நிகழ்வின் இடையூடாக, கலந்துரையாடல் இடம் பெற்றது. அதில் பல தரப்பட்ட தகவல்களும், விழிப்புணர்வுக் கருத்துகளும் பரிமாறப்பட்டது. அதில் ஒன்றுதான், நாம் பார்க்க இருக்கும் ஒரு செய்தியும், அதன் விபரமும். ஆம், அன்பர்களே! தற்போதைய வடக்கு கரோலைனா மாகாணத்தின் மக்கள் தொகை 92 இலட்சம் பேர். தோராயமாக நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 5 இலட்சம். விவாகரத்து எண்ணிக்கை சுமார் 43 ஆயிரம். சதவிகிதம் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 9 சதவிகிதம்.
வடக்குக் கரோலைனாவைப் பொறுத்த வரையில், இது பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாகாணம், பழமையான(conservative) மாகாணம். சார்லட்தான் பெரிய நகரம், அதன் மக்கள் தொகை 5.5 இலட்சம். ஆகவே, நியூயார்க் போன்ற மற்ற பெரிய மாகாணங்களில், நகர்ப்புறக் கலாச்சாரத்தைக் கொண்ட(liberal) மாகாணாங்களில் இந்த சதவீதம் மேலும் அதிகமாக இருக்கும்.
அலசப்பட்ட விசயம் யாதெனில், பொருளாதார மந்தத்தின் காரணமாக, விவாகரத்து எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து உள்ளது என்பதுதான். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மனிதன் இட்டுக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது, சகிப்புத்தன்மையோடு பிணக்குகளை எதிர்கொண்டு வாழ்வதையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கடைப் பிடிக்கிறான். இதுவே, பொருளாதாரம் மிகுந்தோ அல்லது எளிதில் கிடைக்கிற பட்சத்திலோ அவை குறைகிறது என்பதே.
மேலும் நியூயார்க் செய்தி ஒன்றும் இதை உறுதிப் படுத்துவதாக உள்ளது. வசதி வாய்ந்த இருவர் பிரிய எண்ணி, விவாகரத்துப் பெற குறைந்தபட்சம் ஒரு வருடம் பிரிந்து வாழ்வது அவசியமென்பதால் பிரிந்து வாழ்கிறார்கள். வருடமும் உருண்டோடி விடுகிறது, ஆனால் அவர்கள் வாழ்ந்த வீடு விற்பனை ஆகவில்லை. அதனால் அவர்களின் வரவு செலவுக் கணக்கு, ஒரு முடிவை எட்டவில்லை. அதற்கு ஒரு முடிவில்லாமல், விவாகரத்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர் அந்தத் தம்பதியினர். ஆம், இணைந்து வாழ்வதே அந்த முடிவு. இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததில் அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
எப்படிப் போர்க்காலத்திலும், நாட்டிற்கு ஒரு இடர் என்று வரும்போதும் மக்களின் நாடி நரம்புகளில் அனிச்சைச் செயலாய் நாட்டுப் பற்று பீறிடுகிறதோ, அது போன்றதுதான் பிணக்குகளும் அகந்தையும். வசதி வாய்ப்புகள் பெருகும் போது, மனிதனின் மனம் அறியாமலே அவையும் குடி புகுந்து விடக்கூடும். நாம் உயர்ந்து வருகிறோம், மிக்க மகிழ்ச்சி! ஆனாலும், இன்னும் வளர்ந்த நாடு என்னும் நிலையை அடையவில்லை. ஆகவே, வளர்ந்த நாடுகளின் செயல்முறை, கட்டுமானங்களைக் கற்றுத் தேர்ச்சியுறும் நாம், அவர்களின் படிப்பினையையும் தெரிந்து கொண்டாக வேண்டும்.
இப்படியாக, கலந்துரையாடிய பெரியவர்கள், இங்கு வாழும் நமது தலைமுறையினரும் எளிமை பேணி, பொருளாதாரத்தை அடக்கி ஆள்வதிலும், குடும்பத்தைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற ரீதியில், உரையாடலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். நம் நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியாக, இதனைப் பதிவிடுகிறேன் அன்பர்களே. எனது ஆலோசனை, கருத்து என்றெல்லாம் நினைத்து, நிலையில் நிற்கும் தேரைத் தெருவில் இழுத்துவிட்டு விடமாட்டீர்கள் என்றும் பெரிதும் நம்புகிறேன். இஃகிஃகி! (அந்த பயம் இருந்தா சரின்னு, நீங்க சொல்லுறது கேக்குதுங்கோ!)
