2/24/2011

யாரிந்த வலைப்பேய்ச் சித்தர்??

பதினென் சித்தர்கள் இருந்த நாடு நம்ம நாடு. கோயமுத்தூர்ல இருந்து அப்படியே பொடி நடையா, அவலு கடலை பொரிய மென்னுகிட்டே மேக்கமுன்னா காத்து வாங்கிட்டுப் போனமுன்னாக்க, மருதமலை வந்துரும். அங்க பார்த்தீங்கன்னா, பாம்பாட்டிச் சித்தருக்கு கோயல்கூட இருக்குது.

அங்க உக்காந்துட்டு இருக்கும் போது, என்னா ஒரு மனநிறைவு?! அந்தத் துண்ணூரு வாசத்துக்கும், மலைக் காத்துக்கும்... அப்பப்பா...  அவரோட அருமை பெருமைகளை எல்லாம் எழுதணும்தான்... நேரங்காலம் வரணுமே எதுக்கும்?!
பாம்பாட்டிச் சித்தர் சன்னதி

சரி, யாரந்த பதினென்கீழ்ச் சித்தர்கள்? டேய்... அவுங்க பதினென் சித்தர்கள்தானடா? நீயென்ன பதினென்கீழ் ஆக்கிட்டியேன்னுதான எகுறுறீங்க? அதுவும், ஈரோட்டு மாப்பு எகிறுறது எக்கசக்கம்?! அது ஒன்னுமில்லீங்க, கீழ சொல்லப் போற பதினென் சித்தர்கள்ங்றதைத்தான் அப்படி சொல்லிச் சொன்னேன்.

1. அகப்பேய்ச் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதச் சித்தர்
5. இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மெளனச்சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளிச் சித்தர்
12. கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்தச் சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச் சித்தர்

இவங்க வரிசையில, நவீனச் சித்தர், அதாகப்பட்டது, பத்தொன்பதாவதா, வலைப்பேய்ச் சித்தர். பேய் அப்படின்னா, கெட்டதாவே பார்க்கப்படாது. பேய் மழை, பேய்க் கதை, பேய்க் காதல், பேயுழைப்பு இப்படியெல்லாங் கூட ஒரு முன்னொட்டா வரும். அதாவது, வீரியமிக்க அல்லது அதிதீவீர அப்படிங்ற பொருள்ல வரும்.

அப்படி வலைஞர்லயும், இவரு பேய் வலைஞரு. பல்சுவைப் பழம். எங்களுக்கெல்லாம் அன்பானவரு; நேசமானவரு!! என்ன கழுதை, அந்த ஈரோட்டுச் சங்கமத்தையும் வலையேத்தினா, எட்ட இருக்குற சித்தரோட பக்தர்கெல்லாம் மகிழ்ச்சியடைவாங்க... என்ன நாஞ்சொல்றது?!

8 comments:

தாராபுரத்தான் said...

ஆமாம்..ஆமாம்..

ஈரோடு கதிர் said...

பேய் வலைஞரு மட்டுமல்ல
பேய் வலைஞருக்கே ஆசானுங்க அவரு!

# ஜெய் ஆசான்

ஓலை said...

Ahaa. Yeppidiyellaam venduraangappa?

vasu balaji said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). செஞ்சிருவோம்

நசரேயன் said...

சரி .. சரி

Pakiyamoorthy Kumarakuruparan. said...

சித்தர்கள் தொடர்புடையவர்களுக்கு அவர்கள் பற்றிதகவல்கள் அறிய ஆவல் இதை தந்தமைக்கு நன்றிகள் பல

Pakiyamoorthy Kumarakuruparan. said...

சித்தர்கள் தொடர்புடையவர்களுக்கு அவர்கள் பற்றிதகவல்கள் அறிய ஆவல் இதை தந்தமைக்கு நன்றிகள் பல

அதியா வீரக்குமார் said...

நண்பருக்கு வணக்கம்.இப்போது சமீபமாக பிளாக் ஆரம்பித்தவன்.என் முதல் இடுகைக்கு கருத்து ஒன்றைப் பதிந்திருந்தீர்கள். உங்ளைத் தொடர்பு கொள்ள வழிதெரியாமல் இதில் வருகிறேன்.எனக்கு உங்கள் mail.id தேவை. என்னுடையது veerakkumar.d@gmail.com

ஜெயமோகனின் “ஏழாம் உலகம” பற்றி ஒரு வாசிப்பனுபவம் புதிதாகப் பதிந்துள்ளேன். பார்த்துவிட்டு எழுதவும்

நன்றி

வீரா
ஈரோடு.
09.05.2011