11/01/2008

"கோதாரி"ன்னா என்ன?

வணக்கம் அன்பர்களே! கூமட்டை, கோதாரி, இந்தாவுள, வெலக்காரி, வெள்ளனமே, கெழமெராவுங்ற தமிழ் வார்த்தைகளை சொல்லக் கேட்டு இருப்பீங்க.... அந்த சூழ்நிலையில அதுக்கு ஒரு அர்த்தம் எடுத்துக்குவோம். ஆனா, தனியாக் கேட்டாக்க நமக்கு அர்த்தம், இல்லை அதனோட பின்னணி தெரியாம இருக்கும். காரணம், அதுக பொழக்கத்துல அதிகமா இல்லாமப் போனதுதான். சரி, உங்களுக்கு இதுகளைப் பத்தித் தெரிஞ்சாப் பின்னூட்டத்துல சொல்லுங்க.... நான் எனக்குத் தெரிஞ்சதை நாளைக்கு சொல்லுறேன்.

உண்ணாமத் தின்னாம அண்ணாமலைக்கு அரோகரா!

பதிவுக்கான விளக்கம் இப்ப இங்க...

13 comments:

நசரேயன் said...

வெள்ளனமே -சீக்கிரம்மா(அப்படின்னு நினைக்கிறேன்)

Anonymous said...

My mom used to say "Kothari" but even she doesnt knw what does it mean? All she knew is that its a bad word. butmy Grandma has told me that its kind of disease. May be a STD?!

பழமைபேசி said...

// நசரேயன் said...
வெள்ளனமே -சீக்கிரம்மா(அப்படின்னு நினைக்கிறேன்)
//

சரி! நாளைக்கு பதியறேன் மிச்சத்தை...

பழமைபேசி said...

// TruTamilan said...
My mom used to say "Kothari" but even she doesnt knw what does it mean? All she knew is that its a bad word. butmy Grandma has told me that its kind of disease. May be a STD?!
//

Thanks for visiting! its not at all bad word... its just that people started using in bad context.. your Grandma is correct... I will post the info what ever I know tomorrow.

Vasanthan said...

"கோதாரி" என்பது ஈழத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் சொல்லென்று நினைத்திருந்தேன். வலைப்பதிவில் நானறிந்தவரை தமிழகத்தார் எவருமே பயன்படுத்தியதில்லை என்பதோடு இச்சொல்லை நாம் பயன்படுத்தும்போது அதற்குரிய விளக்கம் தெரியாமலிருந்தார்கள் (எ.கா: பெயரிலியின் இடுகையொன்று).

இச்சொல்லுக்கு நீங்கள் கூறும் விளக்கத்தையறிய ஆவலாயிருக்கிறேன்.

பழமைபேசி said...

//
வசந்தன் said...

வாங்க வசந்தன்.... என் தாயாரின் தகப்பனார் சொல்லியதின்படி, இந்த வார்த்தை தமிழகத்திலும், குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் இருந்திருக்கிறது. இப்போதும் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் புழங்கி வருகிறார்கள்.

கூடவே, நீங்கள் சொல்லுவதும் சரியே. ஈழத் தமிழர்கள் இதனை வெகுவாக உபயோகிக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் பிறழ்ந்தும் விடுகிறது. நான் கேள்விப்பட்டதை நாளைய பதிவில்.

மோகன் கந்தசாமி said...

///கூமட்டை//

கூமட்டை என்பது கூழ்முட்டை என்பதன் திரிபு ஆகும். இதை முட்டாள் என பொருள் பட பயன்படுத்துவர். கூழ்முட்டை -இலிருந்து பொறிக்கப்படும் கோழிக்குஞ்சு மந்தமாயிருக்கும். சிலநாட்களில் வியாதியால் இறந்துபோகும்.

சரியா?

மேலும், உங்கள் பின்னூட்ட பெட்டியை பெரிது படுத்துவீராக!

பழமைபேசி said...

//மோகன் கந்தசாமி said...
///கூமட்டை//

கூமட்டை என்பது கூழ்முட்டை என்பதன் திரிபு ஆகும். இதை முட்டாள் என பொருள் பட பயன்படுத்துவர். கூழ்முட்டை -இலிருந்து பொறிக்கப்படும் கோழிக்குஞ்சு மந்தமாயிருக்கும். சிலநாட்களில் வியாதியால் இறந்துபோகும்.

சரியா?//

மிகவும் சரி. ஆனால், இதற்கு வேறொரு விளக்கமும் உள்ளது. நாளை காண்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//மேலும், உங்கள் பின்னூட்ட பெட்டியை பெரிது படுத்துவீராக!//

செய்யுறனுங்க....

Mahesh said...

இந்தாவுள ‍ - இத்தணூண்டு, மிகச் சிறிய அளவு

கெழமெராவு - கிழமை + இரவு ???

Anonymous said...

1. கூழ்முட்டை, கூழைமுட்டை என்பன ஒருபொருள் தரும் சொற்கள். அழுகிய முட்டை, கெட்டுப்போன முட்டை என்று பொருள்படும். `கூமுட்டை’ என்பது இச்சொற்களின் திரிபு; அழுகிய முட்டை எதற்கும் பயன்படாது; ஆகவே `கூழ்முட்டை போன்றவன்’ என்று `திட்ட’ இச்சொல் பயன்படுகிறது. அறிவில்லாதவன் என்பது பொதுப்பொருள்.

2. `கோதாரி’ என்பது கொள்ளை நோயையும் வாந்திபேதியையும் குறிக்கும். மனிதரை நோக்கி இச்சொல் பயன்படுத்தப்பட்டால் அந்த நோயை ஒத்தவர்கள் என்று பொருள்படும். (வீண் பிடிவாதம் பிடிப்பவர்களையும் இச்சொல்
குறிக்கக்கூடும்.)

3. `இந்தாவுள’ என்பது பெண்பால் விளி. (`இந்தா பிள்ளை’ என்பதன் திரிபாக இருக்கக்கூடும்.)

4. விலைக்காரி என்னும் சொல்லின் திரிபு `வெலக்காரி’. கூடையில் பொருள்களை வைத்துக் கூவி விற்கும் பெண். (`கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவாள்......)

5. வெள்ளனமே – விரைவாக

6. கெழமராவு – கிழமை இரவு

Anonymous said...

//(`கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவாள்......)//

திருத்தம்:

கூவாள் - கூவுவாள்

பழமைபேசி said...

//Mahesh said...
இந்தாவுள ‍ - இத்தணூண்டு, மிகச் சிறிய அளவு

கெழமெராவு - கிழமை + இரவு ???
//

வாங்க மகேசு.... பாராட்டுக்கள்.... நம்ம பதிவு இன்னைக்கு வந்திட்டே இருக்கு...

பழமைபேசி said...

//அ. நம்பி said... //

வாங்க அறிவுடை நம்பி ஐயா, வணக்கம். உங்க பதில்கள் சரியே. ஆனாலும் மேலதிகத் தகவலோட நம்ம பதிவு வந்துட்டே இருக்கு. நனறிங்க!