நாதாரி: பாருங்க நாதார்ன்னா, ஏழ்மை, பொய்த்துப் போன வெள்ளாமைக்குச் சொந்தமான நிலம்ங்றது அர்த்தமாமுங்க. இந்த மாதிரியான நிலத்தின் காரணமா உண்டாகுற வரி பாக்கிய நாதார்பாக்கின்னு சொல்லுறதாமுங்க. அந்த ஏழ்மையான ஆசாமி, நாதாரியாமுங்க.
பன்னாடை: இது நாம எல்லார்த்துக்கும் தெரிஞ்சதுதான். தென்னை மரத்துல, பாளைகளக் காப்பாத்துற வலை நார். அந்த வலைய, கள்ளை வடி கட்டுறதுக்கும் பாவிப்பாங்களாமுங்க. அப்பிடி, குப்பை கூழத்தை தாங்கி இருக்குற பன்னாடைய மலிவாத் தூக்கி எறியுறது வாடிக்கை. அந்த தாக்கத்துல, உதவாக்கரை ஆசாமிகளை திட்டுறதுக்கு பன்னாடைய பாவிக்கறதும் வழக்கமாயிடுச்சு.
கேப்புமாரி: அகராதி சொல்லுதுங்க, இது செங்கல்பட்டு தென்னாற்காடு மாவட்டத்துல அந்த காலத்துல இருந்த, திருட்டும் தப்புத் தண்டா செய்யுற ஒரு கூட்டத்தோட பேருங்ளாம். அதுவே மருவி கேப்மாரி ஆயிடுச்சுங்ளாம்.
கேப்புமாரி (p. 292) [ kēppumāri ] , s. (for.) a knave, a rogue; 2. a crimainal caste in South Arcot & Chengleput districts.
தெள்ளவாரி: அப்புறம் பாருங்க, கோயம்பத்தூர்ல எங்க வீட்ல இருக்கும் போது, அப்பப்ப எங்கம்மாகிட்ட வாங்கிக் கட்டுறது வழக்கம். அம்மா சொல்வாங்க, இந்தத் தெள்ளவாரி எப்பிடி உருப்பட்டு பொழப்பு நடத்தப் போறானோ? குடியானவனுக்குப் பொறந்தவன் எவனாவது இப்பிடி பொச்சுக்கு வெயில் அடிக்குற வரைக்கும் தூங்குவானா?? இந்த மாதிரி போகும்ங்க, அவுங்க நம்மளத் திட்டுறது! அவங்க கெடக்கட்டும், நம்மளுக்கு கொட்டாய்ல போயி ரெண்டாவது ஆட்டம் பாக்குறதுதான முக்கியம், என்ன சொல்றீங்க?! ஆமுங்க, தெளிவு இல்லாமச் சுத்துறவன் தானுங்க தெள்ளவாரி ஆயிட்டான்.
நன்றி: நா. கணேசன்
தள்ளவாரி (< தள்ளமாறி) தான் தெள்ளவாரி ஆகியது.
தள்ளம்பாறுதல் = தடுமாறுதல்/ தள்ளாடுதல்.
மனம் (அ) வாக்கு (அ) காயம் இவற்றால் தள்ளாடினால் தான் தள்ளவாரி.
மனம் அலைந்தால் (மனத்)தள்ளவாரி.
வாக்கு/பேச்சுத் தடுமாற்றம், உடலில் (சோம்பலால்) தடுமாற்றம் தூக்கமிகுதிஉடையவன் தள்ளமாறி/தள்ளவாரி:(தூங்குதல் = தடுமாறுதல், சங்க இலக்கியம்).
கட்சி மாறிய தம்பி வீடணனைஇராவணன் தள்ளவாரி என்றழைப்பதாகச்சொல்கிறார்.
