11/15/2008

நாகரிகந் தெரிஞ்சுக்கலாம், வாங்க!

அன்பர்களே வணக்கம்! இந்த நாகரிகம், பண்பாடு, கலாசாரம் இவற்றைப் புழங்குகிறோம். ஆனால், எனக்கு பல சமயங்களில் எதை எந்த இடத்தில் பாவிப்பது என்ற‌ குழப்பம் இருந்து வந்தது. ஏனெனில் இவை மூன்றும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பவை. ஆகவே அவற்றுக்கான சரியான பொருள் தேடிக் கொண்டு இருந்தேன். பல நண்பர்கள் தகவல்களை அறியக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டு உள்ளேன். மேலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் விளக்கம் இன்று எனக்கு கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில், விபரம் கீழே வருமாறு:

நாகரிகம் என்பது மேம்பட்ட ஒழுக்கம் மற்றும் செயல். அது எல்லாப் பொருள்களையும் தனக்குப் பயன்படுத்தும் போது, அவற்றை மேம்பட்டு பயன் படுத்துவது. பிழையின்றி நல்லவிதமாகப் பேசுவதும், எல்லா வகையிலும் துப்புரவாயிருப்பதுவும், சுகாதாரத்தைப் பேணி காப்பதுவும், நன்றாகச் சமைத்து உண்பது போன்றன நாகரிகத்தின் கூறுகள்.

பண்பாடு என்பதும் தனித்தன்மை வாய்ந்த, நல்ல ஒழுக்கம் மற்றும் செயல்கள். இது எல்லாப் பொருள்களையும் தனக்கும், சமுதாயத்திற்கும் மேம்பட்டுப் பயன்படுத்துவது. மற்றவரிடத்து இனிமையாகப் பேசுவதும், விருந்தோம்பலும், இரப்பவர்க்கு இடுவதும், உதவுதலும், மானம் காத்தலும் பண்பாட்டுக் கூறுகள். நாகரிகத்தினும் பண்பாடு சிறந்தது. நாகரிகமின்றிப் பண்பாடு காக்கலாம். ஆனால், பண்பாடு இல்லையேல் நாகரிகம் சிறப்புக் கொள்ளாது. பண்பாடு இல்லா நாகரிகம் பாழ்! வீட்டில் அனைவரும் ஒன்று குழுமி உண்பார்கள் என்றால் அது பண்பாடு. கை அலம்பி விட்டு உண்பது நாகரிகம். இந்த உணவு உண்பது என்பது இரண்டுக்கும் பொதுவாக இருப்பதைக் காணலாம்.

கலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் கலை மற்றும் இலக்கியங்களின் தனித்தன்மை பற்றியது. பொழுது போக்கு அம்சங்கள், சிறப்பான வீர விளையாட்டுக்கள், இசை, நாடகம் போன்ற கலைகள் குறித்த செயல்கள், அதில் ஒழுக்கம், வழிமுறை முதலானவை கலாசாரத்தைக் குறிக்கும்.


கட்டிக்கொடுத்த சோறும்,
கற்றுக்கொடுத்த சொல்லும்,
எத்தனை நாள் நிற்கும்?!

34 comments:

Anonymous said...

// கட்டிக்கொடுத்த சோறும்,
கற்றுக்கொடுத்த சொல்லும்,
எத்தனை நாள் நிற்கும்?! //

உண்மை, உண்மையைத்தவிர வெறில்லை. இராகவன், நைஜிரியா

Anonymous said...

Me the First. Hi Jolly.

Raghavan, Nigeria

குடுகுடுப்பை said...

கலாச்சாரம் culture க்ங்கிற ஆங்கில வார்த்தையிலேந்து வந்ததுன்னு எங்கேயோ படிச்சிருக்கேன்

நசரேயன் said...

நான் முதல்ல இல்லை, அதனாலே வெளியே போயிட்டு வந்து சொல்லுறேன்

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
// கட்டிக்கொடுத்த சோறும்,
கற்றுக்கொடுத்த சொல்லும்,
எத்தனை நாள் நிற்கும்?! //

உண்மை, உண்மையைத்தவிர வெறில்லை. இராகவன், நைஜிரியா
//

வாங்க வணக்கம்!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
கலாச்சாரம் culture க்ங்கிற ஆங்கில வார்த்தையிலேந்து வந்ததுன்னு எங்கேயோ படிச்சிருக்கேன்
//
ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்; நல்ல அழகான சொல்லாக இருக்கிறது, நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள். "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி, அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் முதல்ல இல்லை, அதனாலே வெளியே போயிட்டு வந்து சொல்லுறேன்
//

வாங்க, வந்து சொல்லுங்க!

