2/25/2011

மடத்துக்குளம் கவின் செந்தில்வேலன் பிறந்த நாள் வாழ்த்து!!

இன்று பிப்ரவரி இருபத்தி ஐந்தாம் நாள், அன்புச் செல்லம் மடத்துக்குளம் கவின் செந்தில்வேலன் தனது அன்பு அப்பா, அம்மா, அப்பாவின் தோழர்கள், மற்றும் சுற்றமும் நட்பும் சூழத் தனது முதலாவது பிறந்த நாளைத் துபாயில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுகிறார்.

பிறந்த நாள் விழாக் காணும் அன்புத்தளிர் கவின் அவர்களை, சென்னையிலிருந்து வாசு மாமா, ஈரோட்டிலிருந்து கதிர் மாமா, ஆரூரன் மாமா, உடுமலையிலிருந்து அம்மம்மா, அப்பப்பா, நாகா மாமா, சிதம்பரம் மாமா, சூலுரிலிருந்து தாத்தா பாட்டி, நியூயார்க்கிலிருந்து நசரேயன் மாமா, டாலாசிலிருந்து குடுகுடுப்பைத் தாத்தா, டெட்ராயிட்டிலிருந்து பெரியப்பா, சார்லட்டிலிருந்து பழமைபேசி பெரியப்பா, ராலேயிலிருந்து ஓலையார் மற்றும் சித்தப்பாமார், சித்திமார், அத்தை முதலானோர் இவரை பல்கலைகள் கற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறார்கள்!!

16 comments:

kathir said...

முதல் கேக்கு எனக்கு!

kathir said...

கவினுக்கு இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

vasu balaji said...

ஆஹா. கேக்கு போச்சே:)). கவின் குட்டிக்கு வாழ்த்துகள்.

kathir said...

அடடா, இந்தப் பாட்டுக்கு பழமைபேசி தாத்தா தொப்பியோட ஆடுற டேன்ஸ்ச நினைக்கவே ஜிலுஜிலுன்னு இருக்கே!!!

VELU.G said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Pranavam Ravikumar said...

வாழ்த்துகள்!

க.பாலாசி said...

அடடே... வாழ்த்துக்கள் தங்கம்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக்க நன்றிங்க அண்ணா!!

எதிர்பார்க்காத ஒன்று சார்லட் பெரியப்பாவின் வாழ்த்து :)

தாத்தா, ஆத்தா (அப்பத்தா), அப்பிச்சி எல்லாம் இங்கே (துபாயில்) தான் இருக்கிறார்கள்!! இன்று மாலை தான் கொண்டாடவிருக்கிறோம்.

வாழ்த்து தெரிவிக்கும் பெரியப்பாமார், சித்தப்பாமார், சித்திமார், அத்தை, மாமா அனைவருக்கும் நன்றிகள்!!

முனைவர் இரா.குணசீலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

ஓலை said...

Kavin,
Many Happy Returns of the Day.
Happy Birthday.

நசரேயன் said...

கவினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Mahi_Granny said...

many more happy returns kavin

அரசூரான் said...

கவினுக்கு இலங்கை வானொலியில் இருந்து நேரடி ஒலிபரப்பா?

கவினுக்கு வாழ்துகள்.

Chitra said...

அந்த பிறந்த நாள் பாடல் ரொம்ப நல்லா இருக்கிறது. முதன் முறை கேட்கிறேன். கவினுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

குடுகுடுப்பை said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

இன்றைய வலைச்சரத்தில் - “கொன்றைப்பூ - வாழ்த்துச்சரம்” என்ற தலைப்பில் - உங்களுடைய இந்த பதிவினை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.....

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_04.html

வலைச்சரத்துக்கு வரவேற்கிறேன்.

நட்புடன்

வெங்கட்