11/01/2008

ஆளுக்கொரு தேச‌மானோம்!

வ‌ண‌க்க‌ம்! அன்ப‌ர் ம‌லைக்கோட்டையார் த‌ன‌க்கும் ஒரு வாச‌க‌ர் விருப்ப‌ம் வேணும்னு சொன்ன‌துக்க‌ப்புற‌ம் சும்மா விட்டுட‌ முடியுமா? அதான், அவ‌ரை வெச்சே ஒரு பாட்டு.

ம‌லைக்கோட்டை பார‌த‌ க‌ன‌ இய‌ந்திர‌த் (BHEL) தொழிற்சாலைல‌ வேலை செய்யுற‌ அவ‌ரோட‌ ஆளு, ஒரு நாள் அந்த‌ ஆலை வ‌ளாக‌த்துல‌ அப்ப‌டியே ந‌ட‌ந்து போய்ட்டு இருக்குறாங்க‌. அப்ப‌டிப் போய்ட்டு இருக்கும் போது, அங்க‌ இருக்குற‌ ம‌ர‌ங்க‌ளைப் பாத்துட்டே போறாங்க‌. ஆனாப் பாருங்க‌ அந்த‌ வேப்ப‌ ம‌ர‌த்தைப் பாத்த‌ ஒட‌னே, ம‌ர‌த்த‌டியில‌ ஒன்னுமொன்னுமா இருந்த‌ நாளுக‌ ஞாப‌க‌த்துக்கு வ‌ருது. ஒரு ஏக்க‌ம். அந்த‌ ஏக்க‌த்துல‌யே, ஆப்பிரிக்கா போன‌ ம‌னுச‌ன‌ நென‌ச்சுப் பாடுறாங்க‌. அந்த‌ப் பாட்டுதான் இன்னைய‌ ப‌திவு.

மலைக்கோட்டை மாமனவன்
கண்டெடுத்தேன் குண்டு முத்து
குண்டுமுத்தைக் காணாமச்
சுண்டுதனே கண்ணீரை
வேப்பம்பூப் பூக்காதோ
விடிஞ்சா அது மலராதோ
நேத்து வந்த நேசருக்கு
நேரந் தெரியாதோ
வேம்பு தளுக்காதோ
வீசுங் கொம்பு ஓடாதோ
வீசுங் கொம்பு மேலிருந்து
வெள்ளை தெரியாதோ
ஈரெலுமிச்சம் பழம் போல‌
இருபேரும் ஒரு வ‌ய‌சு
யாரு செஞ்ச‌ தீவினையோ
ஆளுக்கொரு தேச‌மானோம்!

கழுதைப் புண்ணுக்கு தெருப்புழுதிதான் மருந்து!

27 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

நேயர்களின் கோரிக்கை ஏற்ற அண்ணன் பழமைபேசி வாழ்க

http://urupudaathathu.blogspot.com/ said...

கோரிக்கையை நிறைவேற்றிய அண்ணன் வாழ்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆமாம், BHEL எங்க வந்துச்சு ??
எனக்கு யாரையும் அங்க தெரியாது

http://urupudaathathu.blogspot.com/ said...

அடுத்த முறை இந்தியா போகும்போது BHEL லில் தான் அவங்கள தேட வேணும் ...

http://urupudaathathu.blogspot.com/ said...

கழுதைப் புண்ணுக்கு தெருப்புழுதிதான் மருந்து!///

ஆமா இது என்னத்துக்கு ???
என்னை சொல்லலியே ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///கழுதைப் புண்ணுக்கு தெருப்புழுதிதான் மருந்து!/////

இதுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்க??/

http://urupudaathathu.blogspot.com/ said...

///ர‌த்த‌டியில‌ ஒன்னுமொன்னுமா இருந்த‌ நாளுக‌ ஞாப‌க‌த்துக்கு வ‌ருது. ////

இது எப்போ???
எனக்கே தெரியாம இப்படி வேற நடந்துச்சா??

http://urupudaathathu.blogspot.com/ said...

நமக்கும் பாட்டு போட்டு நம்மளையும் மதிச்ச அண்ணனுக்கு ஒரு பெரிய கும்புடு ...

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் மொத போனியா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஒரு ஏக்க‌ம். அந்த‌ ஏக்க‌த்துல‌யே, ஆப்பிரிக்கா போன‌ ம‌னுச‌ன‌ நென‌ச்சுப் பாடுறாங்க‌. அந்த‌ப் பாட்டுதான் இன்னைய‌ ப‌திவு. ////

இப்படி எல்லாம் நடந்தா நமக்கும் ஒரு சந்தோசம் தான்.. ( ஆனா நடக்க மாட்டேங்குதே??? )

http://urupudaathathu.blogspot.com/ said...

///மலைக்கோட்டை மாமனவன்///

எல்லோரும் பாத்துகுங்க, நானும் ரவுடி ( பதிவர் ) தான் ....ரவுடி (பதிவர் ) தான்

http://urupudaathathu.blogspot.com/ said...