மேற்கோள் சுட்டிகள்:
http://www.charlotteobserver.com/597/story/438991.html
http://charlotte.areaconnect.com/statistics.htm
இதயம் ஏற்கிறது! தலை மறுக்கிறது!!
12 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
நமது தலைமுறையினரும் எவ்வளவு வசதிகள் வந்து சேர்நதாலும், எளிமை பேணி, பொருளாதாரத்தை அடக்கி ஆள்வதிலும், சொந்தங்களைப் பேணி குடும்பத்தைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே நம் தலைமுறையினரின் வாழ்வும் சிறக்கும்.
நல்ல புத்தாண்டு சிந்தனைகள்.
//மனிதன் இட்டுக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது, சகிப்புத்தன்மையோடு பிணக்குகளை எதிர்கொண்டு வாழ்வதையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கடைப் பிடிக்கிறான். //
நூற்றுக்கு நூறு சரியான கருத்து. எப்போதெல்லாம் இடர் பாடு ஏற்படுகின்றதோ அப்போதுதான் சாய்ந்து கொள்ள தோள் தேவைப் படுகின்றது. அப்போது தானாகவே சகிப்புத்தனமை வந்துவிடுகின்றது..
//அவ்விழாவில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடாத்தும் பொறுப்பை இந்த சாமன்யனுக்கு அளிக்கப்பட்டமையால், நாமும் நம் திறமையைக் காண்பிக்கும் வாய்ப்பாகக் கருதி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினோம். //
வாழ்த்துக்கள். மற்றொமொறு அனுபவம்.
//muru said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
//
வாங்க தம்பி, வாழ்த்துகள்!
//சுல்தான் said...
நமது தலைமுறையினரும் எவ்வளவு வசதிகள் வந்து சேர்நதாலும், எளிமை பேணி, பொருளாதாரத்தை அடக்கி ஆள்வதிலும், சொந்தங்களைப் பேணி குடும்பத்தைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே நம் தலைமுறையினரின் வாழ்வும் சிறக்கும்.
நல்ல புத்தாண்டு சிந்தனைகள்.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
//இராகவன் நைஜிரியா said...
//மனிதன் இட்டுக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது, சகிப்புத்தன்மையோடு பிணக்குகளை எதிர்கொண்டு வாழ்வதையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கடைப் பிடிக்கிறான். //
நூற்றுக்கு நூறு சரியான கருத்து. எப்போதெல்லாம் இடர் பாடு ஏற்படுகின்றதோ அப்போதுதான் சாய்ந்து கொள்ள தோள் தேவைப் படுகின்றது. அப்போது தானாகவே சகிப்புத்தனமை வந்துவிடுகின்றது..
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!!
//
அலசப்பட்ட விசயம் யாதெனில், பொருளாதார மந்தத்தின் காரணமாக, விவாகரத்து எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து உள்ளது என்பதுதான். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மனிதன் இட்டுக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது, சகிப்புத்தன்மையோடு பிணக்குகளை எதிர்கொண்டு வாழ்வதையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கடைப் பிடிக்கிறான். இதுவே, பொருளாதாரம் மிகுந்தோ அல்லது எளிதில் கிடைக்கிற பட்சத்திலோ அவை குறைகிறது என்பதே.
//
Thats true, Now he is trying to understand/listen the issues with others point of view (Empathy).
//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள். மற்றொமொறு அனுபவம்.
//
ஆமாங்க ஐயா...அதுவும் ஒரு படிப்பினை...இஃகிஃகி!
//ஆளவந்தான் said...
//
அலசப்பட்ட விசயம் யாதெனில், பொருளாதார மந்தத்தின் காரணமாக, விவாகரத்து எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து உள்ளது என்பதுதான். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மனிதன் இட்டுக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது, சகிப்புத்தன்மையோடு பிணக்குகளை எதிர்கொண்டு வாழ்வதையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கடைப் பிடிக்கிறான். இதுவே, பொருளாதாரம் மிகுந்தோ அல்லது எளிதில் கிடைக்கிற பட்சத்திலோ அவை குறைகிறது என்பதே.
//
Thats true, Now he is trying to understand/listen the issues with others point of view (Empathy).
//
ஆமாங்க! ஆமாங்க!!
வாழ்த்துக்கள்!!!
//நசரேயன் said...
வாழ்த்துக்கள்!!!
//
நன்றிங்க தளபதி!
Post a Comment