யுத்த காண்டம்9. ஒற்றுக் கேள்விப் படலம்ஒற்றர் வருகையும், இராவணன் அவர்களை வரவழைத்துச் செய்தி கேட்டலும் (56)
'வெள்ள வாரி விரிவொடு, அவ் வீடணத் தள்ளவாரி நிலைமையும், தாபதர்உள்ளவாறும், உரைமின்' என்றான் - உயிர்கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான்
ராஜ நடராஜன்: பழமை!தாய்மாமன் இந்த தெள்ளவாரிய அடிக்கடி உபயோகிப்பாரு. "டேய் நடராஜா, அஞ்சு நிமிசம் நில்லு!" ன்னு சொல்லி நிறுத்தி வச்சிட்டு, எங்கயோ போய்ட்டு தள்ளாடிகிட்டே வந்து டவுன்பஸ்சுக்குள்ளே ஏறச்சொல்லிட்டு எப்படியாவது முண்டியடிச்சு ட்ரைவர் சீட் பக்கம் போக முயல்வார். பிரேக் போடறதையும், கியர் மாத்தறதையும் உன்னிப்பாக் கவனிச்சுகிட்டே திடீர்ன்னு என்கிட்ட சொல்லும் வார்த்தை "தெள்ளவாரி எப்படி கியர் மாத்துறான் பாரு! தெள்ளவாரி எப்படி பிரேக் பிடிக்கிறான் பாரு!!".
கெரடி கற்றவன், இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்!
24 comments:
என்ன தெள்ளவாரித்தனமா மத்தியானம் பதிவு, என்ன தூக்கமா.
//குடுகுடுப்பை said...
என்ன தெள்ளவாரித்தனமா மத்தியானம் பதிவு, என்ன தூக்கமா.
//
இனிதாண்ணே தூங்கப் போகணும்!
//பன்னாடை //
பன்னாடை பற்றி எனது அம்மா ஒரு தடவை சொன்ன விசயம் இது. தென்னையின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுமாம். ஆனால், பன்னாடை அடுப்பெரிப்பதற்கு கூட உதவாது. மேலும் மரம் ஏறி தேங்காய் பறிப்பவர்களுக்கு அதில் உள்ள தூசு தும்புகள் கண்ணில் விழும் போது எரிச்சல் உண்டாகும். அதனால் எதற்கும் உபயோகப்படாதவர்களை பன்னாடை என்று கூறுவர் எனச்சொன்னார்கள். இராகவன், நைஜிரியா
பழமை!தாய்மாமன் இந்த தெள்ளவாரிய அடிக்கடி உபயோகிப்பாரு.டேய்!நடராஜா!அஞ்சு நிமிசம் நில்லுன்னு சொல்லி நிறுத்து வச்சிட்டு எங்கோயோ போய்விட்டு தள்ளாடிகிட்டே வந்து டவுன்பஸ்சுக்குள்ளே ஏறச்சொல்லிட்டு எப்படியாவது முண்டியடிச்சு ட்ரைவர் சீட் பக்கம் போக முயல்வார்.பிரேக் போடறதையும்,கியர் மாத்தறதையும் உன்னிப்பாக் கவனிச்சுகிட்டே திடீர்ன்னு என்கிட்ட சொல்லும் வார்த்தை"தெள்ளவாரி எப்படி கியர் மாத்துறான் பாரு" "தெள்ளவாரி எப்படி பிரேக் பிடிக்கிறான் பாரு".
//இராகவன், நைஜிரியா said...
//பன்னாடை //
//
வாங்க இராகவன் ஐயா! வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் நன்றிங்க ஐயா!!
http://thiraii.blogspot.com/ இந்த சுட்டிக்கும் உலா வரலாம், இது ஒரு பொழுது போக்குக்கான சினித் திரை.
//ராஜ நடராஜன் said... //
உங்க அனுபவத்தைப் பதிவிலயே சேத்துட்டேன்! :-o)
//உங்க அனுபவத்தைப் பதிவிலயே சேத்துட்டேன்! :-o)//
பின்னூட்டம் கூட பதிவில் சேர்வது புதிய அனுபவம்:)
//ராஜ நடராஜன் said...
