1/27/2009

அமெரிக்காவில் வேலை இழப்பு!


வேலை இழப்பு பற்றின செய்திகள்தாங்க எங்க பார்த்தாலும்! நானும் படிக்க வந்த காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும், இதோ அங்க வேலைக் குறைப்பு, இதோ இங்க பணியாள்க் குறைப்புங்ற புலம்பலை அப்பப்ப கேக்குறது வழமையான ஒன்னுதான். அதே நேரத்துல, அங்கங்க வேலையும் கிடைச்சுட்டு இருந்தது.

இப்ப நம்ம பொழப்பு, பொட்டி தட்ட, பொட்டிய எடுத்துட்டு, பொட்டி கட்டி பிரயாணஞ் செய்யுற பொழப்பு பாருங்க, நிறைய பேரை பார்த்துப் பேசுற வாய்ப்பு. நிறைய தகவல்களைத் தெரிஞ்சுக்க முடியுது. இப்பத்த நிலைமை ஒன்னும் சரியில்லைங்க! பொதுவா, நாட்டுக்கு வெளில இருந்து பார்க்குற நிறைய பேருக்கு அமெரிக்கர்கள்ன்னா ஆகாமலோ, அல்லது அவிங்க எல்லாம் பெரிய ஆளுகங்ற நினைப்பு இருக்கும். ஆனாப் பாருங்க, அவிங்க அப்பிடிக் கிடையாதுங்க. ரொம்ப நல்லவிங்க! இன்னுஞ் சொல்ல‌ப் போனா, வெகுளிங்க‌.

எதையும் நேர்ம‌றையாவே சிந்திக்கிற‌ ஆட்க‌ள். துய‌ர‌ம் வ‌ரும், துன்ப‌ம் வ‌ரும்ன்னெல்லாம் நினைச்சிப் பாக்கிற‌து கிடையாது. கிராம‌ச் சூழ்நிலையில‌, மிச்சிக‌ன் மாகாண‌ம், மார்ச‌ல்ங்ற‌ ஒரு கிராம‌த்துல ஒரு ரெண்டு வ‌ருச‌ம் இருந்த‌னுங்க‌. ரொம்ப‌ ந‌ல்ல‌ ஊர். பெரும்பாலான‌ வீடுக‌ள் பூட்ட‌வே மாட்டாங்க‌. க‌டைக‌ள் திற‌ந்தே இருக்கும், வேண்டிய‌ பொருட்க‌ளை எடுத்திட்டு காசைப் போட்டுட்டு, அல்ல‌து க‌ட‌ன‌ட்டைய‌ இழுத்திட்டு வ‌ர‌ வேண்டிய‌துதான். அப்பிடி இருந்த‌ ஊர்ல‌, இப்ப‌ ஒரு வீடு சொற்ப விலையில!!

அதை விடுங்க, நான் இப்ப தங்கி இருக்குற விடுதியில மொத்தம் 265அறைகள், பிலடெல்பியா நகரத்தின் மையப் பகுதியில இருக்குற நட்சத்திர‌ விடுதி. வெறும் 35 அறைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர் வந்திருக்காங்களாம். வேலை செய்யுற ஊழியர் பரிதாபமா சொல்லிட்டுப் போறாரு. பத்திரிகைகள்ல பார்த்து இருப்பீங்க, ஆட்குறைப்பு பற்றின செய்திகளை. உண்மையில சொல்லப் போனா, அது பெரிய நிறுவனங்களால முறையா அறிவிப்புச் செய்தது மட்டுந்தான். அது தவிர நிறைய வேலை இழப்பு இருக்கும் போல இருக்கு.

பொருளாதாரம் சரி இல்லைன்னா, குற்ற நடவடிக்கைகள் எங்கயும் பெருகத்தான் செய்யும். அதேபோல இங்கயும் அதிகரிச்சுட்டுதான் வருது. கூடவே, சமூகச் சிக்கல்கள், தற்கொலைகள் அப்பிடி இப்பிடின்னு செய்திகள். சரி, நாம அதுக்கு என்ன செய்யுறது? நம்மால ஒன்னும் செய்திட முடியாதுதான், ஆனா, நாம நம்ம பொழப்பைக் காப்பாத்தி ஆகணுமே?!

