1/26/2009
பழமைபேசி பேசுறாரு
உங்க பேரு: 'பழமைபேசி'ங்ற வெட்டு வேத்து
ஊரு: குசும்பனூர் பக்கத்துல மொக்கைப்பாளையம்
வயசு: நான் என்னைக்கும் எங்க அம்மாவுக்கு குழந்தைதான்
தொழில்: இதெல்லாம் ஒரு கேள்வியா? குழுமத்தாரை மொக்கை போடுறது தான். கடந்த காலத்துல பட்சியும் சேந்து பாப்போம். இப்ப குடும்பம் குட்டினு ஆயிடிச்சு இல்ல?!
துணைத் தொழில்: வெட்டிப் பேச்சு, கிறுக்கறது, அதிகப் பிரசங்கம்
சோத்துக்கு: மென்பொருள் வடிவமைப்பு, மென்பொருள் கட்டுமான மேற்ப்பார்வை(கட்டுமானம்? அது, தெரிஞ்சாத்தானே செய்யறதுக்கு?!)
நண்பர்கள்: நாமல்லாந்தான். என்னோட மொக்கையை சகிச்சுகிட்டா நீங்கதான் ஆருயிர்த்தோழர்.
எதிரிகள்: மொக்கையைக் கேட்டு சகிக்காம, எகுறரவங்கதான்
பிடிச்சது: கொங்கு நாட்டுப்பழமை, கோயம்பத்தூர் எள்ளல், நகைப்பு, சிலேடை, பொரளி.சுருக்கமா சொன்னா விவகாரமான எல்லாமும்.
பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.
பிடித்த நபர்: நீங்களும், உங்க கூட்டாளியும்!
பொழுதுபோக்கு: ஃகையோ! ஃகையோ!! இன்னும் நீங்க என்னை புரிஞ்சுக்கலயா? சரியாப்போச்சு போங்க!
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
//கட்டுமானம்? அது, தெரிஞ்சாத்தானே செய்யறதுக்கு?!)
//
So you the Damager?
//பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.//
Only these 3 jobs u do at home? Too bad :-(
தொழில்: இதெல்லாம் ஒரு கேள்வியா? குழுமத்தாரை மொக்கை போடுறது தான். கடந்த காலத்துல பட்சியும் சேந்து பாப்போம். இப்ப குடும்பம் குட்டினு ஆயிடிச்சு இல்ல?!
Super...
கேள்வியும் நீங்க பதிலும் நீங்களா, நல்லா இருக்குண்ணே
பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.
//
பிடிக்காதது அதிகம் செய்வது ஏன்?
// பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.//
நாங்கெல்லாம் உங்க தோழர்கள்தானே... இப்படியா ஒரு சக பதிவர போட்டு பார்க்கிறது...
பதிவுலகத்தில யாரும் இது மாதிரி எல்லாம் வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க.. அப்படின்னு சொல்லிகிட்டு தங்ஸ்கிட்ட மாட்டாம இருந்தேன், இப்படி மாட்டி விட்டுட்டேயே அப்பு..
அண்ணே உங்க ஆருயிர்தோழன் வந்துருக்கேன் :))))
// Blogger குடுகுடுப்பை said...
பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.
//
பிடிக்காதது அதிகம் செய்வது ஏன்?//
விதி வலியது, கொடியது அதை மாற்ற யாராலும் இயலாது...
வேற வழி.. செஞ்சாகணுமே...
இந்த பதிவு என்னோட ரீடிங் லிஸ்ட்ல அப்டேட் ஆகவில்லை...
உங்களையும் என்னையும் பிரிக்க மிகப் பெரிய சதி நடக்கின்றது என்பது இதன் மூலம், நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி, நிரூபணமாகின்றது.
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
// Blogger கபீஷ் said...
//பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.//
Only these 3 jobs u do at home? Too bad :-( //
இவருதான் ரொம்ப நல்லவருப்பா...
ஏங்க இப்படி எல்லாம் ஏடாகூடமா மாட்டி விடரீங்க
//கபீஷ் said...
//பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.//
Only these 3 jobs u do at home? Too bad :-(
//
ஏங்க, உங்களுக்கெல்லாம் ஈவு, இரக்கமே கிடையாதா?
//ஸ்ரீதர்கண்ணன் said...
தொழில்: இதெல்லாம் ஒரு கேள்வியா? குழுமத்தாரை மொக்கை போடுறது தான். கடந்த காலத்துல பட்சியும் சேந்து பாப்போம். இப்ப குடும்பம் குட்டினு ஆயிடிச்சு இல்ல?!
Super...
//
கால நேரம் வந்தா எல்லாம் ஒடுங்கித்தான ஆவணும்?! இஃகிஃகி!!
//நசரேயன் said...
கேள்வியும் நீங்க பதிலும் நீங்களா, நல்லா இருக்குண்ணே
//
இல்லைங்க தளபதி, கேள்வி கேட்டது மனசாட்சிங்ற கேள்வினாதன், பதில் சொன்னது நானு! இஃகிஃகி!!
//புதுகைச் சாரல் said...
ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை
சத்தமில்லாமல் ஒரு இடி....... காட்டில் மழை
நிஜார் போட்ட மனிதனின் பேஜார்
//
காட்டுல மழை பேஞ்சுதா.... அவரு யோகசாலி போல?! நமக்கு வீடல தவறாம இடிதான் விழுது.... ஞேஏஏஏஏஏஏஏஏ....
