10/29/2009

பள்ளயம், 10/30/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

---------------------------
”விகற்பம்! அப்படின்னா? சங்கற்பத்துக்கு எதிரானது!”

“யோவ், என்ன விளையாடுறியா? கற்பம் காணாதபடிக்குக் கபோதி ஆயிடுவே, ஆமா!”

இப்படியெல்லாம் கூட நீங்க வைவீங்களா இருக்கும்! கற்பம் அப்படின்னா இருப்பிடம், கர்ப்பம்ன்னா கருவாதல். அது சரி, எதுக்கும் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு உண்டான கதையப் பார்க்கலாம் வாங்க!

விகற்பம்ன்னா, சரியற்ற கருத்து, அனுமானம் கொள்வது. சங்கற்பம்ன்னா சரியான கருத்து, ஒத்த கருத்து, அனுமானம் கொள்வது. இங்க அமெரிக்காவுல இருக்குற இந்தியர்கள்ல, கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு விகற்பத்துல சங்கற்பமா இருக்காங்க. அது என்ன?

ஆமாங்க, இங்க தட்பவெப்ப நிலைய Fahrenheit அலகுல குறிப்பிடுவாங்க. அதே ஊர்ல Celsiusல சொல்றது வாடிக்கை. இந்தப் பின்னணியில, இங்க இருக்குற நம்மாட்கள்ட்ட போயி 70 Degree Fahrenheitக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு கேட்டுப் பாருங்க. முப்பதுல இருந்து முப்பத்தி இரண்டு இருக்கும்னு விடை உடனே வரும். ஆனா, அது தவறான விடை. அதுக்கு என்ன காரணம்?


ஒரு விகற்ப அனுமானந்தான் காரணம். இங்க சராசரியா 70 டிகிரி பாரன்ஹீட்ல வாழ்றோம். ஊர்ல, 30-32 டிகிரிங்றது சராசரி. ஆக, 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு முப்பது, முப்பத்தி இரண்டு டிகிரி செல்சியசுன்னு ஒரு புரிதல். சரி, எந்த உதவியும் இல்லாம, 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

====================================

நம்ம ஊர்ல climateதான் எதுக்கும் பாவிக்கிறது. இங்க weather! இரண்டுக்கும் என்ன வேறுபாடு? காலநிலை(climate)ங்றது, ஒரு காலத்தை ஒட்டிய தட்பவெப்ப நிலையை இனியொரு காலத்துக்கு உண்டான தட்பவெப்ப நிலையோட ஒப்பிட்டுச் சொல்லக் கூடியது. உதாரணமா, the climate was totally different when I was going to school. நான் குட்டையில மீன் புடிச்சிட்டுச் சிட்டுக பின்னாடி திரிஞ்சப்ப இருந்த காலநிலையே வேற. அப்ப எல்லாம் கூதலுக்கு சின்னாத்தா கடையில வாங்கித் திங்கிற சூடான வடை உருசியே உருசி.

Weather, தட்பவெப்பநிலை அப்படீன்னா, இன்னைக்கு அல்லது குறுகிய காலத்துல இருக்குற நிலைப்பாட்டைச் சொல்றது. இன்னைக்கு தட்பம் இவ்வளவு, வெப்பம் இவ்வளவு அப்படின்னு. ஆமா, கோயமுத்தூர்ல இப்ப தட்பமா, வெப்பமா? நான் அடுத்த மாசம் ஊருக்கு வரலாமுன்னு இருக்கேன், அதான்! இஃகி!!
====================================

என்னடாப்பா நுரைநாட்டியம் எல்லாம் வலுவா இருக்குதாட்ட இருக்கூ? அவன் ஒரு நொரைநாட்டியம், அவம் பேசுறதெல்லாம் ஒரு பேச்சுன்னு?? இப்பிடி எல்லாம் பேசக் கேட்டு இருப்பீங்க. அதென்ன நொரை நாட்டியம்??

இஃகி, ஓடுற வாய்க்கால்ல பார்த்தீங்கன்னா சுழிகள்ல நுரை மேல நின்னுட்டு அங்குட்டு ஓடவும் இங்குட்டு ஓடவும்ன்னு தளுக்காட்டம் ஆடும். அதைப் போல, வீண் பண்ணாட்டுச் செய்துட்டு வாய்ச் சவடால் உட்டுகிட்டு இங்கயும் அங்கயும் ஆடிட்டுத் திரியறதுதானுங்க நொரைநாட்டியம்!

