ஆமா, இந்தக் கை கூடி வரும்ன்னு சொல்லுறாங்களே, அப்பிடீன்னா என்ன? காதல் கை கூடும்ங்றான் ஒருத்தன். இன்னொருத்தன், நிலுவையில இருக்குற தாவா, இந்த வருசத்துல கை கூடும்ங்றான்? அது என்ன, இந்த கை கூடுறது?? இஃகிஃகி! நிறைவேறும்ங்றதுதான் கை கூடி வரும்ங்றதுன்னு, ஒங்களுக்குத் தெரியும்ன்னு எனக்கும் தெரியும். ஆனா, அதனோட பின்னணி என்ன? இஃகிஃகி!!
அதென்ன?! தொடர் நாடகம் போடுறவனும், திரைப்படம் எடுக்குறவனும், நாவல் எழுதுறவனுந்தான், அவிங்களே முடிச்சைப் போட்டு, அவிங்களே அதை அவுத்துக் காசு பாப்பாங்களா? நாங்களும், கேள்விங்ற முடிச்சைப் போட்டு, விளக்கங்ற பேர்ல அதை அவிழ்த்து, பதிவு போட்டுக் கடை நடத்துவமே?! அஃகஃகா! (என்னா எக்காளம்?!)
கோயில்ல பாத்து இருப்பீங்க... கருவறைக்குப் பின்னாடி போயி, இறைவனோட நேர் பின்னாடி, ரெண்டு கைகளையும் ஒரு அடி, ஒன்னரை அடி தூர இடைவெளில வெச்சிட்டு, கண்ணை மூடி, நினைச்ச காரியம் நிறைவேறனும்ன்னு பிரார்த்தனை செய்வாங்க. அப்படிச் செய்யும் போது, விலகி இருக்குற கைகள், பக்கத்துல வந்து கூடி நின்னா, நினைச்ச காரியம் நிறைவேறும்ங்றது ஒரு நம்பிக்கை.
அதை ஒப்பிட்டுச் சொல்லுறதுதாங்க, இந்தக் கை கூடி வரும்ங்றது. அடிமைப்பட்டுக் கெடந்த ஒரு இனத்தோட பிள்ளை, பேரரசுக்கு அதிபர் ஆகலையா? அப்பிடி, நமக்கும் அது எல்லாம் ஒரு நாள் கை கூடி வரும்.
அறிவின் அடையாளம், இடைவிடா முயற்சி!
28 comments:
நீங்க பதிவு போடுங்க... நாங்க கூடி வருவோம்..
நல்ல பதிவு... பழனி முருகன் மூல பிரகாரத்துக்குப் பின்னாடி இப்ப்டி கைஅய வெச்சு வேண்டுறதுக்கு பெரிய க்யூவே நிக்கும்.
கை கூடறதுக்கு அறிவியல் காரணமும் இருக்கு.
அண்ணாச்சி, மின்னல் வேகத்துல வந்து இருக்கீங்க...நன்றி...அப்படியே, அந்த அறிவியல் காரணத்தையும் வெளக்கிச் சொல்லிட்டுப் போங்க சித்த! இஃகிஃகி!!
கை என்னும் தமிழ் வேர்சொல்லுக்கு கொள்ளுதல் என்ற பொருள் அப்படின்னு எங்கேயோ எப்பவோ கேட்டா மாதிரி ஞாபகம். தீக்கை - தீட்சை + கொள்ளுதல் ,வெக்கை = வெம்மை + கொள்ளுதல்... கை கூடும் அப்படின்னா.. கிடைக்கும் ன்னு பொருள் அப்படின்னு நினைத்திருந்தேன்... உங்கள் விளக்கமும் அருமை... நடுநடுல பி. எஸ். வீரப்பா ரேஞ்சுக்கு சிரிக்கிரீங்களே! இஃகி இஃகி ;)
//Natty said... //
அவாய்த்தம்பி, மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க... ரெண்டு மூனு நாளாக் கடை பக்கம் காணோம் உங்கள... மொதல்ல போயி, அல்லாத்தையும் படிச்சுப் பின்னூட்டம் போடுங்க...இஃகிஃகி!
