1/14/2009

வில்லு: ஒரு மாறுபட்ட பார்வையில்!

பொங்க‌ல் வாழ்த்துக‌ள்! வில்லுன்னு சொன்னாலே ஒரு எதிர்பார்ப்பு, குதூக‌ல‌ம். ச‌ரி, நாம‌ளும் அதைப் ப‌த்தி எழுத‌லாம்ன்னு ந‌ம்ம‌கிட்ட‌ இருக்கிற‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மூளைய‌க் க‌ச‌க்கின‌துல‌, நாலு வ‌கையான‌ வில்லுக‌ ஞாவ‌க‌த்துக்கு வ‌ந்த‌துங்க‌.

உண்டி வில்/க‌வ‌ட்டி வில்: க‌விட்டியில‌ இர‌ப்ப‌ர் ப‌ட்டைய‌க் க‌ட்டி, ப‌ட்டையில‌ சிறு க‌ல்லை வெச்சி, எடுத்து விட்டா, 'ச‌ர்'ருன்னு குறி த‌வ‌றாம‌ குருவிய‌ப் போட்டுத்தாக்கும் இது.

வீசு வில்/வ‌ள்ளி வில்: ரெண்டு துண்டுக் க‌யிறுக்கு ந‌டுவுல‌ தோல் ப‌ட்டைய‌ வெச்சி இணைச்சி இருப்பாங்க‌. இந்த‌ப் ப‌ட்டையில‌ க‌ல்லை வெச்சி, த‌லைக்கி மேல‌ 'க‌ர‌க‌ர‌'ன்னு சுத்திட்டு, ஒரு முனைய‌ விட்டுட‌ணும். அப்ப‌, க‌ல்லு காக்கா குருவிங்க‌ இருக்குற‌ ப‌க்க‌ம் போயி விழும். உட‌னே அதுகெல்லாம் ஓடிடும். சோள‌க்காடு, திராட்சைத் தோட்ட‌த்துப் ப‌ர‌ண்ல‌ எல்லாம், இத வெச்சித்தான் காக்கா குருவிய‌ முடுக்குவோம்.

இராம‌ர் வில்/ அம்பு வில்: இது உங்க‌ எல்லார்த்துக்கும் தெரிஞ்ச‌ விப‌ர‌ம். ம‌ன்ம‌த‌ன் வெச்சிருந்த‌து, க‌ரும்பாலான‌ வில், அதைக் க‌ருப்பு வில்லுன்னு சொல்வாங்க‌.

வீச்சு வில்: மிதி வ‌ண்டியோட‌ ச‌க்க‌ர‌த்துல‌ இருக்குற‌ இர‌ப்ப‌ர் ப‌ட்டைய‌ ரெண்டு தூணுக்கு ந‌டுவுல‌ க‌ட்டிட்டு, ப‌ட்டைக்கு ந‌டுவுல, உடைக்காத‌ கோலி குண்டு சோடா பாட்டிலை வெச்சி, இழுத்து விடுவாங்க‌. அது போயி, எதிராளிக‌ளைப் ப‌தம் பாக்கும். இதான் வீச்சு வில்லு.

த‌மிழ் இல‌க்கிய‌த்துல‌, வில் எப்பிடியெல்லாம் குறிப்பிட‌ப்ப‌ட்டு இருக்குன்னு பாருங்க‌:

காண்டீபம்
தனுசு
கோதண்டம்
கார்முகம்
குணி
குனி
கொக்கரை
கொடுமரம்
சராசனம்
சாகம்
சாரங்கம்
சானகம்
சிங்காணி
சிங்கினி
சிலை
சிந்துவாரம்
தடி
தவர்
தனு
துரோணம்
பகர்
முனி
வான்மிகம்
வின்னான்
வேணு

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!
வில்லும் வேலும் மல்லுக்குறுதி!!


40 comments:

Mahesh said...

ஆனாலும் உமக்கு குசும்பு அதிகமய்யா.... :))))))

நசரேயன் said...

எங்கடா அண்ணன் திடிர்ன்னு மாறிட்டாரோ ன்னு நினைச்சேன், நல்லத்தான் அன்பு விடுறீங்க

குடுகுடுப்பை said...