///யாரு செஞ்ச‌ தீவினையோ
ஆளுக்கொரு தேச‌மானோம்!/////

ஆஹா... என்ன ( காதல் ) ரசம் சொட்ட , பிரிவு பற்றி எழுதிருக்கீங்க1111

http://urupudaathathu.blogspot.com/ said...

அந்த‌ப் பாட்டுதான் இன்னைய‌ ப‌திவு.

/////

எண்ணிய வெச்சு பதிவு போட்டதற்கு மிக்க நன்றிண்ணே

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னது நான் மட்டும் ஒத்த ஆளா நின்னு ஆடிகிட்டு இருக்கேன்..
ரிப்ளை பண்றது !!!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
என்னது நான் மட்டும் ஒத்த ஆளா நின்னு ஆடிகிட்டு இருக்கேன்..
ரிப்ளை பண்றது !!!
//
தங்கமணிகிட்ட இருந்து காய்கறிச் சந்தைக்குப் போட்டுவரச் சொல்லி உத்தரவு வரவே, நான் போக வேண்டியதாப் போச்சு. போற வழில, ஊர்திய ஓட்டிகினு அலை பேசில உங்க பாட்ட ஏத்துகத்தான் முடிஞ்சது. ஒத்த கையில எசப் பாட்டு பாட முடியல பாருங்க.... அதான் விபரம்!

பழமைபேசி said...

//கழுதைப் புண்ணுக்கு தெருப்புழுதிதான் மருந்து!///

ஆமா இது என்னத்துக்கு ???
என்னை சொல்லலியே ??//

உங்களை இல்லீங்க.....

அவிங்க மன வருத்ததுக்கு பாட்டு தான் மருந்துன்னு சொல்ல வர்றேன்...

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
கோரிக்கையை நிறைவேற்றிய அண்ணன் வாழ்க..
//

நன்றி

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
ஆமாம், BHEL எங்க வந்துச்சு ??
எனக்கு யாரையும் அங்க தெரியாது
//

ஆனா, எனக்குத் தெரிஞ்சது திருச்சியில முக்கொம்பும், BHELம்தான்...அதான்!

குடுகுடுப்பை said...

திருச்சிக்கு போகாதீங்க அத்தான்

ஒரு நைஜீரியாக்காரி கதறல்.

நசரேயன் said...

திருச்சியிலே இவ்வளவு பிரச்சனையா ?
நான் கல்லூரியிலெ படிக்கும் போது தெரியாம போச்சே

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
திருச்சிக்கு போகாதீங்க அத்தான்

ஒரு நைஜீரியாக்காரி கதறல்.
//

போறியே போறியே என்மச்சான்
இந்தக் கருங்குயிலு கசந்திடுச்சோ?!
காணாமல் என் கண்ணுறங்குமோ
காடைக்குருவி அடிச்சு, கார‌க்
கொழம்பு வச்சு வறுவல் வறுத்து
பாய் விரிச்ச‌து காணாதோ
போறியே போறியே என்ம‌ச்சான்
இந்தக் கருங்குயிலு கசந்திடுச்சோ?!

இதான் நைஜிரியாவிலிருந்து வெளிப்பட்ட குரல்!

பழமைபேசி said...

//நசரேயன் said...
திருச்சியிலே இவ்வளவு பிரச்சனையா ?
நான் கல்லூரியிலெ படிக்கும் போது தெரியாம போச்சே
//

சந்துல சிந்தா?

Mahesh said...

அணிமா அண்ணே.... சொல்லவே இல்ல..... பழமைபேசிக்கு மட்டும் எப்பிடியோ தெரிஞ்சுருக்கு !!!

@ பழமைபேசி : கல்லூரி நாட்கள்ல பல பேருக்கு காதல் கவிதை / கடிதம்னு எழுதி மகத்தான் தொண்டுகள் ஆற்றியிருக்கீங்களோ??

பழமைபேசி said...

// Mahesh said...

@ பழமைபேசி : கல்லூரி நாட்கள்ல பல பேருக்கு காதல் கவிதை / கடிதம்னு எழுதி மகத்தான் தொண்டுகள் ஆற்றியிருக்கீங்களோ??
//

இரக‌சியத்தை வெளில சொல்லிடாதிங்க மகேசு....

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
///ர‌த்த‌டியில‌ ஒன்னுமொன்னுமா இருந்த‌ நாளுக‌ ஞாப‌க‌த்துக்கு வ‌ருது. ////

இது எப்போ???
எனக்கே தெரியாம இப்படி வேற நடந்துச்சா??
//

:-o)

ராஜ நடராஜன் said...

ஆளுக்கொரு தேசமானோம்!

அழகான தலைப்பு.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
ஆளுக்கொரு தேசமானோம்!

அழகான தலைப்பு.
//

நன்றிங்க‌!