10/10/2009

மூக்குமயிர் பிடுங்கினாட் பாரங்குறையுமா?

மூக்குமயிர் பிடுங்கினாட் பாரங்குறையுமா? Will one's weight be diminished by pulling out the hair from the nostrils??

ஒருத்தருக்கு உண்மையிலேயே பாரம் குறையினுமின்னா, உணவு மற்றும் இதர பழக்க வழக்கங்களை அலசி ஆராய்ஞ்சி, அதுகளைச் சரி செய்யணும். எம்புருசனும் கச்சேரிக்குப் போறாங்கிற கதையா, ஊரு சனத்துக்கு முன்னாடி நான் உடம்பைக் குறைக்கிறேன், உடம்பைக் குறைக்கிறேன்னு கூவிகிட்டு மூக்குமயிர் பிடுங்குறதால, ஒருத்தர் பாரம் குறையவா போகுது?!

காந்தளஞ் சென்னியன் கடவு மாமயில்
கூந்தொறுங் கூந்தொறுங் குலைந்து பஃறலைப்
பாந்தளங் கசைதலும் பசலை மூக்கினால்
ஆய்ந்திடு கின்றன அகிலங் குத்தியே.

மூக்குடை அலகினால் முகிலைக் கீறியே
ஊக்கொடு பரலென உருமுப் பற்றுமால்
தீக்கிளர் வன்னதோர் செய்ய சூட்டுடைக்
கூக்குரல் வாரணங் கொடிய தாகையால்.

இப்படி நிறையப் பாடல்கள் தமிழ்ல இருக்கு. பறவைகளோட மூக்கு இருக்கிற அலகோட ஒப்புமைப்படுத்தி ஒன்னை வர்ணிக்கிறது. சில சமயங்களில் வெறுமை மேலோங்கும் போது, பறவைகளானது தனது மூக்கிருக்கிற அலகால எதையாவது போயிக் குத்தும், குடையும், உரசும்...

அலகைக் கூர்மையாக்க அது அப்படிச் செய்யுதுன்னும் சிலர் சொல்றாங்க. சிலர், அதுல ஆரம்பிச்சி, அதுக்கு அது ஒரு வாடிக்கையாவே ஆயிடிச்சுன்னும் சொல்றாங்க! இதைப் பார்த்த பெரியவங்க, அதை ஒரு சொலவடையாவே ஆக்கிட்டாங்க!!

ஆமாங்க, மூக்கை நுழைத்து மூக்குடைபட்டு வந்தான் அப்படீன்னு எழுத்தாளர்கள் எழுதிப் பார்த்திருப்பீங்க நீங்களும். ஆங்கிலத்துலயும், keep your nose out of itனு சொல்றது உண்டு.




Yes, I got to keep my nose clean first!

20 comments:

Rekha raghavan said...

நல்ல பதிவு. முதலில் ஒட்டு போட்டவன் என்கிற பெருமையுடன்...

ரேகா ராகவன்.

ஈரோடு கதிர் said...

//மூக்குடைபட்டு //

மாப்பு...
டிசம்பர்ல....சென்னை வழியாவா வர்றீங்க

பழமைபேசி said...

//KALYANARAMAN RAGHAVAN said...
நல்ல பதிவு. முதலில் ஒட்டு போட்டவன் என்கிற பெருமையுடன்...//

மிக்க நன்றிங்க!

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
//மூக்குடைபட்டு //

மாப்பு...
டிசம்பர்ல....சென்னை வழியாவா வர்றீங்க?//

மும்பை - கோயம்பத்தூர் வழியா பலத்த பாதுகாப்போட வரலாம்னு இருக்கேன்.... இஃகிஃகி!

பிரபாகர் said...

இந்த ஓர் விஷயத்தையும் இவ்வளவு அழகாய் சொல்ல முடியுமா?

எப்படி இதையெல்லாம் தொகுக்கிறீர்கள்? பிரமிப்பாய் இருக்கிறது.