விமர்சனம் எதிர்பார்த்து வரவங்க பாடு திண்டாட்டம்தான். ஆனாலும் நல்ல முயற்சி..

விமர்சனம் வேணுமா இங்க வாங்க.

குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

S.R.ராஜசேகரன் said...

"லொல்லு : ஒரு மாறுபட்ட பார்வையில் !"

ஊர் சுற்றி said...

//மூளைய‌க் க‌ச‌க்கின‌துல‌//
கசக்கினதா இல்ல கசக்கி பிழிஞ்சதா...
முடியலடா சாமி......

இத்தன வில்லா!!!

வில்லன் said...

இந்த வில்லுகள எல்லாம் வச்சு யாரையாவது தாக்க முடியுமான்னு பாக்க வேண்டியதுதான்.

குறிப்பா வீச்சு வில்: புதுசா கேள்வி படுறேன். ஈசியான டேச்னிக்கா இருக்கு. யாராவது கெடச்சா பின் விளைவு எப்படி இருக்கும்னு டெஸ்ட் பண்ணி பாத்துற வேன்டியதுதான்.

பழமைபேசி said...

//Mahesh said...
ஆனாலும் உமக்கு குசும்பு அதிகமய்யா.... :))))))
//

மாறுபட்ட பார்வையில்ன்னு சொல்லி அழைச்ச பின்னாடியும், இப்பிடி சொன்னா எப்பிடி? இஃகிஃகி!

அப்பிச்சி கவி காளமேகத்தோட தாக்கமுங்க... இஃகிஃகி!!

இராகவன் நைஜிரியா said...

நிச்சயம் .. மாறு பட்ட பார்வைதானுங்கோ..

வில்லுக்கு இத்தன பேருங்களா..

பழமைபேசி said...

//நசரேயன் said...
எங்கடா அண்ணன் திடிர்ன்னு மாறிட்டாரோ ன்னு நினைச்சேன், நல்லத்தான் அன்பு விடுறீங்க
//

அப்பிடீங்ளா தளபதி? நன்றிங்கோ!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
விமர்சனம் எதிர்பார்த்து வரவங்க பாடு திண்டாட்டம்தான். ஆனாலும் நல்ல முயற்சி..//


மாடுகளை பொங்கலுக்கு நல்லாக் கவனிங்க அண்ணே!

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
"லொல்லு : ஒரு மாறுபட்ட பார்வையில் !"
//

அட, கவி காளமேகத்தோட தாக்கம் புளியங்குடி மாப்பிள்ளைக்கும் இருக்கு போல?!

பழமைபேசி said...

//ஊர் சுற்றி said...
//மூளைய‌க் க‌ச‌க்கின‌துல‌//
கசக்கினதா இல்ல கசக்கி பிழிஞ்சதா...
முடியலடா சாமி......//

இதுக்கே இப்பிடி சொன்னா எப்படி ஊர் சுற்றி அண்ணே? படிக்காதவன் பற்றிய கண்ணோட்டம் இருக்கு...போடவா?

பழமைபேசி said...

//வில்லன் said...
இந்த வில்லுகள எல்லாம் வச்சு யாரையாவது தாக்க முடியுமான்னு பாக்க வேண்டியதுதான். //


நம்ப தளபதிய நிக்க வெச்சி, வில்லுகளால‌ ஒரு காட்டு காட்டிடலாமா அப்ப?

Natty said...

பாஸ்... ஒரு டவுட்டு..

தவில், வானவில், இதெல்லாம் விட்டுட்டீங்களே!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
நிச்சயம் .. மாறு பட்ட பார்வைதானுங்கோ..

வில்லுக்கு இத்தன பேருங்களா..
//

வாங்க ஐயா! வணக்கம்!! ஆமுங்கோ.... இதுகெல்லாம் வில்லைக் குறிக்கிற சொல்லுதானுங்கோ...

பழமைபேசி said...

//Natty said...
பாஸ்... ஒரு டவுட்டு..

தவில், வானவில், இதெல்லாம் விட்டுட்டீங்களே!
//

ஆகா, அப்ப நான் மாங்கா மடையனேதானா?!

thevanmayam said...

