11/04/2008

"அந்தலை சிந்தலை"க்கான விளக்கம்!

அன்பர்களே வணக்கம்! கால்மாடு தலைமாடுன்னா என்னன்னு கேட்டு பதிவு எழுதியிருந்தோம். நண்பர் அ.நம்பி அதுக்கு விளக்கம் குடுத்து இருந்தாரு. அவருக்கு நன்றி. மற்றும் திண்ணைக்கு வந்துட்டுப் போனவிங்களுக்கும் நன்றி!

மாட வீதிங்றோம். அப்படியின்னா அது மாடம் இருக்குற வீதியா? மாட சாமிங்றோம், அப்ப அவரு மாடத்துக்கு சாமியா?? மாட்டுப் பொண்ணுங்றோம், அப்ப அவ மாடு மாதிரியானவளா?? அது அப்படி இல்லையாம்ங்க. மாடுன்னா பக்கம்ங்றது அர்த்தமாம். ஆக, மாடவீதின்னா கோவில், அரண்மனைன்னு இருக்குற‌ சிறப்பான இடங்களுக்குப் பக்கத்துல இருக்குற வீதின்னு அர்த்தம். மாடசாமின்னா, பக்கத்தில் அருகில் கூடவே இருந்து காப்பாத்துற சாமி. மாட்டுப் பொண்ணுன்னா கூடவே பக்கத்துல இருக்குற பொண்ணு.

அந்த வகையில கால்மாடுன்னா, கால் இருக்குற பக்கம். தலை மாடுன்னா தலை இருக்குற பக்கம். எதிர் எதிரானதுகளை, அதையும் இதையும்னு ஒப்பிட்டுச் சொல்லும் போது தலையும் புரியலை, காலும் புரியலன்னு சொல்றோம். அதே மாதிரி தான், இந்தத் தலைமாடு கால்மாடு.

அந்தலை சிந்தலையும் அதே மாதிரிதாங்க. முரணான ரெண்டை, அல்லது இங்குட்டும் அங்குட்டும், மேல கீழன்னு ஒப்பிட்டுச் சொல்லுற இடத்துல பொழங்குற ஒன்னு. அந்துன்னா, விலகிப் போய் தற்காலிகமா மறையுற ஒன்னு, அல்லது மேல் நோக்கிப் போறது. சிந்துன்னா, கீழ் நோக்கிப் போற ஒன்னு. அதான், தண்ணி சிந்திடுச்சுங்றோம். பக்கவாட்டுல போறத உந்துதல்ங்றோம். ஆக, ஒன்னை இங்குமங்குமா அலைய விட்டு இம்சை பண்ணுறதை அந்தலை சிந்தலை ஆக்குறாங்கன்னு சொல்லுறோம். அதையே, அவன் கீழுக்கும் மேலுக்கும் பேசுறான்னும் சொல்லுறோம்.

இதுக்கு இனியொரு விளக்கமுஞ் சொல்லுறாங்க. அந்தலை, சந்தலைன்னு. அந்தின்னா சூரியன். சந்தின்னா சந்திரன். அதுகளைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பாங்ளோ? தெரியலையே!


கழுதை கோபம் கத்துனாத் தீரும்!
மனுசன் சந்தேகம் பேசினாத் தொலையும்!!

வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!

9 comments:

நசரேயன் said...

நல்லா விளக்கம்.. மனப்பாடம் பண்ணிக்குறேன்

குடுகுடுப்பை said...

//கழுதை கோபம் கத்துனாத் தீரும்!
மனுசன் சந்தேகம் பேசினாத் தொலையும்!!//

ஒரு விளக்கம் சரி.

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்லா விளக்கம்.. மனப்பாடம் பண்ணிக்குறேன்
//

:-o)

பழமைபேசி said...

//வருங்கால முதல்வர் said...

ஒரு விளக்கம் சரி.
//

அப்ப மத்தது? இருங்க, நான் போயி எங்காத்தாவைக் கூட்டியாரேன்....

Mahesh said...

முரண்பாடான பேச்சா இருக்கும்னு ஊகிச்சேன். சரியாத்தான் இருக்கு !!

பழமைபேசி said...

//Mahesh said...
முரண்பாடான பேச்சா இருக்கும்னு ஊகிச்சேன். சரியாத்தான் இருக்கு !!
//

வாங்க, வணக்கம் மகேசு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்ப சும்மாடுன்னா சும்மா இருக்குற மாடா.

இல்ல.













தலையில பாரம் தூக்கும்போது தலைக்கும் பாரத்துக்கும் இடையில வைப்பது. முக்காவாசி அது துணியாகத்தான் இருக்கும்.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
அப்ப சும்மாடுன்னா சும்மா இருக்குற மாடா.

இல்ல.

தலையில பாரம் தூக்கும்போது தலைக்கும் பாரத்துக்கும் இடையில வைப்பது. முக்காவாசி அது துணியாகத்தான் இருக்கும்.//

வாங்க, வணக்கம்! சுமைக்குப் பக்கத்தில்ங்றது சும்மாடு!!

பழமைபேசி said...

எனக்குத் தெரிந்தவரை, இந்த விளக்கம் சரிதான் என்றாலும், இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என, எனக்குத் தெரிந்த அளவில் சொல்லுகிறேன்.

கூட்டுக் குடும்பத்தில், எல்லாரும் ஒரே ஜமுக்காளத்தை விரித்துப் படுப்பார்கள். ஆனால் ஆளாலுக்கு ஒரு போர்வை இருக்கும்.

வரிசையாக எல்லாரும் படுத்தாலும், நள்ளிரவுக்குப் பின் நிலைமை "தலை கீழாக" மாறிவிடும்!!

உருண்டு உருண்டு போர்வை
உருவங்கள் இடம் மாறி, அலைந்து, திடீரென விளக்கைப் போட்டால், கால் எங்கே, தலை எங்கே எனத் தெரியாமல் இருக்கும்.

பெருசுங்க வந்து, 'இப்பிடியா கால்மாடு தலைமாடு இல்லாம தூங்கறது?' எனத் தலையில் அடிச்சுக்குவாங்களாம்!

---Sankar Kumar