1/12/2009

துக்ளக் மகேசு, மோகன் கந்தசாமி, மதிபாலா ஆகியோருக்கு விருது!

வணக்கம்! எனக்கு ஒரு பெட்டியும் கிடைச்சு, அதுல கண்டதையும் தட்டி, வலைப்பூங்ற பேர்ல எழுதினதுக்கு விருதாமுங்க. சரி, வேண்டாம்ன்னு சொல்லுற அளவுக்கு நாம பெரிய ஆளா என்ன? மகிழ்வா வாங்கிக்கிடுவோம். கொடுத்த அன்பர் ஸ்ரீராம் அவிங்களுக்கு நன்றி!

அமெரிக்காவுல, இன்னைக்கு இருக்கிற வேலைய காப்பாத்திக்கிறதுங்றது நெம்ப முக்கியமுங்க. அதான், வலைப்பூ பக்கம் மொதல்மாதர வர முடியறது இல்லை. இன்னைக்குதான் அவகாசம் கிடைச்சது. கிடைச்ச நேரத்துல பாருங்க, நடிகவேள் M.R இராதா, கர்மவீரர் காமராசர், கலைஞர் அவிங்க பேரறிஞர் அண்ணாவுக்கு படைச்ச கவிதாஞ்சலி மற்றும் கவியரசருக்கான நினைவு கூறல்ன்னு பழம் பேச்சுகளைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு, நிறைய தகவல்களும். இதோ, இந்தச் சுட்டியில, இன்னும் பிரபலமான நிறைய பேச்சுகளுக்கான காணொளி இருக்கு.அன்னக்கி என்ன பேசுனாங்கன்னு கேளுங்க! (நன்றி: கணேஷ் சந்திரா)

அன்னக்கி என்ன பேசுனாங்கன்னு கேளுங்க-2


இந்தச் சுட்டியும், எனக்கு கிடைச்ச வண்ணத்துப்பூச்சி விருதையும் மகேசு, மோகன் கந்தசாமி, மதிபாலா அவிங்களுக்கு பிரிச்சிக் குடுக்கிறேன். இவிங்க எல்லாரும் நெம்ப நல்லா எழுதிட்டு வர்றாங்க... நமக்கெதுக்கு, அதான் அவிங்களுக்கு குடுத்திடலாம்! இஃகிஃகி!!

காக்கை பகுத்து உண்ணும்!

23 comments:

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//நசரேயன் said...
வாழ்த்துக்கள்
//

நன்றிங்க தளபதி!

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் பழமைபேசி..

மேன் மேலும் பல விருதுகள். வலைப்பூவிலும், வாழ்கையிலும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருளுவராக.

செந்தழல் ரவி said...

டமில்மனம் விருது அறிவித்துட்டாங்களோன்னு நினைச்சேன்...

பரவால்ல பட்டாம்பூச்சி விருது கூட நல்ல விருது தான்...

உங்க வலைப்பதிவுல இமேஜ் ஆக அதை போடுங்க...

உங்களுக்கு விருது குடுத்தா அதை எப்படி நீங்க அடுத்தவங்களுக்கு கொடுக்கமுடியும் ?

இது என்ன 3ஜி ஸ்பெக்ட்ரமா ? நீங்க வாங்கி உள்வாடகைக்கு உடுறதுக்கு ?

சரி போனாப்போவுது அமைச்சரே...

உங்கள் சிந்தனையும் செயலாற்றலும் அப்படியே என்னைப்போலவே (குறுக்குமறுக்கா) இருக்கின்றது...

வரலாறு முக்கியம் அமைச்சரே !!!

viji said...

வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள் பழமைபேசி..

மேன் மேலும் பல விருதுகள். வலைப்பூவிலும், வாழ்கையிலும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருளுவராக.
//


நன்றிங்க! நன்றிங்க!! நன்றிங்க!!!

வேத்தியன் said...

வாழ்த்துக்கள் தோழரே...

PoornimaSaran said...

வாழ்த்துக்கள் பழமைபேசி:))

Anonymous said...

Congrats to all

Anonymous said...

விருது பெற்றவர்கள், குடுத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//செந்தழல் ரவி said...
டமில்மனம் விருது அறிவித்துட்டாங்களோன்னு நினைச்சேன்...

பரவால்ல பட்டாம்பூச்சி விருது கூட நல்ல விருது தான்...

உங்க வலைப்பதிவுல இமேஜ் ஆக அதை போடுங்க...

உங்களுக்கு விருது குடுத்தா அதை எப்படி நீங்க அடுத்தவங்களுக்கு கொடுக்கமுடியும் ?

இது என்ன 3ஜி ஸ்பெக்ட்ரமா ? நீங்க வாங்கி உள்வாடகைக்கு உடுறதுக்கு ?

