11/05/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 10

வணக்கம்! ஒரு ரெண்டு மூணு வாரமா நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்'ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல, நாம அடுத்து பாக்கப் போறது சுழிகுளம். சுழிகுளம்ங்றது ஒரு பாட்டை, வரிக்கு எட்டெழுத்தா நாலு வரி எழுதி, மேல இருந்து கீழ படிச்சாலும், கீழ இருந்து மேல படிச்சாலும் அதே அர்த்தத்துல வர்ற பாட்டு.

வழமையா, என்னோட மகளை வெச்சு பாட்டு எழுதுவேன். ஆனா, இன்னைக்கு ஒரு சரித்திர முக்கியத்துவமான நாள். அதாவது அடிமை இனமாய் இருந்து, தளைகளை ஒடச்சு எறிஞ்சு வல்லரசையே ஆட்சி புரியுற அளவுக்கு மனித நேயம் வளர்ந்த நாள். கடைக்கோடி மனுசனுக்கு மகனாப் பொறந்து, ஆதவனா ஒசந்து இருக்குற ஒபாமாவுக்கான பாட்டுதான் இன்றைய சுழிகுளப் பாட்டு.

காலமறி செயல்நீ
நேயமது கொள்நர்
முயல்வ துறுநர்
திருவழி ந்துமாயா!

பொருள்: காலமறிந்து செயல்பட்டு, மனித நேயம் கொண்டு, முயற்சிதனை உற்று, மாந்தனைய மக்களால் வழிமொழியப் பெற்று, ஆக்கம் கொண்டனையே!

10 comments:

நசரேயன் said...

நான் தான் முதலா?

நசரேயன் said...

நல்ல விளக்கம், ஆனா உங்க அளவுக்கு என்னால இப்படி எல்லாம் பாட்டு எழுதுறது கஷ்டம்

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் தான் முதலா?
//

இல்ல, வலைஞர் தளபதிதான் மொதலு!

பழமைபேசி said...

// நசரேயன் said...
நல்ல விளக்கம், ஆனா உங்க அளவுக்கு என்னால இப்படி எல்லாம் பாட்டு எழுதுறது கஷ்டம்
//

பரவாயில்லை. ச்சும்மா வந்து படிச்சுட்டுப் போங்க.... ஓட்டும் போடுங்க!

நசரேயன் said...

/*
// நசரேயன் said...
நல்ல விளக்கம், ஆனா உங்க அளவுக்கு என்னால இப்படி எல்லாம் பாட்டு எழுதுறது கஷ்டம்
//

பரவாயில்லை. ச்சும்மா வந்து படிச்சுட்டுப் போங்க.... ஓட்டும் போடுங்க!

*/
ஒட்டு போட்டுத்தான் படிக்கவே ஆரமிச்சேன்

Mahesh said...

அருமை அய்யா அருமை...

"சுழிகுளம்"னு ஏன் சொல்றோம்? குளத்துல கல்லெறிஞ்சா சுழு சுழியா அலைகள் கரைல மோதி திரும்ப வரும்கற மாதிரி இருக்கறதாலயா?

Anonymous said...

மிறைக்கவிகள் இயற்றுவதில் உங்களுக்கு நாட்டம் மிகுதியோ?

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

// Mahesh said...
அருமை அய்யா அருமை...

"சுழிகுளம்"னு ஏன் சொல்றோம்? குளத்துல கல்லெறிஞ்சா சுழு சுழியா அலைகள் கரைல மோதி திரும்ப வரும்கற மாதிரி இருக்கறதாலயா?
//
வாங்க மகேசு, அதேதானுங்க...

பழமைபேசி said...

//அ. நம்பி said...
மிறைக்கவிகள் இயற்றுவதில் உங்களுக்கு நாட்டம் மிகுதியோ?
//

வாங்க அ. நம்பி ஐயா, ஒரு சிறு முயற்சி! :-o)