1/01/2009

எதுக்கு இந்த முதலைக் கண்ணீர்?

வணக்கம்! புத்தாண்டுக் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சது, இனியும் ரெண்டு நாள் விடுப்பு இருக்கு. இஃகிஃகி!! பாருங்க, அடங் கொன்னியான்னு ஒரு பதிவு போட்டப்ப, ஊர்ல பேருகெல்லாம் எப்பிடி மருவுதுன்னு பார்த்தோம். அப்ப, சுப்பிரமணியா கொப்புரவாயாங்ற பாட்டு நினைவுக்கு வந்துச்சு. சின்ன அம்மிணி அவிங்களும் அடுத்த வரிய எடுத்துக் குடுத்தாங்க, ஆனாலும் முழுப் பாட்டு ஞாவகத்துக்கு வரவே இல்லை.

வீதம்பட்டி வேலூர்ல ஆறாம் வகுப்புப் படிக்கும் போது, பொம்மநாயக்கன் பட்டி சுப்பிரமணியனும் எங்கூடப் படிச்சான். அவனைப் பாத்து இந்தப் பாட்டைப் பாடி வெறுப்பேத்தறது உண்டு. சரி, புத்தாண்டை சாக்கா வெச்சி, அவனுக்கு வாழ்த்து சொல்லுற மாதர கூப்ட்டு பாட்டைக் கேட்டு தெரிஞ்சிக்கிலாம்ன்னு நினைச்சேன், ஆனா அவிங்களைத் தொடர்பு கொள்ளுறதுக்கு எந்தத் தகவலும் இல்ல. ஒரு வழியா, இன்னோரு நண்பன் கார்த்திகிட்ட இருந்து தகவலை வாங்கி, பொம்மநாயக்கன் பட்டிக்கு ஒரு தாக்கலைப் போட்டேன்.

சுப்ரமணியர் வந்தாரு தொடர்புல. வந்து வாங்க, போங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டான். பேசிப் பல வருசம் ஆனதுனாலயும், நாம வெளிநாட்டுல இருக்குறதாலயும் அந்த அன்னியோன்யம் விலகிப் போயிருந்துச்சு. அப்புறம் நாமதான், நாம‌ இன்னும் அதே கெராமத்தான்னு சொல்லி நெலமையக் கட்டுக்குள்ள கொண்டு வந்தோம். தற்போதைய நெலவரங்களை எல்லாம் விசாரிச்சுட்டு, மெதுவா பள்ளிக்கூடத்துப் பக்கம் பேச்சைத் திருப்புனோம்.

"டேய் சுப்பா, சுப்ரமணியா கொப்புரவாயான்னு பாடுவமே, ஞாவகம் இருக்குதா?"

"ஆமாமா, அதெப்பிடி மறக்க முடியும்?"

"எனக்கு மறந்து போச்சுறா...சொல்லு பாக்கலாம்!"

"மணியம்மணியன் மாங்கா மடையன்...."

"டேய், நிறுத்து நிறுத்து! என்னையேண்டா இப்ப வம்புக்கு இழுக்குற?"

"ஆமா, பாட்டு இப்பிடித்தான ஆரம்பிக்கும்!"

"போடா, சுப்ரமணியா கொப்புரவாயான்னுதான....."

"போடா, உன்னையும் என்னையும் கிண்டல் பண்ணுறதுக்கு பரமசிவனும், மந்தராசலனும் பாடுவாங்க, நீ மறந்துட்ட போலிருக்கு?!"

தேவையில்லாம, புத்தாண்டு அன்னைக்குமதுவுமா, எங்கயோ போற ஓணானை எடுத்து மடியில உட்டுகிட்டம் போலிருக்குன்னு நினைச்சிட்டே...

"சரி! சரி!! சொல்லு..."

சுப்பிரமணியன் சொன்னதுல இருந்து,

மணியன்மணியன் மாங்காமடையன்
சுப்பிரமணியன் கொப்பரவாயன்
வெங்கட்ராமன் வெல்லந்திருடி
சென்னிய‌ப்பஞ் சோத்துராமன்
செந்தில்நாதஞ் செவுரேறி
மயில்சாமி ம‌ண்ணாங்க‌ட்டி
தாமோத‌ர‌ன் த‌ண்ட‌ச்சோறு
விசுவுநாத‌ங் குசுவுநாத‌ன்!