Mahesh said...

நாகரிகம் கருதி பண்பாடு படுகிற பாட்டையும், அச்சு இல்லாமல் கண்டபடி ஓடும் கலாச்சாரம் பத்தியும் நீங்க எழுதாம் விட்டுட்டீங்கன்னு நினைக்கறேன்... :)

நசரேயன் said...

என்னமோ சொல்லுறீங்களேன்னு கேட்டுகிறேன்

அது சரி said...

//
கட்டிக்கொடுத்த சோறும்,
கற்றுக்கொடுத்த சொல்லும்,
எத்தனை நாள் நிற்கும்?!
//

இது ரொம்ப நல்லாருக்கு! மூணு வரினாலும் ரொம்ப தெளிவு!

பழமைபேசி said...

//
அது சரி said...

இது ரொம்ப நல்லாருக்கு! மூணு வரினாலும் ரொம்ப தெளிவு!//

நன்றி அண்ணே!

Anonymous said...

கலாச்சாரம் என்னும் சொல்லில் எனக்கு ஐயம் உண்டு.

கலாசாரம் என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன்.

பழமைபேசி said...

//அ. நம்பி said...
கலாச்சாரம் என்னும் சொல்லில் எனக்கு ஐயம் உண்டு.

கலாசாரம் என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன்.
//

ஐயா,

நீங்க சொல்லுறதுதான் சரி. பொழச்சுப் போறேன், விட்டுடுங்க.

பழமைபேசி said...

//Mahesh said...
நாகரிகம் கருதி பண்பாடு படுகிற பாட்டையும், அச்சு இல்லாமல் கண்டபடி ஓடும் கலாச்சாரம் பத்தியும் நீங்க எழுதாம் விட்டுட்டீங்கன்னு நினைக்கறேன்... :)
//

எழுதினா, எதிர் பதிவுகள் முளைக்கும்?! ஆனா, சொற்களைச் சரியாப் போட்டுத் தாக்கிட்டீங்க!

பழமைபேசி said...

//நசரேயன் said...
என்னமோ சொல்லுறீங்களேன்னு கேட்டுகிறேன்
//

:-))

ராஜ நடராஜன் said...

நாகரீகம்,பண்பாடு,கலாச்சாரம் (நம்ம பக்கமெல்லாம் "ச்" சேர்த்தே புழங்குறாங்க) பத்தி யோசிச்சு சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

மொழிவாணப் பாவணர் ன்னு கேள்விப் பட்டதே கிடையாதே!

நாகரீகம் என்பது உண்ணும் உணவு,உடை,மொழி,எழுத்துடன் தொடர்பு கொண்டது.

பண்பு என்பது ஆடல்,பாடல் போன்ற ஒலி,உடல் அசைவுகளின் தோற்றமாக மொழியுடன் தொடர்புடையது.

கலாச்சாரம்(அதுதான் "ச்"வருமுன்னு முன்னாடியே சொல்லியாச்சே) ஓவியம்,கட்டிடக்கலை,கைவினைப் பொருட்கள் போன்றவற்றோடு நாகரீகத்தோடு ஒட்டிக்கொள்வது.

ஆட்காட்டி said...

நாகரிகம், கலாச்சாரம் மாறலாம். பண்பாடு மாறலாமோ?

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
மொழிவாணப் பாவணர் ன்னு கேள்விப் பட்டதே கிடையாதே!//

வாங்க ராஜ நடராஜன்! மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தமிழுக்காக எழுதிய நூல்கள் பல. அவர் பற்றிய விழிப்புணரிவு என்பது குறைவே!! வருத்தமான ஒன்று!!!

//நாகரீகம் என்பது உண்ணும் உணவு,உடை,மொழி,எழுத்துடன் தொடர்பு கொண்டது.//

நாகரிகம் என்பது தனிமனிதனை ஒட்டிய, நீங்கள் சொன்ன மற்றும் இன்னபிற கூறுகளை ஒட்டியது. வீட்டில் அனைவரும் ஒன்று குழுமி உண்பார்கள் என்றால் அது பண்பாடு. கை அலம்பி விட்டு உண்பது நாகரிகம். இந்த உணவு உண்பது என்பது இரண்டுக்கும் பொதுவாக இருப்பதைக் காணலாம்.

