படத்தக் காணைக்குள்ள மனசு சரியான விசர் பிடிச்சதென்ன. நான் படத்தோட கதையச் சொல்லலே. இந்த இளைய ராசாவும், வைர முத்துவும், பாரதி ராசாவும், செலுவ ராசும் ஏன் பிரிஞ்சிட்டினம்? அவங்கள்டப்பா ஒன்டா இருந்திருந்தா கண படங்கள், நல்ல படங்கள் வந்திருக்குமென்ன. அவிங்கள் இதுக்கும் அடி மட்டத்துல இருந்து வந்தவிங்க என்ன. ஏன் காசு வந்த பொறகு, இப்பிடி ஆனவிகளெண்டு தெரியலை. தமிழண்ட பிரச்சினையே இதுதானென்ன. அவிகளுக்கு பொறுப்பு இருக்கு. இனியெண்டாலாவது ஒன்டு சேந்து படமெடுக்க வேணும். நல்லூர்க் கந்தன் அதுக்கு வழி செய்ய வேணும். என்ன நாஞ்சொல்லுறது சரிதானே?
அந்தப் படம் பாக்கைக்குள்ள எனக்கு ஊர் ஞாபகம் வந்திட்டு என்ன. அந்த வடிவுக்கரசி கதைக்க றெதெல்லாம்டப்பா, ஒரே பேய்க் கதையென்ன. நம்பட ஊர்ல எல்லாம் அப்படித்தான கதைக்குறது. அதுவும் பொம்பளைப் புள்ளைக கொழுவல் எண்டால், நமக்கு ஒரேப் பகிடிதான். பொடியங்க ஏசுறது எப்பிடி யெண்டு தெரியுமே உமக்கு? ஏழஞ்சு மையன்னா எண்டு சொல்லுவினம். ஒன்னே முக்காத் தையன்னா எண்டு சொல்லுவினம். இதெல்லாம் உமக்கு விளங்குதே?! இல்லியே?! சொல்லுறன், கேளுங்கோ!
1 2 3 4 5 6 7 8 9 10 100 1000 ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
ஏழுக்கு தமிழ் எண் வந்து எ. அஞ்சுக்கு ரு. அதத்தான், எருமையண்டு ஏசுறதுக்கு பதிலா ஏழஞ்சு மையன்னா. ஒண்டாம் எண்ணுக்கு தமிழ் எழுத்தெண் க. முக்கால் 3/4 பின்னத்த தமிழ் எழுத்தில ழு மாதிரி இருக்குற எழுத்தில எழுதிவினம். ஆக, கழுதையிண்டு ஏசுறதை ஒன்னே முக்காத் தையன்னா எண்டு ஏசுவினம். இப்ப விளங்கிட்டே?!
குத்து வயித்துக்காரன் தூங்கினாலும்,
குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான்!
குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான்!
காணொளி: Television
காணைக்குள்ள: காண்கையில்
விசர்: கவலை/வெறி
ஒன்டா: ஒன்றாக
கொழுவல்: சண்டை/ஊடல்
பகிடி: வேடிக்கை
வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!
24 comments:
அப்பிடிப் போடுங்க... எங்கிருந்துங்க புடிக்கிறீங்க? அப்பிடியே ஊர் நாட்டுல கேட்டாலும் இன்னம் ஞாபகம் வெச்சுருக்கீங்களே !!!!
//Mahesh said...
அப்பிடிப் போடுங்க... எங்கிருந்துங்க புடிக்கிறீங்க? அப்பிடியே ஊர் நாட்டுல கேட்டாலும் இன்னம் ஞாபகம் வெச்சுருக்கீங்களே !!!!
//
வாங்க அண்ணே, அவ்வளவு சுலுவுல மறந்துடுமா? தாய் மொழி அண்ணாச்சி!!
எங்கு இருந்தாலும் தமிழை மறக்காத உங்கள் குணத்தை நினைத்து வியந்து போகின்றேன். வாழ்க உம் தமிழ் தொண்டு. உமது வலைப்பூ எனக்கு பல சமயங்களில் மிகவும் போதை ஊட்டுகின்றது.
I am really addict for your blog. இராகவன், நைஜிரியா

காணொளியில ...
காணைக்குள்ள ...
விசர் ....
ஒண்டா ...
கொழுவறது ...
எண்டு ...
//
இந்த வார்த்தையெல்லாம் கொஞ்சம் தமிழில் மொழி பெயர்த்து சொல்லவும் :0)
ஏழஞ்சு மையன்னா யிலேயும்
ஒன்னே முக்காத் தையன்னா யிலேயும்
இவ்வளவு இருக்கா?