சரி போனாப்போவுது அமைச்சரே...

உங்கள் சிந்தனையும் செயலாற்றலும் அப்படியே என்னைப்போலவே (குறுக்குமறுக்கா) இருக்கின்றது...

வரலாறு முக்கியம் அமைச்சரே !!!
//

நன்றிங்க ரவி!

Natty said...

என்னே ஒரு பணிவு... உங்களுக்கு அவார்டு குடுத்தா, இப்படி ஒரு தலைப்பு வைச்சு எல்லாரையும் கவர் பண்ணிட்டீங்க... தலைவா.. நீங்க எதிர்காலத்துல பெரிய புள்ளியா வர வாய்ப்பு அதிகம் தலைவா...

பழமைபேசி இரசிகர் மன்றம்,
ஹவாய்

கபீஷ் said...

மதுபாலா ன்னு தான் இன்னும் தலைப்புல இருக்கு. பதிவில சரியா இருக்கு

பழமைபேசி said...

// viji said...
வாழ்த்துக்கள்
//

நன்றிங்க விஜி...

பழமைபேசி said...

//வேத்தியன் said...
வாழ்த்துக்கள் தோழரே...//
//PoornimaSaran said... //
//Sriram said... //
//சின்ன அம்மிணி said... //


நன்றிங்க வேத்தியன், PoornimaSaran, Sriram, சின்ன அம்மிணி!

பழமைபேசி said...

//Natty said...
என்னே ஒரு பணிவு... உங்களுக்கு அவார்டு குடுத்தா, இப்படி ஒரு தலைப்பு வைச்சு எல்லாரையும் கவர் பண்ணிட்டீங்க... தலைவா.. நீங்க எதிர்காலத்துல பெரிய புள்ளியா வர வாய்ப்பு அதிகம் தலைவா...

பழமைபேசி இரசிகர் மன்றம்,
ஹவாய்
//


ஆகா, வாங்க அவாய்க்காரங்க வாங்க! நன்றிங்க!!

பழமைபேசி said...

//கபீஷ் said...
மதுபாலா ன்னு தான் இன்னும் தலைப்புல இருக்கு. பதிவில சரியா இருக்கு
//

நொம்ப நன்றிங்க.... நான் நெசமாலுமே கவனிக்கலைங்க... அதான் நம்ப இளைய குத்தூசி இரவி அய்யா, அவரு பாணியில போட்டுத் தாக்கினாரா?!

Mahesh said...

இதுதாங்க உண்மைலயே "நமக்கு நாமே" திட்டம்.

ரொம்ப நன்றிங்க.. இந்த பொங்கலுக்கு எனக்கு இரட்டிப்பு இனிப்பா நீங்க, தாமிரா ரெண்டு பேரும் விருது குடுத்துட்டீங்க. ரொம்ப நன்றி.

இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

thevanmayam said...

என்ன சாமி!
வேளைப்பளுவில்
வராம விட்டிங்களே!!
விருது
இப்பத்தான்
தருகிறாங்களா?
நீங்க அந்த
நிலைக்கு
மேல
போயிட்டிங்க!!

தேவா...

பழமைபேசி said...

@@Mahesh
@@thevanmayam

நன்றிங்க!

பழமைபேசி said...

மோகன் வந்துட்டாரு, மதிபாலா ஆளே காணோம்?!

மதிபாலா said...

அண்ணா , இப்படியொரு மேட்டரு ஓடிகிட்டு இருக்கறதே தெரியாம போச்சுங்கண்ணா , அது சனவரி மாசம் ஊருக்கு போயிருந்தேனா.

நம்ம பங்காளி , வங்காளி ஊருக்கெல்லாம் போயி ரொம்ப பிஸியோ பிஸியோ ஆகிட்டேனா.......அப்பறம் இப்பத்தான் இந்தோனேசியா வந்தேன் , வேலைக்கு ஜாயின் பண்ணியாச்சா , இப்பதான் நேரம் கெடச்சுது.

உங்க விருதுக்கு ரொம்ப நன்றிங்ணா...

உங்க பரந்த மனப்பான்மைக்கு நெம்ப கடமப்பட்டுருக்குறோம். !

ரொம்ப லேட் என் ட்டிரி.....


சாரிங்ணா

பழமைபேசி said...

// மதிபாலா said... உங்க விருதுக்கு ரொம்ப நன்றிங்ணா...

உங்க பரந்த மனப்பான்மைக்கு நெம்ப கடமப்பட்டுருக்குறோம். !

ரொம்ப லேட் என் ட்டிரி.....
//

வாங்க வணக்கம்! உங்களோட எழுத்துக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்... வாழ்த்துகள்!