அண்ணே நான் ௬ட்டமா வரலை தனியாத்தான் வந்து இருக்கேன், நான் எப்போதும் உங்க ௬டத்தான் இருக்கேன்
//நசரேயன் said...
அண்ணே நான் ௬ட்டமா வரலை தனியாத்தான் வந்து இருக்கேன், நான் எப்போதும் உங்க ௬டத்தான் இருக்கேன்
//
தளபதி பின்னாடி, நாங்க எல்லாரும் இருக்கோம்....அதான உண்மை? நன்றிங்க தளபதி!
கைகூப்பி
காலை
வணக்கங்கோ!!!
தேவா...
// thevanmayam said...
கைகூப்பி
காலை
வணக்கங்கோ!!!
தேவா...
//
என்னோட எக்காளச் சிரிப்புக்கு மிரண்டு போய் வெக்கிற வணக்கம் மாதிரி அல்ல இருக்கு இது? எதுக்கும் நான் பதில் வணக்கம் சொல்லிகிடுறேன்! இஃகிஃகி!!
//வணக்கம்! நம்ப கடைக்கு வந்து போற வாடிக்கையாளர்கள், யாரையுங் காணோம் இன்னைக்கு!!//
பசியும் எடுக்கணும்!கண்ணுல கடையும் தட்டுப்படணுமில்ல! இஃகி!இஃகி (இஃகி உங்க சரக்குதான்)
//அடிமைப்பட்டுக் கெடந்த ஒரு இனத்தோட பிள்ளை, பேரரசுக்கு அதிபர் ஆகலையா? அப்பிடி, நமக்கும் அது எல்லாம் ஒரு நாள் கை கூடி வரும்.//
கைகூடி வரும் விளக்கம் அருமை.அப்படியே இதுவும் கைகூடி வரணும்.
//ராஜ நடராஜன் said...
பசியும் எடுக்கணும்!கண்ணுல கடையும் தட்டுப்படணுமில்ல!
//
அண்ணா, வாங்க.... இது நொம்ப நல்லா இருக்குதுங்க...
நான் உங்களை பிதொடர்ந்து கொண்டே இருப்பேன்
//kajan's said...
நான் உங்களை பிதொடர்ந்து கொண்டே இருப்பேன்
//
நீங்கள்லாம் தொடர்றதுல மிக்க மகிழ்ச்சி நண்பரே!
//ராஜ நடராஜன் said...
//அடிமைப்பட்டுக் கெடந்த ஒரு இனத்தோட பிள்ளை, பேரரசுக்கு அதிபர் ஆகலையா? அப்பிடி, நமக்கும் அது எல்லாம் ஒரு நாள் கை கூடி வரும்.//
கைகூடி வரும் விளக்கம் அருமை.அப்படியே இதுவும் கைகூடி வரணும்.
//
ஆமுங்க அண்ணே!
\\\ஆமா, இந்தக் கை கூடி வரும்ன்னு சொல்லுறாங்களே, அப்பிடீன்னா என்ன? \\\
ஒரு விஷயம் தெளிவா புரிது நீங்க காங்கிரஸ்காரர்ன்னு
\\\\நாங்களும், கேள்விங்ற முடிச்சைப் போட்டு, விளக்கங்ற பேர்ல அதை அவிழ்த்து, பதிவு போட்டுக் கடை நடத்துவமே?! \\\\
உண்மைலேய ரெம்ப மர்மமான முடிசித்தான். ஏன்னா அப்ப அப்ப நீங்க பாடுர பாட்ட கேட்டுட்டு புரியாம முழி பிதுங்கி நிக்கிரோம்ல!!!