இப்பிடி அவங்கட்டப் பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலீங்க. கூடவே இன்னொரு தகவலும் உங்ககிட்டப் பேசணும் இன்னைக்கு... முதலைக் கண்ணீர், நீலிக்கண்ணீர்ன்னு எல்லாம் சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க. அதுகளுக்குண்டான பின்னணி என்ன?

நீலிக் கண்ணீர்: நீலிங்றது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள்ல வர்ற கதாபாத்திரமாமுங்க. இந்த நீலியுடைய அழுகைய‌ மனசுல வெச்சி, உவமைப்படுத்திப் பேசுறதுல இருந்து வந்ததுதானாம் இந்த நீலிக்கண்ணீர்.

முதலைக் கண்ணீர்: ஒரு சாரார் சொல்லுறது, முதலைனால அழ முடியாது. அதனால, பொய்யான அழுவாச்சிய, சாத்தியமில்லாத முதலையோட கண்ணீரோட ஒப்பிடறதுதான் இந்த முதலைக் கண்ணீர் (crying crocodile tears)ன்னு. ஆனா, முதலையால அழ முடியுமாமுங்க. ஆக, இது தப்புன்னு ஒரு சாரார் சொல்லுறாங்க. மேலும் அவிங்க சொல்லுறது என்னன்னா, தண்ணியில இருக்கும் முதலை வெளிய தலைய நீட்டும் போது எப்பிடி, நீர்த்திவலைகள் வடிஞ்சு போறது, அழற மாதிரித் தெரியுதோ, அது மாதிரியான ஒரு தோற்ற அழுகைன்னு சொல்லுறதுதான் முதலைக் கண்ணீர்.

புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்!
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்!!

40 comments:

muru said...

///மணியன் மணியன் மாங்கா மடயன்///

வெள்ளையா இருக்குறவனுக்கு கருப்பு சாமின்னு பேருவச்சமாதிரி இருக்கு.

நம்ம மணியண்ணன்
எவ்வளோ பெரிய அறிவாளி,
பழசல்லாம் தோண்டி எடுக்குற --ருசாளி,

அவரை போயி...

அந்த சுப்பிரமணி, பரமசிவன், மந்தராசலன் அண்ணங்க வீட்டு நம்பெர் தாங்க ஆட்டோ அனுப்பீரலாம்.

நான் தான் பஸ்டு...

நசரேயன் said...

நடிகர் நடிகளுக்கு பொருந்துமா இந்த நீலி கண்ணீர், முதலை கண்ணீர்

SUREஷ் said...

//நீலிக் கண்ணீர்//

அது ஒரு அழிவு சக்தி, அதானால்தான் அந்தப் பெயர்,

இராகவன் நைஜிரியா said...

//
"மணியம்மணியன் மாங்கா மடையன்...."

"டேய், நிறுத்து நிறுத்து! என்னையேண்டா இப்ப வம்புக்கு இழுக்குற?" //

இதுக்கு பேர்தான் காசு கொடுத்து சூன்யம் வச்சுகிறது அப்படிங்கிறதா?

அதுகூட சேர்த்துக்க வேண்டியது
நாராயண நாரயணா நாய் வாலு, நாரயணன் பொண்டாட்டி நரி வாலு

muru said...

அண்ணே, சுப்பர் பாட்டுண்ணே.,

அண்ணனுக்கு இன்னக்கி நல்லா கும்மி இருக்கு,

இது தான்
சொந்தக் காசுல
சூன்யம் வைக்கிறது..

பழமைபேசி said...

// muru said...
அண்ணே, சுப்பர் பாட்டுண்ணே.,

அண்ணனுக்கு இன்னக்கி நல்லா கும்மி இருக்கு,
//
வாங்க தம்பி, வணக்கம்! பெட்டியத் திறந்து விட்டுட்டேன்...இஃகிஃகி!

பழமைபேசி said...

//muru said...
///மணியன் மணியன் மாங்கா மடயன்///

அந்த சுப்பிரமணி, பரமசிவன், மந்தராசலன் அண்ணங்க வீட்டு நம்பெர் தாங்க ஆட்டோ அனுப்பீரலாம்.
//

கெராமத்துல இதெல்லாம் எடுபடாது இராசா....

பழமைபேசி said...