//குடுகுடுப்பை said...
பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.//
பிடிக்காதது அதிகம் செய்வது ஏன்?
//
ச்சும்மா, ரெண்டு நாளைக்கு உங்களுக்குப் பிடிக்காததை செய்யாம விட்டுப் பாருங்க இராசா.... அப்பத்தெரியும், மறுவினை என்னான்னு! கேள்வி கேப்பாடு எல்லாம் இங்கதான்....ஃம்!
//இராகவன் நைஜிரியா said...
பதிவுலகத்தில யாரும் இது மாதிரி எல்லாம் வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க.. அப்படின்னு சொல்லிகிட்டு தங்ஸ்கிட்ட மாட்டாம இருந்தேன், இப்படி மாட்டி விட்டுட்டேயே அப்பு..
//
ஐயா, ஒரு நாள் இல்லாட்டியும் ஒரு நாள் நாமதான செய்யணும்... என்னுங்க நாஞ்சொல்லுறது?
//இராகவன் நைஜிரியா said...
இந்த பதிவு என்னோட ரீடிங் லிஸ்ட்ல அப்டேட் ஆகவில்லை...
உங்களையும் என்னையும் பிரிக்க மிகப் பெரிய சதி நடக்கின்றது என்பது இதன் மூலம், நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி, நிரூபணமாகின்றது.
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
//
நானும் இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே உங்க ஆருயிர்தோழன் வந்துருக்கேன் :))))
//
அண்ணா, வாங்க வாங்க! சிங்கப்பூர் பயணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுங்ளா? சந்தோசம்ண்ணே!!!
// Viji said...
:)
//
இஃகிஃகி!!
இஃகிஃகி! :D
//பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.
//
அப்ப வீட்டுல சமையல் நீங்க தானா அண்ணே
மனதை இலகுவாக்கினதிற்கு நன்றி:)
//Natty said...
இஃகிஃகி! :D
//
இஃகிஃகி!
//சின்ன அம்மிணி said...
அப்ப வீட்டுல சமையல் நீங்க தானா அண்ணே
//
வெளில யார்கிட்டவுஞ் சொல்லிடாதீங்க தாயி!
//ராஜ நடராஜன் said...
மனதை இலகுவாக்கினதிற்கு நன்றி:)
//
அண்ணா, வாங்க, எதோ நம்மால ஆனது....இஃகிஃகி!
நல்லாதேன் பேசுறீகவே...பழமைபேசி...கொங்கு நாட்டுக்காரவுக எல்லாமே இப்பிடித்தேன் பேசுவாகளா?சரியாத்தேன் போச்சு போங்க அண்ணே !
\\கடந்த காலத்துல பட்சியும் சேந்து பாப்போம். இப்ப குடும்பம் குட்டினு ஆயிடிச்சு இல்ல\\
யோ இப்பவும் அது தானே நடக்குது
\\மென்பொருள் வடிவமைப்பு, மென்பொருள் கட்டுமான மேற்ப்பார்வை\\\
இன்னும் சென்றின்க் அடிக்கிறது ,கம்பி கேட்டுறது ,பலகை அடிக்கிறது ,மார்பிள் பதிக்கிறது ..............
\\என்னோட மொக்கையை சகிச்சுகிட்டா நீங்கதான் ஆருயிர்த்தோழர்\\\
சகிக்கிறதா யோ உம்மோட மொக்கைய படிச்சிட்டு சேது விக்ரம் மாதிரி ஆய்ட்டேன்யா ,
\\பிடிக்காதது\\\
எழுத்து பிழை வர்றது சகஜம்தான் நாங்க சரியா படிச்சிட்டோம்
//மிஸஸ்.டவுட் said...
நல்லாதேன் பேசுறீகவே...பழமைபேசி...கொங்கு நாட்டுக்காரவுக எல்லாமே இப்பிடித்தேன் பேசுவாகளா?சரியாத்தேன் போச்சு போங்க அண்ணே !
//
இஃகிஃகிஃகி! சிறுவாணித் தண்ணியோட, திருமூர்த்தி மலைத் தண்ணியுஞ் சேந்து குடிச்சு வளர்ந்தவிக நாங்க...அதான்...இஃகிஃகிஃகி!!!
// S.R.ராஜசேகரன் said...
\\பிடிக்காதது\\\
எழுத்து பிழை வர்றது சகஜம்தான் நாங்க சரியா படிச்சிட்டோம்
//
நம்ம பக்கத்துக்கு வந்து, நல்லா கல கலன்னு கலாய்ச்சிட்டுப் போன புளியங்குடி மாப்புக்கு ஒரு சபாசு!
//பட்சி பாக்கறது ///
நீங்களும் ஒரு சலீம் அலியா??? அவ்வ்..
என்ன நம்ம கலைஞர் ஐயா மாதிரி கேள்வியும் நானே பதிலும் நானே!!!!!!!!!! பாத்து!! அரசியல்ல ஏதும் போறதா ஐடியா வா?இப்பவே சொலிருங்க. துண்டு போட்டு எடம் புடிக்கத்தான்.
பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.
நல்ல வேல இந்தியால இல்லன்னு பெருமை படுங்க. இல்லன்ன துணி தொவைக்கணும். ரொம்ம்ப கஷ்டம்.
Post a Comment