ஏ, யாரப்பா அது நொரைநாட்டியம் அங்க? தொரை, போயி வேலை வெட்டி இருந்தாச் செய்யுங்க போங்க! அதைவிட்டுப் போட்டு, யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!

21 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//அதைவிட்டுப் போட்டு, யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!//

ha ha haa

நொன்னநாட்டியம்ன்னு கூட சொல்லிகேட்டுருக்கேன்...

தேவன் மாயம் said...

தொரை, போயி வேலை வெட்டி இருந்தாச் செய்யுங்க போங்க! அதைவிட்டுப் போட்டு, யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!///

பொறண்டி பேசுவதும் இதுதானோ!

பழமைபேசி said...

//70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!//

21.1 டிகிரி செல்சியசுதான் சரியான விடை!

தீப்பெட்டி said...

நொர நாட்டியத்திற்கு விளக்கம் அருமை பாஸ்..

தீப்பெட்டி said...

நொர நாட்டியத்திற்கு விளக்கம் அருமை பாஸ்..

எங்க ஊருல சொல்லுவங்க சொலவட..
'கட்டுன வீட்டுக்கு எட்டு நொர நாட்டியம் சொல்லுவா'னு..

vasu balaji said...

சிட்டுக பின்னாடி திரிஞ்சதுக்கும் சூடான வடைக்கும் முதுகு சம்பந்தமிருக்கோ:-?..சரி சரி நாலு வார்த்த கத்துகிட்டோம்னு இல்லாம இந்த லொல்லு எதுக்கு. இஃகி.

பழமைபேசி said...

@@பிரியமுடன்...வசந்த்

ஆமாங்க, நொன்னைன்னா பரிகாசம்!

@@தேவன் மாயம்

அதேதாங்க மருத்துவரே!

@@தீப்பெட்டி

சிவகாசியார் வாங்க!

@@வானம்பாடிகள்

ஆகா, பாலாண்ணன் வந்து போற வரைக்கும், முன்னொரு பேச்சு இப்பொரு பேச்சுப் பேசமுடியாது போலிருக்கே? அண்ணன், எல்லாத்தையும் படிக்கிறதோட ஞாவகத்துலயுமல்ல வெச்சி இருக்காரு?

குறும்பன் said...

\\விகற்பம், சங்கற்பம்\\ விகல்பம், சங்கல்பம் அப்படிங்கிறது இது தானா அல்லது வேறயா?

ஊரு பக்கம் இப்ப நல்ல மழையாம்.
ஊருக்கு போயிட்டு மறக்காம ஊரை படம் புடிச்சுக்கிட்டு வாங்க.

பழமைபேசி said...

//குறும்பன் said...
\\விகற்பம், சங்கற்பம்\\ விகல்பம், சங்கல்பம் அப்படிங்கிறது இது தானா அல்லது வேறயா? //

அப்படிங்கறது இதேதானுங்கோ!

இராகவன் நைஜிரியா said...

// யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!//

ஐயா இது என்ன பத்தி இல்லையே?

இராகவன் நைஜிரியா said...

// கற்பம் அப்படின்னா இருப்பிடம் //

தீபகற்பம் மாதிரி..

இராகவன் நைஜிரியா said...

// சரி, எந்த உதவியும் இல்லாம, 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்! //

இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா, இந்த பதிவு பக்கமே வரமாட்டேன் சொல்லிட்டேன்.

எனக்கு தெரிஞ்ச சுலபமானத சொல்லட்டுமா..

என்னோட கை தொலைபேசியில், கன்வர்ட்டர் இருக்கு. அதுல போய் போட்டு தெரிஞ்சுகிடுவேன்.

பழமைபேசி said...

@@இராகவன் நைஜிரியா

உங்களைச் சொல்வேனா? நீங்க சொக்கத்தங்கம் ஐயா!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
// கற்பம் அப்படின்னா இருப்பிடம் //

தீபகற்பம் மாதிரி..
//

அப்படிப்போடுங்க.... மூணு பக்கமும் தண்ணீர் சூழ்ந்து தீபம் மாதிரி இருக்கிற இருப்பு.... கலக்குறீங்க ஐயா!

பிரபாகர் said...