ஆமா முதல் மரியாதை நல்ல படம், வயசானவருக்கும் வாலிப புள்ளைக்கும் காதல், அதுக்காதானே நீங்க பாக்கீங்க :)
நல்லா இருக்கு
ஈழத்தமிழில் படிக்க எத்தனை சுவையாயிருக்கிறது.
//இளைய ராசாவும், வைர முத்துவும், பாரதி ராசாவும், செலுவ ராசும் ஏன் பிரிஞ்சிட்டினம்? அவங்கள்டப்பா ஒண்டா இருந்திருந்தா கண படங்கள், நல்ல படங்கள் வந்திருக்குமென்ன//
அவர்கள் ஒன்று சேர்நதால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் சேர மாட்டார்கள்.
//ஏழஞ்சு மையன்னா எண்டு சொல்லுவினம். ஒன்னே முக்காத் தையன்னா எண்டு சொல்லுவினம்//
எப்போதும் மற்றவர்களிடமிருந்தே பெற்றுக் கொண்டு தான் எதையும் செய்யாத கருமிகளை நாங்கள் Fifteen three என்று சொல்வோம். ஆங்கிலத்தில் 15வது எழுத்து O 3வது எழுத்து C அதாவது OC.
//Raghavan said...
எங்கு இருந்தாலும் தமிழை மறக்காத உங்கள் குணத்தை நினைத்து வியந்து போகின்றேன். வாழ்க உம் தமிழ் தொண்டு. உமது வலைப்பூ எனக்கு பல சமயங்களில் மிகவும் போதை ஊட்டுகின்றது.
I am really addict for your blog. இராகவன், நைஜிரியா
//
இராகவன் ஐயா, உங்கள் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி!
அருமை
//அது சரி said...
//
காணொளியில ...
காணைக்குள்ள ...
விசர் ....
ஒண்டா ...
கொழுவறது ...
எண்டு ...
//
இந்த வார்த்தையெல்லாம் கொஞ்சம் தமிழில் மொழி பெயர்த்து சொல்லவும் :0)
//
வணக்கம் அண்ணாச்சி! உங்க உத்தரவு, என்னோட வேலை!! பதிவுலயே சேத்துகிட்டேன்.
அண்ணே... கலக்கிட்டீங்க ...
நானு இப்படி சொல்லித்தான் சின்ன வயசுல பசங்கள கலாய்ப்பேன் ..
அப்புறம் அவனுகளுக்கு விவரம் தெரிஞ்சி நம்மள அடி பின்னி எடுத்தது வரலாறு ..
( உம்ம் ... )
//நசரேயன் said... //
வாங்க நசரேயன்! வணக்கம், நன்றி!!
//திகழ்மிளிர் said... //
வாங்க திகழ்மிளிர்! வணக்கம், நன்றி!!
//உருப்புடாதது_அணிமா said... //
வணக்கம் மலைக்கோட்டை!
//சின்ன அம்மிணி said... //
வணக்கம், நன்றிங்க!!
@@@சுல்தான் said...
//எப்போதும் மற்றவர்களிடமிருந்தே பெற்றுக் கொண்டு தான் எதையும் செய்யாத கருமிகளை நாங்கள் Fifteen three என்று சொல்வோம். ஆங்கிலத்தில் 15வது எழுத்து O 3வது எழுத்து C அதாவது OC.//
சுல்தான் ஐயா, வணக்கம்! மேலதிகத் தகவலுக்கும் நன்றி!!
//உருப்புடாதது_அணிமா said...
நம்மள அடி பின்னி எடுத்தது வரலாறு ..
( உம்ம் ... )
//
:-o) உம்ம் ...
அப்புறமா வந்து படிக்கிறேன்
//குடுகுடுப்பை said...
அப்புறமா வந்து படிக்கிறேன்
//
வாங்க! வணக்கம்!!
//@@@சுல்தான் said...
//எப்போதும் மற்றவர்களிடமிருந்தே பெற்றுக் கொண்டு தான் எதையும் செய்யாத கருமிகளை நாங்கள் Fifteen three என்று சொல்வோம். ஆங்கிலத்தில் 15வது எழுத்து O 3வது எழுத்து C அதாவது OC.//
சுல்தான் ஐயா, வணக்கம்! மேலதிகத் தகவலுக்கும் நன்றி!!//
சுல்தானுடைய ஓஸியை ஊகித்தாலும் கழுதை, எருமை எல்லாம் ஊகிக்க மிக கஷ்டம். நான் சின்ன வயதினராக இருந்த போது பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்காத ஊர் பெருசுகள் என்னடா பெரிய படிப்பு இந்த விடுகதை (அ) புதிருக்கு பதில் சொல்லு பாப்பம் என்று என்னை மண்டையை பிச்சுக்க வைக்கும்.
//
மன்மதக்குஞ்சு said...
//
வாங்க மன்மதக்குஞ்சு! வணக்கம், நன்றி!!
Post a Comment