10/17/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 6!

எங்கள் கொங்கு நட்டிலே வெகு அழகாய்ச் சொல்லிடுவர், சொல்லிக் கொடுக்கிற சொல்லும், கட்டிக் குடுத்த கட்டுச் சோறும் எத்தினி நாளைக்கிடா வரும்? என்று! அதைப்போல, இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே, அது நல்லது, அது நல்லதல்ல எனப் போதித்து போதித்து ஒரு சமூகத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

முடியாது! அவை அந்த நேரத்திற்கு மட்டும் பயனளிக்குமே அல்லாது நிரந்தரத் தீர்வாக அமையாது. முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் இறப்பு; அதுவே அந்த முட்டையானது தானாக உடையுமேயானால், அது ஒரு உயிரின் பிறப்பு! அப்படியாக, நல்ல, பெரிய மாற்றம் என்பது ஒருவனுக்கு உள்ளாக உள்ளத்திலே இருந்து பிறக்கக் கூடியது. அதுதான், கொங்குநாட்டிலே அதிகப்படியாக பாவிக்கப்படும் சொலவடையான, சொல்லிக் கொடுக்கிற சொல்லும் கட்டிக் கொடுத்த கட்டுச் சோறும் எத்தனை நாளைக்கு? தாமாக ஒவ்வொருவரும் சிந்தித்து வாழ வேண்டும் என உணர்த்துகிறது இது நமக்கு!

அந்த நல்ல சிந்தனையோடு, இந்த ஆறைநாட்டானின் அலம்பல்கள் வரிசையில், எனது அன்புக்கும் அபிமானத்திற்கும் உரிய மாப்புவிற்கு இடும் இடுகை, அவரது இருப்பிடத்தைக் கொண்ட வடகரை நாடு பற்றிய விருத்தம்!


அந்தியூ ரும்பட்டி லூருங்கு றிச்சிபீ
லாம்பட்டி சம்பைவானி
ஆப்புக் டலினோடு கீழ்வானி மூங்கினக
ரானமூ கப்பனூரும்
பைந்தரு விளங்குகரு வல்லாடி தன்னோடு
பகரமாப் பேட்டை பொன்னிப்
பழநதிக் கரைநெருஞ் சிப்பேட்டை வளவயற்
பரவெண்ண மங்கலமுடன்
செந்திரு விளங்கவளர் கோட்டை பூதப்பாடி
சேருநக லூருலகடம்
செழிய கன்னப்பிலி பருவாசி பிரமயஞ் சீர்கட்டி
யின்சமுத்திரம்
வந்தனை செயும்பெரியர் தங்குபூ னர்ச்சியுடன்
வளர்செனம் பட்டியென்ன
மாகவிஞர் சாற்றுமிகு பத்துநான் கூர்களும்
வடகரைந நாடுதானே!

அந்தியூர், பட்டிலூர், குறிச்சி, பீலாம்பட்டி, சம்பை, பவானி, ஆப்புக்கூடல், கீழ்வானி, மூங்கில்பட்டி, மூகயனூர், கருவல்லாடி, அம்மாப்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, எண்ணமங்கலம், கோட்டை, பூதப்பாடி, நகலூர், உலகடம், கன்னப்பிலி, பருவாசி, பிரமியம், கட்டிசமுத்திரம், பூனாச்சி, சென்னம்பட்டி என இருபத்து நான்கு ஊர்கள் கொண்டதுதான் கொங்குநாட்டில் அடங்கிய வடகரை நாடு என்பது!

பண்டைய காலத்திலே, பெயரை ஒட்டி வரும் பட்டங்களை வைத்தே இவர் இன்ன நாட்டைச் சேர்ந்தவர் எனக் கணிக்கும் படியாக பெயர் சூட்டினர். அந்த வகையிலே, கொங்கு நாட்டை உள்ளடக்கிய சேர நாட்டின் பட்டப் பெயர்கள் யாவை? சேரன், வானவன், மலையன், பொறையன் மற்றும் உழியன். சோழ நாட்டவர்க்கு, கிள்ளி, செம்பியன், வளவன், சோழன், காவிரி நாடன் மற்றும் கண்டர். பாண்டிய நாட்டவர்க்கு, வழுதி, மாறன், பாண்டியன், பொருப்பின் மற்றும் செழியன் முதலானவை.

சேர நாட்டுப் பெயர்களிலே, புகழ் வந்து சேரக்கூடியவன் சேரன்; வானுயர உயரக்கூடியவன் வானவன், மலையளவு பெறக்கூடியவன் மலையன், பொறுமையே உருவானவன் பொறையன், உழைத்து வாழ்பவன் உழியன். எனது மாப்பு, இன்று முதல் கதிர்ப் பொறையன் ஆகிறார்! இஃகிஃகி!! (எல்லாம் ஒரு காரணமாத்தான்!)

17 comments:

vasu balaji said...

கதிர்ப் பொறையன் பட்டத்தை காரணம் எதுவாயினும் வழி மொழிகிறேன். தீபாவளி வாழ்த்துகள்.

vasu balaji said...

உழியன் சரியா? ஊழியன் சரியா?

பழமைபேசி said...

பாலாண்ணே, வணக்கம், நன்றி!

உழிதல், உழைத்தல் செய்பவர் உழியன்! அதன் தொடர்ச்சி, ஊழியம்!

vasu balaji said...