//நசரேயன் said...
நடிகர் நடிகளுக்கு பொருந்துமா இந்த நீலி கண்ணீர், முதலை கண்ணீர்
//

தளபதி, அவிங்களுக்கு இது பொருந்தாது.... நெச வாழ்க்கைல வேசங்கட்டுறவிகளுக்குத்தான்... நடிப்புத் தொழில்ல அழுதா, அது நடிப்பு அழுகை. நடிப்பிலயே, பொய் அழுகை வேசங்கட்டினா, அது நடிப்பு நீலிக் கண்ணீர்.... இஃகிஃகி!

பழமைபேசி said...

//SUREஷ் said...
//நீலிக் கண்ணீர்//

அது ஒரு அழிவு சக்தி, அதானால்தான் அந்தப் பெயர்,
//

அப்பிடீங்ளா...நீலிகேசத்துல நீலி அப்பிடி இல்லையாமே?

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
//
"மணியம்மணியன் மாங்கா மடையன்...."

"டேய், நிறுத்து நிறுத்து! என்னையேண்டா இப்ப வம்புக்கு இழுக்குற?" //

இதுக்கு பேர்தான் காசு கொடுத்து சூன்யம் வச்சுகிறது அப்படிங்கிறதா?

அதுகூட சேர்த்துக்க வேண்டியது
நாராயண நாரயணா நாய் வாலு, நாரயணன் பொண்டாட்டி நரி வாலு
//

இஃகிஃகி! மேலதிகப் பாட்டுக்கு நன்றிங்க!!

குடுகுடுப்பை said...

புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்!
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்!! //
ரெண்டுங்கெட்டான் மனசு வலைப்பதிவில் இருக்கும்

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்!
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்!! //
ரெண்டுங்கெட்டான் மனசு வலைப்பதிவில் இருக்கும்
//

நாம சொல்லுறது அரைவேக்காடு!

muru said...

/// சுப்பிரமணி, பரமசிவன், மந்தராசலன் அண்ணங்க வீட்டு நம்பெர் தாங்க ஆட்டோ அனுப்பீரலாம்.

கெராமத்துல இதெல்லாம் எடுபடாது இராசா....///

அப்ப ஆலமரத்து பஞ்சாயத்துல பிராது கொடுத்துற வேண்டியது தான்...

பழமைபேசி said...

//muru said...
/// சுப்பிரமணி, பரமசிவன், மந்தராசலன் அண்ணங்க வீட்டு நம்பெர் தாங்க ஆட்டோ அனுப்பீரலாம்.

கெராமத்துல இதெல்லாம் எடுபடாது இராசா....///

அப்ப ஆலமரத்து பஞ்சாயத்துல பிராது கொடுத்துற வேண்டியது தான்...
//

அஃகஃகா! இப்ப, நீங்க பிடிச்சீட்டீங்க.....

அது சரி said...

//
மணியன்மணியன் மாங்காமடையன்
//

இது நல்லாருக்கு :0))

எங்க ஸ்கூல்ல கொஞ்சம் வித்தியாசமா

"மணியன் மணியன் மாங்கா மண்டையன்"ன்னு பாடுவோம்....

//
நீலிக் கண்ணீர்: நீலிங்றது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள்ல வர்ற கதாபாத்திரமாமுங்க. இந்த நீலியுடைய அழுகைய‌ மனசுல வெச்சி, உவமைப்படுத்திப் பேசுறதுல இருந்து வந்ததுதானாம் இந்த நீலிக்கண்ணீர்.
//

நீலின்னா மோகினி...யட்சினி....நீலி மனுசங்களை மயக்குறதுக்கு செய்ற பல காரியத்துல ஒண்ணு கண்ணீர் விட்றது....ஜெயமோகன் கதைல படிச்சதுன்னு நினைக்கிறேன்...

//
முதலைக் கண்ணீர்: ஒரு சாரார் சொல்லுறது, முதலைனால அழ முடியாது.
//

முதலை அழும்...ஆனா அது கண்ணீர் இல்ல...It's just sweating??

Anonymous said...

//மணியன்மணியன் மாங்காமடையன்//

எனக்கென்னமோ இந்த வரி சுப்ரமணி மணியண்ணனை கலாய்க்கறதுக்காக சேத்துக்கிட்டமாதிரி தோணுது. எதுக்கும் பாத்து ஜாக்கிரதையா இருங்க. :)

நீலி said...

நான் கண்ணீர் வடிக்கறது ஊர்ல தண்ணீர்ப்பஞ்சத்தைப்பாத்துதான்

முதலை said...

மீன் அழுதால் யாருக்குத்தெரியும்?