அதை ஒப்பிட்டுச் சொல்லுறதுதாங்க, இந்தக் கை கூடி வரும்ங்றது. அடிமைப்பட்டுக் கெடந்த ஒரு இனத்தோட பிள்ளை, பேரரசுக்கு அதிபர் ஆகலையா? அப்பிடி, நமக்கும் அது எல்லாம் ஒரு நாள் கை கூடி வரும். //
வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா வழிமொழிகிறேன்
//S.R.ராஜசேகரன் said...
\\\ஆமா, இந்தக் கை கூடி வரும்ன்னு சொல்லுறாங்களே, அப்பிடீன்னா என்ன? \\\
ஒரு விஷயம் தெளிவா புரிது நீங்க காங்கிரஸ்காரர்ன்னு
//
அய்யய்யே, நீங்க சொன்னது தப்பு...இஃகிஃகி! நீங்க சொன்னது தப்புத்தான்!! இஃகிஃகி!!
//S.R.ராஜசேகரன் said...
\\\\நாங்களும், கேள்விங்ற முடிச்சைப் போட்டு, விளக்கங்ற பேர்ல அதை அவிழ்த்து, பதிவு போட்டுக் கடை நடத்துவமே?! \\\\
உண்மைலேய ரெம்ப மர்மமான முடிசித்தான். ஏன்னா அப்ப அப்ப நீங்க பாடுர பாட்ட கேட்டுட்டு புரியாம முழி பிதுங்கி நிக்கிரோம்ல!!!
//
அழுத புள்ளை சிரிக்குது, கழுதைப் பாலை குடிக்குது.... இஃகிஃகி!!
//குடுகுடுப்பை said... //
கொக்கா மக்கா, அப்பிடி மட்டும் ஆவட்டும்...வெள்ளை மாளிகைக்கு மொதல்ல வேற நெறம் ஆக்கிடுவேன்... அதென்ன, எப்பப் பாத்தாலும் வெள்ளை மாளிகை, வெள்ளை மாளிகைன்னு?! பேசாதீங்க, நான் செமக் கடுப்புல இருக்கேன்.!
ஐயா பழமைபேசிக்கு நல்லா காலம் கை கூடி வருதுங்கோ. வாழ்த்துக்கள்
//குடுகுடுப்பை said... //
கொக்கா மக்கா, அப்பிடி மட்டும் ஆவட்டும்...//
குடுகுடுப்பை, அது கொக்கா மக்கா இல்ல நொக்கா மக்கா!!!!!!!!!!!!!!!!
அண்ணாச்சி பழமை பேசி கொஞ்சம் வெளக்கம் போடுரிங்களா
//வணக்கம்! நம்ப கடைக்கு வந்து போற வாடிக்கையாளர்கள், யாரையுங் காணோம் இன்னைக்கு!!//
வெறும் கடைய தெறந்து வச்சா யாருயா வருவா. நல்ல சரக்க ஏத்தி வையுங்க கூட்டம் பிச்சிகிட்டு வரும். எடைல போட்டி தட்ட மறந்துராதிங்க ஏன்னா அதுதான சோறு போடுது.
//வில்லன் said...
எடைல போட்டி தட்ட மறந்துராதிங்க ஏன்னா அதுதான சோறு போடுது.
//
சரியாச் சொன்னீங்க அண்ணாச்சி, சரியா சொன்னீங்க!!
ஐயா கைகூடுறதப்பத்தி இப்பிடி ஒருநாளும் யோசிச்சது இல்லீங்க...
நல்ல விஷயம்...
ஓ அப்படியா சேதி.. சரி சரி.. :)
கண்டிப்பாக ஒரு நாள் கைகூடும்!
//அடிமைப்பட்டுக் கெடந்த ஒரு இனத்தோட பிள்ளை, பேரரசுக்கு அதிபர் ஆகலையா? அப்பிடி, நமக்கும் அது எல்லாம் ஒரு நாள் கை கூடி வரும். //
எது கைகூடி வரும்னு சொல்றீகன்னு தெளிவாத் தெரிஞ்சு போச்சு :))
சீக்கிரம் கைகூடனும்னே :)
Post a Comment