நல்ல தகவல்களுடைய பதிவு...

பிரபாகர்.

vasu balaji said...

/கதிர் - ஈரோடு said...

//மூக்குடைபட்டு //

மாப்பு...
டிசம்பர்ல....சென்னை வழியாவா வர்றீங்க/

இதென்னா சம்பந்தம்.
/இதைப் பார்த்த பெரியவங்க, அதை ஒரு சொலவடையாவே ஆக்கிட்டாங்க!!/

சொலவடை என்னான்னு சொல்லவே இல்லையே.

நித்திரை கலைஞ்சுச்சு போலயே.

பழமைபேசி said...

@@பிரபாகர்

வாங்க பிரபாகர், வணக்கம்! இது ஏற்கனவே மனசுல நெடு நாட்களா இருந்ததுதானுங்க... போன வாரம் கூட, அருமை மாப்புவுக்கு அறிவுறித்தி இருந்தேன்!

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

பாலாண்ணே, வணக்கம்!

மூக்கை நுழைப்பானேன்?
இல்லிமூக்கு, சில்லிமூக்கு ஆக்குவானேன்??

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை...

அறிவிலி said...

இது அதப் பத்திதானா? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்....

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் மூக்கை பற்றியா?????

இராகவன் நைஜிரியா said...

நான் மூக்குடைப் படக்கூடாது என்பதற்காக ஓட்டுப் போட்டுட்டேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமைங்க பழமையண்ணே.

ஒரு அருமையான தகவல், ஒரு அழகான காணொளி, ஒரு உள்குத்து (??) :)

குறும்பன் said...

நல்லா சொன்னீங்க.

பழமைபேசி said...

@@ஆரூரன் விசுவநாதன்

நன்றிங்க!

//அறிவிலி said...
இது அதப் பத்திதானா?
//

எதைப் பத்திங்க??

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் மூக்கை பற்றியா?????
//

ஆமாங்க ஞானியார்!

// இராகவன் நைஜிரியா said...
நான் மூக்குடைப் படக்கூடாது
//

அந்த பயம் இருந்தா சரிங்க ஐயா! இஃகி!!

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
ஒரு உள்குத்து (??) :)
//

என்ன இது? எல்லாரும் எதோ சொல்ல வர்றீங்க, ஆனா சொல்ல மாட்டேனுங்குறீங்க??

//குறும்பன் said...
நல்லா சொன்னீங்க.
//

நன்றிங்க!

தீப்பெட்டி said...

உள்குத்து ஏதும் இல்லையினு நான் நம்புறேன் பாஸ்..

;)

naanjil said...

தம்பி மணி

கந்த புரணத்தில் உள்ள கருத்தை இவ்வளவு சுவைபட எளிமையாக
எடுத்து எழுதியமைக்கு நன்றி.

அண்ணன்
நாஞ்சில் பீற்றர்.

நான் said...

நல்லா தமிழ் படிச்சிட்டு வர்றேன் ......இவ்வளவு தமிழ் நமக்கு கடினம்..

க.பாலாசி said...

//சில சமயங்களில் வெறுமை மேலோங்கும் போது, பறவைகளானது தனது மூக்கிருக்கிற அலகால எதையாவது போயிக் குத்தும், குடையும், உரசும்...//

முன்னமே உண்ட உணவு அலகில் ஒட்டி இருக்கும்பட்சத்தில் அவ்வாறு செய்யும் என்பது நானறிந்தது.

நல்ல இடுகை....

அது சரி(18185106603874041862) said...

தலைப்பு பார்த்துட்டு ஆஹா...அண்ணன் ஒரு அதிரடியை கெளப்பிட்டாருடோய்ன்னு பயந்துட்டு வந்தேன்...பரவால்ல...வெயிட்டை எப்படில்லாம் குறைக்க முடியாதுன்னு சொல்லிருக்கீங்க...:0))