2/26/2011

த.வ.க கண்டு, கருணாநிதியும் ஜெயலலிதாவும் கலக்கம்!!

நல்லுறவே கொள்கை
இணக்கமே வேதாந்தம்
சகிப்புணர்வே சித்தாந்தம்
வரம்புக்குள் பேச்சுரிமை
கட்டுக்குள் எழுத்துரிமை
நமக்காகவே சட்டம்
சட்டத்திற்காக ஒழுங்கு
கண்டிப்பாய் ஆளுமை
கனிவாய் சமரசம்
உவப்பாய் உடன்பாடு
ஒருமனதாய்த் தீர்மானம்
ஏகமனதாய் அரவணைப்பு
உலகளாவிய விடுதலை
தனக்கான தேசியம்
நிர்வகித்தலுக்கான பிரிவினை
ஒத்தாசைக்கான ஒற்றுமை
வாழ்வுக்கான பொருளியல்
குடிவாழ வருமானம்
பராமரிக்க வரி
வரிச்செலுத்துவது கடமை
கடமையாற்றத் தொண்டன்
வழிநடத்தத் தலைவன்
தலைவனுக்கு நேர்மை
நேர்மைக்கு ஒழுக்கம்
ஒழுக்கத்திற்கான சமத்துவம்
சமத்துவத்திற்கான அரசு
அரசுக்கான பிரதிநிதிகள்
பிரதிநிதிகளுக்கான தேர்தல்
தேர்வுக்கான பங்களிப்பு
பங்களிப்புக்கு குடிமக்கள்
குடிமக்களுக்கான சிந்தனை
சிந்தனைக்காய் வலைஞர்கள்!

வலைஞர்களே ஒன்றுபடுவோம்!
ஆட்சியை வென்றெடுப்போம்!!
தமிழக வலைஞர் கட்சி(த.வ.க)யை வலுப்படுத்துவோம்!!!

(பகடிக்கு ஒரு அளவே இல்லையாடா?? அவ்வ்வ்.......)

12 comments:

நசரேயன் said...

நெல்லை மாவட்டம் எனக்கு

பழமைபேசி said...

//
நசரேயன் said...
நெல்லை மாவட்டம் எனக்கு
//

அப்படியெல்லாம் தர முடியாது இராசா! தெருவில இருந்து படிப்படியா முன்னேறி வரணும்!!

vasu balaji said...

நெல்லைல தெருவிருக்கில்ல.:)). ஒரு பதிவர் சந்திப்புக்கே நசுங்கின சொம்பு போறாம குடம் தவலைன்னு தேடணும் இதுல த.வ.க. தவறாமல் வம்பிழுக்கும் கழகம்=))

ராஜ நடராஜன் said...

நீங்களும் ஜோதியில் கலந்திட்டீங்களாக்கும்:)

த வ க ளை கண்டு பயப்படுவதாவது கலங்குறதாவது!

அப்படி நினச்சுகிட்டுத்தான் வானம்பாடிகள் கிட்ட ஒரு கேள்வி கேட்டுப்புட்டேன்.அவரு நமட்டு சிரிப்பு சிரிக்கிறாரு:)

ரவி said...

குஜமுகவுடன் கூட்டணியா இல்லை மக்களுடன் மட்டுமா ?

பழமைபேசி said...

@@செந்தழல் ரவி

பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்குங்க ரவி. குஜமுகவை, தவகவுடன் இணையச் சொல்லிக் கேக்குறோம். அவரு,மூத்தோர் பிரிவைத் தன்கிட்ட ஒப்படைக்கச் சொல்றாரு... எதுவும், விதிகளை ஆராயாமச் செய்ய முடியாதுன்னு சட்டக்குழு சொல்லுது.

அப்பாதுரை said...

சென்னை நம்பல்கி.

ஓலை said...

Vari seluthuvathu kadamai.

- vaangarathukku aalu thevaiyaa?

Valaignar sangam
- Yentha eliyap pidikka?

naanjil said...

தம்பி மணி
நாஞ்சில் நாட்டில் ஒரு தொகுதி நமக்கு வேண்டும்.
என்ன எதிர் பார்க்கிறீர்கள்? பணமா? சொத்துப்பத்திரமா?
அன்புடன்
நாஞ்சில் இ.பீற்றர்

தாராபுரத்தான் said...

கொங்கு நமக்குங்கோ..விவசாய அணி ..அது இதுன்னு ஏதோ ஒண்ணு கிடைக்குமுங்களா..

ஈரோடு கதிர் said...

மாப்பு கட்சியெல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்களாமா?

நான் தான் கொ.ப.செ.... அதாவது கொள்ளையடிக்கும் பணத்துக்கான செயலாலர்

Anonymous said...

அந்தாதி அருமை. கொ.ப.செ மாதிரி ஏதாவது கிடைக்குமா?!