நன்றி பழமை.

ப்ரியமுடன் வசந்த் said...

குறிச்சிக்கோட்டை,நெகமம் எல்லாம் விட்டுப்போட்டிங்,,,

கதிர்-ஈரோடு போயி

கதிர்-உழியனாயாச்சா?

வாழ்த்துக்கள் கதிர்

பழமைபேசி said...

@@வசந்த்

வசந்த் கண்ணூ, வாங்க! நெகமம் எல்லாம் வந்தாச்சுங்களே... குறிச்சிக்கோட்டை, மானூர், கொழுமம், குமரலிங்கமெல்லாம் வையாபுரி நாட்டுல வரும்னு நினைக்குறேன்... அது இன்னும் வரலை.... அவர் கதிர் உழியன் அல்லங்க, அவர் கதிர்ப் பொறையன்!

ஆ.ஞானசேகரன் said...

//எங்கள் கொங்கு நட்டிலே வெகு அழகாய்ச் சொல்லிடுவர், சொல்லிக் கொடுக்கிற சொல்லும், கட்டிக் குடுத்த கட்டுச் சோறும் எத்தினி நாளைக்கிடா வரும்? என்று! அதைப்போல, இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே, அது நல்லது, அது நல்லதல்ல எனப் போதித்து போதித்து ஒரு சமூகத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?//


அழகா சொன்னீங்க அண்ணே!...

ஆ.ஞானசேகரன் said...

//முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் இறப்பு; அதுவே அந்த முட்டையானது தானாக உடையுமேயானால், அது ஒரு உயிரின் பிறப்பு!//

அய்ய்ய்ய்ய் நல்லாயிருக்கே

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமையண்ணே, அட்டகாசமான அலம்பல்கள். தீபாவளி வாழ்த்துகள்.

பிரபாகர் said...

//எனது மாப்பு, இன்று முதல் கதிர்ப் பொறையன் ஆகிறார்! இஃகிஃகி!! (எல்லாம் ஒரு காரணமாத்தான்!)//

பழமைபேசி,

மாப்புக்கு எட்டப்பனா ஆப்பெல்லாம் வெச்சுட்டு பட்டமெல்லாம் தர்றீரு?, நல்லா பாலிடீக்ஸ்பா ....இஃகி, இஃகி... இருந்தாலும் எங்கள் கவிவேந்தன் கதிருக்கு நல்லாத்தான் இருக்கு. எங்க ஊரு எப்ப வரும்?

பிரபாகர்.

பழமைபேசி said...

@@ ஆ.ஞானசேகரன்

சிங்கை ஞானியார், நன்றிங்க!

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பழமையண்ணே, அட்டகாசமான அலம்பல்கள். தீபாவளி வாழ்த்துகள்.
//

நன்றிங்க நம்மூர்த்தம்பி!

@@பிரபாகர்

வணக்கம், நண்பா! இப்படி வெளிப்படையாப் போட்டு வுட்டுட்டீங்களே? இஃகிஃகி!! நாம எப்பவுமே வெக்கிற ஆக்கப்பூர்வ ஆப்புதானுங்களே?? இஃகி!

ஈரோடு கதிர் said...

மாப்பூ.... என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலியே...

சம்பையில இருந்து ஒரு மைல் தானுங்க நம்மு தோட்டம்...

ரண்டு நாளா அங்கதா இருந்தேனுங்க

naanjil said...

/தாமாக ஒவ்வொருவரும் சிந்தித்து வாழ வேண்டும் என உணர்த்துகிறது இது நமக்கு!/

பசித்தவனுக்கு மீனை சாப்பிட கொடுப்பதை விட மீனை எப்படி பிடிப்பதென கற்றுக் கொடுப்பதே நிரந்தர தீர்வு என்ற தத்துவம் நினைவுக்கு வருகிறது.
தமிழ்ப்பணி வளர வாழ்த்துக்கள்.

அன்புடன் அண்ணன்
நாஞ்சில் பீற்றர்.

பழமைபேசி said...

@@கதிர் - ஈரோடு

வாங்க மாப்பு, நல்லா ஊர்த் தோட்டத்துல இருந்துட்டு வந்தீங்களா? நல்லது!

@@naanjil

வாங்க அண்ணா, வணக்கம்! மேலதிகத் தகவலுக்கும் ஆசிகளுக்கும் என்றும் நன்றி உடையவன் ஆவேன்!!

அது சரி(18185106603874041862) said...

//
முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் இறப்பு; அதுவே அந்த முட்டையானது தானாக உடையுமேயானால், அது ஒரு உயிரின் பிறப்பு!
//

நீ அடிச்சா பீஸு....நான் அடிச்சா மாஸூங்கிற மாதிரி செம பஞ்ச் டயலாக்கா இருக்கே....அண்ணே, நீங்க பேசாம அடுத்த ஃப்ளைட்ட பிடிச்சி கோடம்பாக்கத்துகு கெளம்புங்க‌ ;0))

அது சரி(18185106603874041862) said...

மலையமான் சேர தேசத்து அரசருக்கு உரிய பெயர்...மலை சூழ்ந்த தேசம் என்பதால் அரசனுக்கு மலையமான் (மலை+அம்மான்) என்று வந்திருக்கலாம்....ச்சும்மா ஒரு சந்தேகம்...

கபீஷ் said...

Good one :-)