1/06/2009

சித்தம் போக்கு சிவன் போக்கு!

வணக்கம் அன்பர்களே, வணக்கம்! சாம்பலை உடல் எல்லாம் பூசிட்டு இருக்குற சிவபெருமானை, அவர் விசித்திரமாகவும் வினோதமாவும் இருக்குறதப் பாத்துட்டு, பித்தன்னும் வர்ணிக்கறது உண்டு. அந்தப் பின்னணியில, சித்தபிரமை பிடிச்சவங்க சிவன் மாதிரி பித்துப் பிடிச்சவங்களைப் போல இருப்பாங்கன்னு சொல்லுறதுதாங்க, சித்தம் போக்கு சிவன் போக்கு. இஃகிஃகி!

சித்தபிரமை = மனம் பிறழ்தல்

இராகவன் நைஜிரியா: நண்பரே...சித்தர்கள் சிவனை நினைத்து தவம் செய்வார்கள். அவர்கள் நினைப்பு முழுவதும் சிவனைப் பற்றி இருக்கும். அவர்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள்.சித்தர் போக்கு - சித்தர் நினைவுகள்சிவன் போக்கு - சிவனுடைய நினைவுகள் இது தான் நான் கேள்விபட்ட விஷயம்.

Mahesh : மணியாரே... இப்பிடியும் இருக்கலாம்... ஆனா நான் கேட்ட வரை (சுகி சிவம்) மனத்தைக் கட்டுப்படுத்துவது ஆண்டவன் செயல் என்ற அர்த்தத்தில் "சித்தம் (மனம்) போக்கு சிவன் (ஆண்டவன்) போக்கு". ஆண்டவன் சொல்றான் ; அருணாச்சலம் செய்யறான் மாதிரி...

புதுகை.அப்துல்லா: சிவம் என்பதை இறைநிலை அல்லது இறைவன். பொதுவாக இறைநிலையை அடைய அல்லது உணர முற்படும் ஞானிகள்(சித்தர்கள்) அந்தச் சிந்தனையைத் தவிர வேறு எந்த கவன நிலையிலும் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி தீட்சை பெற்ற அல்லது முரீது(இஸ்லாமிய வழக்கில் உள்ளது) பெற்ற ஞானிகள் தங்கள் ஒவ்வொரு அசைவையையும் இறைவனே நடத்துவதாக அல்லது தீர்மானிப்பதாக கூறுவார்கள். இறைவனின் போக்கிலேயே சித்தர்கள் போவதால் சித்தன் போக்கு சிவன் போக்கு என்றானது என அறிஞர் கருதுகின்றார்.




உறவு போகாமல் கெட்டது! கடன் கேட்காமல் கெட்டது!!

24 comments:

குடுகுடுப்பை said...

ஐடியா கொடுத்த எனக்கும் சித்த பிரம்மை புடிச்சது போலதான் இருக்கு

நசரேயன் said...

நல்லாத்தானே இருக்கீங்க

வேத்தியன் said...

சரிதான் சரிதான்...
யோசிச்சுப் பார்த்தா இதுவும் ஒரு வகையில சரியாத்தான் இருக்கு...

இராகவன் நைஜிரியா said...

நண்பரே...

சித்தர்கள் சிவனை நினைத்து தவம் செய்வார்கள். அவர்கள் நினைப்பு முழுவதும் சிவனைப் பற்றி இருக்கும். அவர்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள்.

சித்தர் போக்கு - சித்தர் நினைவுகள்
சிவன் போக்கு - சிவனுடைய நினைவுகள்

இது தான் நான் கேள்விபட்ட விஷயம்.

சரியா என்று சொல்லுங்களேன்..

Mahesh said...

மணியாரே... இப்பிடியும் இருக்கலாம்... ஆனா நான் கேட்ட வரை (சுகி சிவம்) மனத்தைக் கட்டுப்படுத்துவது ஆண்டவன் செயல் என்ற அர்த்தத்தில் "சித்தம் (மனம்) போக்கு சிவன் (ஆண்டவன்) போக்கு".

ஆண்டவன் சொல்றான் ; அருணாச்சலம் செய்யறான் மாதிரி...

அமிர்தவர்ஷினி அம்மா said...

சரிப்பா சித்தன் போக்கு, சிவன் போக்குன்னு நான் போயிடறேன்.

Anonymous said...

திருவெம்பாவை நல்வாழ்த்துகள்!

புதுகை.அப்துல்லா said...