ஆமுங்க, அதிக ஊதியத்துக்கு வேற வேலைங்றது இந்தத் தருணத்துல கடுமையா யோசிக்க வேண்டிய விசயம். இருக்குற இடத்துலயே, மகிழ்வா இருந்து காலத்தை ஓட்டலாம். வீட்டுக் கடன்களை, குறைந்த வட்டிக்கு மாற்றலாம். பாதுகாப்புப் பெட்டகத்துல விலை மதிப்புள்ள பொருட்களை வெச்சிட்டு, வீட்ல நிம்மதியா இருக்கலாம். கையில எப்பவும், இருபது வெள்ளி வெச்சிருக்குறது உசிதம்.

விளம்பரங்களைப் பார்க்காமலே தவிர்க்கலாம். இஃகிஃகி! வெளிநாட்டுல இருந்து, இங்க படிக்க வர்றவிங்க அதை மறுபரிசீலனை செய்யலாம். நெடிய விடுமுறைல போக நினைக்குறவிங்க அதைத் தவிர்க்கலாம். இப்படி எத்தனையோ முன்யோசனை நடவடிக்கைகள் எடுத்து சிக்கனமா இருக்குறது உசிதம்.

வேலைப் பளு நிச்சயம் கூடும். ஆகவே, வீட்ல இருக்குறவிங்ககிட்ட கலந்து பேசி அதுக்கு தகுந்தமாதிரி வாழ்க்கைமுறைய சமச்சீராக்கலாம். இப்பவே, செய்ய வேண்டிய வருடாந்திர, வழமையான மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகளை செய்து முடிச்சிடலாம். ஆமா, இதென்ன? அறிவுரை அழகர்சாமிங்ற‌ நினைப்பான்னு கேட்டுடாதீங்க. எனக்கு நானே சொல்லிப் பார்த்ததோட நகல்தான் இது. என்னோட புலம்பலை உங்க காதுலயும் போட்டு வெக்கிறேன், அம்புடுதேன்!!

மந்திரம் கால்; மதி முக்கால்!

எது எப்படியானா என்ன? எதிர்காலம் இருக்கு,
ஒவ்வொரு நாளும் இனிமை கொள்ளவே!
எழு, விழி, செல்!!

30 comments:

இராகவன் நைஜிரியா said...

அமெரிக்கா மட்டுமல்ல, இது உலக முழுக்க உள்ள பிரச்சினைதான்.

இப்போதுள்ள சூழ்நிலையில், இருக்கும் வேலையில் இருப்பதே மிக நல்லது. வேறு வேலைக்கு மாறாதிருப்பது மிக மிக நல்லது

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
அமெரிக்கா மட்டுமல்ல, இது உலக முழுக்க உள்ள பிரச்சினைதான்.

இப்போதுள்ள சூழ்நிலையில், இருக்கும் வேலையில் இருப்பதே மிக நல்லது. வேறு வேலைக்கு மாறாதிருப்பது மிக மிக நல்லது

January 28, 2009
//

வாங்க ஐயா! வணக்கம்!! அங்கயும் அப்பிடித்தானுங்களா??

இராகவன் நைஜிரியா said...

இங்க மட்டுமல்ல, கிட்டதட்ட எல்லா உலக நாடுகளிலுமே இதுதான் நிலைமை.

நண்பர்கள் எல்லா நாடுகளிலும் இருப்பதால், அங்கிருந்து நிறைய விஷயங்கள் வருகின்றன.

எதுவுமே சொல்லி கொள்கிறமாதிரி இல்லை.

இராகவன் நைஜிரியா said...

அது சரி அங்கு மணி 12 நடு இரவாச்சே... தூங்கப் போகவில்லையா?

பழமைபேசி said...

போய்ட்டே இருக்கேன்....நாளைக்கு சந்திக்கலாமுங்க...நன்றி, வணக்கம்!

thevanmayam said...

ஆமா, இதென்ன? அறிவுரை அழகர்சாமிங்ற‌ நினைப்பான்னு கேட்டுடாதீங்க. எனக்கு நானே சொல்லிப் பார்த்ததோட நகல்தான் இது. என்னோட புலம்பலை உங்க காதுலயும் போட்டு வெக்கிறேன், அம்புடுதேன்!! //

வளைகுடா நாடுகள்,இந்தியா என்று வேலை இழப்பு எல்லா இடத்திலும்
உள்ளது...