புதியன பேசியா மாறீட்டாரோன்னு நெனச்சேன்........ஊஹும்!
நெத்தி அடி!!!

தேவா........

நான் ஆதவன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Mahesh said...

மணியாரே... சொல்ல மறந்து போச்சு...

"வேணு"ங்கறது புல்லாங்குழலைத்தானே குறிக்கும்? வில்லுக்கும் அதுவேதானா? சந்தேகமா இருக்கு.

வேணுகானம் - குழலிசை வேணுகோபால் - குழலூதி பசுக்களை மேய்ப்பவன்

ஷாஜி said...

//காண்டீபம்
தனுசு
கோதண்டம்
கார்முகம்
குணி
குனி
கொக்கரை
கொடுமரம்
சராசனம்
சாகம்
சாரங்கம்
சானகம்
சிங்காணி
சிங்கினி
சிலை
சிந்துவாரம்
தடி
தவர்
தனு
துரோணம்
பகர்
முனி
வான்மிகம்
வின்னான்
வேணு//

--யப்பா இப்பவே கண்ண கட்டுதே........

பழமைபேசி said...

//Mahesh said...
மணியாரே... சொல்ல மறந்து போச்சு...

"வேணு"ங்கறது புல்லாங்குழலைத்தானே குறிக்கும்? வில்லுக்கும் அதுவேதானா?
//

ஆமாங்கோ....


வேணு, (p. 964) [ *vēṇu, ] s. Hollowness, tubularity, உட் டுளை. 2. A bambû, மூங்கில். 3. A herdsman's reed or pipe, குழல். 4. A bow, வில். 5. A sword, வாள். (சது.) 6. A knowledge of wind-instruments. See கலைஞானம்.

பழமைபேசி said...

//thevanmayam said...
புதியன பேசியா மாறீட்டாரோன்னு நெனச்சேன்........ஊஹும்!
நெத்தி அடி!!!

தேவா........
//

இஃகிஃகி!

வாழ்த்துகளும் நன்றிகளும்!!

பழமைபேசி said...

//நான் ஆதவன் said...//

//ஷாஜி said... //

வாழ்த்துகளும், வருகைக்கு நன்றிகளும்!!

Mahesh said...

அந்த தமிழ் அகராதி தொடுப்பு கொஞ்சம் குடுங்களேன்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைப்ப பார்த்தவுடனேயே நெனச்சிட்டேன், இது ரொம்ப மாறுபட்ட பார்வையா இருக்கும்னு, என் நெனப்பு ரொம்ப சரி.

99 வகை மலர்கள் என சிவக்குமார் சொல்வது மாதிரி, நீங்கள் வில் பத்தி சொல்றீங்களா.

ராஜ நடராஜன் said...

அதானே பார்த்தேன்.பதிவு கண்ணுல பட்டுகிட்டே இருக்குது.உள்ள வர்றதுக்கு பயந்துகிட்டே இருந்தேன் நேத்துலருந்து.(விஜய் வில்லு பத்தி விமர்சனமோன்னு பயந்துதான்:)

ராஜ நடராஜன் said...

உண்டி வில்/க‌வ‌ட்டி வில் குருவியப் போட்டுத் தாக்குனத விட என் கையப் போட்டுத் தாக்குனதுதான் அதிகம்:)பின்னூட்ட நமக்கு நாமே திட்டமெல்லாம் இப்ப வந்ததுதானே.அப்பவெல்லாம் நாமலே குச்சியத் தேடி,செதுக்க கத்தியத் தேடி ரப்பர தேடி வில்லு கட்டுறதுங்க!சீசனுக்குத் தகுந்தமாதிரி வில்லு,பட்டம்,பேந்தா,பந்து விளையாட்டு,கொய்யாக்கா,மாங்கா திருடறதுன்னு சோடிப் பசங்க கூட விளையாட்டு மாறிகிட்டே இருக்குமுங்க.என்னைக்கு இந்த மன்மதன் வில்லு வந்து தொலைஞ்சதோ அன்னிக்கு தொலைஞ்சதுதான்.