சிவம் என்பதை இறைநிலை அல்லது இறைவன். பொதுவாக இறைநிலையை அடைய அல்லது உணர முற்படும் ஞானிகள்(சித்தர்கள்) அந்தச் சிந்தனையைத் தவிர வேறு எந்த கவன நிலையிலும் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி தீட்சை பெற்ற அல்லது முரீது(இஸ்லாமிய வழக்கில் உள்ளது) பெற்ற ஞானிகள் தங்கள் ஒவ்வொரு அசைவையையும் இறைவனே நடத்துவதாக அல்லது தீர்மானிப்பதாக கூறுவார்கள். இறைவனின் போக்கிலேயே சித்தர்கள் போவதால் சித்தன் போக்கு சிவன் போக்கு என்றானது என அறிஞர் கருதுகின்றார்.

அந்த அறிஞர் யாருன்னு தெரியனுமா?? ஹி...ஹி...ஹி..)

பழமைபேசி said...

திண்ணைக்கு வந்த எல்லார்த்துக்கும் நன்றி!

அது சரி(18185106603874041862) said...

எனக்கு தெரிஞ்சது என்னன்னா.....

சிவனும் சித்தர்களும் என்ன செய்வாங்கன்னு கணிக்கிறது கஷ்டம்...அவங்க செய்றதுக்கு காரணமும் புரிஞ்சிக்க முடியாது....

கபீஷ் said...

சத் சித் ஆனந்தம்(இது நிறைய பேருக்குத் தெரியும், விளக்குனா விடிஞ்சிரும்) இதுல இருக்கற சித் ஆனது
சிவமான அதாவது static form of god ஐ நோக்கி அப்படின்னு நினைக்கிறேன்

Anonymous said...

அப்படியே கொஞ்சம் ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன விளக்கம் தர முடியுமா.

சித்தம் போக்கு சிவன் போக்கு!
ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன

கிட்டத்தட்ட ஒன்னு தான?

Natty said...

உறவு போகாமல் கெட்டது! கடன் கேட்காமல் கெட்டது!!

:) பழமொழி தொகுப்பு இருக்கா பாஸூ.. லிங்க் ப்ளீஸ்...

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
ஐடியா கொடுத்த எனக்கும் சித்த பிரம்மை புடிச்சது போலதான் இருக்கு
//

எப்பவும் அப்பிடித்தான? இன்னைக்கு மட்டும் என்ன புதுசா அது?

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்லாத்தானே இருக்கீங்க
//

குடுகுடுப்பையாரைக் கேக்குறீங்களா?

பழமைபேசி said...

//வேத்தியன் said...
சரிதான் சரிதான்...
யோசிச்சுப் பார்த்தா இதுவும் ஒரு வகையில சரியாத்தான் இருக்கு...
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

@@இராகவன் நைஜிரியா said
@@Mahesh said...
@@புதுகை.அப்துல்லா

அண்ணாக்களே,

நன்றி! உங்க விளக்கங்களும் பதிவுல ஏத்திட்டேன், நன்றி!!

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
சரிப்பா சித்தன் போக்கு, சிவன் போக்குன்னு நான் போயிடறேன்.
//

:-o)

பழமைபேசி said...

//அது சரி said...
எனக்கு தெரிஞ்சது என்னன்னா.....

சிவனும் சித்தர்களும் என்ன செய்வாங்கன்னு கணிக்கிறது கஷ்டம்...அவங்க செய்றதுக்கு காரணமும் புரிஞ்சிக்க முடியாது....
//

வாங்க அது சரி அண்ணாச்சி, நன்றிங்க!

பழமைபேசி said...

//கபீஷ் said...
சத் சித் ஆனந்தம்(இது நிறைய பேருக்குத் தெரியும், விளக்குனா விடிஞ்சிரும்) இதுல இருக்கற சித் ஆனது

//

வெடிஞ்சா விடியட்டும், நீங்க சொல்லுங்க....

பழமைபேசி said...

//வில்லன் said...
அப்படியே கொஞ்சம் ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன விளக்கம் தர முடியுமா.
//

மேவறத்துக் கரை அண்ணாச்சி, வாங்க. என்ன ஆனா என்னன்னு சலிப்போட சொல்லுறதுதான் இது.

பழமைபேசி said...

//Natty said...
உறவு போகாமல் கெட்டது! கடன் கேட்காமல் கெட்டது!!

:) பழமொழி தொகுப்பு இருக்கா பாஸூ.. லிங்க் ப்ளீஸ்...
//

வாங்க அவாய்த் தம்பி! இதோ ஒன்னு:

http://www.tamilnation.org/literature/proverbs.htm

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பழமொழிச் சுட்டிக்கு ரொம்ப நன்றிகள்... மிக்க உபயோகம்..

மதுவதனன் மௌ.

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
பழமொழிச் சுட்டிக்கு ரொம்ப நன்றிகள்... மிக்க உபயோகம்..

மதுவதனன் மௌ.

//

வாங்க மது! வணக்கம்!! யாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக!!!