சங்கற்பம் - அதிகமா உபயோகப்படுத்தி கேட்டதில்லை. ஆனால் விகற்பம், அடிக்கடி கேட்டிருக்கேன். அவன் விகற்பமான ஆளு, விகற்பமா ஏன்டா பேசற? அப்படின்னு. ரெண்டுக்கும் தெளிவான அர்த்தம் இன்னிக்குத்தான் தெரியும். நன்றிங்க.

பிரபாகர்.

dondu(#11168674346665545885) said...

அது சரி, மைனஸ் 40 டிக்ரீ செல்சியஸ் எத்தனை ஃபேரன்ஹைட்டுன்னு பாருங்க, ஆச்சரியப்படுவீங்க.

இதை எங்களுக்கு சமீபத்தில் 1960-ல் எங்கள் விஞ்ஞான ஆசிரியர் ஜானகிராமையர் சொல்லிக் கொடுத்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாகா said...

//அது சரி, மைனஸ் 40 டிக்ரீ செல்சியஸ் எத்தனை ஃபேரன்ஹைட்டுன்னு பாருங்க, ஆச்சரியப்படுவீங்க.

இதை எங்களுக்கு சமீபத்தில் 1960-ல் எங்கள் விஞ்ஞான ஆசிரியர் ஜானகிராமையர் சொல்லிக் கொடுத்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

இது பெரும்பாலான Entry Level குவிஸ் போட்டில கேக்கற கேள்வி, சமீபத்துல 1995ல உடுமலை லயன்ஸ் க்ளப் ஆண்டுவிழாவில இந்த கேள்விக்கு பதில் சொல்லித்தான் நாங்க கப்பு அடிச்சோம்.

F = C * 9/5 + 32
C = (F-32) * 5/9

ஈரோடு கதிர் said...

மாப்பு...

நொரைநாட்டியம் அருமையான விளக்கம்

அட.... அந்த விசிலு கலக்கல இருக்கே

ஆ.ஞானசேகரன் said...

தெரிந்து கொள்ளவேண்டிவை ...

பழமைபேசி said...

@@பிரபாகர்

மகிழ்ச்சிங்க பிரபாகர்!

@@ dondu(#11168674346665545885)

ஆமாங்க, இது சுவாரசியமான ஒன்னு! நன்றிங்க ஐயா!!

@@நாகா

இளையவங்க கொஞ்சம் சமத்துதான்!

@@கதிர் - ஈரோடு

நன்றிங்க மாப்பு!

@@ ஆ.ஞானசேகரன்

நன்றிங்க!

ஜோதிஜி said...

நானும் கதிர் கட்சி தான்

ஏற்கனவே இங்கு பெஞ்சுகிட்டுருக்க மழையிலே மூணு பேரும் நாறு நாறா என்ன தொங்க விட்டு தோரணம் கட்டிக்கிட்டு உள்ளே கூத்து அடிச்சுக்கிட்டு இருக்காங்க.

இத்தனை புத்தியைக் கொண்டு உள்ளே புகுந்து வரச்சொன்னால் எங்கே போவது. இது போன்ற விசயமெல்லாம் நாகாவுக்குத் தான் சரியானது.

ஆனால் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது அந்த படத்தை பார்த்து. பார்த்துக்கொண்டுருக்கும் போதே சென்னை கோர்ட்டில் சு சாமியை வரவேற்ற அதிமுக மகளிர் அணியின் படமும் மனதில் வந்து போனது.

ஏற்கனவே உங்கள் இடுகையை கதிர் சொன்ன போது பெயருக்காகவே உள்ளே வந்து இணைத்து விட்டு சென்றேன்.

அப்புறம் பேசியின் படத்தைப் பார்த்து

தனுசு கூட சுள்ளான கலக்கும் போது அஅஅஅமெரிக்காவுல இவரு போயி ஏன் கொடைச்சல குடுத்துக்கிட்டு இருக்றாருன்னு நினச்சேன்.

இப்ப ஒவ்வொன்னா உள்ள போகப்போக அடுச்சு ஆடச் சொன்னவர் படித்தது தமிழா, கணக்கா, பொட்டியா, சட்டியா எனக்குள் ஒரு சட்னி சத்தம் பிசைந்து கொண்டுருப்பது உங்களுக்கு கேட்டால்

கோடம்பாக்கம் ஆசையை மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்று அர்த்தம்.