பழமைபேசி said...

//Mahesh said...
அந்த தமிழ் அகராதி தொடுப்பு கொஞ்சம் குடுங்களேன்...
//

முன்னொரு வாட்டி குடுத்த ஞாவகம் இருக்கே? இஃகிஃகி!

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=402&table=winslow&display=utf8

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
தலைப்ப பார்த்தவுடனேயே நெனச்சிட்டேன், இது ரொம்ப மாறுபட்ட பார்வையா இருக்கும்னு, என் நெனப்பு ரொம்ப சரி.
//

வாங்க, வணக்கம்! உங்க நம்பிக்கைக்கு நன்றிங்கோ!!

பழமைபேசி said...

// ராஜ நடராஜன் said...
அதானே பார்த்தேன்.பதிவு கண்ணுல பட்டுகிட்டே இருக்குது
//

அஃகஃகா! நீங்களுந்தான் பாவம், எந்நேரம் தாண்டித் தாண்டி போறது?! இப்பனாச்சும் உள்ளே வந்தீங்களே?! இஃகிஃகி!

//என்னைக்கு இந்த மன்மதன் வில்லு வந்து தொலைஞ்சதோ அன்னிக்கு தொலைஞ்சதுதான்.
//

அல்லாரூட்லயும் அதே கர்மந்தேன் கண்ணூ!ஃஃஃஃகுஃஊ!!

வேத்தியன் said...

'வில்லு'களைப்பத்தி சொல்லி அசத்தீட்டீங்க வாத்தியாரே...
நல்ல பதிவுங்க...
:)))

இளைய பல்லவன் said...

நினைத்தவாறே விற்களைப் பற்றி எடுத்தியம்பி, நீர் விற்பன்னர்தான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டீர்.

வாழ்த்துக்கள்.

Sriram said...

kalakiteenga anne...

ithu varaikkum naan padicha villuvoda vimarsanathileye ithu thaan super...

பழமைபேசி said...

//வேத்தியன் said...
'வில்லு'களைப்பத்தி சொல்லி அசத்தீட்டீங்க வாத்தியாரே...
நல்ல பதிவுங்க...
:)))//

நன்றிங்க ஐயா, நன்றிங்க!

//Sriram said...
kalakiteenga anne...

ithu varaikkum naan padicha villuvoda vimarsanathileye ithu thaan super...
//

வாங்க, வாங்க! நல்லா இருக்கீங்களா? எதோ, நம்மால ஆனது!

பழமைபேசி said...

//இளைய பல்லவன் said...
நினைத்தவாறே விற்களைப் பற்றி எடுத்தியம்பி, நீர் விற்பன்னர்தான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டீர்.

வாழ்த்துக்கள்.
//

சரித்திர நாயகர் தம்மால் வாழ்த்தப்படுவது யாம் பெற்ற பேறு!

அன்புமணி said...

படம்பார்கிறதுக்கு முன்ன வமர்சனம் படிக்கலாம்னு வந்தா நல்லாவிட்டிங்க வில்லு!சூப்பரப்பு!

PoornimaSaran said...

முன்னொரு வாட்டி குடுத்த ஞாவகம் இருக்கே? இஃகிஃகி!


எப்பவும் இஃகிஃகி தானா??

பழமைபேசி said...

//அன்புமணி said...
படம்பார்கிறதுக்கு முன்ன வமர்சனம் படிக்கலாம்னு வந்தா நல்லாவிட்டிங்க வில்லு!சூப்பரப்பு!
//


இஃகிஃகி!

வில்லன் said...

//அன்புமணி said...
படம்பார்கிறதுக்கு முன்ன வமர்சனம் படிக்கலாம்னு வந்தா நல்லாவிட்டிங்க வில்லு!சூப்பரப்பு!//

அன்புமணி யாரு டாக்டரு அன்புமணியா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ரோடுல தம் அடிச்சா புடிச்சி உள்ளபோடுருவாறேங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பழமைபேசி said...

//வில்லன் said...
ரோடுல தம் அடிச்சா புடிச்சி உள்ளபோடுருவாறேங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
//

அது நல்ல விசயந்தானுங்களே?!