே, நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் திருந்திட்டானோ?!

13 comments:

நசரேயன் said...

//நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் உருப்பட ஆரம்பிச்சிட்டானோ?!
இல்லே, நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் திருந்திட்டானோ?//

அண்ணே உங்க ௬ட சேர்ந்தா திருந்த வாய்ப்பு இருக்கு ?

தாராபுரத்தான் said...

தவியாய் தவிக்கீறீங்க..

priyamudanprabu said...

//நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் உருப்பட ஆரம்பிச்சிட்டானோ?!
இல்லே, நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் திருந்திட்டானோ?//

அண்ணே உங்க ௬ட சேர்ந்தா திருந்த வாய்ப்பு இருக்கு ?
Ha ha

ஓலை said...

Attakaasam. I am in line with thalabathi.

Ithukku easy aaga ethir kavija thattiruvaangale!

வருண் said...

***அவனை எங்கியுமே காணம்;
நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் உருப்பட ஆரம்பிச்சிட்டானோ?!
இல்லே, நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் திருந்திட்டானோ?! ***

நாசமாப்போகட்டும் விடுங்கோ!

Chitra said...

அவனை எங்கியுமே காணம்;
நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் உருப்பட ஆரம்பிச்சிட்டானோ?!
இல்லே, நம்மளை எல்லாம் உட்டுப் போட்டு
அவன் மட்டும் திருந்திட்டானோ?!


.....அப்போ தவிப்பு எதற்கு? காணோமே என்றா இல்லை, உருப்பட ஆரம்பித்து விட்டானே என்றா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

vasu balaji said...

தளபதிய நான் திருத்துறேன்:)

பழமைபேசி said...

என்ன நடக்குது இங்க? திருந்த முடியுமாங்றாங்க... திருத்துறேன்னு சொல்றாங்க.... ஒன்னும் நெதானம் புடிபடலையே?!

VELU.G said...

நல்லாத் திருந்துனிங்கப்பா

ஈரோடு கதிர் said...

அட ஒரு போன் போட்டுக் கேட்டிருக்கலாமே!

KRISHNARAJ said...

asathureenga maple. englius as no tamil key in my system.
KJ (chinna mamanar)

அரசூரான் said...

கணணியில் தேடுனீங்க, தரணியில் தேடுனீங்களா?

பழமைபேசி said...

//KRISHNARAJ said...
asathureenga maple. englius as no tamil key in my system.
KJ (chinna mamanar)//

சென்னை வரும் போது, வந்து பார்க்கறனுங்க!!