//உங்க அனுபவத்தைப் பதிவிலயே சேத்துட்டேன்! :-o)//
பின்னூட்டம் கூட பதிவில் சேர்வது புதிய அனுபவம்:)
//
நல்ல சொல்லு, சுலுவுல அம்பலம் ஏறும்ன்னு நம்ம ஊர்ல சொல்வாங்களே?!
ஆஹா, நாதாரி, பன்னாடைக்கெல்லாம் இம்புட்டு அர்த்தம் இருக்கா? நான் எதுவும் தெரியாம வெறும் தெள்ளவாரியா அலைஞ்சுட்டேனே!
//அது சரி said...
ஆஹா, நாதாரி, பன்னாடைக்கெல்லாம் இம்புட்டு அர்த்தம் இருக்கா? நான் எதுவும் தெரியாம வெறும் தெள்ளவாரியா அலைஞ்சுட்டேனே!
//
வாங்க அது சரி அண்ணாச்சி!
இந்தப் பக்கம் வரவே சற்றுத் தயக்கமாக இருக்கிறது.
//அ. நம்பி said...
இந்தப் பக்கம் வரவே சற்றுத் தயக்கமாக இருக்கிறது.
//
ஐயா, அப்பிடி கிப்பிடி வராம விட்டுடாதீங்க.... தலைப்பை வேணா மாத்திடுறேன்... ;-o)
நீங யாரையோ மனசுல வெச்சுக்கிட்டுத்தான் போன ரெண்டு பதிவும் போட்டியளோ?
(அப்பாடா... சிண்டு முடிஞ்சாச்சு.... இதேன் நுண்ணரசியல்னு அன்பு அண்ணன் அப்துல்லா சொல்லிக் குடுத்த பதிவர் பால பாடம்... ஆஹா.. இப்பிடி பலரை இழுத்து விடலம்ம் போல இருக்கே!)
பனம் பன்னாடையும் இருக்கு. அது அடுப்பு மூட்டப் பயன்படும்.
பன்னாடைய அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தலாம். நின்னு எரியாது, டக்குனு பத்திக்கும், ஒரு அடுப்புலருந்து இன்னொரு அடுப்பு பத்த வக்கறதுக்கு பேப்பருக்கு பதிலா பயன்படுத்தலாம்.
ஏனோ எனக்கு பன்னாடை பிடிக்கும். அது மேல ஒரு குற்றச்சாட்டு வந்தா என்னால தாங்கிக்க முடியாது.
அது ஒரு வடிகட்டியா பயன்படுதே, ஏன் அதெல்லாம் கணக்குல எடுக்காம பயன்படுத்தி முடிஞ்சப்புறம் தூக்கி எறிஞ்சிட்டு நன்றியில்லாம அத உதவாக்கரன்னு சொல்றாங்க
இப்படிக்கு
கோபத்துடன் கபீஷ்
பன்னாடை ரசிகர் மன்றம்
லண்டன் (வேறெங்கும் கிளைகள் இப்போதைக்கு இல்ல)
//ஆட்காட்டி said...
பனம் பன்னாடையும் இருக்கு. அது அடுப்பு மூட்டப் பயன்படும்.
//
வாங்க ஆட்காட்டி ஐயா! நீங்க சொல்லுறது சரிதான்!!
//கபீஷ் said...
இப்படிக்கு
கோபத்துடன் கபீஷ்
பன்னாடை ரசிகர் மன்றம்
லண்டன் (வேறெங்கும் கிளைகள் இப்போதைக்கு இல்ல)
//
பன்னாடை ரசிகர் மன்றத் தலைவர் கபீஷ் வாழ்க!
நல்ல விளக்கம் கொடுத்தீங்க (நான் கூட யாரையோ திட்டறீங்களோன்னு நெனச்சு இந்த்ப்பக்கம் வராம விட்டுட்டேன்.