பழமைபேசி said...

என்னை மாங்கா மடையன்னு திட்டிட்டார்ன் சுப்பரமணி, அதான் அழுவறேன். அஃகா அஃகா

பழமைபேசி said...

//அது சரி said...
//
மணியன்மணியன் மாங்காமடையன்
//

இது நல்லாருக்கு :0))

எங்க ஸ்கூல்ல கொஞ்சம் வித்தியாசமா

"மணியன் மணியன் மாங்கா மண்டையன்"ன்னு பாடுவோம்....
//

அஃகஃகா! அது சரி அண்ணாச்சி, வாய்ப்பை நல்லாப் பயன் படுத்திகிட்டாரு போல இருக்கு....அஃகஃகா!!

பழமைபேசி said...

// அது சரி said...

//
நீலிக் கண்ணீர்: நீலிங்றது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள்ல வர்ற கதாபாத்திரமாமுங்க. இந்த நீலியுடைய அழுகைய‌ மனசுல வெச்சி, உவமைப்படுத்திப் பேசுறதுல இருந்து வந்ததுதானாம் இந்த நீலிக்கண்ணீர்.
//

நீலின்னா மோகினி...யட்சினி....நீலி மனுசங்களை மயக்குறதுக்கு செய்ற பல காரியத்துல ஒண்ணு கண்ணீர் விட்றது....ஜெயமோகன் கதைல படிச்சதுன்னு நினைக்கிறேன்...

//
முதலைக் கண்ணீர்: ஒரு சாரார் சொல்லுறது, முதலைனால அழ முடியாது.
//

முதலை அழும்...ஆனா அது கண்ணீர் இல்ல...It's just sweating??
//

மேலதிகத் தகவலுக்கு நன்றி அண்ணே!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
//மணியன்மணியன் மாங்காமடையன்//

எனக்கென்னமோ இந்த வரி சுப்ரமணி மணியண்ணனை கலாய்க்கறதுக்காக சேத்துக்கிட்டமாதிரி தோணுது. எதுக்கும் பாத்து ஜாக்கிரதையா இருங்க. :)
//

ஆமாங்க, நானே உங்களக் கேக்கணும்ன்னு இருந்தேன்...

பழமைபேசி said...

//பழமைபேசி said...
என்னை மாங்கா மடையன்னு திட்டிட்டார்ன் சுப்பரமணி, அதான் அழுவறேன். அஃகா அஃகா
//

இப்ப அது சரி அண்ணாச்சியும் திட்டிட்டாரு.... ஞேஏஏஏஏஏஏஏஏஏஏஏ..ஃம்...

பழமைபேசி said...

//நீலி said...
நான் கண்ணீர் வடிக்கறது ஊர்ல தண்ணீர்ப் பஞ்சத்தைப்பாத்துதான்
//

ஏங்க ஒரு மணி நேரம் முன்கூட்டியே கடைய சாத்துறதுனால, தண்ணிப் பஞ்சம் வந்திடுச்சா? இதெல்லாம் நெம்ப அதிகம்!!!

பழமைபேசி said...

//முதலை said...
மீன் அழுதால் யாருக்குத்தெரியும்?
//

நீங்க பாத்து சொல்லலாமல்லோ?! இஃகிஃகி!!

பழமைபேசி said...

//muru said...

இது தான்
சொந்தக் காசுல
சூன்யம் வைக்கிறது..
//

:-o)

muru said...

\\\பழமைபேசி said...
//muru said...

இது தான்
சொந்தக் காசுல
சூன்யம் வைக்கிறது..
//

:-o)\\\

ஆமாண்ணே, உங்கள நேரடிய ஏதும் சொல்ல முடியாதவங்கல்லாம், பாட்டோட மொத வரிய திரும்ப திரும்ப பயன் படுத்துறாங்க.

சரி விடுங்க, எல்லாம் அன்பால சேர்த்தக் கூட்டம் தானே.

இக்கி...இக்கி...

பழமைபேசி said...

//muru said...

சரி விடுங்க, எல்லாம் அன்பால சேர்த்தக் கூட்டம் தானே.
//

ஆமுங்க, சரியாச் சொன்னீங்க...

Viji said...

:)))

Mahesh said...

நல்ல நினைவோடை...

நாங்களும் கபடி விளையாட்டு விளையாடும்போது இதுமாதிரி பலது இட்டுக்கட்டி மூச்சு விடாம பாடுவோம்... அதுல சீனிவாசன்னு ஒருத்தன் எப்பவும் மாட்டுவான்... பாவமா இருக்கும்.