//பண்பு என்பது ஆடல்,பாடல் போன்ற ஒலி,உடல் அசைவுகளின் தோற்றமாக மொழியுடன் தொடர்புடையது.
//
சமுதாயத்தில், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபடுகிற செயல்களை ஒட்டிய பண்புகளைக் குறிப்பது பண்பாடு. (உ-ம்)விருந்தினர் வருகிற போது, ஊர்ல மழையா கண்ணு என்று வினவுவது, கொங்கு நாட்டுப் பண்பாடு.

//கலாச்சாரம்(அதுதான் "ச்"வருமுன்னு முன்னாடியே சொல்லியாச்சே) ஓவியம்,கட்டிடக்கலை,கைவினைப் பொருட்கள் போன்றவற்றோடு நாகரீகத்தோடு ஒட்டிக்கொள்வது.
//

ச் வருவது என்பது திரிந்த ஒன்று. மொழியியலின் படி, கலாசாரம் என்றே இருந்து இருக்கிறது. ஆனால், புழக்கத்தில் இதுதான் இருக்கிறது என்பதால் கலாச்சாரம் என்றே சொல்லலாம் என்பது, எம் தாழ்மையான எண்ணம். ஆனால், கலாசாரம் என்பது தவறு அல்ல.

கலை, அது எந்தக் கலையானாலும் சரி, அதனையொட்டிய கூறுகளைக் குறிப்பது கலா(ச்)சாரம்.

பழமைபேசி said...

//ஆட்காட்டி said...
நாகரிகம், கலாச்சாரம் மாறலாம். பண்பாடு மாறலாமோ?
//

பண்பாடு இல்லா நாகரிகம் பாழ்!

நசரேயன் said...

தமிழ்மணம் மகுடம் அஞ்ச நெஞ்சன் வாழ்க

அருள் said...

தெளிவான விளக்கம்

நன்று

பழமைபேசி said...

//நசரேயன் said...
தமிழ்மணம் மகுடம் அஞ்ச நெஞ்சன் வாழ்க
//
நன்றி!

பழமைபேசி said...

//அருள் said...
தெளிவான விளக்கம்

நன்று
//

வாங்க அருள், நன்றி!!

ராஜ நடராஜன் said...

//மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தமிழுக்காக எழுதிய நூல்கள் பல. அவர் பற்றிய விழிப்புணரிவு என்பது குறைவே!! வருத்தமான ஒன்று!!//

தேவநேயப் பாவாணர் ன்னு எனக்குப் புரியற மாதிரி சொல்லியிருக்கலாம்:)

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...

தேவநேயப் பாவாணர் ன்னு எனக்குப் புரியற மாதிரி சொல்லியிருக்கலாம்:)
//

நீங்க சொல்வது சரிங்க! ஒடனே திருத்திடுறேன்!! :-o)

http://urupudaathathu.blogspot.com/ said...

உள்ளேன் ஐயா.

http://urupudaathathu.blogspot.com/ said...

//"நாகரிகந் தெரிஞ்சுக்கலாம், வாங்க!"///


அப்போ எனக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தம் இல்லைன்னு நினைக்குறேன் ..

http://urupudaathathu.blogspot.com/ said...
This comment has been removed by the author.
Natty said...

மிக அழகான பதிவு...கலக்கிட்டீங்க.....

வேளராசி said...

அருமையான விளக்கம்,அப்படியே தனிப்பாடல் திரட்டு புத்தகத்தில் இருந்து சில பாடல்களை எடுத்து போடலாமே?

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
//"நாகரிகந் தெரிஞ்சுக்கலாம், வாங்க!"///


அப்போ எனக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தம் இல்லைன்னு நினைக்குறேன் ..
//

ஐயா, வாங்க! நைஜிரியால பதிவர் சந்திப்பாமே?!

பழமைபேசி said...

//Natty said...
மிக அழகான பதிவு...கலக்கிட்டீங்க.....
//

வாங்க Natty! என்னங்க நொம்ப நாளா ஆளக் காணோம்? நன்றி!

பழமைபேசி said...

//வேளராசி said...
அருமையான விளக்கம்,அப்படியே தனிப்பாடல் திரட்டு புத்தகத்தில் இருந்து சில பாடல்களை எடுத்து போடலாமே?
//

வாங்க வேளராசி! நன்றிங்க!!
அந்த மாதிரி நிறைய யோசனைகள் இருக்கு! கால அவகாசம் கிடைக்கும் போது செய்யுறங்க!!