11/06/2008

கனவில் கவி காளமேகம் - 8

நம்ம கனவுல வந்துட்டு இருந்த கவி காளமேகம், ரெண்டு வாரமா வரலை பாருங்க. என்ன காரணமா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே படுத்தேன். குறிப்பு அறிஞ்சு, நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. இதுவரைக்கும் நம்ம கனவுல வந்து அவரு சொன்னதைப் படிங்க. படிச்சுட்டு, அவரு இன்னைக்கு என்ன சொன்னாருன்னு மேல படிங்க!

"அப்பிச்சி என்ன நொம்ப நாளாக் காணோம்?"

"இல்லடா பேராண்டி, நீயும் நாலுங் க‌ல‌ந்து எழுத‌ ஆர‌ம்பிச்சுட்டே. கூட‌வே, நீ இருக்குற‌ பக்க‌ம் தேர்த‌லாமாவே?"

"ஆமாங்க‌ அப்பிச்சி. யாரு வ‌ந்தா என‌க்கென்ன‌? என‌க்கு எழுத‌ற‌க்கு நீங்க‌தான‌ எத‌னாச்சும் த‌ந்து ஆவ‌ணும். என்ன‌ சொல்லுறீங்க‌?"

"அட‌, என்ன‌டா ஆச்சு ஒன‌க்கு? நொம்ப‌த் தெளிவாப் பேசுறியே இன்னைக்கு??"

"அது கெட‌க்க‌ட்டும், நீங்க‌ உங்க‌ பினாத்த‌லை ஆர‌ம்பிங்க‌!"

"டேய், பெரிய‌வ‌ங்க‌ளை அப்ப‌டி ஒன்னும் சொல்ல‌ப் ப‌டாதுடா! ச‌ரி, இந்த‌ அக்கு வேரு(று) ஆணி வேரா(றா) அல‌சுற‌துன்னு சொல்லுறாங்க‌ளே, அப்பிடின்னா என்ன‌டா பேராண்டி?"

"ஆணி வேருன்னா தெரியும். பிர‌தான‌மா நெல‌த்துல‌ இருக்குற‌ வேர். ஆக‌, சின்ன‌ச் சின்ன‌ ப‌க்க‌ வேர்க‌ளையும், பிர‌தான‌மா இருக்குற‌ ஆணி வேர‌யும் அல‌சுற‌ மாதிரிங்ற‌ அர்த்த‌த்துல‌ இதைப் பொழ‌ங்க‌லாம்! நாஞ் சொல்லுற‌து ச‌ரிதான‌ அப்பிச்சி?"

"ந‌ல்லாத்தான் யூக‌ம் செய்யுற‌டா, ஆனா அது இல்ல‌!"

"என‌க்குத் தெரியுந் தாத்தா, நீங்க‌ இந்த‌ மாதிரி எதனாச் சொல்லி க‌ழுத்த‌றுப்பீங்க‌ன்னு. ச‌ரி சொல்லுங்க‌, நாந்தூங்க‌ணும்!"

"ச‌லிச்சுக்காத‌டா பேராண்டி. அக்க‌க்காப் பிரிக்கிற‌துன்னு சொல்லுறோம். அப்பிடின்னா, பாக‌ங்க‌ளைத் துண்டு துண்டாப் பிரிக்கிற‌துன்னு அர்த்த‌ம். ஆக‌, அக்குன்னா பாக‌ம், அல்ல‌து ஒரு துண்டுன்னு அர்த்த‌ம். உங்க‌ கால‌த்துல‌தான‌டா ப‌சை வ‌ந்துடுச்சு. ப‌சையில‌ ஒட்டி வ‌லுவில்லாத‌ சாமான்க‌ள‌ உண்டு ப‌ண்ணி ச‌ன‌ங்க‌ த‌லையில‌ மொள‌கா. எங்க‌ கால‌த்துல‌ எந்த‌ ஒரு சாமானும், துண்டுக‌ளை வெச்சி ஆணிக‌ளால‌ வ‌லுவாப் பூட்டி இருப்போம். அப்ப‌ அந்த‌ ஆணிக‌ளையும் அக்குக‌ளையும் த‌னித்த‌னியா பிரிக்குற‌த, அக்கு வேறா ஆணி வேறாப் பிரிக்கிற‌துன்னு சொல்லுவோம்டா! இதையே, ந‌ம்ப‌ ஊரு, கோய‌ம்ப‌த்தூர்ல‌ அச்சு வேற‌யா ஆணி வேற‌யாப் பிரிச்சுடுவேன்னும் சொல்லுவாங்க‌டா பேராண்டி. ச‌ரி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

8 comments:

குடுகுடுப்பை said...

எல்லாத்தையும் பிர்ச்சி மேயிரீங்க

பழமைபேசி said...

//குடுகுடுப்பை//

வாங்ண்ணே, இருக்குறதப் பிரிக்கத்தானே நமக்குத் தெரியும்? அதான்... :-o)

நசரேயன் said...

அக்கு வேர ஆணி வேர பிரிச்சுடீங்க
ரெம்ப நல்ல இருக்கு

பழமைபேசி said...

//நசரேயன் said...
அக்கு வேர ஆணி வேர பிரிச்சுடீங்க
ரெம்ப நல்ல இருக்கு
//

கொஞ்சங்கூட நல்லா இல்ல.... ஆமாஆ... ஓட்டைக் காணமே?!

Anonymous said...

`அக்குவேறு ஆணிவேறு' என்பதுதான் சரி.

உங்கள் விளக்கம் சரிதான்.

பழமைபேசி said...

//அ. நம்பி said...
`அக்குவேறு ஆணிவேறு' என்பதுதான் சரி.

உங்கள் விளக்கம் சரிதான்.
//

வாங்க ஐயா! நன்றி!!

ஆட்காட்டி said...

சரி தான். நல்லாத் தான் பிரிச்சு மேயுறீங்க.

பழமைபேசி said...

//ஆட்காட்டி said...
சரி தான். நல்லாத் தான் பிரிச்சு மேயுறீங்க.
//

வாங்க ஆட்காட்டியண்ணே! நன்றி!!