முல்லைச் சிரிப்புக்காரி
முந்தானை நனையுதடி
நெல்லு வெளஞ்சிடுமே
ஒன்நேக்கான கைநடவால்!
நடவுக் கொறச்சல் இல்லை
நல்லவேலை செய்துடணும்
அடுக்குஅடுக்கு பேச்சால
ஆளைத்தான் மயக்காதடா!!
அழகான கொண்டைக்காரி
ஆசை வெச்சேன் ஒம்மேல
பாசமாப் பழகியே வாரனடி
பசை ஒன்னும் இல்லையடி!
நாலு காசு பாத்து வெச்சு
நல்ல நாளும் பாத்து வெச்சு
வாலுத்தனஞ் செய்யாமே
ஒம்மாமனத்தான் கேட்டுமுடி!!
முந்தானை நனையுதடி
நெல்லு வெளஞ்சிடுமே
ஒன்நேக்கான கைநடவால்!
நடவுக் கொறச்சல் இல்லை
நல்லவேலை செய்துடணும்
அடுக்குஅடுக்கு பேச்சால
ஆளைத்தான் மயக்காதடா!!
அழகான கொண்டைக்காரி
ஆசை வெச்சேன் ஒம்மேல
பாசமாப் பழகியே வாரனடி
பசை ஒன்னும் இல்லையடி!
நாலு காசு பாத்து வெச்சு
நல்ல நாளும் பாத்து வெச்சு
வாலுத்தனஞ் செய்யாமே
ஒம்மாமனத்தான் கேட்டுமுடி!!
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!
20 comments:
நான் தான் முதல்ல
/*
அழகான கொண்டைக்காரி
ஆசை வெச்சேன் ஒம்மேல
பாசமாப் பழகியே வாரனடி
பசை ஒன்னும் இல்லையடி!
*/
ஆமா, எந்த மாமா மகளை கணக்கு பண்ணுறீங்க
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!
அப்ப வெள்ளாம போட்டவனும் கச்சேரி நடத்துறவனும் காலியா?
அப்புறம் பாட்டெல்லாம் பலமா இருக்கு,உங்கள பாடலாசிரியரா போட்டுருவோம் , ரெண்டு குத்து சாங் வேணும்
"அண்டங்காக்கா கொண்டக்காரி.." பாட்ட்டு ஞாபகம் வருது :)
//Mahesh said...
"அண்டங்காக்கா கொண்டக்காரி.." பாட்ட்டு ஞாபகம் வருது :)//
ரிப்பீட்டேய்
முதன்முறையாக உங்கள் பதிவில்...என் கால் தடம்.எங்கேயிருந்து இம்புட்டு நாட்டுப்புறப் பாடல்களை போடறீங்க
கிட்ட நெருங்கி வாடி...
கார்ல காட்ட உடம்பு காரி பாடல் ராகத்தில் உங்கள் பாடல் பாடினால் பிரமாதமாக இருக்கும்..
ம். நல்ல பாட்டு.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!
இதற்கு விளக்கம் சொல்றீங்களா. ப்ளீஸ்.
///Mahesh said...
"அண்டங்காக்கா கொண்டக்காரி.." பாட்ட்டு ஞாபகம் வருது :)////
கன்னா பின்னாவென்று ரிப்பீட்டுகிறேன்
//காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!///
அப்போ மத்தவனுங்க எல்லாம் ???
அவ்ளோ தானா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அடுக்குஅடுக்கு பேச்சால
ஆளைத்தான் மயக்காதடா!!///
உங்களைத்தானே ??
ஏன நீங்க இப்படி அடுக்கு அடுக்கா எழுதுறீங்க..
//நசரேயன் said...
ஆமா, எந்த மாமா மகளை கணக்கு பண்ணுறீங்க//
காலங் கடந்து போச்சுங்க ஐயா!
//குடுகுடுப்பை said...
அப்புறம் பாட்டெல்லாம் பலமா இருக்கு,உங்கள பாடலாசிரியரா போட்டுருவோம் , ரெண்டு குத்து சாங் வேணும்
//
ஆகா, கிளம்பிட்டாங்க போல இருக்கே! அப்ப நான் முடிஞ்சனா?
// Mahesh said...
சின்ன அம்மிணி said...
//Mahesh said...
"அண்டங்காக்கா கொண்டக்காரி.." பாட்ட்டு ஞாபகம் வருது :)//
ரிப்பீட்டேய்
//
வாங்க Mahesh!
வாங்க சின்ன அம்மிணி!!
//uma kumar said...
முதன்முறையாக உங்கள் பதிவில்...என் கால் தடம்.எங்கேயிருந்து இம்புட்டு நாட்டுப்புறப் பாடல்களை போடறீங்க
//
வாங்க, வணக்கம்! அடிக்கடி வந்து போங்க!! பாதி இட்டுக் கட்டினது, பாதி சனங்க சொல்வதும், கேட்டதும்.
//Sriram said...
கிட்ட நெருங்கி வாடி...
கார்ல காட்ட உடம்பு காரி பாடல் ராகத்தில் உங்கள் பாடல் பாடினால் பிரமாதமாக இருக்கும்..
//
வாங்க Sriram! ஆகா!! இதுக்கே நேரம் இல்ல. வேலைல சுளுக்கு எடுக்க ஆரம்பிச்சுட்டானுவ.
//அமிர்தவர்ஷினி அம்மா said...
ம். நல்ல பாட்டு.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!
இதற்கு விளக்கம் சொல்றீங்களா. ப்ளீஸ்.
//
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா!
எத்துனை இடர் வந்தாலும் கடைசி வரை காட்டு வெள்ளாமையக் காக்கிறவனும், கச்சேரியைத் தொடர்ந்து நடத்துறவனும் பலன் அடைவான். குறிப்பா, செய்யுற வேலைய முழுமையாச் செய்தா பலன் உண்டுங்றதச் சொல்ல, கெராமத்துல பேசிகிடுற பழமை இது.
//உருப்புடாதது_அணிமா said...
//அடுக்குஅடுக்கு பேச்சால
ஆளைத்தான் மயக்காதடா!!///
உங்களைத்தானே ??
ஏன நீங்க இப்படி அடுக்கு அடுக்கா எழுதுறீங்க..
//
மடிக்கத்தான்!
பெயர்(Name/URL) எங்கே போயிற்று?
- அ. நம்பி
//
nanavuhal said...
பெயர்(Name/URL) எங்கே போயிற்று?
- அ. நம்பி
//
ஐயா,
வாங்க, வணக்கம்! அனாமதேய அன்பர் தொல்லை குடுத்தாரு. அதான், அந்த வசதியத் துண்டிச்சுட்டேன்.
Post a Comment