Mahesh said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தலய விரிச்சுப் போட்டு ஆடிச்சாம்.... அப்பிடியில்ல இருக்கு இந்த வேலை இழப்பு ப்ரச்னை... நல்ல செய்தி கேட்டு/படிச்சு மாசம் 4 ஆச்சு. பேங்கு திவால், இத்தன பில்லியன் நட்டம், இத்தன லட்சம் பேருக்கு வேல போச்சு... என்னமோ போங்க? உங்க அறிவுரை அவசியமான ஒண்ணு.

சுல்தான் said...

//ஆனாப் பாருங்க, அவிங்க அப்பிடிக் கிடையாதுங்க. ரொம்ப நல்லவிங்க! இன்னுஞ் சொல்ல‌ப் போனா, வெகுளிங்க‌.//
தேவையில்லாம குண்டு போட்டு நாட்டையே அழிக்கறான். அவனுக்கே ஓட்டுப் போட்டு திரும்பவும் பதவியில் விடுறான். எனக்கொன்னுமே புரியில.
அப்ப தலைவர்கள்தான் சரியில்லன்றீங்களா?

மற்றபடி இங்கேயும் அதே ஆள்குறைப்புதான்.
விளம்பரத்தையே பார்க்கக் கூடாதுங்கிறது நல்ல ஐடியா.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....
போரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....
நன்றி ...

பழமைபேசி said...

// thevanmayam said...
வளைகுடா நாடுகள்,இந்தியா என்று வேலை இழப்பு எல்லா இடத்திலும்
உள்ளது...//

வாங்க ஐயா, அப்பிடிங்ளா? விரைவா நிலமை சீரடையணும்....

பழமைபேசி said...

//Mahesh said...
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தலய விரிச்சுப் போட்டு ஆடிச்சாம்.... //

வாங்க மகேசு அண்ணே, ஒன்னு போயி ஒன்னு துரத்திட்டே இருக்கு.... கடைசியா, அமைதியும்/சமாதானமும் துரத்தினாச் சரி!

பழமைபேசி said...

//சுல்தான் said...
தேவையில்லாம குண்டு போட்டு நாட்டையே அழிக்கறான். அவனுக்கே ஓட்டுப் போட்டு திரும்பவும் பதவியில் விடுறான். எனக்கொன்னுமே புரியில.
அப்ப தலைவர்கள்தான் சரியில்லன்றீங்களா?
//

நீங்க சொல்லுறது சரிதானுங்க ஐயா, சாமன்யன் எல்லார்த்தையும் பார்த்திட்டு பரிதாபம்தான் படுறான்... எல்லாம் மேல மேல மேல இருக்குறவிங்க முடிவு செய்யுறதுதானுங்ளே? பத்து வெள்ளி, பதினொரு வெள்ளிக்கு வேலை பாக்குறவனுக்கு இதெல்லாம் என்னன்னு கூடத் தெரியாதுங்க.

பழமைபேசி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....
போரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....
நன்றி ...
//

வாங்க, கண்டிப்பா...ஏற்கனவே பல பதிவுகள் போட்டிருக்கேன்....இனியும் வரும்...நன்றிங்க!

PoornimaSaran said...

எது எப்படியானா என்ன? எதிர்காலம் இருக்கு,
ஒவ்வொரு நாளும் இனிமை கொள்ளவே!


நிஜமே!!

குடுகுடுப்பை said...

ஆமாங்க நிலைமை படு மோசம்.வேலையில் ரொம்ப கவனமா இருக்கனும்.

அமெரிக்கா தவறுகளை திருத்திக்கொண்டு மறுபடியும் எழும் என நம்புவோம்.

வேத்தியன் said...

வேலை கிடைச்சு செட்டில் ஆனவனுக்கே இந்த நிலைமைன்னா இனிமே படிச்சு வேலை தேடுறவங்களுக்கு என்ன நிலைமை???

அன்புமணி said...

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே! கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது. காலத்துக்கு ஏற்ற பாட்டு.

நசரேயன் said...

நான் பெட்டியை கட்டிக்கிட்டு தயாரா இருக்கேன் ஊருக்கு போக

முருகேசன் said...