கபடில எங்களுக்கு ரொம்ப பாப்புலர் பாட்டு..

'நாந்தாண்டங்கொப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளிப் பிரம்பெடுத்து
வெளையாட வந்தண்டா...வந்தண்டா...வந்தண்டா...வந்தண்டா...வந்தண்டா...வந்தண்டா...வந்தண்டா...'

கதிர் said...

//சுப்ரமணியர் வந்தாரு தொடர்புல. வந்து வாங்க, போங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டான். பேசிப் பல வருசம் ஆனதுனாலயும், நாம வெளிநாட்டுல இருக்குறதாலயும் அந்த அன்னியோன்யம் விலகிப் போயிருந்துச்சு.//
நாமுலுங்கூட இப்பிடிதேனுங்க..... ரம்ப நாள் கழிச்சு பழைய கூட்டாளிய பாத்தா.... வாங்க போங்கோனுதா சொல்லவேண்டிருக்கு......

பழமைபேசி said...

//Viji said...
:)))
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

//Mahesh said...
நல்ல நினைவோடை...
//

வாங்க மகேசு, வணக்கம்! ஆமாங்கோ...நன்றிங்கோ...

பழமைபேசி said...

//கதிர் said...
நாமுலுங்கூட இப்பிடிதேனுங்க..... ரம்ப நாள் கழிச்சு பழைய கூட்டாளிய பாத்தா.... வாங்க போங்கோனுதா சொல்லவேண்டிருக்கு......
//

அதேனுங்க அப்பிடி?

கபீஷ் said...

உங்கள் பெயருடன் தொடங்கும் பாட்டு நல்லாருக்கு. வேற எதாவது நண்பருடன் தொடர்பு கொள்ள பாருங்கள். இதே மாதிரி உங்க பேரோட வேற பாட்டு கிடைக்கும்.

தொடர்பு விட்டு நிறைய நாளானால் சிலர் வாங்க போங்கன்னு கூப்பிட ஆரம்பிச்சிருவாங்க. நானும் அப்பிடித்தான் :-(

ஊர் சுற்றி said...

பாட்டு நன்றாக இருந்தது.
தொலைத்து விட்ட நண்பர்களை தேடிப்பிடிப்பதில் இருக்கிறது ஒரு இனிமை.

அப்புறம், இந்த முதலைக்கண்ணீர் பற்றி அதிகத் தகவல்களுக்கு புருனோ அவர்களின் இந்த இடுகையை வாசிக்கலாம்.
http://www.payanangal.in/2009/01/blog-post.html

பழமைபேசி said...

//கபீஷ் said...
உங்கள் பெயருடன் தொடங்கும் பாட்டு நல்லாருக்கு. வேற எதாவது நண்பருடன் தொடர்பு கொள்ள பாருங்கள். இதே மாதிரி உங்க பேரோட வேற பாட்டு கிடைக்கும்.//

என்னை வம்பிழுக்குறதுல உங்களுக்கும் ஒரு மகிழ்ச்சியா? இருக்கட்டு, இருக்கட்டு!! :-o)

//தொடர்பு விட்டு நிறைய நாளானால் சிலர் வாங்க போங்கன்னு கூப்பிட ஆரம்பிச்சிருவாங்க. நானும் அப்பிடித்தான் :-(
//

அதான்... ஏனுங்றேன்?

பழமைபேசி said...

//ஊர் சுற்றி said...
பாட்டு நன்றாக இருந்தது.
தொலைத்து விட்ட நண்பர்களை தேடிப்பிடிப்பதில் இருக்கிறது ஒரு இனிமை. //

ஆமாங்கோ... வருகைக்கு நன்றிங்கோ....

//அப்புறம், இந்த முதலைக்கண்ணீர் பற்றி அதிகத் தகவல்களுக்கு புருனோ அவர்களின் இந்த இடுகையை வாசிக்கலாம்.
http://www.payanangal.in/2009/01/blog-post.html
//

பார்த்தனுங்கோ...

புருனோ Bruno said...

http://www.payanangal.in/2009/01/blog-post.html

பழமைபேசி said...

//புருனோ Bruno said...
http://www.payanangal.in/2009/01/blog-post.html
//

படிச்சனுங்க ஐயா... தெளிவா எழுதி இருந்தீங்க... நன்றி!