அப்புறமேட்டு இதப்பாருங்க
“பூ”ன்னு ஒரு படம் வந்துருக்கே, அதுல ஜூ ஜூ மாரின்னு ஒரு பாட்டு வருது, மிடிஞ்சா கேளுங்க.
அத பாத்துக்கிட்டே, கேக்கறச்சே ஏனோ உங்க பதிவு ஞாபகம் வந்துச்சே ஞாபகம் வந்துச்சே ஞாபகம் வந்துச்சே .,,,,,,,,,,,
என்னைய ஒன்னும் திட்டலையே
@@அமிர்தவர்ஷினி அம்மா
@@நசரேயன்
வருகைக்கும் தகவலுக்கும் நன்றிங்க!!
தள்ளவாரி (< தள்ளமாறி) தான் தெள்ளவாரி ஆகியது.
தள்ளம்பாறுதல் = தடுமாறுதல்/ தள்ளாடுதல்.
மனம் (அ) வாக்கு (அ) காயம் இவற்றால் தள்ளாடினால் தான் தள்ளவாரி.
மனம் அலைந்தால் (மனத்)தள்ளவாரி.
வாக்கு/பேச்சுத் தடுமாற்றம், உடலில் (சோம்பலால்) தடுமாற்றம் தூக்கமிகுதி
உடையவன் தள்ளமாறி/தள்ளவாரி:(தூங்குதல் = தடுமாறுதல், சங்க இலக்கியம்).
கட்சி மாறிய தம்பி வீடணனை
இராவணன் தள்ளவாரி என்றழைப்பதாகச்
சொல்கிறார்.
யுத்த காண்டம்
9. ஒற்றுக் கேள்விப் படலம்
ஒற்றர் வருகையும், இராவணன் அவர்களை வரவழைத்துச்
செய்தி கேட்டலும் (56)
'வெள்ள வாரி விரிவொடு, அவ் வீடணத்
தள்ளவாரி நிலைமையும், தாபதர்
உள்ளவாறும், உரைமின்' என்றான் - உயிர்
கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான்
நா. கணேசன்
//நா. கணேசன் said... //
அண்ணா,
மிக்க நன்றி! தாங்கள் வந்து, இடும் தகவல்களைப் படித்துப் பார்ப்பதும், பின் சரியான தகவல்களைத் தந்து சரி செய்வதும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்று எளிமையான விபரங்களை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களும் தமிழை புழக்கத்தில் வைத்திருக்க முடியும் என்பது எனது தாழ்மையான எண்ணம். மிக்க நன்றியும்! மகிழ்வும்!!
பன்னாடை
பன்னாடைக்கு எனது ஆசிரியர் அளித்த விளக்கம். ஆசிரியர் பாடம் நடத்தும் போது, ஒரு கடினமான கருத்தை மாணவர்களுக்கு புரிய வைக்க, சில உதாரணங்கள் கதைகள் மூலம் விளக்குவார். ஒரு சில மாணவர்கள், அந்த உதாரணத்துக்கு சொல்லப்பட்ட கதைகளை மட்டும் நன்றாக நினைவில் வைத்திருப்பார்கள். அந்த கதை எந்த கருத்திற்காக சொல்லப் பட்டதோ, அதை நழுவ விட்டு விடுவார்களாம். அது எதைப் போல என்றால், பதநீரை பன்னாடையில் வடிகட்டும் போது, அதில் மிதக்கும், வண்டு, புழு, பூச்சிகளை பன்னாடை பிடித்துக் கொண்டு, சுவையான பதநீரை கீழே விட்டு விடுமாம். அதே போல சமுதாயத்தில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளாமல் ஆகாதவற்றை பிடித்துக் கொள்வோரை குறிக்கும் சொல்தான் பன்னாடை என்றார்.
Post a Comment