நான் கூட அப்பிடி தாங்க!! எப்படா வேல போகும் எப்படா ஊருக்கு போலாம்னு இருக்கேன்!! நான் இல்லாம கோயம்புத்தூர்ரே வாடி போய் கெடக்கு!!

S.R.ராஜசேகரன் said...

பொது மக்களுக்கு ஒரு அறிவிப்பு:
நம்ம பழமை பேசி ஒரு பதிவு போட்டு எல்லாருக்கும் பீதிய கெளப்பி எல்லாத்தியும் ஊருக்கு கெளப்பும் வேலைய பாத்துக்கிட்டு இருக்காரு .தயவு செய்து அவரு பேச்சை நம்பி யாரும் இந்தியாவுக்கு வர வேண்டாம் .ஏன்னா ஊரு இப்பதான் கொஞ்ச வருசமா நிம்மதியா இருக்கு
அதுல மன்ன அள்ளி போட்டுராதிங்க

பழமைபேசி said...

//PoornimaSaran said...
எது எப்படியானா என்ன? எதிர்காலம் இருக்கு,
ஒவ்வொரு நாளும் இனிமை கொள்ளவே!
நிஜமே!!
//

வாங்க, வணக்கம், நன்றிங்க!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
அமெரிக்கா தவறுகளை திருத்திக்கொண்டு மறுபடியும் எழும் என நம்புவோம்.
//

ஆமாங்கண்ணே...

பழமைபேசி said...

//வேத்தியன் said...
வேலை கிடைச்சு செட்டில் ஆனவனுக்கே இந்த நிலைமைன்னா இனிமே படிச்சு வேலை தேடுறவங்களுக்கு என்ன நிலைமை???
//

அதெல்லாங் கிடைக்கும்...நாளை நமதே!

பழமைபேசி said...

//அன்புமணி said...
இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே! கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது. காலத்துக்கு ஏற்ற பாட்டு.
//

அங்கயுந்தான் பிரச்சினைங்றாங்குளே?

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் பெட்டியை கட்டிக்கிட்டு தயாரா இருக்கேன் ஊருக்கு போக//


//முருகேசன் said...
நான் கூட அப்பிடி தாங்க!! எப்படா வேல போகும் எப்படா ஊருக்கு போலாம்னு இருக்கேன்!! நான் இல்லாம கோயம்புத்தூர்ரே வாடி போய் கெடக்கு!!
//

அடேங்கப்பா.... அப்ப நீங்க பொட்டியக் கட்டுங்க.... வேற ரெண்டு பேருக்கு அந்த வேலை கிடைக்கட்டும்....இஃகிஃகி!

பழமைபேசி said...

// S.R.ராஜசேகரன் said...
ஏன்னா ஊரு இப்பதான் கொஞ்ச வருசமா நிம்மதியா இருக்கு
அதுல மன்ன அள்ளி போட்டுராதிங்க
//

புளியங்குடியார்...இப்ப்டிச் சொல்லிப்புட்டீங்களே? வந்தா, பாத்துக் கவனீங்க என்ன?!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்போதுள்ள சூழ்நிலையில், இருக்கும் வேலையில் இருப்பதே மிக நல்லது. வேறு வேலைக்கு மாறாதிருப்பது மிக மிக நல்லது //

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்

மிக நல்ல பதிவு.

S.R.ராஜசேகரன் said...

\\புளியங்குடியார்...இப்ப்டிச் சொல்லிப்புட்டீங்களே? வந்தா, பாத்துக் கவனீங்க என்ன?!]\\\


அடடா சும்மா ஒரு கலாய்ப்பு தான் ஊருக்கு வாங்க மாப்பு

வில்லன் said...

சரி விடுங்க. ஒன்னும் கவலை படாதிங்க. கைத்தொழில் தெரிஞ்ச போலசுக்கலாம். ஒரு வேலையும் இல்லன்னாலும் இங்க இல்ல ஊருல போயி மாடு மேக்க ஆரம்பிச்சுரலாம். எனக்கெல்லாம் நல்ல முன் அனுபவம் இருக்கு அதுல. அதனால இதபத்தி இப்போதக்கி ஒன்னும் கவலைபடுற மாதிரி இல்ல. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி.

வில்லன் said...

//நசரேயன் said...
நான் பெட்டியை கட்டிக்கிட்டு தயாரா இருக்கேன் ஊருக்கு போக//

நானும் தான்.